காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது எனக் கோரி #மதிமுக மே 17 இயக்கம் மற்றும் தமிழ் அமைப்புகள் சார்பில், சாஸ்திரி பவன் முற்றுகை போராட்டம் நடந்தது.
காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது;
காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும்;
தனி ஈழம் கோரிக்கை குறித்து இலங்கை தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்;
போர்க்குற்றம் குறித்து இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்
என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் இன்று (25.10.13)நடந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாஸ்திரி பவன் முன்பு கூடி இலங்கைக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். போராட்டக்காரர்கள் உள்ளே நுழையாமல் தடுக்க போலீசார் தடுப்புகளை அமைத்து இருந்தனர். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதன் மீது ஏறி தாண்டி குதித்து உள்ளே செல்ல முயன்றனர்.
இதனால் அங்கு பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. அதை தொடர்ந்து போராட் டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர் ஜீவன், மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் உள்பட 120 பேரை போலீசார் கைது செய்தனர்.

super i lik it vaiko is a bigest man in political
ReplyDelete