விருத்தாசலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி இன்று (14.10.13 ) ஒன்றில் கலந்து கொள்வதற்காக #மதிமுக பொது செயலாளர் #வைகோ வந்திருந்தார்.
அந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
சமீபத்தில் ஒரு கல்லூரி முதல்வருக்கு கோர முடிவு ஏற்பட்டது. இதை கண் டித்து அடுத்து அரை மணி நேரத்தில் அறிக்கை விட்டவன் நான். லட்சக்கணக் கான மாணவர்கள் வாழ்வில் உயரவேண்டும் என்றும், தகப்பன், தாய்களின் கனவை நினைவாக்க வேட்கையோடு, சுமக்க முடியாத புத்தக கட்டுகளை துக்கி சுமந்து இரவு பகலாக படிக்கிறார்கள். முதல் மதிப்பெண்கள் பெற வேண் டும் என்று லட்சகணக்கான மாணவர்கள் துடிக்கிறார்கள்.
ஆனால் ஒரு சில மாணவர்கள் தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள். நான் படிக்கிற காலத்தில் கொள்கை ரீதியா கருத்து மோதல் இருக்கும். ஆனால் அடி தடி என்பது இருக்காது. வாய் சத்தம் இருக்கும் சிறிது நேரத்தில் சமாதானம் அடைந்து விடுவார்கள். ஆனால் இன்று கல்லூரியில் அறிவாள் போன்ற கொடூர ஆயுதங்களுடன் மோதிக்கொள்கின்றனர்.
சென்னையில் இருக்கின்ற 5 லட்சம் மாணவர்களில் 50 பேர் செய்யும் வேலை யால் மாணவ சமுதாயமே அப்படி தான் என்று எண்ணம் வந்து விடுகிறது. இதற்கு முழுக்க காரணம் மதுவும், சினிமாவும் தான். இன்றைய பெண் குழந்தைகள் ரோட்டில் பத்திராமாக போய்ட்டு வீட்டிற்கு வரவேண்டும், இதற்கு மதுவின் பிடிவில் இருந்து தமிழகம் விடுபட வேண்டும். இதற்கான நடைபயணம் மேற் கொண்டவன் நான்.
பழைய படங்களில் ரத்தம் சிந்துகின்ற ஒரு காட்சி உண்டா. ஆனால் தற்போ துள்ள படங்களில் கொடூரமான காட்சிகள், கொச்சையான வசனங்கள் உள்ள ன. இதன்மூலம் இந்த இளம் தலைமுறையை பாழாக்குவது இந்த சினிமாதான். ஒரு பெண் ஆண் எப்படி வாழவேண்டும் என்று நேர்மாறானா சிந்தனையை துண்டுகின்ற படங்கள் வெளியாகிறது.
அடுத்து மது, கல்லூரி முதல்வர் சம்பவத்திற்கு முந்தின இரவு இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குடித்துள்ளனர் ஏற்கனவே குடித்ததற்காகவே விடுதியை விட்டு அவர்களை வெளியேற்றி உள்ளனர்.
இதையெல்லாம் நான் கூறுவதற்கு சமூக சிந்தனைகள் வேண்டும் ம.திமு.க. என்பது வெறும் ஓட்டு வாங்கி பதவியில் இருப்பதற்கான கட்சி அல்ல. இந்த தமிழ் சமுதாயம் சீர்கெட்டு போய்விடக்கூடாது என்பதற்காக கவலையோடு பாடுபடுகின்ற இயக்கம்.
நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நம்புபவன் நான். அதனால் தான் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்டேன். அதனால் தான் இன்று முல்லை, காவிரி, பிரச்சினைகள், ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை எதிர்த்து போராடுதல் போன்ற தமிழர்களுக்கான பிரச்சி னைகளை எதிர்கொள்ள என்னால் முடிகிறது.
தி.மு.க. கூட்டணியில் பார்க்காத கூட்டத்தை, அ.தி.மு.க. கூட்டணியில் சந்திக் காத மக்கள் வெள்ளத்தை இப்போது நான் போகிற ஊர் எல்லாம் பார்த்துவிட்டு வருகிறேன்.இது உங்களிடையே நம்பிக்கை உட்டுவதற்காகசொல்லவில்லை.
மக்கள் அன்போடு நம்மை ஆதரிக்க வேண்டும்,என்கிற எண்ணத்தோடு நினைத்து விட்டனர். கூட்டத்தை வைத்து நான் கணக்கு போடமாட்டேன்.ஏனெ னில் எனது பேச்சை கேட்பதற்காக கூட அவர்கள் வருவார்கள்.
கூட்டத்தில் இருப்பவர்கள் முகங்கள், கண்கள், ரோட்டில் செல்பவர்களை நான் பார்க்கிற பார்வை போன்றவற்றை வைத்துதான் கணக்கு போடுவேன். இப்போ து தான் மக்களுக்கு ம.தி.மு.க. மீது ஈர்ப்பு வந்துள்ளது. இதைபயன்படுத்தி யுத் தத்தில் ஜெயிப்போம். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க.போட்டி யிடும். இதற்கான அறிவிப்பு வருகின்ற நேரத்தில் எந்தந்த இடம் என்பதையும், யார் வேட்பாளர்கள் என்பதையும் ஆட்சி மன்ற குழு முடிவு செய்யும். எதிர் காலம் மிகப்பிரகாசமாக உள்ளது.
இவ்வாறு வைகோ பேசினார்.
SUPPER MESSAGE V WILL VOTE FR UR MDMK I AM APPROCHING U R POLICY
ReplyDelete