Tuesday, October 8, 2013

வைகோ தலைமையில் நம்பிக்கையுடன் செயலாற்றுவோம்!

தமிழகம் இழந்த உரிமைகளைப் பெற்றிட,தமிழன் தொலைத்த பெருமைகளை மீட்டிட, #வைகோ தலைமையில் நம்பிக்கையுடன் செயலாற்றுவோம்!

விருதுநகர் மாநாட்டில் டாக்டர் இரா.மாசிலாமணி

செப்டம்பர் 15, பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி,விருதுநகரில் நடை பெற்ற #மதிமுக வின் எழுச்சிமிகு மாநாட்டில், பொருளாளர் டாக்டர் இரா.மாசி லாமணி ஆற்றிய உரை:
பேரறிஞர் அண்ணா அவர்களுடைய 105ஆவது பிறந்த நாள் விழா மாநாடு விரு துநகரில் திருப்புமுனை மாநாடாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதைத் தான் இங்கே உரையாற்றிய அனைவரும் பதிவு செய்திருக்கிறார்கள்.1956 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் திருச்சியிலே ஒரு திருப்பு முனை மா நாட்டை நடத்தினார்கள்.அப்போது அவர் தன் தம்பிக்கு கடிதம் எழுதுகிற போது, அந்த மாநாட்டின் சிறப்பைப் பற்றிக் கூறுகிறபோது,“இங்கே தீரர்கள் கூடுகிறார் கள்,திருவாளர்கள் அல்ல. தோழர்கள் கூடுகிறார்கள், சீமான்கள் அல்ல. மலர்
சோலை அல்ல இந்த மாநாடு, இது மறவர் பாசறை. செல்வத்தை அல்ல நான் காட்டச் சொல்வது, எஃகு உள்ளத்தை நான் கேட்கிறேன். இது வெந்ததைத் 
தின்று விட்டு, விதி வந்தால் சாவோம் என்கிற கூட்டம் அல்ல இந்தக் கூட்டம். அடிமைத் தளையில் விழுந்துவிட்ட தமிழகத்தை மீட்டெடுப்பதற்காக வெந்த ணலில் இறங்கித் துணிந்து நடந்து கருகி மாண்டவர்போக,மீதி உள்ளவர் முன் னேறிச் சென்று தமிழன்னையின் அடிமைத் தளையை உடைத்தெறிந்து, அன் னையை அரியாசனத்தில் அமர்த்தி அவளின் ஆனந்தக் கண்ணீரைப் பரிசாகப்
பெறுகிற கூட்டம் இந்தக் கூட்டம்” என்று 56 களில் அண்ணா அவர்கள் திருச்சி யில் நடைபெற்ற மாநில மாநாட்டிற்கு கடிதம் எழுதினார்.

அதே உணர்வோடுதான் இன்றைக்கு 2013 ஆம் ஆண்டு அண்ணாவின் உண் மைத் தம்பியாக இருக்கின்ற மக்கள் தலைவர் வைகோ அவர்கள் திருப்பு முனை மாநாட்டிற்கு அழைத்திருக்கிறார்.இதோ இலட்சோப இலட்சம் தொண்
டர்கள் இங்கே கூடியிருக்கிறார்கள்.

அண்ணாவின் பிறந்த நாளைக்கொண்டாடு கின்ற தகுதி, உரிமை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மட்டும் தான் இருக்கிறது.தலைவர் வைகோ விற்கு மட்டும் தான் இருக்கிறது என்பதை நாடு சொல்கிறது, ஏடு சொல் கிறது, ஊடகங்கள் சொல்லிக் கொண்டு இருக்கின்றன. ஏன் இன்றைக்கு அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்றிருக்கின்ற கருணாநிதி கூட இன்றைக்கு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

எனவே தான், அந்த உரிமைப் படைத்த வைகோ அந்தத் தேதியில் மாநாட்டை
நடத்தட்டும் என்று நினைத்துத்தான் அண்ணா அவர்கள் பிறந்தநாளைக்கூட
17 ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடத்து வதாக இன்றைக்கு அவர் அறிக்கை கொடுத்திருக்கிறார். அதற்கான காரணம் என்ன சொல்லி இருக் கிறார் தெரியுமா? வேலூரில் 15 ஆம் தேதி அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு நடைபெறும் என்று அறிவித்து, இதைப்போல கொட்டகையும் அமைத்து இருந் தார்கள்.இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை.

ஆனால், திடீரென்று தலைமைக் கழகத்திலிருந்து ஒரு அறிவிப்பு வருகிறது. வானிலை நிலையத்தில் இருந்து தொடர்ந்து நான்கு நாட்களுக்கு மழை பெய் யும் என்று சொல்லி இருக்கிறார்கள். எனவே, 15 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு 17 ஆம் தேதி சென்னையில் அறி வாலயத்தில் நடைபெறும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

நான் கேட்கவிரும்புகிறேன் டாக்டர் கலைஞர் அவர்களே, ஜூன் 3ஆம் தேதி
உங்கள் பிறந்த தின நிகழ்ச்சியை,மழையின் காரணமாக ஜூலை 3ஆம் தேதி நடத்துவீர்களா? உங்களின் அருமந்த புதல்வன் ஸ்டாலின் பிறந்த மார்ச் 1 ஆம் தேதி. அதை மழை வருகிறது என்ற காரணத்திற்காக ஜூன் மாதம் 1 ஆம் தேதி நடத்துவீர்களா? என்ன காரணம்? நீங்கள் வரலாற்றை மாற்ற நினைக்கிறீர்கள். அண்ணா என்ற அந்த காவியத் தலைவரின் பெயரை,புகழை, அவரது நினைவு களை திராவிட இயக்கத்திலிருந்து அகற்ற நினைக்கிறீர்கள்.

எனவேதான் நீங்கள், திராவிட இயக்கத்தின் ஒருபெரும் தலைவர் கலைஞர் கருணாநிதி தான் என்பதை வரலாற்றில் பதிவு செய்வதற்காகத்தான், அண்ணா வின் பிறந்தநாளைக்கூட 17 ஆம் தேதி நடத்துகிறீர்கள்.

உங்களுக்கு நன்றாகத் தெரியும் கலைஞர் கருணாநிதி அவர்களே, அண்ணா உருவாக்கிய இயக்கம் கொட்டுகின்ற மழையிலேதான் உருவானது. 1949 இல் இராபின்சன் பூங்காவில், கொட்டுகின்ற மழையில் தான் அண்ணா அவர்கள் கண்ணீர்த் துளிகளே, கண்ணின் மணிகளே என்று சொல்லித்தான் அந்த இயக் கத்தை அண்ணா அவர்கள் உருவாக்கினார்கள்.ஆனால், இந்த மழையை நீங் கள் காரணமாகக் கூறி அந்த பிறந்தநாள் விழாவையேத் தள்ளி வைத்து, ஒரு
மரபாகத்தான் அந்த விழாவை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆனால், ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. ஆணைகள் இட்டு யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை என்ற வைர
வரிகளுக்கு ஒப்பாகத்தான் இன்றைக்கு அண்ணாவின் பெருமைகளை, அண் ணாவின் நினைவுகளை உலகெங்கும் வாழுகின்ற தமிழர்கள் நெஞ்சங்களில் கொண்டுசெல்கிற பணியில் இன்றைக்கு மக்கள் தலைவர் வைகோ அவர்கள் இந்த மாநாட்டின் மூலமாகச் செய்து கொண்டிருக்கிறார்.

எங்கு திரும்பினாலும் அண்ணாவினுடைய பதாகைகள். எங்கு திரும்பினாலும் அண்ணாவினுடைய மணி வாசகங்கள். எங்கு திரும்பினாலும் அண்ணா வினு டைய இலட்சியக் கனவுகள்.இதைத்தான் இன்றைக்கு இந்த மாநாடு பிரதிபலித் துக் கொண்டு இருக்கிறது.

எனவே, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்பது ஒரு சராசரி அரசி யல் இயக்கம் அல்ல.நீர்த்துப்போய்விட்ட திராவிட இயக்கக் கொள்கைளை- தந்தை பெரியாரும்,பேரறிஞர் அண்ணாவும் உருவாக்கிய -திராவிட இயக்க உணர்வுகளை நீர்த்துப் போகச் செய்து திராவிட இயக்கத்தின் வேரிலே வெந்நீர் ஊற்றியபிறகு அந்த திராவிட இயக்கக் கொள்கைகளை வென்றெடுப்பதற்கு ஒரு தலைவன் கிடைக்க மாட்டானா? அந்த திராவிட இயக்கத்தின் கொள்கை களைக் கொண்டு செல்வதற்கு ஒரு இயக்கம் கிடைக்காதா? என்று மக்கள் ஏங் கியபொழுது காலம் வழங்கிய அருட்கொடைதான் மக்கள் தலைவர் வைகோ.

காலம் அடையாளம் காட்டிய இயக்கம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்
கழகம். இந்தத் திராவிட இயக்கம் ஆயிரம் காலத்துப் பயிராகும். திராவிட இயக் கத்தின் வரலாறுகளை எல்லாம் இங்கே சத்யா அவர்கள், திராவிட இயக்கத் தின் தோற்றத்தினையும்,அதற்காக உழைத்த இன்றைய தலைவர்கள் வரை எடுத்துச் சொன்னார்கள்.

திராவிட இயக்கம் எதற்காக உருவானது.ஏன் திராவிட நாடு கேட்கிறோம் என் பதற்கான காரணங்களை அண்ணா பொதுக்கூட்டங்களில் பேசியிருக்கிறார்.
அந்த திராவிட நாட்டின் பெருமைகளை, தமிழர்களின் பெருமைகளை எல்லாம்
எடுத்துச்சொல்லி, அந்தத் தமிழன் எப்படியெல்லாம் தாழ்ந்துபோய் விட்டான் என்று அவர் வருத்தத்தோடு பதிவு செய்திருக்கிறார்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், கன்னோசியும், காந்தாரமும், காமரூப மும்,மாளவமும் இன்னும் பல நாடுகளும் உருவாவதற்கு முன்னமே அயோத் தியும், அஸ்தினா புரமும்,காசியும் இவை புண்ணிய சேத்திரங்களாக அறியப்ப டுவதற்கு முன்னமே பூம்புகார், கொற்கை,தொண்டி, முசிறி என துறைமுகங் கள் கொண்டதாக எந்த நாடு விளங்கியதோ, 

எந்த நாட்டின் முரசு மூன்று வகை, மொழி மூன்று வகை, படை நான்கு வகை, போர்முனைகள் பலப்பல என்று அறியப்பட்டதோ, எந்த நாட்டில் நிலமே ஐந்து வகையாக அதனுடைய பயனும் எழிலுக்கும் ஏற்ப பிரித்து வைக்கப் பட்டதோ, எந்த நாட்டின் முத்தையும்,மாணிக்கத்தையும் தன் மனம் கவர்ந்தவர்களுக்கு பிற நாட்டு மன்னர்களுக்கு காணிக்கையாக அளித்தார் களோ, எந்த நாட்டில் புவியாளும் மன்னவரையும் உதாசினப்படுத்தி விட்டு, தம் மக்களை அறவழிக் கு கவிவாணர்கள் அழைத்துச் சென்றார்களோ,நற்றிணை,நல்ல குறுந்தொகை,
ஐங்குறுநூறு, ஒற்ற பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல், கற்றோர் ஏற்றும் கலி யோடு அகம் புறம் என்ற எட்டுத் தொகையிலிருந்து அழியாத கருவூலங்களாக எந்த நாட்டின் இலக்கியத்தை நம் முன்னோர்கள் விட்டுச் சென்றார்களோ, அந்த நாடு பிற நாட்டோரால் கவரப்பட்டு, அதனுடைய எல்லைகள் வெட்டப் பட்டு, மொழியும், கலையும் இன்றைக்கு இழிவுபட்டு, கொற்றம் அழிந்து, கோலம் அழிந்து இன்றைக்கு மாற்றோரால் பழிக்கப்பட்டு, குற்றேவல் செய் கின்ற நிலைமைக்கு அல்லவா இருக்கிறது தம்பி” என்று தமிழர்கள் பெருமை களை எல்லாம் எடுத்துச் சொல்லி இன்றைக்கு நாம் எந்த  நிலைமைக்கு வந்தி ருக்கிறோம் என்பதை எடுத்துச்சொன்னார் அண்ணா.


அவர் அண்ணாமலை பல்கலைக் கழகத்திலே உரையாற்றுகிறபோது, “ஏ...
தாழ்ந்த தமிழகமே! தேய்ந்த தமிழகமே! வீழ்ந்துவிட்ட தமிழகமே! விசையொ டிந்த தமிழகமே! உணர்ச்சியற்ற தமிழகமே! நன்றிகெட்ட தமிழகமே! கலையை உணராத தமிழகமே! மதத்தை மருளை மதம் என்று நம்புகின்ற தமிழகமே! கவி களைப் போற்றாத தமிழகமே! நீ எழுச்சியுறப்போவது எப்போது?” என்று 1950 களில் அண்ணா அவர்கள் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் கேட்டார்கள்.

எனவே இந்த திராவிட நாடு என்பது மொழியை, பண்பாட்டை, நாகரிகத்தை காப்பாற்றுவதற்காகத்தான் அண்ணா அவர்கள் திராவிட இயக்கத்தை உரு வாக்கினார்கள். அதே உணர்வோடு தான் 1962 ஆம் ஆண்டு மாநிலங்களவை யில் அவரது கன்னிப் பேச்சில், “I proud to call myself a Dravidan என்று சொல்லித்தான்
ஆரம்பித்தார். நான் என்னை ஒரு திராவிடன் என்று சொல்லிக்கொள்வதில்
பெருமைப்படுகிறேன். நான் ஒரு சாலையோரத்துப்பிரதிநிதியாக நின்று பேசிக் கொண்டிருக்கிறேன். அதனால் வங்காளிக்கோ, குஜராத்திக்கோ, மகாராஷ்டி ரருக்கோ எதிரானவன் அல்ல.

ஆனால், நாங்கள் வாழ்கிற திராவிட இனம் தனி தேசிய இனம். வரலாற்றுப்
பெருமையும், வரலாற்றுப் பண்பையும் கொண்டது. அதனால்தான் நாங்கள்
திராவிட நாடு கேட்கிறோம். ‘So wewant a Self determination ’ என்று சொல்லிவிட்டு, எந்த மொழியில் எங்கள் முன்னோர்கள் பேசினார்களோ, எந்த மொழியில் கரை காணா இலக்கிய வளமும், இலக்கண வளமும் இருக்கிறதோ, அந்த மொழி ஆட்சி மொழியாக ஆகின்ற வரை நான் திருப்தியடைய மாட்டேன்” என்று 1962
இல் அண்ணா அவர்கள் முழங்கினார்.

அந்த அண்ணாவின் அடிச்சுவட்டில் இன்று பணியாற்றிக்கொண்டிருக்கின்ற
மக்கள் தலைவர் வைகோ அவர்கள் அண்ணா 1962 இல் எந்த உணர்வோடு உரை ஆற்றினார்களோ, அதே உணர்வோடு தான் அவரது மாநிலங்களவை முதல் கன்னிப் பேச்சு அமைந்தது. அன்று இந்திமொழியின் ஆதிக்கத்தை எதிர்த் துத்தான் பேசினார்.அப்போது தான் அவர் கசாப பிளாங்கினுடைய இதிகாச கதையை எடுத்துச்சொல்லி பேசினார்.

அந்த கசாப பிளாங் போல் தான் நான் பணியாற்றுவேன் என்று எடுத்துச்சொல் லிவிட்டு, நான் டெல்லி பட்டணத்தில் இருக்கின்றபோது, ஒரு அந்நியனைப் போல் உணர்கிறேன் என்று இந்தி மொழியின் ஆதிக்கத்தை எதிர்த்துத்தான் முதல் கன்னிப்பேச்சைத் தொடங்கினார். அப்படிப்பட்ட அந்த திராவிட இயக் கங்கள் தமிழரின் பெருமையை இனத்தின் மீட்சிக்காக உருவாக்கப்பட்ட திரா விட இயக்கம் இன்றைக்கு சிதைக்கப்பட்டுவிட்டது.

திராவிட இயக்கம் என்பது சீமான் வீட்டுப் பிள்ளைகளுடையசிங்காரச்சோலை கள் அல்ல.மாடி வீட்டு மைனர்களுடைய மகிழ்ச்சி சாலையும் அல்ல, வேட் டையாடும் வீணர்களின் விருந்து சாலையும் அல்ல, விழிமூடிக் கிடந்த ஒரு சமுதாயத்தினுடைய விடுதலை இயக்கம். அழிந்து கொண்டு இருக்கின்ற தமிழ் மொழியை அவனியில் காத்து அதன் பெருமையை உலகெலாம் அறிவிப்பதற் காக உருவாக்கப்பட்ட ஆற்றல் முகாம். அப்படிப்பட்ட திராவிட இயக்கம் இன் றைக்கு சிதைக்கப்பட்டு இருக்கிறது. திராவிட இயக்கத்தினுடைய கொள்கை கள் சிதைக்கப்பட்டிருக்கிறது.அண்ணா என்ன கனவுகளையெல்லாம் கண்டா ரோ, அந்தக் கனவுகள் எல்லாம் இன்றைக்கு சிதைக்கப்பட்டுவிட்டது.

எனவேதான், அந்த திராவிட இயக்கக் கொள்கைகளை மீட்டெடுக்கும் பணி யைத்தான் இன்றைக்கு நாம் மேற்கொண்டு இருக்கிறோம். அந்தப் பணியைத் தான் மக்கள் தலைவர் வைகோ மேற்கொண்டிருக்கிறார்.

அண்ணா அவர்கள் பெரியாரைப் பற்றிச் சொல்கின்றபோது சொல்வார், “என்
வாழ்க்கையில் நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் பெரியார்’ என்று சொல்லிவிட்டு, அந்தப் பெரியாரை நினைவுகூர்கின்றபோது, விசித்திர வைதீ கத்தை சந்தி சிரிக்க வைத்தான், சாக்ரடிஸ். உலகு உணராத வனுக்கு உலகம் உருண்டை என்று சொன்னான், கலிலியோ. வைதீகத்தின் மடமையை வாட்டி னார் வால்டேர்.

மக்கள் மன்றத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று சொன்னான் ரூசோ. அடி மை  விலங்கை உடைத்தெறிந்தான் ஆபிரகாம் லிங்கன். வேதப் புத்தகத்தை
விற்று விபச்சார விடுதிக்குக் கொடுக்கின்ற செயலைக் கண்டித்தான் மார்ட் டின் லூதர் கிங். முதலாளித்துவத்தின் கொடுமையை நிந்தித்தான் காரல் மார்க்ஸ். அதற்காகவே உழைத்தான் லெனின். சீனர்களின் மதி தேய்வதைத் தடுத்து நிறுத்தினான் சன்யாட்சென். துருக்கியர்களின் சிறுமதியைப் போக்கி னான் முஸ்தபா கமால்பாட்சா.

இறைவனின் பெயரைச் சொல்லி ஏழைகளை வஞ்சித்தவனை சந்தி சிரிக்க
வைத்தான் இங்கர்சால். பேதமைப் போக்குகின்ற பணியைச் செய்தான் பெர்ட் னாட்ஷா என்று சொல்லிவிட்டு,இப்படிப்பட்ட தலைவர்கள் எல்லாம் சமுதா யத்தில் தோன்றி கல்லடியும் சொல்லடியும் பெற்று, தாங்கொணாத துன்பத் திற்கும் துயரத்திற்கும் ஆளாகிப் போராடிய தனால்தான் இன்றைக்கு உலகிலே மறுமலர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. ஒரு நாடு இன்னொரு நாட்டை அடிமைப்ப டுத்த முடிய வில்லை.

அப்படி அடிமைப் படுத்தினால், அங்கே புரட்சிப் புயல் வீசுகிறது. பிரளயமாக
மக்கள் வெள்ளம் அங்கே உருவாகிறது.எனவேதான் இப்படிப்பட்ட காரியங்கள்
எல்லாம் செய்வதற்கு தமிழ்நாட்டில் தந்தை பெரியாரை விட்டால் வேறு யார்
இருக்கிறார்” என்று அண்ணா அவர்கள் தந்தை பெரியாரைப் பற்றிச்சொன்னார்.
தந்தை பெரியார் இப்போது நம்மோடு இல்லை.

“மேடைகளே புலம்புங்கள். மின்னும் சரிகை வார்த்தைகளால் உன்னை அலங் கரித்தவன் போய் விட்டான்.மேடைகளே புலம்புங்கள்” என்று கவிக்கோ அப் துல் ரகுமான் அவர்கள் கவிதாஞ்சலி செலுத்தினாரே.அந்த அண்ணா இப்போது இல்லை. தந்தை பெரியார் நம்மோடு இல்லை. பேரறிஞர் அண்ணா இல்லை.

தமிழ்நாட்டில் வாழுகின்ற பெரியாராய், வாழுகின்ற அண்ணாவாய் இருபெரும்
தலைவர்களின் ஓர் உருவாக நமக்கு எஞ்சி இருக்கின்ற ஒரே தலைவர் மக்கள்
தலைவர் வைகோ ஒருவர்தான்.எனவேதான்,அவர் தமிழ் நாட்டின் உரிமைக ளுக்காக 108 ஆம்புலென்சாக பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.

விவிலியத்தில் 14 சிலுவைப் பாடுகளை சொல்வார்கள், இயேசு கிறிஸ்து பிலாத் து சபையில் நிறுத்தப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது ஒரு
சிலுவைப்பாடு. சிலுவையைச் சுமந்தது ஒரு சிலுவைப்பாடு. சுமந்த சிலுவை யுடன் கீழே விழுந்தது ஒரு சிலுவைப்பாடு. அன்னை மரியாள் அவரை மடியில் போட்டுக்கொண்டது ஒரு சிலுவைப்பாடு. அவருடைய சீடன் சீமோன் அவரை ஆறுதலாக கையைப் பிடித்தது ஒரு சிலுவைப்பாடு.வெரொலின்கால் அவரு டைய இரத்தம் தோய்ந்த முகத்தை துடைத்தது ஒரு சிலுவைப்பாடு. இரண்டா வது முறையாக விழுந்தது சிலுவைப்பாடு. பெண்கள் கல்வாரியில் நடந்தது ஒரு சிலுவைப்பாடு. மூன்றாவது முறையாக கீழே விழுந்தது ஒரு சிலுவைப் பாடு.சிலுவையில் அறையப்பட்டது ஒரு சிலுவைப்பாடு. உயிர்த்தெழுந்தது ஒரு சிலுவைப்பாடு. மரியாளின் மடியிலே கிடத்தியது ஒரு சிலுவைப்பாடு.
கல்லறையில் புதைக்கப்பட்டது ஒரு சிலுவைப்பாடு என்று பதினான்கு சிலு வைப்பாடுகளைச் சொல்கிறார்கள்.

மக்கள் தலைவர் வைகோ அவர்கள், இந்த தமிழ்நாட்டின் மக்களுக்காக சுமந்த
சிலுவைப்பாடுகள் எத்தனை எத்தனை என்பதை எண்ணிப் பாருங்கள்.

தமிழ்நாட்டின் விடுதலைக்காக, இந்த திராவிட இயக்கத்தை பட்டுப்போகாமல்
காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அவர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்
கழகத்தை உருவாக்கி, இருபது ஆண்டு களாக இந்த இயக்கத்தைத் தன் தோளி லே சுமந்து இன்றைக்கு வரை உயிரோட்டமாக நடத்திக்கொண்டுஇருக்கிறாரே இதுதான் முதல் சிலுவைப்பாடு.

அவர் நடத்திய அத்தனை போராட்டங் களும் சிலுவைப்பாடுகள் தான். தென் குமரி கன்னியாகுமரியில் இருந்து ஊழல் ஆட்சியை எதிர்த்து சென்னை வரை நடந்த அந்த நடைப்பயணம் ஒரு சிலுவைப்பாடு.

தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்து சென்னை வரை நடந்த நடைப்பயணம்
இன்னொரு சிலுவைப்பாடு.ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து திருவைகுண் டத்திலிருந்து தூத்துக்குடி வரை நடத்திய அந்த நடைப்பயணமும் ஒரு சிலு வைப்பாடு. மதுரையில் இருந்து கம்பம் வரை முல்லைப் பெரியாறுக்காக
நடைப்பயணமாக நடந்தது ஒரு சிலுவைப்பாடு.

பூம்புகாரில் இருந்து கல்லணை வரை நடந்த நிகழ்வு ஒரு சிலுவைப்பாடு.மது வின் கொடுமையில் இருந்து இந்தத் தமிழகத்தை மீட்பதற்காக உவரியில் இருந்து மதுரை வரை, கோவளத்தில் இருந்து மறைமலை நகர் வரை, பொள் ளாச்சியில் இருந்து ஈரோடு வரை 1100 கிலோ மீட்டர் நடந்தது ஒரு சிலுவைப் பாடு. மூன்று தமிழர்கள் உயிர் காக்க அவர் நடத்திய வேள்வி ஒரு சிலுவைப் பாடு.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்றைக்கு வரை நடத்திக்கொண்டு இருக் கிற போராட்டம் ஒரு சிலுவைப் பாடு. ஈழத் தமிழருக்காக தினமும் நடந்து கொண்டிருப்பது ஒரு சிலுவைப் பாடு. முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக ஒரு சிலுவைப்பாடு, காவிரி பிரச்சினைக்காக ஒரு சிலுவைப்பாடு.பாலாற்றுப் பிரச்சினைக்காக ஒரு சிலுவைப்பாடு. இப்படி தொடர்ந்து தன் வாழ்க்கையை சிலுவைப்பாடுகளாக நடத்திக்கொண்டிருப்பவர் மக்கள் தலைவர் வைகோ ஒருவர்தான்.

காரணம் அவர் பிறவிப் போராட்டக்காரர். ஈட்டிமுனை இளமாறன் பேசிய போது, வைகோ ஒரு புரட்சியாளர் என்று சொன்னார். தோல்வி என்பதை என் றைக்கும் ஒப்புக்கொள்ளாதவன் தான் புரட்சியாளன். என்றைக்கும் நம்பிக்கை யைத் தளரவிடாதவன்தான் புரட்சியாளன். மலைநிகர் துன்பம் எத்தனை வந் தாலும் மனம் கலங்காதவன்தான் புரட்சியாளன். என்றாவது ஒருநாள் தன் இலட்சியம் வெற்றி பெறும் என்று நம்புகிறவன்தான் புரட்சியாளன். அதற்காக தன் உயிரையும் சேர்த்துக் கொடுப்பதற்குத் தயாராக இருப்பவன்தான் புரட்சி யாளன்.அப்படிப்பட்ட புரட்சியாளராகத்தான் மக்கள் தலைவர் வைகோ அவர்
கள் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.

எனவேதான் அவர் தன்னைப்பற்றிப் பதிவு செய்கிறபோது, நான் உலைக்களத் தில் இன்றைக்கு வார்ப்பிக்கப் படுகிறேன். பழுக்கக் காய்ச்சிய நிலையில் சம் மட்டி அடிகள் என் மீது விழுந்துகொண்டு இருக்கிறது.கூரேற்றப்படுகிறேன். இன்றைக்குக் கொழுந்துவிட்டு எரிகிறது அந்தத் தீ.

எனவே தமிழ்நாட்டின் விடுதலைக்காக இன எதிரிகளை வீழ்த்துவதற்காக இந் தப் போர்வாள் களத்திலே சுழலும் என்று சொன்னவர் வைகோ அவர்கள்.கொள் கைக்காகப் போராடுவதில் சுகம் காண்பவன் நான். ஒரு புயலைப் போல வரு வேன். மக்களைச் சந்திப்பேன்,உணர்வுகளில் சங்கமிப்பேன். இந்த விடுத லைக் காக என்றைக்கும் போராடுவேன் என்று சொன்ன தலைவர் தான் வைகோ அவர்கள்.

எனவே அந்த உணர்வோடுதான் அவர் இந்த நாட்டின் மக்களுக்காகப் போராடிக்
கொண்டு இருக்கிறார். அவருடைய காலத்தில் தமிழ்நாட்டினுடைய உரிமை களை, இழந்த பெருமைகளை தனி ஈழத்தை அமைக்க முடியாவிட்டால் வேறு எப்போது பெறப்போகிறோம்.

அண்ணா அவர்கள் யேல் பல்கலைக் கழகம் செல்கிறபோது, அங்கே தலைப்பி லே இருந்த ஒரு வாசகத்தைக் கொண்டுவந்து தம்பிக்கு கடிதம் எழுதுகிற போது, , If not now then when if not me then who  என்ற வாசகத்தைக் குறிப்பிட்டு, நான் இல்லையென்றால் வேறு யார்? இப்போது இல்லையென்றால் எப்போது?என்ற வாசகத்தை எழுதினார்.

நான் தமிழ்நாட்டு மக்களைக் கேட்க விரும்புவது இந்தத் தலைவன் இல்லை
என்றால் வேறு யார்? இப்போது இல்லையென்றால் வேறு எப்போது? தமிழ் நாட்டு மக்கள் மாணிக்கத்தை மறுதலித்துவிட்டு, கூழாங்கற்களைச் சேகரித் துக்கொண்டிருக்கிறார்கள்.தேவாலயத்தில் எரிந்துகொண்டிருக்கிற மெழுகு வர்த்தி வெளிச்சத்தை அவர்கள் மறுதலித்துவிட்டு, நியான் தெரு விளக்கிலே தனது மனதைப் பறிகொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.குயில் கறுப்பாக இருக் கிறது என்று அதன் கழுத்தை நெரித்துவிட்டு,கருநாகத்திற்கு இன்றைக்கு பால் வார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே, இனியாவது தமிழ்நாட்டு மக்கள் மாணிக்கத்தைச்சேகரிக்க வேண்டும்.
தமிழ்நாட்டு மக்களே உங்களுக்காக நல்ல மேய்ப்பனாக இருப்பவரை விட்டு
விட்டு,உங்களை மேய்பவர்களிடம் உங்கள் வாக்குகளை அளித்து விடாதீர்கள். இது உங்களுக்காக உயிர்த்திருக்கின்ற நல்ல மேய்ப்பனாக இருக்கின்ற வைகோ அவர்களுக்கு உங்கள் ஆதரவுக் கரத்தை நீட்டுங்கள் என்று இந்தக் கூட்டத்தின் வாயிலாக நான் கேட்க விரும்புகிறேன்.

இந்த மாநாடு என்பது எதிர்காலத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழ
கம் பெறப்போகிற வெற்றிக்குக் கட்டியம் கூறுகிற மாநாடு. எனவே நம்பிக்கை யோடு செயலாற்றுங்கள்.வாழ்க்கையில் நம்பிக்கைதான் எந்த இயக்கத்தை யும் அதனுடைய இலட்சியப் பாதைக்குக் கொண்டு செல்லும். பத்து அவதாரங் களை எடுத்தான் ஆண்டவன் என்று நம்புகிறவன் வைணவன். 63 திருவிளை யாடல்கள் நடத்தினான் ஆண்டவன் என்று நம்புகிறவன்தான் சைவன். கன்னி மேரிக்கு பரிசுத்த ஆவியாய் இயேசு பிறந்தார் என்று நம்புகிறவன்தான் கிறிஸ் துவன். ஹிரா மலைக்குகையில் வானவ தூதுவர் இப்ரியல் மூலமாக ஸல்லல்லாகூ அலைக்கும் வஸ்ஸல்லம் அவர்களுக்கு கடைசி இறை தூத ராக இறைசெய்தி அளிக்கப்பட்டு அவர்தான் இறை தூதர் என்று அறிவிக்கப் பட்டார் என்று நம்புகிறவன்தான் இசுலாமியன்.

எனவே, எதிர்காலத்தில் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் இந்த இலட்சியப்
பயணத்தில் நாம் எந்த இடத்திற்குச் செல்ல வேண்டுமோ அந்த இடத்திற்குக்
கொண்டுசெல்வார், ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவார் என்று நம்புகின்றவன் தான் மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் தோழன் என்பதை நான் இந்தக் கூட்டத்தின்
வாயிலாக பதிவு செய்ய விரும்புகிறேன்.

நீ செடியாக இருந்தபோது, உன் மீது சிறுநீர் கழித்தவன் நீ விருட்சமாக எழுந்து நின்றால், விழுந்து விழுந்து விழா எடுப்பான். எனவே நம்பிக்கையோடு செய லாற்றுங்கள்.இந்தத் தலைவன் காலத்தில் தான் இழந்த உரிமைகளைப் பெற வேண்டும்.இந்தத் தலைவன் காலத்தில் தான் தமிழனுடைய பெருமையை
வென்றெடுக்க வேண்டும். இந்தத் தலைவன் காலத்தில் தனி ஈழம் அமைய
வேண்டும். நான் தாராபாரதியின் கவிதையை நினைவுபடுத்த விரும்புகிறேன். அவன்தான் சொன்னான்,

வெறுங்கை என்பது மூடத்தனம்
விரல்கள் பத்தும் மூலதனம்,
கருங்கல் பாறைகள் நொறுங்கி விழும்-உன்
கைகளால் உலகம் சுழன்று வரும்
மூலையில் கிடக்கும் வாலிபனே
நீ முதுகில் வேலையைத் தேடுகிறாய்
வெறும் பாலைவனம்தான் வாழ்க்கை-என
தினம் பல்லவிகள் ஏன் பாடுகிறாய்
விரக்தி என்னும் சிலந்தி வலைக்குள்
வேங்கைப் புலி நீ உறங்குவதா?
இருட்டைக் கிழிக்கும் வெளிச்சம் நீ
கிழக்கு எங்கே என்று தேடுவதா!
எழு எழு உன் விழி நெருப்பு விழி
உன் விழிக்கு முன்னால்
சூரியன் சின்னப் பொரி
எழு எழு தோழா உன் எழுச்சி
இயற்கையின் மடியில் பெரும் புரட்சி
தோள்கள் உனது தொழிற்சாலை
தொடும் இடமெல்லாம் மலர்ச்சோலை
தோல்விகள் இனி உனக்கு இல்லை
தொடுவானம்தான் உனது எல்லை

என்ற உணர்வோடு கலைந்து செல்வோம்.

மக்கள் தலைவர் வைகோ அவர்களை 2014 இல் நாடாளுமன்றத் தேர்தலில்
வெற்றி பெற வைத்து செங்கோட்டைக்கும், 2016 சட்ட சபைத் தேர்தலில் வெற் றி பெற வைத்து செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அவரை முதலமைச்சராக்கிக் காட்டுவோம் வாருங்கள்.

மதிமுக பொருளாளர் டாக்டர் இரா.மாசிலாமணி இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment