Saturday, October 5, 2013

வ.உ.சி “சிவஞான போதம்” உரை நூல் விழா-வைகோ உரை- பாகம் 4

ஒரு நாள் தெற்குக்கடை பஜாரில் அவருக்கு வேண்டிய நண்பர் அருணாசலத் தின் பழைய புத்தகக் கடையில் போய் உட்கார்ந்து இருக்கிறார் திவான். அப் போது அவரது கண்ணில்படுகிறது உத்தம பாளையத்தில் இருந்து 1929 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட ‘பாரதி’ என்கின்ற மாத இதழ். அதைப் புரட்டுகிறார்.அந்தப்பத்திரிகையில் இவருக்கு ஒரு குறிப்பு கிடைக்கிறது.அதில் வ.உ.சி. எழுதிய, ‘அழகும் ஆரோக்கியமும்’ என்கின்ற மூன்று பகுதி, பாரதி ஏட் டில் வெளியிடப் பட்டு இருக்கிறது. இவருக்கு மகிழ்ச்சி. மேலும் தேடுகிறார். இரண்டாவது பகுதியும் மூன்றாவது பகுதியும் அவருக்குக்கிடைக்கிறது.முதல் பகுதி கிடைக்கவில்லை.

இவரது நண்பர் முகமது அலியின் மூலமாக முயற்சிக்கிறார். உத்தமபாளையத் தில், முகமது இஸ்மாயில் என்பவரது வீட்டில், பாரதி இதழ்கள் பைண்ட் வால் யூம்களாக இருக்கிறது என்று கேள்விப்பட்டு இவர் உத்தமபாளையத்துக்குச் செல்கிறார். முதலில் கடிதம் மூலமாகத் தொடர்பு கொண்டு அங்கே சென்று அவரது இல்லத்தில் இருக்கின்ற நூலகத்தில் தேடிப் பார்த்தால், குறிப்பு இருக் கிறதே தவிர, அந்த வால்யூம்கள் அங்கே இல்லை.

ஏமாற்றம் அடைந்து, பல இடங்களில் தேடித்திரிகிறார். எங்கும் கிடைக்க வில் லை. சென்னை எழும்பூரில் இருக்கக்கூடிய அரசு ஆவணக் காப்பகத்துக்குச் சென்று, பழைய இதழ்கள் எல்லாவற்றையும் புரட்டுகிறார். பாரதி இதழ்கள் அங்கு இருக்கின்றன. எல்லா இதழ்களையும் பார்க்கிறார். வரிசையாகப் பார்த் துக் கொண்டே வருகிறார் அந்த முதல் பகுதி இல்லை. பாரதி இதழ் முழுவதும் பார்த்து முடித்தாயிற்று. இன்னும் ஒரே ஒரு இதழ் பாக்கி.

அவர் நினைக்கிறார்.இறைவனே அந்தக் கடைசி இதழ் எங்கே இருக்கிறது அந்த முதல் பகுதி இருக்க நீ அருள் செய்ய மாட்டாயா? என்று எண்ணிக்கொண்டே அந்த இதழைப் புரட்டியதாகவும், அதில் அந்த முதல் பகுதி இருந்ததாகவும், தன் வாழ்நாளிலேயே என்றும் ஏற்படாத மகிழ்ச்சியை தான் பெற்றதாகவும் அவர் எழுதுகிறார். எவ்வளவு சிரமங்களைத் தாங்கி இருக்கிறார்?அழகும் ஆரோக்கிய மும் வெளியிடப்பட்டு விட்டது. நான் மேலே குறிப்பிட்ட மற்ற நூல்கள் எல் லாம் வ.உ.சி. எழுதியவை. பதிப்புக்கு வரவில்லை. அவர் எழுதிய அற்புதமான கருத்துகள் வெளியே வரவில்லை.



இந்தப் பிரச்சனையில் என்ன தீர்வு? எப்படி இந்த நூல்களைக் கண்டுபிடிப்பது?
தமிழர்களுடைய சொத்துகளை தமிழர்களே அறிவது கிடையாது. இரண்டாயி ரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் தந்த இலக்கியங்கள், உ.வே.சாமிநாத அய்யர் இல்லாவிட்டால் கிடையாது. நம்முடைய சொத்துகளை நாம் பாதுகாத் துக் கொள்ள மறந்துவிட்டோம். எந்த ஒரு இனம், எந்த ஒரு நாடு தியாகத்தை மதிக்கிறதோ அந்த நாடுதான் வாழும். எந்த ஒரு சமுதாயம் தன்னுடைய பூர் வீகக் கலையை, கலாச்சாரத்தை, நாகரிகத்தை, தங்கள் சொத்துகள் எனப் பாது காக்கிறதோ அந்த இனம்தான் வாழும்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட சுவடிகள் பல இன்றைக்கு நம்மிடம் இல்லை. குமரிக் கடல் பொங்கி அழித்துக் கொண்டுபோனது வேறு. கன்னியாகுமரிக்கு தெற்கே இருந்த லெமூரியாக் கண்டத்திலே தமிழகம் அழிந் தது வேறு. கடல்கோளால் கபாடபுரம் அழிந்தது. அதிலே எத்தனையோ நூல் கள் அழிந்து போய் இருக்கும். மண்ணுக்கு இரையாகக் கொடுக்கப்பட்ட நூல் கள் எத்தனை?

தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் இங்கு திருநெல்வேலிக்கு வந்தார். பொரு நராற்றுப் படையும், திருமுருகாற்றுப்படையும், திருநெல்வேலி தெற் குப்புதூர் தெருவில் இருக்கின்ற வீடுகளில்தான் கிடைத்தது. இந்தத் திருநெல் வேலிச் சீமை, வீரத்தை மட்டும் அல்ல, தமிழ் இலக்கியத்தை வளர்த்த சீமை. ஆகவேதான் இங்கே அவர் தேடினார். ஆழ்வார் திருநகரிக்குச் சென்றார். அங்கு உள்ள ஒரு தமிழ் அன்பர் வீட்டில்தான் பத்துப்பாட்டில் முல்லைப் பாட்டு கிடைத்தது.

அதைப்பற்றிச் சொல்கிறார். கையில் ஏடுகிடைத்தது. அன்றைக்கு முழு நிலவு நாள். நிலவின் வெளிச்சத்தில் அதைப் பார்த்தேன். முல்லைப் பாட்டு என்று கண்டேன். மகிழ்ச்சியால் என் மனம் துள்ளியது. உ.வே.சா. எழுதுகிறார். கலை மகள் இதழில், ‘நிலவில் மலர்ந்த முல்லை’ என்று ஒரு கட்டுரை எழுதி இருக் கிறார். தமிழ்த்தாத்தா உ.வே.சா. இல்லாவிடில் சிலப்பதிகாரம் இல்லை. புறநா நூறு இல்லை. அகநாநூறு இல்லை. திருமுருகாற்றுப் படை இல்லை. பொரு நராற்றுப்படை இல்லை. பத்துப்பாட்டு இல்லை. முல்லைப் பாட்டு இல்லை. அவர் தந்த அருட்கொடைதான் இந்த நூல்கள்.

வரகுண பாண்டியன் புகழ் சொல்கின்ற ஆலயம் கட்டப்பட்டு இருக்கின்ற கரி வலம் வந்த நல்லூருக்குச் சென்றார். வரகுண பாண்டியன் காலத்து ஏடுகள் அங்கே இருப்பதாக அறிந்து கேட்டார். அங்கு சொன்னார்கள். ‘சில நாள்களுக்கு முன்னர்தான் பெரிய குழியை வெட்டி, அக்னி வளர்த்து அந்த நெருப்புக்கு இரை யாக்கி விட்டோம்’ என்றார்கள். அற்புதமான ஏடுகளை, கருவூலங்களை இப்ப டி அக்னிக்கு இரையாக்கி விட்டார்களே கரிவலம் வந்த நல்லூரில். இந்தத் தமி ழகம் வாழுமா? இந்தத் தமிழகத்தை வாழ வைக்க முடியுமா? என்று மனம் கலங் கி அழுது கொண்டே அவர் எழுதி இருக்கிறார்.

தொடரும் ......

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

No comments:

Post a Comment