Tuesday, October 8, 2013

காங்கிரசை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்: வைகோ பேச்சு

#மதிமுக. பொதுச் செயலாளர் #வைகோ குமரி மாவட்டம் திருவரம்பு பகுதி யில் நேற்று (07.10.13)நடந்த ம.தி.மு.க. பிரமுகர் இல்ல விழாவில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் வைகோ பேசியதாவது:–

இலங்கையில் தமிழர்களை பாதுகாக்க தவறிய காங்கிரஸ் கட்சிக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும். இதற்காக அனைத்து கட்சி யினரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். கட்சி பாகுபாடின்றி அனைவரும் இந்த முயற்சியில் பங்கெடுக்க வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்ற கட்சி பாகுபாடின்றி அனைவ ரும் இணைந்து செயல்பட வேண்டும். இதற்காக தான் எங்கள் பயணத்தை தொடங்கியுள்ளோம்.



குமரி மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராக சம்பத் சந்திரா தேர்வு செய்யப்பட்டார். இதுவே இந்த மாவட்டத்தில் எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதி வருகிற தேர்தலிலும் வெற்றியை ஈட்டுவோம் என் ற நம்பிக்கையில் பயணத்தை தொடங்கியுள்ளோம். அனைவரும் ம.தி.மு.க. வுக்கு ஆதரவு தரவேண்டும்.

மத்திய சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் நாடார்களை இழிவுபடுத்தி எழுதப்பட்ட பாடத்தை அகற்றக்கோரி நடந்த போராட்டத்தில் ம.தி.மு.க.வினரே முனைப்பு டன் ஈடுபட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் ம.தி.மு.க. பொருளாளர் சாகுல்அமீது, நாகர்கோவில் நகர செய லாளர் ஜெரால்டு ஹெக்டர், குழித்துறை நகர செயலாளர் ஜெயராஜ், மாணவர் அணி ராஜ்குமார், தேவராஜ், தொண்டர் அணி சுமேஷ், நாங்குநேரி சஞ்சீவ் குமார், ஜெயன், ரமேஷ், மாநில பேச்சாளர் அனல் கண்ணன், தோவாளை கண்ணன், ஜெரோம் ஜெயக்குமார், மின்னல் முகம்மது அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குமரி மாவட்டம் வந்த வைகோவிற்கு  மாவட்ட எல்லையான காவல்கிணறு சந்திப்பில் மாவட்ட செயலாளர் தில்லை செல்வம் தலைமையில் ம.தி.மு.க. வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் திரு வட்டார் சென்றார். வழியில் பார்வதிபுரம், தக்கலை, குமாரபுரம், சரல்விளை, வேர்கிளம்பி, திருவட்டார் பகுதிகளில் ஏராளமான தொண்டர்கள் திரண்டு நின்று அவரை வரவேற்றனர்.

No comments:

Post a Comment