Monday, October 14, 2013

மாநில சுயாட்சியை வென்றெடுக்க அணிதிரண்டு வாரீர்!

அறிஞர் அண்ணாவின் எண்ணமாம் மாநில சுயாட்சியை வென்றெடுக்க அணிதிரண்டு வாரீர்!

விருதுநகரில், செப்டம்பர் 15 அன்று நடைபெற்ற மறுமலர்ச்சி தி.மு.க. மாநாட் டில், மாநில சுயாட்சி என்ற தலைப்பில், கழக வெளியீட்டுச் செயலாளர் ஆ.வந் தியத்தேவன் ஆற்றிய உரை....

சுயமரியாதை இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாய் - நீதிக் கட்சியின் வழித் தோன்றலாய் - நூற்றாண்டு பெருமைக்குரிய திராவிட இயக்கத்தின் வாரிசாய் பீடுநடைபோட்டுவரும் பெருமைக்குரிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழர்களாகிய நாம், நம் ஒப்பற்ற தலைவர் அண்ணாவின் பிறந்த நாளைக் கொண்டாட இந்த மாநாட்டில் கூடியுள்ளோம்.

நம் இரு விழிகளுக்கு நிகரான பெரியார்-அண்ணா ஆகிய தலைவர்களின் புதிய
வார்ப்படமாய், காலம் வழங்கியுள்ள நம் இலட்சியத் தலைவர் வைகோ அவர் களின் அழைப்பினை ஏற்று, வீரம் விளைவிக்கும் விருதுநகர் சீமையில் திரா விட இயக்கத் தீரர்கள் நாம் திரண்டு நிற்கிறோம்.

பல்லாயிரக்கணக்கான தோழர்கள் அணிவகுத்துள்ள எழுச்சிமிக்க நம் மாநாட் டின் மகத்துவத்தைக் காணும் போது, கடந்த காலத்தின் நம் இயக்க செயல்பாடு கள் நெஞ்சில் நிழலாடுகின்றன. இதே விருதுநகர் மண்ணில் 1930 ஆம் ஆண் டில் ஆகஸ்டு 8,9 தேதிகளில் சுயமரியாதை இயக்கத்தின் மூன்றாவது மாநில மாநாடு கூடியதே;அதன்பின் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஜஸ்டிஸ் கட்சி என்ற தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் தொண்டர்கள் மாநாடு நடைபெற் றதே;

1953 ஆம் ஆண்டு சூன் திங்களில் திமுகழகத்தின் மாநாடு நடைபெற்று,3 ரூபாய் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்பட்டு மூன்று வேளையும் தோழர்களுக்கு உண வு அளிக்கப்பட்டு அண்ணா அவர்களும்,ஈ.வி.கி.சம்பத் அவர்களும்,நாடகத்தில் நடித்து,கண்டோரை வியப்பில் ஆழ்த்தியதே அந்த மாநாடு. மாணவர் திமுகழ கத்தை வழி நடத்திச் சென்ற எஸ்.டி.சோமசுந்தரம் அவர்கள் முன்னின் று 1961 ஆம் ஆண்டில் நடத்திக் காட்டினாரே திராவிட மாணவர் முன்னேற்றக் கழக மாநாடு என பல்வேறு மாநாடுகள் இந்த ஊரில் தனிச்சிறப்புடன் நடைபெற்றி ருக்கின்றன.

தமிழ்நாடு என நம் தாய்த் திருநாட்டிற்கு பெயர் சூட்டுவதற்காக இதே ஊரில்
தேசபந்து மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து தன் இன்னுயிரை தந்தாரே வீரத்திருமகன் சங்கரலிங்கனார்.தந்தை பெரியாரின் உற்ற தோழரான வி.வி.ரா மசாமி (நாடார்), காந்தியார் சாந்தி அடைய என்று நூல் எழுதியதற்காக காரா கிருகத்தில் தள்ளப்பட்டு மொட்டை அடிக்கப்பட்டு அவமானப் படுத்தப்பட்ட நம் வாலிபப் பெரியார் ஆசைத்தம்பி, தாசிகளின் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர் என்ற மறுமலர்ச்சி நூலை முழுமையாக செலவு செய்து வெளியிட மூவலூர் இராமாமிர்தம் அம்மையாருக்கு துணை நின்ற சிவகிரி வெள்ளைத் துரைச்சி நாச்சியார், பக்கத்தில் உள்ள கூடப்பனை முருகன் கோயிலில் நடந்த பத்து நாள் திருநாளில் ஆறாவது நாளில் எண்ணாயிரம் சமணர்கள் கழுவில்
ஏற்றிக்கொல்லப்பட்ட காட்சியை தடுத்து நிறுத்திட போராடி வெற்றிகண்ட விருதுநகரின் திமுக நகர செயலாளர் மணிமாறன், எம்.எஸ்.பி.ராஜா, வாடி யான் சங்கரபாண்டியன், வ.பெ.வடிவேல்,வைஸ்சேர்மன் முத்தையா, ஜின்னா
நாராயணசாமி, சைக்கிள்கடை நடராஜன், குட்பை ரத்தினம், இராசமாணிக்கம், வேலூர் அரங்கநாதன், ந.இராமசாமி, ஓவியர் செல்வராஜ், கே.பி.எஸ்.பாண் டியன், இராசம்மாள்,உத்தண்டன் என திராவிட இயக்கம் செழித்து வளர்ந்திட அரும்பாடு பட்டார்களே, நம் ஆருயிர் பாசறை வீரர்கள் அவர்களுக்கெல்லாம் இந்த இனிய வேளையில் நம் வீரவணக்கத்தை முதலில் தெரிவித்துக் கொள் வோம்.

சரித்திரச் சிறப்பு மிகுந்த இந்த மாநாட்டில், ‘மாநில சுயாட்சி’ என்ற நம் உயிர்க் கொள்கையைக் குறித்து உரையாற்றக்கூடிய, அரிய வாய்ப்பினை அளித்த நம் பொதுச்செயலாளர் அவர்களுக்கும், மாநாட்டு நிர்வாகி களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்று முழக்க மிட்டவர்கள் நாம். தமிழ்நாடு
தமிழருக்கே என்று போராடியவர்கள் நாம். இதனையே காரணமாக்கி, நம்மை
கருவறுக்க காங்கிரஸ்காரர்கள் முயன்ற போது, அறிஞர் அண்ணா அவர்கள்
‘எண்ணித்துணிக கருமம்’ என்று வியூகம் அமைத்து மாநில சுயாட்சியை முன் நிறுத்தி அதனை நிறைவேற்ற பாசறை அமைத்தார்; உரிமைப் போருக்கு நம் மை அணியமாக்கினார்.


“இன்றைய ஆட்சியில் அரசாங்கம் இரட்டை ஆட்சியுடைய அரசாங்கமாக
இருந்து வருகிறது. அதாவது பல அதிகாரங்கள் மத்திய ஆட்சிக்கும், சில அதி காரம் மாகாண ஆட்சிக்குமாக இருந்து வருகிறது. மத்திய ஆட்சி என்பது எதேச் சையான, சர்வாதிகார ஆட்சிக்கு உட்பட்டதாகும். மாகாண ஆட்சி என்பது
கொள்கை இல்லாமல், வாழ்க்கைக்கும் பதவிக்கும் மாத்திரம் போராடிக்கொண் டு,சுயநலத்துக்காகவே இருந்துவரும் ஆட்சியாகும். இது ஜெயித்தாலும், தோற் றாலும் ஆள் அல்லது கட்சியின் பெயர்தான் மாறுமே தவிர, கொள்கை மாற்ற மோ, மக்கள் நாட்டு நலனிலோ அதிக மாற்றம் இருக்க முடியாது (விடுதலை -
15.09.1957) என்று தனிநாடு கேட்டுப் போராடிய தந்தை பெரியார் அவர்களே மத் திய அரசின் ஆதிக்கப் போக்கினை எடுத்துக் காட்டினார்.

இதனையேதான் அறிஞர் அண்ணா அவர்களும், “மத்திய அரசு மாநிலங்களை
ஆட்டிப் படைக்கிறது. சூத்திரதாரி டில்லியில், சொகுசு உலாவருகின்ற கொலு பொம்மைகள் இங்கே என்று நாம் தினம் தினம் சொல்லுகிறோம். ஆணித்தர மான ஆதாரங்களோடு” என்று சொன்னது மட்டுமல்ல.

இதற்குத் தீர்வாக, “விரும்பினால் ஒழிய பிரிந்து போகிற உரிமை மாநிலங்க ளுக்கு அளிக்கப் பட்டால் ஒழிய, மத்திய அரசாங்கத்தினைக் கட்டுப்படுத்தக் கூடிய பயனுள்ள ஆயுதம் வேறு என்ன?” என்ற வினாக்கணை தொடுத்து நம் மைச் சிந்திக்க வைத்தார்.

எதிர்க்கட்சியாக திமுகழகத்தை நடத்திச் சென்றபோது மட்டுமல்ல, ஆட்சி அதி காரத்தைக் கைப்பற்றி முதல் அமைச்சராக அரியணை ஏறியபோதும் மாநில சுயாட்சிக்கான குரலை அறிஞர் அண்ணா ஓங்கி ஒலித்தார். “உண்மையான கூட்டாட்சி மலர. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்தி அமைக்க வேண்டும்.மாநிலங்களுக்கு இன்னும் கூடுதலான சுயாட்சி உரிமை பெற வேண்டும்.என்றும் இவைதான் திமுகழகத்தின் இன்றைய குறிக்கோள் என்றும்
‘இல்லஸ்ட்ரேடட்வீக்லி’ என்ற ஆங்கில வார இதழுக்கு பேட்டி அளித்தார்
அண்ணா. அதுமட்டுமல்ல, நம் அண்ணா அவர்கள் வைகறை எழுக Hail the Dawn என்ற தலைப்பில்,தன்னுடைய Home Rule வார இதழில் தம்பிக்கு மடல் எழுதி னார்; அதுதான் நம் அண்ணனின் உயில்; மரண சாசனம்; அந்தக் கடிதத்திலே அண்ணா எழுதினார்.

“அன்புத்தம்பி! பதவிப்பித்து பிடித்து திரிபவன் அல்லன், நான்! வெற்றுத் தாளில் கூட்டாட்சி சார்புடையது என்று கூறிவிட்டு, நடைமுறையில் மத்திய அரசிற்கு மென்மேலும் அதிகாரங்களைக் குவித்துக் கொண்டிருக்கிற நமது அரசியல் சட் டத்தின் கீழ் இயங்கும் ஒரு மாநிலத்திற்கு முதல் அமைச்சர் என்பதில் நான் சிறிதும் மகிழ்ச்சி அடையவில்லை. 


இதற்காக மத்திய அரசிற்கு எரிச்சல் ஊட்டி டெல்லியுடன் சச்சரவு கொள்வதே என் நோக்கம் என்று எனது நல்ல நண்பரான நம்பூதிரிபாடு கூறுவதையும் நான் விரும்பவில்லை. அதனைச் சரியான காலத்தில் தீர்மானிக்க வேண்டும் என்ப தும் இன்றியமையாதது உண்மைதான். அப்படித் தீர்மானிக்கும் முன்னர், கூட் டாட்சித் தத்துவத்தை மக்களுக்குக் கற்றுத்தர வேண்டும்.கொல்லைப் புறவா யில் வழியாக நுழையும் ஒருவகை இரட்டை ஆட்சியே நமது அரசியல் அமைப் புச் சட்டம் என்பதை திமுக ஆட்சிப்பொறுப்பில் இருப்பதன் மூலமாக, சிந்திக் கும் ஆற்றல் படைத்த மக்களின் கவனத்திற்கு கொண்டுவர முடியுமெனில்,
உண்மையில் அதுவே நாம் அரசியல் உலகத்திற்கு செலுத்திய உரியபங்காகும். இதுதான் தம்பிக்கு அண்ணா எழுதிய இறுதிக் கடிதம்.

இதே கருத்தை அறிஞர் அண்ணா அவர்கள் நாடாளுமன்றத்திலும் கொட்டி முழங்கினார். பிரிவினைத்தடைச் சட்டம் கொண்டு வந்த காங்கிரசு அரசின் சர் வாதிகாரச் செயலைக் கண்டித்து 25.01.1963 அன்று மாநிலங்கள் அவையில் அண்ணா பேசினார். மாநில சுயாட்சிக்காக அப்போதும் குரல் கொடுத்தார். அரச மைப்புச் சட்டத்தினை மறு ஆய்வு செய்ய வேண்டும்.

கடந்த 13 ஆண்டுகளாய் எல்லா மாநிலங்களும் விரக்தியுடன்தான் இயங்கு கின்றன. அதிகாரங்கள் அவைகளுக்கு இல்லை; சுங்கம் வசூலிக்கும் நகராட்சி களைப் போலத்தான் மாநில அரசுகள் கேவலமான முறையில் இருக்கின்றன
என்று அங்கே பேசினார். வழக்கம்போல காங்கிரஸ் கட்சியினர் இதனையும்
எதிர்த்தார்கள். பல நேரங்களில் மாநில உரிமைகளுக்கு எதிராக அவர்கள் நின் றார்கள்.

திராவிடர் இயக்கம் போற்றி பெருமைப் படுத்திய பெருந்தலைவர் காமராசர்
அவர்களே, ஒருமுறை கோபத்தோடு “திராவிட நாடாவது மண்ணாங் கட்டியா வது, அதையெல்லாம் கொடுக்க முடியாது” என்று கருத்துச் சொன்னார்.


அறிஞர் அண்ணா பண்பாளர் அல்லவா? கண்ணியவான் அல்லவா எனவே ஆத்திரப்படாமல் பதில் சொன்னார். “தலைவர் காமராசர் அவர்களே நாங்கள்
திராவிட நாடு கேட்பது பிரதமர் நேருவிடம் தானே! உங்களிடம் இல்லையே! உங்களிடம் அதைக் கொடுக்கும் அதிகாரம் இல்லையே” என்று நயமாகப் பேசி னார்.அதுமட்டுமல்ல, உங்களிடம் அந்த அதிகாரம் இருந்திருந்தால் நம்முடை ய ஆசைத்தம்பியைப் பயன்படுத்தி,நயத்தாலோ அல்லது பயத்தாலோ அதனை அடைந்திருப்போமே என்றும் அற்புதமாகப் பேசினார் அண்ணா!

அறிஞர் அண்ணா அவர்கள் பக்தவச்சலம் அவர்களுக்கும் பாடம் நடத்தினார். பக்தவச்சலம் அன்று தமிழகத்தின் முதல்வர். அப்போது வேலூர் கோட்டை யைப் பராமரிக்க வேண்டும் என்று அவர் டில்லி அரசிடம் முறையிட்டார். வே லூர் கோட்டை தொல்லியல் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்குகிறது.அந்தத் துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. 


எனவே முதல்வர் பக்தவச் சலம் அங்கே முறையிட்டார்.ஆனால்,மத்திய அரசு மறுத்துவிட்டது. காங்கிரசு நண்பர்களே உங்களுக்கும் இதுதான் பதில், புரிந்து
கொள்ளுங்கள், மத்தியில் குவிந்து கிடக்கும் அதிகாரங்களைப்பகிர்ந்து கொடுக் க நீங்களும் கேளுங்கள் என்று அண்ணா பக்தவச்சலம் அவர்களுக்கும் பாடம் புகட்டினார்.

ஆனால், காங்கிரசு கட்சியினர் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.
காங்கிரசு கட்சியே ஒருகாலத்தில் மாநில சுயாட்சிக்காக குரல் கொடுத்தது என்பது இன்றைக்கு அந்தக் கட்சியில் உள்ள புதிய வரவுகளுக்கு தெரியாது. ஆனால் நமக்குத் தெரியும்! இந்த நாடு விடுதலைபெறுவதற்கு முன்பாக 1945
ஆம் ஆண்டு காங்கிரசு கட்சி, சுதந்திர அரசு எப்படி அமையப் போகிறது என்ப தை விளக்கி ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்திய தேசிய காங்கிரசு கட்சி யின் மத்திய நாடாளுமன்றக்குழு வெளியிட்ட காங்கிரசாரின் கையேடு என்ற நூலில் 68 ஆம் பக்கத்தில் உள்ள அச்செய்தி இதோ:

“இந்தியக் கூட்டாட்சி என்பது அதன் பல்வேறு பகுதிகளின் விரும்பி இணையும் ஒன்றியமாக இருக்க,வேண்டும் பகுதிகளுக்கு (அதாவது மாநிலங்களுக்கு) அதிகபட்ச சுதந்திரம் அளிப்பதற்காக எல்லோருக்கும் பொதுவான முக்கிய அதிகாரங்களைக் கொண்ட குறைந்த பட்ச அதிகாரத்தை கூட்டாட்சி (மத்திய) அரசிற்கும்,தேவைப்படும் பகுதிகள் (அதாவது மாநிலங்கள்) விரும்பினால் ஏற் கும் பொதுவான அதிகாரங்கள் கொண்ட பொதுப்பட்டியலும் இருக்கலாம். காங் கிரசின் அறிக்கை இப்படி உறுதி அளித்தது.

இதனைப் போல நேருவும் உறுதி அளித்தார். 22.01.1947 அன்று அரசியல் நிர்ண யசபையில், வரலாற்றுப் புகழ்மிக்க நோக்கங்கள் பற்றிய தீர்மானத்தை முன் மொழிந்து பேசும் போது, “சுதந்திர இந்தியாவில் அமைந்திடும் மாநிலங்களும், பிற ஆட்சிப்பகுதிகளும் சுய ஆட்சி உரிமை பெற்ற மாநிலங்களுக்கும் மத்திய அரசிற்கும் என குறிப்பிட்ட அதிகாரங்கள் கொண்ட பொதுப்பட்டியலும் இருக் கலாம்.காங்கிரசின் அறிக்கை இப்படி உறுதிஅளித்தது. இதனைப்போல நேரு வும் உறுதி அளித்தார்.

22.01.1947 அன்று அரசியல் நிர்ணய சபையில், வரலாற்றுப் புகழ்மிக்க தீர்மானத் தை முன்மொழிந்து பேசும் போது, “சுதந்திர இந்தியாவில் அமைந்திடும் மாநி லங்களும், பிற ஆட்சிப்பகுதிகளும் சுய ஆட்சி உரிமை பெற்று மாநிலங்களுக் கும் மத்திய அரசிற்கும் என குறிப்பிட்ட அதிகாரங்கள் நீங்கலாக எஞ்சிய அதி காரங்களுடன் அமைந்து செயல்படும் என்றுதான் வாக்குறுதி அளித்தார்.

ஆனால், விடுதலைக்குப் பிறகு காங்கிரசு மத்திய அரசு சொன்னபடி நடக்கவில் லை என்பது மட்டுமல்ல, மாநில அரசுகளின் அதிகாரங்களையும் கபளீகரம் செய்து சர்வாதிகாரப் போக்குடன் நடந்து கொண்டது. மத்திய அரசு பட்டியலில் 97 அதிகாரங்கள் உள்ளன; மாநில அரசு பட்டியலில் 66 அதிகாரங்களும், பொதுப்
பட்டியலில் 17 அதிகாரங்களும் உள்ளன. நெருக்கடி நிலையைப் பயன்படுத்திக்
கொண்டு இந்திராவின் அரசு கல்வித் துறையை மாநில அரசுகளிடமிருந்து
எடுத்துக் கொண்டது. பல அதிகாரங்களை மாநிலப் பட்டியலில்இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றியது.

அரசமைப்புச் சட்டத்தில் உள்ள 360,356, 256, 257, 339 (2), 344(6), 249, 302 முதலான வை எல்லாம் மாநில அரசுகளை அச்சுறுத்தி அடக்கி வைக்கவும், மத்தியில் அதிகாரம் குவிந்திட வழிவகுக்கவும் தான் பயன்படுகிறது. அமெரிக்கா போன்ற
நாடுகளில் எஞ்சிய அதிகாரங்கள் மாநிலங்களுக்கே அளிக்கப்படுகின்றன.
ஆஸ்திரேலியாவில், கனடாவில்,ஸ்விட்சர்லாந்தில் பொதுப் பட்டியலே ஒதுக் கப்படாமல் மாநிலங்களுக்கே அதிக அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இப்படிப்பட்ட கொடுமையான சூழ்நிலையில் மாநில சுயாட்சிக்காக நாம் குரல் கொடுப்பதில் என்ன தவறு? நாம் மட்டுமல்ல, கர்நாடக மாநிலத்தில் முதல்வ ராக தேர்ந்தெடுக்கப்பட்ட வீரேந்திரபாட்டீல்,இவரே காங்கிரஸ் காரர்தான்.அவ ரையே நிலைமை பேச வைத்தது. “பெரும்பாலான நேரங்களில் மாநில அரசு களை நடத்தும் நாங்கள் கையில் திருவோடு ஏந்தித்தான் தில்லிக்கு வரவேண் டியுள்ளது. நடுவண் அரசிடம் ஏதொ பிச்சை கேட்பதைப் போல நாங்கள் முறை யிடுகிறோம். இந்த நிலை நீடித்தால் மாநிலங்கள் அதிக சுயாட்சி கோரும். அவ சர கோரிக்கைகள் எழுந்து இப்போது டில்லியில் மாநிலங்கள் நடத்தும் விருந் தினர் மாளிகைகளும், பவனங்களும் தூதரகங் களாக மாறும் கட்டாயம் ஏற் படும் நாளொன்று வரலாம் என்கின்ற அச்சம் எழுகிறது” என்று 28.11.1970 அன்று
உணர்ச்சிபொங்க முழக்கமிட்டார்.

மேற்குவங்க மாநிலத்தின் முதல்வர் டாக்டர் பி.சி.ராய். இவரும் காங்கிரசுக்
காரர்தான். இவரையும் நிலைமை பேச வைத்தது. பேசினார்! “மாநில சுயாட்சி
கோரிக்கை இந்தியாவை பலவீனப்படுத்த அல்ல.இந்தியாவை பலப்படுத்துகிற கோரிக்கை. பலவீனமான கோரிக்கை களின் அடிப்படையில், பலமான மத்திய
அரசை அமைக்க முயற்சி செய்வது மணலை அஸ்திவாரமாகக் கொண்டு ஒரு பலமான கட்டிடத்தை கட்ட முயற்சிப்பது போல என்பதைப் புரிந்து கொள்ளுங் கள்” என்று அழகாக புத்தி புகட்டினார்.

புபேஷ்குப்தா, கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இவர்! காங்கி ரசுக்காரர்களே இப்படிப் பேசும் போது இவருக்கு சொல்லிக் கொடுக்க வேண் டுமா? இவரும் பேசினார். “நமது அரசியலமைப்பு, மாநில சட்டமன்றங்களின் அதிகாரங்களை அது பொருளாதாரத்துறையைப் பொறுத்த வரையில் மிகமிக குறைத்துவிட்டு இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த நிலை கூட்டாட்சி தத்துவத்திற்கு, ஒவ்வாதது மட்டுமல்ல, பாராளுமன்ற முறைக்கே ஊறு தேட வல்லது. நாட்டு நலனுக்கேற்ற திட்டங்களை நிறைவேற்றுவதில்
மாநிலங்களின் பொறுப்பு மேலும் வளர்ந்து வருவதையும், பொறுப்பு வளர
வளர அரசியல் சட்டம் வகுத்திருக்கும் எல்லைக்கோட்டை அவை அடிக்கடி
மீறுவதையும் நாம் காண்கிறோம். இந்தப் பிரச்சினை சாதாரணமானதல்ல. இந்த நாட்டில் தியாகம் நிலைத்திட வேண்டுமானால் இதற்கோர் தீர்வு கண் டாக வேண்டும். இந்த அபாய எச்சரிக்கையை காங்கிரசு கட்சி பொருட்படுத் தவே இல்லை.

எனவேதான் மாநில சுயாட்சிக்கான கோரிக்கை முழக்கம் நாடெங்கும் கேட்ட து. மேற்குவங்கத்தில் ஜோதிபாசு தலைமையிலான மார்க்சீய கம்யூனிஸ்ட்
கட்சியின் அரசு மாநில சுயாட்சிக்காக வெள்ளை அறிக்கையை தயாரித்து 
வழங்கியது. பஞ்சாப் மாநிலத்தில் அகாலிதளம் கட்சி சீக்கியர்களின் புண்ணி யத்தலமான அனந்தபூரில் மாநில சுயாட்சிக்கான தீர்மானத்தை நிறைவேற்றி யது. இவ்வாறு நாடெங்கும் அண்ணாவின் இலட்சிய முழக்கம் கேட்டதே, இத னை அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்றதாக சொன்ன கலைஞர் கருணாநிதி உரிய முறையில் பயன்படுத்தினாரா? மத்திய அரசோடு கூட்டணி வைத்திருந்த கருணாநிதி, இவரது ஆதரவில் இயங்கிக் கொண்டிருந்த காங்கி ரசு அரசிடம் இதனை வலியுறுத்தினாரா? மாநில சுயாட்சிக்கான செயலில் இறங்கா விட்டால் அரசிலிருந்து விலகுவோம் என்று நெருக்கடி தந்தாரா? இல்லை..இல்லை... இல்லவே இல்லை.

1974 ஆம் ஆண்டில் முதல்வர் கருணாநிதி நீதிபதி ராஜமன்னார் குழுவை நிய மித்தார்; சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித்தீர்மானம் நிறைவேற்றினார் என் றெல்லாம் சிலர் சொல்லலாம். உண்மைதான். நான் மறுக்கவில்லை. 74 இல் நடந்தது சரி! அடுத்த நடவடிக்கை என்ன? அதன்பின் 39 ஆண்டுகள் உருண் டோடிவிட்டதே! இன்னும் காங்கிரசுடன் இலட்சியக் கூட்டு” தொடர்ந்து கொண் டுதானே இருக்கிறது? மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்று சில
வேளைகளில் குரல் எழுப்புவதைத்தவிர, ஆக்க ரீதியாக செய்தது என்ன? என் பதை திமுக தலைவரால் சொல்ல முடியுமா?

உலகப் புகழ்வாய்ந்தது தஞ்சை பிரகதீசு வரர் கோயில். அந்த கலைக்கோயி லைக் கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் சிலையை நிறுவ அன்றைய முதல்வர் கருணாநிதி முயற்சித்தாரே, அப்போது மத்திய அரசு அனுமதிக்க முடியாது என்று கன்னத்தில் அறைந்தது போல பதில் சொன்னதே! இதன் கார ணமாக மன்னனின் சிலையை கோயிலுக்கு வெளியே முதல்வர் கருணாநிதி நிறுத்தி வைத்தாரே! அருகில் அறிஞர் அண்ணாவின் சிலையையும் பின்னர்
ஏற்படுத்தினாரே! அண்ணன் மன்னனைப் பார்க்க,மன்னன் அண்ணனைப் பார்க் க ஒரே பொருத்தம் தான் என்று ஏகடியம் பேசினாரே கலைஞர் கருணாநிதி! இன்று வரையில் இதே நிலைதானே தொடர்கிறது? இதனை மாற்றி அமைக்க என்ன செய்தார் கருணாநிதி?
தமிழகத்திற்கு தமிழ்நாடு என்று அண்ணா பெயர் சூட்டினாரே? தமிழக உயர்நீதி மன்றம் இன்னமும் சென்னை உயர்நீதிமன்றம் என்றுதானே அழைக்கப்படுகி றது. நீதிமன்றத்தில் தமிழில் வாதாட, தீர்ப்பு பெற முடிய வில்லை என்பது அவ மானமில்லையா? இதையெல்லாம் செய்ய வேண்டிய கலைஞர் கருணாநிதி யும், ஜெயலலிதாவும் அதிகாரமும்-வாய்ப்பும் பலமுறை கிடைத்தபோதும் எதுவும் செய்யவில்லை என்பது தான் உண்மை!

திமுகழகம் அதன் நடவடிக்கைகளை தமிழ்நாடு, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங் களின் எல்லைக்குள்ளாகவே சுருக்கிக் கொள்ள நினைக்கலாம்.ஆனால், திமு க உணர்வு இந்திய யூனியனில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தையும் கட்டாயம் சூழ்ந்து கொள்ளத்தான் போகிறது. மாநில சுயாட்சியும் அதிக அதிகாரம் கேட் கும்,கோரிக்கையும் காலப்போக்கில் இளம் தலைமுறையினரிடையே உருவா கும்.பயன் நோக்கும் செயல்திறன் கொண்ட அரசியல் தலைவர்களின் சிந்த னையைக் கவரப் போவது நிச்சயம் என்று ஸ்நேகபிரபாரஸ்தோகி என்ற எழுத் தாளர் திமுகவின் தோற்றமும் எழுச்சியும் என்ற Emergence and Rise of the DMK  நூலில் மாபெரும் எதிர்பார்ப்புடன் எழுதினாரே, அதனை நிறைவேற்ற அண் ணாவின் பெயரைச் சொல்லி ஆட்சியில் அமர்ந்தவர்கள் செய்தது என்ன? பதில் சொல்ல முடியுமா?

ஆனால், அவர்கள் செய்யத்தவறியதை நம்முடைய தலைவர் வைகோ செய்து
காட்டுவார் என்ற நம்பிக்கை நமக்கு நிரம்ப உண்டு. 34 வயதில் வீர வேங்கை யாக நாடாளுமன்றத்தில் உள்ளே நுழைந்த நம் தலைவர் வைகோ,தன் கன்னிப் பேச்சிலேயே மாநில சுயாட்சிக்காக குரல் கொடுத்தார். மாநில சுயாட்சி முழக் கம் மக்களின் முழக்கமாகி விட்டது என்றும் இதற்காக செயலில் இறங்கு வோம் என்றும், அதிகாரக் குவிப்பைக் கண்டித்தும் அப்போதே எழுச்சிக் குரல் எழுப்பியவர் நம் தலைவர் வைகோ!

மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கவும், மத்திய அரசு குவித்து
வைத்துள்ள அதிகாரங்களைப் பங்கிட்டு மாநிலங்களுக்கு வழங்கிடவும் அரச மைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் மாற்றம் செய்யும் அரசியல் சட்டத்திருத்த மசோதாவை தனிநபர் மசோதாவை தாக்கல் செய்த பெருமை நம் தலைவர் வைகோ அவர்களுக்கு மட்டுமே உண்டு.

23.11.2001 அன்று தொடங்கிய விவாதம் தொடர்ந்து 5 மாதங்களாக வாரம் தோ றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்றதே, டாக்டர் ரகுவரன் பிரசாத்சிங், தேவேந்திர பிரசாத்யாதவ்,பேராசிரியர் ராசா சிங்ராவத், சுதர்சன நாச்சியப்பன், டாக்டர் நிதீஸ் சென்குப்தா,கிரிதாரிலால் பார்காவ், முகமது அலிநாயக், ஹண் ணன் முல்லா தாபர்சந்த் ஹிலட், பி.எல்.கத்தாவி, ராமதாஸ் அத்தவாலே என அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் விவாதத்தில் ஆதரவு தெரி வித்துப்பேசினார்களே, மத்திய அரசு பட்டியலில் இருந்தும் பொதுப்பட்டியலில் இருந்தும், அதிகாரங்களை மாநிலப்பட்டியலுக்கு மாற்றிட வேண்டும் என்ற குரல் முதன் முதலாக அங்கே ஒலித்தது என்றால், அதற்குக் காரணமானவர் நம் தலைவர் வைகோ அல்லவா!

நான் கொண்டுவந்த மசோதாவின் கருத்துகள் இந்திய அரசியல் சட்டத்தில்
ஏற்றுக் கொள்ளப்படும் நாள்தான் இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஜனநாயகத் திற்கும் உத்தரவாதம் அளிக்கும் நாளாக அமையும் என்று நாடாளுமன்றத்தில் (3.5.2002) இலட்சிய வேட்கையுடன் நம் தலைவர் வைகோ குறிப்பிட்டாரே,அந்த நாளை உருவாக்கப் போகிறவரும் அவர்தான் என்ற நம்பிக்கை நமக்கு நிரம்ப உண்டு. 

மாநில சுயாட்சிக்காக காஞ்சி மாநகரில் மாநாடு நடத்திய இயக்கம் நம் மறும லர்ச்சி திமுக. அன்றைய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி அவர்களை
அழைத்து அவர்கள் முன்னிலையில் அகில இந்தியத் தலைவர்களை எல்லாம்
மாநில சுயாட்சிக்காக பேச வைத்த பெருமைக்குரிய தலைவர் வைகோ!காஷ் மீர் மாநிலத்தில் ஸ்ரீநகரில் முதல்வர் ஃபரூக் அப்துல்லா நடத்திய மாநில சுயாட்சி மாநாட்டில் அறிஞர் அண்ணாவின் மாநில சுயாட்சிக் கொள்கைகளை வலியுறுத்திப் பேசி -இதற்காகப் போராட வீரர்களைத் தயார் செய்த பெருமைக் குரிய தலைவர் நம் பொதுச்செயலாளர் வைகோ.

இத்தகைய பெருமைகளுக்குரிய தலைவரின் தலைமையில் இயங்குகிற நாம் திராவிட இயக்க இலட்சியங்களை வென்றெடுக்கப் போகும் மகத்தான இயக் கத்தின் தோழர்களான நாம்..அண்ணாவின் எண்ணமான மாநில சுயாட்சியை வென்றெடுக்க... அவரது பிறந்த நாளாம் மகிழ்ச்சித் திருநாளில்... பல்லாயிரக் கணக்கான அண்ணாவின் தம்பிகளான நாம்.. சூளுரைப்போம்! சுடர்முகம் தூக் குவோம்! அணிவகுப்போம்! போராடுவோம்! வெற்றிவாகை சூட சங்கொலிப் போம்! 

ஆ.வந்தியத்தேவன் இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment