Saturday, October 26, 2013

புகழேந்தி தங்கராஜ் நூல் வெளியீடு - வைகோ உரை -பாகம் 3

புகழேந்தி தங்கராஜின் “இது இல்லை எனில் எது இனப்படுகொலை?” நூல் வெளியீட்டு விழா #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ ஆற்றிய உரை பாகம் 2 யின் தொடர்ச்சி வருமாறு...

கடமைகள் நிரம்ப இருக்கின்றன;ஆயத்தமாவோம்; செய்து முடிப்போம்!


ஜூலை  1987 இல் இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஏன் வந்தது என்பதை,செம்பி யன் போன்ற தம்பிகள் தெரிந்து கொள்ள வேண்டும். வடமராச்சிப் போரில் பலத்த அடிவாங்கி, பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடினான் சிங்களவன்.
தென்னாப்பிரிக்காவில் இருந்து ஆயுதங்களை வாங்கிக் கொண்டு வந்தான். பஃபல்லோ என்ற பெயரில் ஆயுதக் கவச வண்டிகள் வாங்கிக்கொண்டு வந் தான். எதுவுமே புலிப் படைக்கு முன்னால் எடுபடவில்லை.

நான் ஈழத்தில் இருந்தபோது, திரும்பி இந்தியாவுக்குப் போக மாட்டேன் என்று
சொன்னேன். அப்போது இந்திய இராணுவத் தளபதி கல்கத்,சென்னையில் மு தல் அமைச்சர் கருணாநிதியைச் சந்திக்கிறார். அதற்குப் பிறகு, தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன், கோபால்சாமி இலங்கைக்குப் போயிருக் கிறார்.கட் சிக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்று ஒரு அறிக்கை விடுகிறார். அந்த
அறிக்கை அங்கே வந்தது. அதை அவர்கள் தலைவர் பிரபாகரன் முன்னிலை யில் வாசித்துக் காண்பித்தார்கள்.

நாயாறு பகுதியில் போய் இறங்கிய நான்,அடர்ந்த காட்டுக்கு உள்ளே போகி றேன்.நான் கீழே இறங்கி வந்தபிறகு, புலிகளின் உளவுப்பிரிவான ரெக்கிகுரூப், ஒரு வீடியோ எடுத்து வந்து ஐந்து நாள்கள் கழித்து, தலைவரிடம் கொண்டு வந்து காண்பிக்கின்றார்கள்.வைகோ அண்ணன் வந்து இறங்கிய இடத்துக்கு, கொஞ்ச நேரத்தில், இந்தியப்படை வந்து விட்டது. எப்படித் தெரியுமா? நாங்கள் பயணித்த,டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட படகில் இருந்து சத்தம் கேட்டு இருக் கும்; வாடை அடித்து இருக்கும். அதனால், அங்கே பக்கத்தில் இருந்த முகாமில் இருந்து அவர்கள் உடனே அங்கே வந்து விட்டார்கள். தடங்களைப் பார்த்து
இருக்கின்றார்கள். அதை இவர்கள் படம் பிடித்து விட்டார்கள். அதைத்தான்
கொண்டு வந்து காட்டினார்கள். ஆனால், மேற்கொண்டு அவர்களால் தடம்
கண்டுபிடிக்க முடியாது.அதற்கு ஏற்ற முறையில் தான் புலிகள் என்னை அழைத்துக் கொண்டு போனார்கள்.

மறக்க முடியுமா சொர்ணத்தை? என்ன அழகான தோற்றம்? புலிப்படைத் தள பதி களிலேயே நல்ல தோற்றப்பொலிவு மிக்கவர் சொர்ணம்.முள்ளிவாய்க் காலுக்கு முன்னர் போராட்டக்களத்தில் ஒரு காலை இழந்து, குப்பி கடித்து இறந்தார்.அவரும்,பாம்பு அஜித்தும்தான் என்னை அழைக்க வந்தார்கள்.திரும் பி வருகையில் என்னை வழி அனுப்பி வைத்தது பால்ராஜ். அண்ணனைப் பத் திரமாகக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்று, ஏழு தளபதிகளை என் னோடு அனுப்பி வைத்தார் தலைவர். பால்ராஜ் பெயரைச் சொன்னாலே சிங் களப் படைக்குக் குலை நடுங்கும். அவர்தான் என்னை அழைத்து வருகிறார்.
கிளிநொச்சி சாலையைக் கடந்து நாங்கள் வந்தோம்.

தலைவர் பிரபாகரன் அவர்கள்தான், என்னைக் கண்டிப்பாக நீங்கள் தமிழகம்
போக வேண்டும் என்றார். பேசாலையில் இருந்து என்னைப் படகில் ஏற்றும்
போதுதான் பார்த்தேன். பால்ராஜ் காலணி கிழிந்து இருந்தது. நான் ஒரு நல்ல
கேன்வாஸ் ஷூ அணிந்து இருந்தேன்.இனி அது எனக்குத் தேவை இல்லையே;
இதை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிக் கொடுத்து விட்டு
வந்தேன்.

அந்தக் காலகட்டத்தில், சிங்கள இராணுவத்தின் நெல்லியடி முகாமைப் புலி கள் தகர்த்தார்கள்.அதுதான் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. என் னை நாட்டுக்குத் திருப்பி அனுப்ப அவர்கள் முடிவு எடுத்தார்கள். அண்ணே
சண்டை கடுமையாகப் போகுது.இப்போது, எங்களைச் சுற்றி 60,000 பேர்கள் இருக்கின்றார்கள்.

அப்போதும், நான் திரும்பிப் போக விரும்பவில்லை என்றேன். அதற்குக் கார ணமும் சொன்னேன். வஞ்சகம் செய்து விட்டது. ஏன் தெரியுமா? யாரோ வந்து இறங்கி இருக்கின்றார்கள் என்று இந்தியப் படை வந்து பார்த்தது அல்லவா? இங்கே தி.மு.க. பொதுச் செயலாளர் அறிக்கை விடுகிறார். அதை வைத்து, இரண்டும் இரண்டும் நான்கு என்று கணக்குப் போட மாட்டார்களா?வைகோ தான் வந்து இறங்கி இருக்கின்றார்; இந்த வழியாகத்தான் உள்ளே போயிருக் கின்றார்; அப்படியானால், இதற்கு உள்ளேதானே தலைவர் இருக்க வேண்டும்? என்று கண்டுபிடித்து விடுவான் அல்லவா? இந்தத் துரோகத்தைத்தான் என் னால் மன்னிக்க முடியவில்லை. அப்போதே இதை என் நாள்குறிப்பில் எழுதி வைத்து இருக்கின்றேன். சுயசரிதை எழுதுகின்ற அளவுக்குப் பெரிய மனிதன் அல்ல. ஆனால், எத்தனையோ செய்திகளைப் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆவல் இருக்கின்றது. அதை ஒரு நூலாகத் தொகுக்கும்போது, அப்போது நான் அந்த நாள்குறிப்பில் எழுதி இருப்பதை, அப்படியே எடுத்துப் போடுவேன்.

இது ஒரு துரோகம். எனக்கல்ல. இந்த இனத்துக்குச் செய்த துரோகம். இலட்சத் துக்கும் மேற்பட்ட பெரும் படையை எதிர்த்துக் களத்தில் நிற்கின்ற விடுத லைப்புலிகளைக் காட்டிக் கொடுப்பது போலச்செய்து விட்டார் களே? என்று தான் வேதனைப்பட்டேன்.


கிட்டுவுக்காக அமைக்கப்பட்ட நில வறையில் அவர் தங்கவில்லை. அதில்
தான் என்னைத் தங்க வைத்தார்கள்.அதற்குக் கீழே பத்து அடி ஆழத்தில் உள்ள மற்றொரு நிலவறையில்தான் தலைவர் இருக்கின்றார். அந்தப் படியில் ஒரு காலை மேலே வைத்துக் கொண்டு, மற்றொரு காலைக் கீழே ஊன்றியவாறு
நின்றுகொண்டு, அவர் என்னிடம் சொன்னார்: அண்ணே நீங்கள் பாதுகாப்பாகத் திரும்பிச் செல்ல வேண்டும்; அக்காவுக்கு நான் பதில் சொல்ல வேண்டும்; உங் களைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்றார்.

என் வீட்டில் உணவு அருந்தியவர். என் துணைவியார் அருமையாகச் சமைத் துப் பரிமாறியவர். எத்தனையோ பிள்ளைகள் வந்து சாப்பிட்டு இருக்கின்றார் கள்.தலைவர் சன் கிளாஸ் அணிந்த படம் ஒன்று வேறு எங்கேயும் கிடைக் காது. என் வீட்டில் வைத்து இருந்தேன்.என்னுடைய சன் கிளாசைத்தான் அவ ருக்கு அணிவித்து ஒரு படம் எடுத்துப் பத்திரமாக வைத்து இருந்தேன். அதை இப்போது காண வில்லை. யாராவது விரும்பி எடுத்துச் சென்று இருக்கலாம். அப்படியெல்லாம் நட்போடும், உரிமையோடும் இருந்தவர். அதனால் அப்படிச் சொன்னார்.

கரும்புலி மில்லரின் வீரமரணம்


நீங்கள் வந்த வழியில் இப்போது இந்தியக் கடற்படை இரண்டு கப்பல் களை நிறுத்தி வைத்து இருக்கின்றது.அதனால், காட்டுக்கு உள்ளே வேறு வழியாகத் தான் செல்ல வேண்டும்.கொஞ்சம் முட்கள் குத்திக் கிழிக்கும் என்றார். எனக்கு விடை கொடுத்து அனுப்புவதற்கு முதல்நாள், கரும் புலிகள் பாசறையைப் பார்க்க என்னை அனுப்பி வைத்தார் . அந்தக் காட்சிகள் எல்லாம் உன்குழாய் (Youtube) இணையதளத்தில் ஒளிப்படமாகவே உள்ளது. அந்தக் கரும்புலிகள்
பாசறையின் தளபதியாக ஒரு கமல் இருந்தார். இந்தப் புத்தகத்தில் வருகின்ற
கமல் வேறு, அவர் வேறு. நான் சொல்கின்ற கமலின் பூர்வீகம், தஞ்சாவூர்.
மூன்று நான்கு தலைமுறைகளுக்கு முன்பு இங்கேயிருந்து போய்க் குடியேறி யவர்கள். கரும்புலிகள் பாசறையில் என்னைப்பேச வைத்தார்கள்.முதல் கரும் புலி கேப்டன் மில்லர். நெல்லியடி முகாமில் ஒரு பெரிய ஆயுதக்கிடங்கு இருந் தது.ஆயிரக் கணக்கான சிங்களச் சிப்பாய்கள் இருந்தார்கள். வெடிகுண்டுகள்
அடங்கிய ஒரு லாரியை ஓட்டிக்கொண்டு போய், அங்கே மோதித் தகர்ப்பதா கத் திட்டம்.வெடிமருந்துகளை ஏற்றுகின்ற வேலையையும்,அதற்கு இணைப்பு கொடுக்கின்ற வேலையையும், மில்லர் சிரித்துக்கொண்டே செய்கிறான். ஆம்;
தன் சவப்பெட்டியைத் தானே தயாரித்தான் என்று, இவர் இந்தப் புத்தகத்தில் எழுதி இருக்கின்றார்.(கைதட்டல்).

1987 ஜூலை ஐந்தாம் நாள். அந்த இராணுவ முகாமை நோக்கி லாரி போகிறது. அங்கே, பெரிய மரங்களை வெட்டிப் போட்டு தடைகளை ஏற்படுத்தி வைத்து இருக்கின்றார்கள்.புலிகள் தொடர்ந்து துப்பாக்கிகளால் சுட்டவாறு, தடைகளை அகற்றிக் கொண்டு முன்னேறினார்கள். சுஜி என்ற பெண் போராளி, காவல் கோபுரத்தை நோக்கிக் குண்டுகளை எறிந்தார். காவல் கோபுரம் தரைமட்டமா னது. வண்டி முகாமை நெருங்குகிறது. அதில் பிரபு என்ற ஒரு வீரனும் உட்
கார்ந்து இருக்கின்றான். அருகே நெருங்கிய வுடன், மில்லர் அவனை அடித்து
வண்டியில் இருந்து கீழே தள்ளுகிறான்.இவன் மட்டும்தான் சாக முடிவு எடுத் து இருக்கிறான். முழுவேகத்தோடு வண்டியை ஓட்டி, முகாம் மீது மோதுகி றான். வெடித்துச் சிதறுகிறது.ஏற்கனவே தயாராக இருக்கின்ற புலிகள்,ஆயுதங் களோடு பாய்கிறார்கள்.முகாமைத் தகர்க்கின்றார்கள். இதில், தடைகளை நீக்கி வந்த கமல் இறந்து போகிறான். ஆங்கிலப் படங்களில்தான் இப்படிக் காட்சிக ளைக் காண முடியும்.

இந்திய-இலங்கை சதி ஒப்பந்தம்

இந்தத் தாக்குதல்தான், ஜெயவர்த் தனாவுக்கு அச்சத்தைக் கொடுத்தது. இனி கொழும்பு வரை புலிகள் படை வந்து அடித்து நொறுக்கி விடும் என்று அஞ்சி னான். பாகிஸ்தான் எங்களுக்கு நட்பு நாடு என்று, பேட்டியெல்லாம் கொடுத் தான். இந்தியாவைக் கேவலமாக நினைத்தான். 87 ஏப்ரல் 17 போபர்ஸ் ஊழல் வெடிக்கிறது. ராஜீவ் காந்தி சிக்கிக் கொண்டார்.இதிலிருந்து தப்புவதற்கு என்ன வழி? என்று பார்த்தார். அங்கே, அவனுக்கு புலிகளிடம் தப்புவதற்கு என்ன வழி? என்று பார்த்தான்.இந்தியாவிடம் உதவி கேட்போம் என்று ஆள் அனுப்புகிறான். ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம் என்கிறான்.இங்கே ஒரு பச்சைத் துரோ கி ஜே.என்.தீட்சித் இருந்தான். இப்போது அவன் உயிரோடு இல்லை. பிரபாகர னை அழைத்து வர வேண்டும். ஆனால், அவர்தான் பெங்களூரு சார்க் மாநாட் டுடன், இனி இந்தியாவுக்கு உள்ளே கால் எடுத்து வைக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டுப் போய் விட்டாரே?

பூரி என்ற ஒரு முதன்மைச் செயலாளரை அனுப்புகிறார்கள். விடுதலைப்புலி களை ஈழத்தமிழர்களின் ஏகப் பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ள இந்திய அரசு தீர் மானித்து விட்டது. தமிழ் ஈழத்தை ஏற்படுத்திக் கொடுக்க அனைத்து உதவி களையும் செய்யப் போகிறார்கள். நீங்கள்தான் ஒரே பிரதிநிதியாக இருக்கப்
போகிறீர்கள்.அதற்காகப்பேச வருமாறு தில்லிக்கு அழைக்கிறார் ராஜீவ் காந்தி என்கிறார். இந்தியாவுக்கு வருவதற்கு அவர் விரும்பவில்லை. அயோக்கியத்
தனமாக, நயவஞ்சகமாகப் பொய் சொல்லி ஏமாற்றினார்கள்.

இந்திய அரசை அவர் நம்பினார். மகாத்மா காந்தி பிறந்த தேசம் வஞ்சகம் செய் யாது என்று எண்ணி, ஹெலிகாப்டரில் ஏறினார். சென்னை விமான நிலையத் தில் செய்தியாளர்களிடம், நாங்கள் நம்பிக்கையோடு செல்கிறோம் என்று பேட்டி கொடுத்தார்கள். என்ன ஆயிற்று? தலைவருடன், யோகி, பாலசிங்கம், திலீபன் எல்லோரும் இருந்தார்கள். அசோகா ஓட்டலில் 518 ஆம் எண் அறை யில் தங்க வைத்தார்கள்.அங்கே வந்த தீட்சித் ஒரு ஒப்பந்தத்தைத் காட்டிய போதுதான்,வஞ்சிக்கப்பட்டு விட்டோம் என்பதைத் தலைவர் உணர்ந்தார். பால சிங்கம் உணர்ந்தார்.

எங்களிடம் இதைப்பற்றி எதுவுமே சொல்லவில்லையே? என்று கேட்கிறார் கள். இதற்காகத்தான் உங்களை அழைத்து வந்து இருக்கிறோம். இப்படி ஒரு ஒப்பந்தம் போடப் போகிறோம் என்கிறார் தீட்சித்.

நாங்கள் தமிழ் ஈழத்துக்காக மகத்தான தியாகங்களைச்செய்து, எங்கள் இயக்கத் தைக் கட்டி எழுப்பி இருக்கின்றோம். இந்த ஒப்பந்தத்தை நாங்கள் ஏற்க முடி யாது என்றார்கள்.நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், இந்த ஒப்பந்தம் செய் யப் போகிறோம் என்றான் தீட்சித்.

‘இதை நாங்கள் எதிர்க்கிறோம்’ என்றார்கள். அங்கே நடந்த நிகழ்வுகளை எல் லாம், லண்டனில் பாலசிங்கத்தை நான் சந்தித்தபோது அவர் என்னிடம் கூறி னார். ஒருநாள் முழுவதும் அவரோடு இருந்தேன்.பேசிக்கொண்டே இருந்தேன். அவரும்,அவரது துணைவியார் அடேலும் என்னை அன்போடு கவனித்தார்கள். அறுசுவை உணவு அளித்து உபசரித்தார்கள்.

பிரபாகரனின் விருப்பம்


மாத்தையாவை எவ்வளவு நம்பினார் தலைவர். அவரிடம் பத்திரிகைப் பொறுப் பை ஒப்படைத்து இருந்தார். அங்கே தன்னுடைய ஆட்களை நியமித்துக் கொண்டே வருகிறார் மாத்தையா.

என்னிடம் சொன்னாரே.. ‘அண்ணே, ஒரு நாட்டுக்கு அதிபராகி விட வேண்டும்
என்ற ஆசையெல்லாம் எனக்குக் கிடையாது. மாத்தையா போன்றவர் களிடம் பொறுப்பை ஒப்படைத்து விடுவேன். தமிழ் ஈழம் அமைந்தால் எனக்கு இரண்டு கனவுகள் இருக்கின்றன. இராஜராஜன் காலத்தில் தமிழனுக்கு ஒரு கப்பல் படை இருந்தது.அதுபோல, ஈழத்துக்கு ஒரு பெரிய கப்பல் படையை உருவாக்க வேண்டும்.அதற்குப் பொறுப்பு எடுத்துக் கொள்ளவேண்டும். மற்றொன்று, இந்த
விடுதலைப்போரில் உடல் உறுப்புகளை இழந்தவர்கள், கணவனை இழந்தவர் கள், பிள்ளையை இழந்தவர்கள்,குடும்பங்களை இழந்தவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கின்ற அமைப்பை நான் நடத்த வேண்டும் என்றார். மாத்தையா மீது அவ்வளவு பாசமாக இருந்தார். ஆனால், இந்திய உளவுத் துறை ரா அவரைத் தன் கைக்குள் போட்டுக் கொண்டது. தலைவரைக் கொலை செய்யத் திட்டமிட் டார்கள்.கிருபன் போன்ற துரோகிகளைத் இங்கே தயார் செய்து அனுப்பி னார் கள்.

தலைவரைக் கொலை செய்யும் திட்டம் அவர்களுக்கு முதலில் தெரியவில் லை.பொட்டு அம்மானின் விசாரணையில் ஒருவன் சிக்கிக் கொண்டான். விஷ யம் வெளியே வந்தது. அப்போதுதான் தெரிய வருகிறது. மூன்று வகையான திட்டம்.ஒன்று, பிரபாகரன் வருகின்ற வண்டி மீது, ஏவுகணையை வீசிக் கொல் வது; இன்னொன்று, அவரது படுக்கைக்குக் கீழே வெடிகுண்டு வைப்பது; அல் லது அவர் ஆயுதம் இல்லாமல் இருக்கும் போது, அருகில் இருந்து சுட்டு விடு வது.

இந்தியாவில் இருந்து வந்தவர்களிடம் விசாரிக்கின்றார்கள். செங்கல்பட்டு அருகே தப்பினோம் என்றார்கள். அப்படி எளிதாகத் தப்பி வர முடியுமா? என்று
சந்தேகப்பட்டு, கேட்கின்ற விதத்தில் கேட்டபோது, அவன் உண்மையை ஒப்புக் கொண்டான். இதுதான் திட்டம்.

இதை அறிந்து கொண்ட பொட்டுஅம்மான் பதறி ஓடுகிறார். அங்கே கிருபன் தலைவருக்கு எதிரில் அமர்ந்து இருக்கிறான். அவனிடம் பிஸ்டல் இருக்கிறது. அப்படியே அவனை அங்கிருந்து தூக்கிக்கொண்டு போகிறார்கள். அதைப்போ லத்தான் கருணாவும் துரோகம் செய்தான்.

நெல்லியடித் தாக்குதலுக்குப் பிறகு தான், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தைத்
திணித்தார்கள். அப்போது அவர்கள் வலியுறுத்திய ஐந்து கோரிக்கைகளை
நிறைவேற்ற இலங்கை அரசை வற்புறுத்துவோம் என்று ஒரு உறுதி மொழி கொடுத்து இருந்தால் போதுமே? திலீபன் மடிந்து இருக்க மாட்டானே? அவன் சாவுக்கு இந்திய அரசுதான் காரணம். ஜானியைக் கொன்றது இந்திய அரசு. இங் கிருந்து தூதராக அனுப்பி வைத்து, இவர்களே சுட்டுக்கொன்றார்கள். உலகத் தில் எவனும் செய்யாத துரோகம். பன்னாட்டுக்கடல் பரப்பில் போய்க்கொண்டு இருந்த கிட்டுவைச் சாகடித்தது இந்தியக் கடற்படை. குமரப்பா, புலேந்திரன்
உள்ளிட்ட 12 விடுதலைப்புலித் தளபதிகள் சாவுக்குக் காரணம் இந்திய அரசு.

தொடரும்.........

புகழேந்தி தங்கராஜ் நூல் வெளியீடு - வைகோ உரை -பாகம் 2

No comments:

Post a Comment