Monday, October 14, 2013

களப்பணி ஆற்றுவோம்; காங்கிரசை அகற்றுவோம்!-பகுதி 3

கச்சத்தீவு யார் சொத்து?

கச்சத் தீவு எவனுடையது. மோதிலால் நேரு தானாகச் சம்பாதித்து, தான் சம்பா தித்த பணத்தில் வாங்கியதுதான் ஆனந்த பவனம். அந்த ஆனந்த பவனத்தை, மகாத்மா காந்தி தண்டி யாத்திரை நடத்துகிறபொழுது உப்புச் சத்தியாகிரகம் நடத்தி ஒரு ஆட்சியை மாற்றிவிட முடியுமா? என்று மோதிலால் நேரு சிரித் தார். ஆனால், காந்தி தொடங்கிய அந்தப் பயணத்தில் இலட்சக்கணக்கான மக்கள் பின் தொடர்ந்தார்கள். இந்தத் தேசமே அவர் பின்னால் நின்றது. பார்த்து வியந்தார்கள்.

அந்த மனிதனுடைய அரசியல் வியூகத்தை உணர்ந்து, என்னுடைய சம்பாத்தி யத்தில் உருவாக்கப்பட்ட இந்த ஆனந்த பவனத்தையே நான் தேசத்திற்கு அர்ப் பணிக்கிறேன் என்று மோதிலால் நேரு சொன்னார். அது சரி,அது அவர் சம்பா தித்தது. கச்சத் தீவு என்ன நேருவின் குடும்பம் சம்பாதித்த சொத்தா?மோதிலால் நேரு சம்பாதித்து கச்சத் தீவை நேருவுக்கு வைத்துவிட்டுப் போனாரா? நேரு அதை அப்படியே எடுத்துப் பாதுகாத்து மகள் இந்திரா காந்தியிடம் கொடுத்து விட்டுப் போனரா?இந்திராகாந்தி தன்னிடம் இருக்கும் சொந்தச் சொத்து கச்சத் தீவு என்று சிறிமா வோ பண்டாரநாயகாவுக்கு சீதனமாக எடுத்துக்கொடுத்தா ரே, யார் சொத்து? சேது சமஸ்தானத்திற்குச் சொந்தமான சொத்து இல்லையா அது?


மாநிலங்கள் அவையில் எப்படி வைகோ அவர்கள் 18 ஆண்டு காலம் வீர முழக் க மிட்டாரோ, அதுபோல் சில காலம் எஸ்.எஸ்.மாரிசாமி என்று ஒரு மனிதர்
இருந்தார். சுதந்திரா கட்சியில் இருந்தவர். அந்த எஸ்.எஸ்.மாரிசாமி காண்டீபம் என்று ஒரு பத்திரிகை நடத்தினார். அந்த காண்டீபம் பத்திரிகையில் கச்சத் தீவை இந்திரா காந்தி தாரை வார்த்தபொழுது,இது முழுக்க முழுக்க சேது சமஸ் தானத்திற்குச் சொந்தமானது என்று ஆவணங்களை எல்லாம் வெளியிட்டார். மாநிலங்கள் அவையிலும் பேசினார்.


அந்தக் கச்சத் தீவை இன்றைக்கு நீங்கள் திரும்பப் பெறவேண்டும் என்று ஜெய லலிதா உச்சநீதிமன்றத்திற்குச் சென்றிருக்கிற பொழுது, கச்சத் தீவுக்கும் இந்தி யாவுக்கும் சம்மந்தமே இல்லை என்று கைகழுவிவிட்ட மன்மோகன் சிங் அரசு தானே. நண்பர்களே வரிசையாக நான் சொல்லிக்கொண்டே போகலாம் காங் கிரசும், மத்திய அரசும் இந்த தேசத்திற்கு இழைத்தத் தீமைகளைப் பற்றி!

மன்மோகன்சிங் மனிதப் புனிதர்.ஆனால், மூன்று ஊழல்களும் எங்கே நடந்து எங்கே முடிந்தது என்று ஆய்வு செய்துகொண்டே போனால், அது பிரதமர் அலு வலகத்திலேதான் போய்ச் சேருகிறது. 2ஜி அலைக்கற்றை ஊழல் அதைத்தடுத் திருக்க முடியும் மன்மோகன் சிங்கால். தடுக்க வில்லையே? நிலக்கரி ஊழல் 2006 இல் இருந்து 2009 இல் நிலக்கரி சுரங்கங்களில் இட ஒதுக்கீடு கொடுத்த
பொழுது இவருடைய பொறுப்பிலேதான் இருந்தது. அந்த நிலக்கரி ஊழலை

அவரால் தடுக்க முடியவில்லையே! ஏன்? இப்பொழுது நீங்கள் எடுத்துக்கொள் ளுங்கள் ரயில்வே வாரியத்தில் நடைபெற்ற ஊழல் பவன் பன்சால் யார்?அவர் தான் இரயில்வே அமைச்சராக இருக்க வேண்டும் என்று சோனியா காந்தி யிடம் அடம்பிடித்துப் போட்டவர் மன்மோகன்சிங். சி.பி.ஐ. மூலமாக நாம் சிக்கி விடுவோம் என்பதற்காக ஆவணங்களையே திருத்துவதற்கு முயன்ற சட்ட அமைச்சர் அஸ்வின் குமார் யார்?அவர்தான் சட்ட அமைச்சராக இருக்க வேண் டும் என்று சோனியா காந்தியிடம் சண்டையிட்டு கொண்டு வந்து உட்கார வைத்தவர் மன்மோகன்சிங்.

ஊழல் என்பது சகிக்கக்கூடியதா? என் இனத்தை அழிக்கக்கூடியது என்பது சகிக் கக்கூடியதா? என் இனத்துக்குச் சொந்தமான நிலத்தையே இன்னொருவனுக் குக் கொடுத்துவிட்டு, அது எனக்கு உரிமையே இல்லை என்று உச்ச நீதிமன்றத் தில் சொல்வது சகிக்கக் கூடியதா? காவிரி தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பின் நகலை ஐந்தாண்டு காலம் மறைத்து வைத்து அரசிதழில் வெளியிடாமலேயே தமிழ்நாட்டின் தஞ்சை விவசாயிகளின் முதுகெலும்பை முறித்தீர்களே, அது சகிக்கக்கூடியதா? பெருந்தலைவர் காமராஜரின் கனவுத் திட்டம்தானே நெய் வேலி நிலக்கரி சுரங்கத் திட்டம். ஆண்டுக்கு 1600 கோடி ரூபாய் இலாபம் தரு கிற நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திலே இருந்து 5 விழுக்காடு தனியாருக்குத்
தாரை வார்க்க முயன்றீர்களே, இது சகிக்கக்கூடியதா? வரிசையாகச் சொல்ல லாம்.

எனக்கும் ஒரு கனவு....


இந்த அணி அமைய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். உண்மை. நீங்கள்
என்னை வகுப்புவாதி என்று சொன்னாலும் சரி, மதவாதி என்று சொன்னாலும் சரி, சொல்லிக் கொள்ளுங்கள். என் இருதயம் சுத்தமாக இருக்கிற வரையில் எவன் குறித்தும் நான் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. அதை எனக்குக் கற்றுக் கொடுத்தது காந்தி. ஆயிரம் பழிகளைச் சுமப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்.திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைமை யும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைமையும் எனக்கு எதிராகக் கோபப்பார்வை வீசக்கூடிய அளவுக்கு இந்தக் காரியத்தில் நான் ஈடு பட்டிருக்கிறேன்.இதனால் எனக்கு என்ன இலாபம்? என் காந்திய மக்கள் இயக் கத்திற்கு என்ன இலாபம்? ஒன்றும் கிடையாது. என்னைப் பொறுத்தவரையில் ஐம்பதாண்டு காலம் ஆகிவிட்டது.

1969 இல் அண்ணா கண் மூடினார்.இன்றைக்கு 2013 இந்த இடைப்பட்ட காலத் தில் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ஒரு ஊழலற்ற ஆட்சியை நீங்கள் பார்த்தீர் களா? மார்ட்டின் லூதர் கிங் அன்றைக்கு இலட்சக் கணக்கான கருப்பர்களைத் திரட்டி, “எனக்கு ஒரு கனவு இருக்கிறது” என்றார். எனக்கும் ஒரு கனவு இருக் கிறது. ‘ஊழலற்ற ஒரு அரசு. மது அற்ற ஒரு மாநிலம்’. இது என் கனவு. இந்தக் கனவை நனவாக்கக்கூடிய சக்தி இந்தத் தமிழ்நாட்டில் வைகோவை நீங்கள் தேர்ந்தெடுத்தால் இருக்கும் என்பது எனது எண்ணம், நம்பிக்கை இதைத் தவிர வேறொன்றும் இல்லை.

ஜெ.பி.சொன்னது....


ஆனால், வைகோ மட்டுமே, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மட்டு மே 234 தொகுதிகளில் தனியாக களம் கண்டு ஒரு பெரும்பான்மை அரசை உரு வாக்கக்கூடிய சூழல் நாளைக்கே வந்துவிடாது. நாளைக்கு வராது.ஏற்கனவே இருபதாண்டுக் காலம் அவர் களப்பணியைச் செய்திருக்கிறார்.இன்னும் இருப தாண்டுக் காலம் எங்களால் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. அப்படியென் றால், இந்த தேசத்தின் மீது நாட்டம் உள்ள, தமிழ்ச் சமுதாயத்தின் மீது நாட்ட முள்ள மனிதர்கள் ஒன்றுசேர வேண்டும். எப்படி இந்திராகாந்தியின் ஆதிக்கத் திலிருந்து இந்தியாவை விடுவிப்பதற்கு ஜனசங்கத்தோடு காமராஜர் நின்றா ரோ,இந்திராவின் நெருக்கடி கால கொடுமைகளில் இருந்து நாட்டை விடுவிப்ப
தற்காக, சோசலிஸ்ட்டு ஜெயப்பிரகாச நாராயணனை விட இந்த தேசத்தை
நேசித்தவர் யார்? பீகார் கலவரம் நடந்தபொழுது ஜெ.பி. சொன்னதை இந்த மாத ரெளத்திரத்தில் நான் போட்டிருக்கிறேன். படிக்கிறேன்கேளுங்கள், 

“பாரத தாயின் முகத்தில் நீங்கள் அனைவரும் கரியைப் பூசி விட்டீர்கள். உங் கள் காட்டுமிராண்டித் தனத்தை என் கண்களால் பார்த்துக் கலங்கினேன். இவ் வளவு கொடுமை யான காட்சிகளை என் வாழ்நாளில் இதுவரை நான் கண்டது இல்லை. இந்த முஸ்லிம் மக்கள் பல நூற்றாண்டுகளாக உங்களோடு இணைந் து வாழ்ந்து வருபவர்கள். சித்தப்பா என்றும், மாமா என்றும், மகனே என்றும், மகளே என்றும் நேற்றுவரை சொந்தம் கொண்டாடிய வர்களை இன்று இரக்க மின்றிப் பழிவாங்கிவிட்டீர்கள். ஒன்றும் அறியாத அப்பாவி குழந்தைகளையும், பெண்களையும், முதியவர்களையும் எப்படி உங்களால் மனம் வந்து தாக்க முடிந்தது? திடீரென்று ஏன் இப்படி வெறி பிடித்த விலங்குகள் ஆனீர்கள்? வீடு களிலும்,தெருக்களிலும் பிணக் குவியல்.பழிவாங்கும் கோழைத்தனத்தில் மனி தர்கள் திரண்டுபோவதைக் கண்டு என் இதயம் வலிக்கிறது” ஜெ.பி.. ஆங்கிலத் தில் எழுதியிருந்ததை நான் தமிழ்படுத்தி போட்டிருக்கிறேன்.

அப்படி இசுலாமியர்களுக்காக இரத்தக் கண்ணீர் வடித்த ஜெ.பி. 1977 இல் இந்தி ராகாந்தியை வீட்டுக்கு அனுப்பு வதற்கு அந்த ஜனசங்கத்தோடு கூட்டு வைத் தாரா இல்லையா? அப்படி என்றால், ஜெ.பி. இசுலாமியர்களுக்கு எதிரியா? மாற் று சொல்லுங்கள் நீங்கள்.

சிவப்புச் சிந்தனையாளர்கள் நிலை


தமிழ்நாட்டில் எங்கே மாற்று. இடது சாரிகளுக்கு பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது. இரண்டு இடங்களுக்காக நாடாளுமன்றத் தேர்தலில் போய் காத் துக்கிடக்கிறீர்கள். இரண்டு தொகுதி களுக்கு மேல் சி.பி.ஐ.க்கும், சி.பி.எம்.க்கும் கொடுத்துவிடுவாரா ஜெயலலிதா? இந்த இரண்டு இடங்களைப் பெறுவதன்
மூலமாக இரண்டுபேரை நீங்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதைத் தவிர இந்தத் தமிழ்நாட்டிற்கு என்ன நன்மை கிடைக்கும். ஒரு ராஜாவை மீண்டும் நீங் கள் மாநிலங்களவைக்கு அனுப்புவதற்காக என்ன பாடுபட்டீர்கள்?

சுதாகர் ரெட்டி யார்? இளம் பருவத் திலேயே போர் குணத்தோடு புறப்பட்டவன். கரும்பலகை பள்ளிக்கூடத்தில் இல்லை என்பதற்காக அந்த மாவட்டம் முழு வதும் மாணவர் கிளர்ச்சியை உருவாக்கியவன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியி னுடைய இன்றைய பொதுச்செயலாளர் ஏ.பி.பரதன் யார்? ஏ.பி.பரதனும், சுதாகர் ரெட்டியும் ஒரே ஒரு ராஜ்ய சபா சீட் ராஜாவுக்குக் கிடைக்க வேண்டும். அதற்கு
ஜெயலலிதாவைப் பார்க்க வேண்டும் என்று இரண்டு நாட்கள் காத்துக் கிடந் தார்களே! ஜெயலலிதா பார்க்க வில்லையே, அப்பாயிண்டமென்ட் கொடுக்க வில்லையே!

அதற்குப் பிறகும் இந்தச்சிவப்புச் சிந்தனையாளர்கள் விடவில்லையே.டெல்லி யில் போய் ஜெயலலிதா உட்கார்ந்து இருக்கிற பொழுது,அங்கே தமிழ்நாடு இல் லத்தில் போய் காத்துக் கிடந்தார்களே, அங்கு ஜெயலலிதா என்ன சொன்னார். ஐந்து இடங்களில் நாங்கள் போட்டி இடுகிறோம். ஆறாவது இடத்தில் வேண்டு மானால், நீங்கள் நில்லுங்கள் என்றார். ஆறாவது இடத்தில் நின்றால் வெற்றி பெற வாய்ப்பே கிடையாது. கேலி செய்தார்கள் அல்லவா? அந்த ஜெயலலிதா விடம் மீண்டும் இரண்டு இடங்களைப் பெறுவதற்குப் போய் நிற்கிறீர்களே,
உங்களை வைத்துக் கொண்டு மாற்று அணியை எப்படி உருவாக்க முடியும்.

இன்று சொல்கிறேன், இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சி வேண்டும் என்று நாங் கள் சொல்லவில்லை. காங்கிரஸ் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். இதற்கு மாற்று, ஒரு மூன்றாவது அணியை உருவாக்குவதற் கான முயற்சியை நீங்கள் மேற் கொண்டீர்களா? கேட்டால் பிரகாஷ் காரத்தும், ஏ.பி.பரதனும் சொல்கிறார்கள்,நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தபிறகு மூன்றா வது அணியை உருவாக்கப் பார்ப்போம் என்று. அசிங்கமாக இல்லை. தேர்த லுக்கு முன்பு ஒரு சிந்தாந்த அடிப்படையில் ஒரு அணியை உருவாக்குகிற சக்தி உங்களுக்கு ஏன் இல்லை. ஜெயலலிதாவையும், கருணாநிதியையும் ஒன்றாக நீங்கள் சேர்த்துவிட முடியுமா? மாயாவதியையும்,முலாயம் சிங்கை யும் ஒன்றாக நீங்கள் சேர்த்துவிட முடியுமா?சந்திரபாபு நாயுடுவையும், ஜெகன் மோகன் ரெட்டியையும் ஒன்றாக சேர்த்துவிட முடியுமா? எங்கே அமையும் ஒரு மாற்று அணி?

2004 தேர்தலில் இடதுசாரிகள் இலட்சணத்தை உங்களுக்குச் சொல்கிறேன். இந் திய கம்யூனிஸ்ட் இயக்கம் 1.4 விழுக்காடு வாக்குகள்பெற்று 10 நாடாளுமன்றத் தொகுதி களைப் பெற்றது. 2009 இல் அதே சி.பி.ஐ. 1.43 விழுக்காடு வாக்குகளை
வாங்கி 4 நாடாளுமன்ற உறுப்பினர் களைத்தான் பெற்றது. 2004 இல் வாங்கிய தைவிட 0.02 விழுக்காடு கூடுதலாகக் கிடைத்தாலும், பத்து பேர் இருந்த இடத் தில் நான்கு பேர் உட்கார்ந்தீர்கள்.

2004 இல் சி.பி.எம். 5.6 விழுக்காடு வாக்குகளைப் பெற்று, 43 நாடாளுமன்ற உறுப் பினர்களைப் பெற்றார்கள். 2009 இல் 5.3 விழுக்காடு வாக்கு, 0.3 விழுக்காடு குறைந்துவிட்டது.நிலைமை என்ன ஆயிற்று 16 நாடாளு மன்ற உறுப்பினர்கள். 43 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்த இடத்தில் வெறும் 16 பேர் உட்கார்ந்தீர் கள்.உங்களுக்கு இருப்பது ஐந்து விழுக்காடு வாக்கு. சி.பி.ஐ.க்கு இருப்பது ஒரு
விழுக்காடு வாக்கு. இந்த 6 விழுக்காடு வாக்கை வைத்துக்கொண்டு இந்தியா வில் மாற்று அரசியலை உங்களால் உருவாக்க முடியுமா?ஒவ்வொருமாநிலத் திலும் இருக்கக் கூடிய வலிமை மிக்க மாநிலக் கட்சிகளை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து மாற்று அணி அமைப்பது என்று நீங்கள் முடிவெடுத்தால் கருணாநிதி யையும் ஜெயலலிதாவையும் நீங்கள் ஒன்றாக்கு வீர்களா? சந்திரபாபு நாயுடு வையும் ஜெகன்மோகன் ரெட்டியையும் ஒன்றாக்குவீர்களா? லாலுபிரகாஷ்
யாதவையும் நிதீஷ்குமாரையும் ஒன்றாக்குவீர்களா? மாயாவதியையும் முலா யம்சிங்கையும் ஒன்றாக்குவீர்களா? மம்தா பானர்ஜியும் நீங்களும் ஒன்றாக
நிற்பீர்களா? பிறகு எப்படி மூன்றாவது அணி அமையும்?

நான் ஜெயலலிதாவை ஆதரித்தேன். ஓர் ஆண்டு முழுவதும் ஜெயலலிதா வைப் பற்றிப் பேசினேன். ஏன்? கருணாநிதி யிடம் இருப்பது 20 விழுக்காடு வாக்கு.அவர் கூட்டணி சேர்த்துக்கொண்டால் 25 விழுக்காடு வாக்கு வைத்தி ருப்பார்.அவரை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றால், 30 விழுக்காடு வாக்கு கள் வேண்டும். அந்த 30 விழுக்காடு வாக்கு ஜெயலலிதா அமைக்கக்கூடிய கூட் டணிக்கு இருக்கிறது.கருணாநிதியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றால், ஜெயலலிதாவை விட்டால் வேறு வழி கிடையாது. 

அடிப்படைப் பண்புகள் மாறாது


அதே நேரத்தில் ஜூனியர் விகடனில் நான் ஜெயலலிதாவிற்கு எழுதிக் கொண் டிருக்கிறபொழுதே, ஜூனியர் விகடனில் எழுதுகிறேன், ஆதரித்து. ஆனந்த விக டனில் என்னுடைய கேள்வி பதில்,வைகோவினுடைய கேள்வி பதில்எல்லாம் வந்தது. படித்திருப்பீர்கள்.என்னை அப்பொழுது ஒரு வாசகர் கேட்கிறார், ஜெய லலிதாவை ஆதரிக்கிறீர்களே, ஜெயலலிதா குணம் மாறிவிட்டது என்று நம்பு கிறீர்களா? என்று கேட்கிறார். அப்பொழுதே பதில் எழுதியிருக்கிறேன். ஒரு பக்கம் ஜெயலலிதாவை ஆதரிக்கிறேன்.இன்னொரு பக்கம் ஒரு சிறுத்தையின்
உடம்பில் உள்ள புள்ளிகள் எப்படி சாகும்வரை மறையாதோ, அதே போன்று தான் ஜெயலலிதாவின் அடிப்படை பண்புகள் மாறவே மாறாது.ஆனாலும் ஜெயலலிதாவை ஆதரித்தேன் ஏன்? திராவிட முன்னேற்றக் கழகத்திடம் இருந் து இந்த மண்ணைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, அவரை விட கொஞ் சம் வலிமையுள்ளதாக ஒரு அணி இருக்க வேண்டும் என்பதாகும்.

வேறு வழி தெரியவில்லை

மோடி மீது எங்களுக்கு ஒன்றும் காதல் இல்லை. குஜராத் கலவரத்தை நியாயப்
படுத்துகிற வேலையும் எங்களுக்கு இல்லை. அந்த வேலையைச் செய்யப்போ கின்றவர்கள் நானும் இல்லை.வைகோவும் இல்லை. விஜயகாந்தும் இல்லை, யாரும் இல்லை. ஆனால்,தி.மு.க.வை வீழ்த்துவதற்கு ஜெயலலிதாவை விட் டால் நாதி இல்லையோ,அது போல் இந்திய அரசியலில் என் இனத்தைக்கொன் று குவித்த இந்திரா காங்கிரசை ஆட்சி பீடத்திலிருந்து அகற்ற பாரதிய ஜனதா கட்சியை விட்டால் எனக்கு வேறு வழி தெரியவில்லை. என் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வழி சொல்லிக்கொடுங்கள். இந்த ஒரு சதவீத
வாக்குகளை வைத்துக்கொண்டு நீங்கள் மாற்றுவீர்களா?

இந்திய அரசியல் சட்டத்தைப் படித்தவன். முறையாக வழக்கறிஞருக்குப் படித் து முறையாக வழக்கறிஞர் பணி ஆற்றியவன் நான்.நாட்டின் அரசமைப்புச் சட் டத்தின் அடிப்படைச் செய்திகளை 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாகச்
சேர்ந்து வாக்களித்தாலும் மாற்ற முடியாது. ஆகவே, மோடி ஆட்சிக்கு வந்தா லும் சிறுபான்மை சமுதாயத்திற்கு எதிராக ஒரு காயைக்கூட அசைக்க முடியா து. உங்கள் உரிமைகளைப் பறிக்க முடியாது.

அதனால் நான் யோசித்தேன், சரி மோடியின் மீது இளைஞர்களுக்கு இன்றைக் கு ஆசை வந்திருக்கிறது.முதன் முதலில் வாக்களிக்கப்போகும் வாக்காளனுக் கு ஒரு ஆர்வம் வந்திருக்கிறது. வாக்கு வழங்கும் படித்த வர்க்கம்,நடுத்தர வர்க் கம் எல்லாம் கோத்ராவுக்குப் பின்பு நடந்த கலவரத்தை நினைக்கவில்லை. ஏதோ மோடி வந்தால் ஒரு நல்லாட்சி நடக்கும். காரணம், ஒவ்வொரு ஊழல் செய்தியைக் கேட்டுக்கேட்டு சலித்து விட்டான் வாக்காளன். இந்த காங்கிரஸ் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதனால், இந்த மோடி இருக் கட்டும் என்று நினைக்கிறார்கள்.மோடியை ஆதரிப்பது என் வேலை இல்லை. இன் றைக்கு ஜெயலலிதா ஆட்சியில் கூட 144 தடை உத்தரவு போடப்படுகிறது. அர சியல் தலைவர்கள் குறிப்பிட்ட மாவட்டங்களுக்குப் போக முடியவில்லை. ஆனால், மோடி சொல்கிறார், 2002 க்குப் பிறகு 2013 இல் 11 ஆண்டு காலத்தில் என்னுடையமுடியவில்லை. ஆனால், மோடி சொல்கிறார், 2002 க்குப் பிறகு 2013 இல் 11 ஆண்டு காலத்தில் என்னுடைய ஆட்சியில் ஏதாவது ஒருமுறை இந்து-முஸ்லிம் கலவரம் என்று நான் 144 தடை உத்தரவு போட்டேன் என்று சொல்ல முடியுமா ? என்றார் .

இன்றைக்கு 15 விழுக்காடு வாக்குகள் அவர்களுக்கு வரக்கூடிய சூழல் இருக்கி றதா? பயன்படுத்துவோம்.ம.தி.மு.க.வின் கடுமையான உழைப்பின் காரணமாக இன்றைக்கு 10 விழுக்காடுக்கு மேல் வாக்குகளை வளர்த்து வைத்திருக்கிறார் வைகோ. விஜயகாந்தை நம்பக்கூடிய வாக்காளர்கள் 10 விழுக்காடு இருக்கி றார்கள். மூன்று பேரும் சேருகிறபொழுது 30 விழுக் காடுக்கு மேலே போகிறது. எனக்குத் தேவை தி.மு.க.ஆட்சி இனி வரக் கூடாது.எனக்குத் தேவை அ.திமு க. வின் ஆட்சி அகற்றப்பட வேண்டும். 2014 இன்றல்ல. 

அப்படி என்றால் இதுவரை யில் மூன்றாவது அணி என்று ஒன்று அமைந்தது.
மூன்றாவது அணி என்பதை நீங்கள் பார்த்தால், கருணாநிதியிடம் போய் பிச் சை கேட்டு, கேட்ட பிச்சை கிடைக்க வில்லை என்ற கோபத்தோடு வெளியே
வந்தவர்கள், ஜெயலலிதாவிடம் பிச்சைப் பாத்திரத்தோடு சென்று கேட்ட தொகுதி பிச்சையாகக் கிடைக்கவில்லை என்று கோபத்தோடு வந்தவர்கள் தேர்தல் நேரத்தில் திடீரென்று ஒரு கூட்டணியை வைப்பார்கள். அது மூன்றா வது அணி.அந்த மூன்றாவது அணியை நீங்கள் பார்த்தால், 1 சதவீத ஓட்டு, 2 சதவீத ஓட்டு, 3 சதவீத ஓட்டு வைத்து இருப்பார்கள். கூட்டிப் பார்த்தால் 10
சதவீதம் இருக்காது. வாக்காளர் வாக்குச் சாவடிக்குப் போகிற போதே முடிவு
எடுக்கிறார், அது ஏற்கனவே மூன்றாவது அணி. மொத்தமே 10 சதவீதம் இல் லை.இதற்கு ஓட்டுப் போட்டுப் பயனில்லை என்று முடிவெடுத்துவிடு கிறான்.

மாற்று அணி

அதனால்தான் நான் தெளிவாகச் சொல்கிறேன், நான் விரும்புவது மூன்றாவது அணி அல்ல. மாற்று அணி.இதுவரைக்கும் தமிழ்நாட்டின் தேர்தல் வரலாற்றி லேயே 1966 இல் மாநிலக் கல்லூரியில் மாணவனாக அடியெடுத்து வைத்த பொழுது பெருந்தலைவர் காமராஜரின் காலடியில் போய்ச் சேர்ந்தவன் நான். நாற்பதாண்டு காலத்திற்கு மேல் இந்த அரசியல் நடவடிக்கைகளை தேர்தல் முடிவு களைப் பார்த்தவன் நான். ஒரு நாளும் மாற்று அணி இந்த மண்ணில்
அமையவே இல்லை. காரணம், 30 விழுக்காடு வாக்குகளைக் கொண்ட ஒரு
அணி அமையவில்லை. இப்படி ஒரு அணி அமைந்தால், தமிழகத்தின் தேர்தல் வரலாற்றிலேயே முதன் முதலில் 30 விழுக்காடு வாக்குகள் வருவதற்கான
அணி அமையும். இந்து பத்திரிகையில் இப்படி ஒரு செய்தி வந்து, தமிழருவி
மணியன் முயற்சியினால்,30 விழுக்காடு வரக்கூடிய ஒரு மாற்று அணி அமை ய இருக்கிறது என்று வந்த கணமே அ.தி.மு.க. வட்டாரம் அதிர்ந்து போய் இருக் கிறது. தி.மு.க. வட்டாரம் திகிலுடன் கிடக்கிறது. இந்த மாற்றம்  வரவேண் டாமா?

நாங்கள் என்ன பாரதிய ஜனதா கட்சியின் சம்பந்திகளா? மோடியுடன் போய்
விருந்து சாப்பிட்டுவிட்டு, மோடியுடன் வாழ்வதற்காக இப்பொழுது புறப்பட்ட வர்களா? ஒன்றும் இல்லை.நாடாளுமன்றத் தேர்தல் இதை வைத்து நடக்கட் டும்.ஒரு மாற்றம் நிகழட்டும்.தேர்தல் முடியும்.அதற்குப்பிறகு இரண்டு ஆண்டு கள் இருக்கின்றன என் தோள் களில் வைகோவைத் தூக்கி வைக்கப் போகி றேன்.

வைகோவின் தம்பிகள்


இந்த மதுரை மண்ணில் ஏன் நாங்கள் இந்தக் கூட்டத்தைக் கூட்டி இருக்கி றோம்? வைகோ அவர்கள் இதுவரை என்னிடம் சொல்லவில்லை நான் தேர் தலில் எங்கே நிற்கப் போகிறேன் என்று. பலமுறை நான் அவரிடம் பேசுகி றேன். மணிக் கணக்கில் பேசுகிறேன். நீங்கள் எங்கே நிற்கப்போகிறீர்கள் என்று நானும் கேட்ட தில்லை. அவரும் சொன்னதில்லை.ஆனால், அவர் எங்கே நிற் பார் என்பது போல அவருடைய தம்பிகளுக்கு,தொண்டர்களுக்குத் தெரிந்திருக் கிறது.அப்படி அவர் எங்கோ நிற்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த மனிதன் இந்த முறை நாடாளுமன்றம் நிச்சயம் சென்றாக வேண்டும். இப்படி ஒரு கூட்டணி அமைகிறபொழுது எந்தச் சிரமமும் இல்லாமல் அந்த மனிதன்
நாடாளுமன்றம் போக முடியும். அந்த மனிதனை மீண்டும் நீங்கள் தனியாக
விட்டுவிட்டால் என்ன நடக்கும்?

கலைஞர் ஜெயலலிதாவைப் பற்றிக் கவலைப்படுகிறார் என்று நினைக் கிறீர் களா? கலைஞருக்குத் தெளிவாகவே தெரியும். ஜெயலலிதாவுக்கு எதிரி ஜெய லலிதா தான் என்று.கலைஞரை வீழ்த்துவதற்குத்தான் ஆயிரம் வியூகங்களை நாம் சேர்ந்து எடுக்க வேண்டும். ஜெயலலிதாவை வீழ்த்துவதற்கு யாரும் எது வும் செய்ய வேண்டாம். ஒரு முறை ஆட்சியில் உட்கார வைத்துவிட்டு ஐந் தாண்டு காலம் கைகட்டி உட்கார்ந்து கொண்டு இருங்கள் அடுத்த முறை தான்
வரக்கூடாது என்று அவரே முடிவெடுத்து காரியங்களைச் செய்து கொண்டே
இருப்பார். எனவே, ஜெயலலிதாவை அவர் பார்க்கவில்லை.

கலைஞர் நினைக்கிறார், நாம் 90 வயதைத் தொட்டுவிட்டோம்.நம்முடைய பிள் ளையை நாம் பார்த்துப் பார்த்து பராமரித்து வளர்த்து வைத்து இருக்கிறோம். நாம் கண்மூடிய பிறகு இந்தக் கழகத்தில் ஸ்டாலின் இருந்து செங்கோல் ஏந்த வேண்டும்.கோட்டைக்கு வரவேண்டும் என்றால், இருந்த பொழுதும் உள்ளே ஒருவன் தடையாக இருந்தான். வெளியே அனுப்பிய பிறகும் இவன் ஒருவன் தான் நாளைக்கும் தடையாக இருப்பான் என்று அவர் பார்வை வைகோ மீது
விழுகிறது. தி.மு.க.கூட்டணி அமைக்கிறபோது அது ஒரு சக்தியோடு வைகோ வைத் தோற்கடிக்க வரும். பண மூட்டையோடு வரும்.

போயஸ் தோட்டத்தில் எவனெல்லாமோ வந்து நிற்கிறான். ஆனானப்பட்ட
காம்ரேடுகள் எல்லாம் வந்து காவடி எடுக்கிறார்கள். இந்த வைகோ இதுவரை
நம்மிடம் வரவில்லையே? என் ஆதரவு இல்லாமல் நீ நின்று வெற்றி பெற்று
விடுவாயா? பார்த்துவிடுகிறேன் ஒரு கை எனறு ஜெயலலிதா வியூகம் அமைக் கலாம். நண்பர்களே ஒரு பக்கம் ஜெயலலிதாவின் அதிகார பலம்.அஇஅதிமுக. விடம் இருக்கிற பண பலம்.இன்னொரு பக்கம் திராவிட முன்னேற்றக் கழகத் திடம் இருக்கிற பண பலம். திராவிட முன்னேற்றக் கழகத் தோடு கூட்டணி வைக்கக்கூடிய காங்கிரசின் மத்திய ஆட்சியிலே இருக்கிற அதிகார பலம். இவ்வளவுக்கும் இடையில் வைகோ நின்றாக வேண்டும். சுற்றிலும் பகை இருக்கும். அந்தப் பகை ஆயிரம் வசதிகளோடு வந்து முற்றுகை இடும். உள்ளே தனி மனிதனாக வைகோ நிற்பார். 

அந்த வைகோ அபிமன்யு ஆகிவிடக்கூடாது என்பதுதான் என்னுடைய கவலை ஒருநாளும் ஆகி விடக்கூடாது. அர்ஜூனன் காண்டீபத்தை ஏந்திப் பெற்ற வெற் றியை வைகோ பெறவேண்டும்.அர்ஜூனன் காண்டீபத்தை ஏந்தி அவன் பெற் ற வெற்றி என்பது அர்ஜூனனால் மட்டும் வந்து வாய்த்தது அல்ல. அதில் தே ரோட்டியாக வந்து உட்கார்ந்த ஸ்ரீகிருஷ்ணனுக்கும் பங்கு இருக்கிறது. எதுவும் கூட்டு இல்லாமல் நடக்காது.

இறைவனே இராமனாகத்தான் மண்ணில் பிறந் தான். ஆனால் அந்த இராமன் குரங்குகளோடு கூட்டணி வைத்துத் தானே பகை யை வெல்ல முடிந்தது. குரங் குகளோடு கூட்டணி வைத்த தனால் இராமனை நீங்கள் கடவுள்இல்லை என்று சொல்லி விடுவீர்களா? ஏதோ ஒரு வகையில் அவனுக்குக் கூட்டணி தேவைப் பட்டது அல்லவா? அது குரங்கோ எதுவோ? எனவே, நமக்கு இப்போது தேவை ஒரு வலுவான கூட்டணி இருந்தால், நான் இப்பொழுதே சொல்கிறேன். இப் பொழுதே அவர் எம்.பி.யாகிவிட்டால் தி.மு.க.வின் வியூகமும் முறியடிக்கப்
படும், அ.தி.மு.க.வின் வியூகமும் தி.மு.க.வின் வியூகமும் முறியடிக்கப் படும். வைகோ நாடாளுமன்றம் போக வில்லை என்றால், அவருக்கா இழப்பு?

நண்பர்களே, தெருக்கோடியில் இருப்பவன் போய் ஒரு எம்.பி.யாக  நாடாளு மன்றத்தில் போய் உட்கார்ந்தால் ஐந்தாண்டுகளில் அவன் கோடீசுவரன் ஆகி விடுவான்.அவனுக்குத்தான் ஒவ்வொரு ஆண்டும் தொகுதி மேம்பாட்டு நிதி கொடுக்கிறார்களே. அதெல்லாம் பெரிய கதை. ஆனால் ஒன்று சொல்கிறேன், அதற்காக நான் கவலைப்படவில்லை. நாடாளுமன்ற மேலவையில் இருந்தா லும் சரி, கீழவையில் இருந்தாலும் சரி வைகோ என்கிற தனி மனிதன் இந்த
இனத்தையே காப்பதற்கு போராடு வதற்கு இருந்த மனிதன், சென்றமுறை அந்த வாய்ப்பு இல்லை. ஈழத்தில் இவ்வளவு அவலங்களும் அரங்கேறின.

காமராஜரின் புகழ் பாடுபவன்


கொஞ்சம் கற்பனை செய்கிறேன்.மன்மோகன் சிங்காவது இரவல் நாற்காலி யில் உட்கார்ந்து பிரதமராக இருப்பவர். சோனியாகாந்தி ஒரு இழு இழுத்தால் முடிந்துவிடும். ஆனால்,ராஜீவ்காந்தி சொந்த பலத்தில், நேரு குடும்பம் என்ற பலத்தில் பிரதமரான மனிதர். நேரு காலத்தில் நேருவுக்கே கிடைக்காத ஆத ரவு ராஜீவ்காந்திக்கு 1984 இல் கிடைத்தது.

அந்த ராஜீவ் காந்திக்கு எதிரே நின்று கொண்டு, எங்கே ஓடுகிறாய், ஓடாதே நில்! என்று சொல்லக்கூடிய துணிவு வைகோவிற்கு இருந்ததே! இந்த இனத் தின் மீதும், ஈழத்தின் மீதும் அவர்கள் பாதிப்பை உருவாக்குகிற பொழுது இந்த மனிதன் போய் இருந்தால், மன்மோகன் சிங் ராஜபக்சேவுக்கு ஏதாவது எழுத
வேண்டும் என்று நினைத்தாலோ எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்தாலோ, நான்கு கப்பல்களை அனுப்புவது, ஆயுதங்களைக் கொடுப்பது பின்னால் இருந்து பாதுகாப்பு கொடுப்பது என்று யோசிக்கிற பொழுதெல்லாம் கனவிலும் நனவிலும் வைகோவின் கர்ஜனை வந்து பாதுகாத்து இருக்குமே. விட்டுவிட்டோமே நாம்.

அவருக்கு பல்லாண்டு பாடுவதா எனக்கு வேலை? காமராஜர் என்கின்ற ஒரு தேவனுக்கு மட்டும்தான் நான் தெருப்பாடகன் சாகும்வரை. இன்னொரு காம ராஜரை கண்டெடுப்பதற்கு நான் தேடுகிறேன். இன்னொரு காமராஜரை தேடு கிறேன். வைகோ உண்மையில் ஒரு ஆட்சியை அமைத்தால், காமராஜர் தந்த அந்தப் பொற்கால ஆட்சியும்,அண்ணா தந்த ஊழலற்ற ஆட்சியும் ஒன்றாகச் சேர்ந்த ஒரு ஆட்சியாக தமிழகத்தில் உருவாகும். அதற்கு ஒரு களம் அமைய வேண்டும்.நான் விஜயகாந்தோடு போய் உட்கார்ந்து பேசுவதனாலேயே விஜய காந்தை முதலமைச்சராக்குவதற்கு வந்து விட்டேனா என்ன? இல்லை.எனவே
புரிந்துகொள்ளுங்கள் ஒரு வலிமைமிக்க அணி அமைய வேண்டும், தமிழகத் தில் இருக்கிற தீமைகளை அகற்றுவதற்கு.இந்தியாவைப் பற்றிப் படர்ந்திருக் கின்ற ஊழல் நோயை அகற்றுவதற்கு மாற்று அணி அமைய வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். திரும்பத் திரும்ப வைகோ விலகிச் சென்றாலும் நான் பிடித்துப் பிடித்து இழுப்பேன்.

விஜயகாந்த் அலுவலகம் தேடிச் சென்று பேசவேண்டிய அவசியம் எனக்கு என்ன இருக்கிறது? நான் போய் விஜய காந்திடம் பேசுகிறேனே, ஒவ்வொரு
வரிடமும் பேசுகிறேனே, எனக்கு என்ன இருக்கிறது, ஒன்றும் கிடையாது. அத னால்தான் நான் எழுதினேன்,ஜெயகாந்தனின் என்றோ சில நேரங்களில் சில மனிதர்கள் படப்பாட்டை நான் எழுதிக்கொண்டே வருகிறபொழுது என் மனதில் பொரி தட்டியது. அதனால்தான் எழுதினேன். வாழ்ந்ததைச் சொல்லுகிறேன்,நீங் கள் வாழ்ந்திடச் சொல்லுகிறேன்; நீங்கள் தாழ்வதும் தாழ்ந்து வீழ்வதும் உமக் குத் தலையெழுத்தென்றால், உம்மைத் தாங்கிட நாதியுண்டோ! என்னை நம்ப வும் நம்பி அன்பினில் தோயவும் நம்பிக்கையில்லையென்றால், ஒரு தம்பிடி நட்டம் உண்டோ! என்று நான் எழுதியது விஜயகாந்துக்கு. விஜயகாந்துக்கு எழுதினேன்.

முயற்சிக்கு துணையிருங்கள்


இந்த மாற்று அணி அமைய வேண்டும்.மாற்று அணி அமைவதற்கு நீங்கள் அத் துணைபேரும் தயாராக வேண்டும்;ம.தி.மு.க. தொண்டர்களுக்குச் சொல்கி றேன், வைகோவை அணி அமைக்கச் சொல்லுங்கள். காங்கிரசை கருவறுப் போம் என்று மேடையில் முழங்கினால் போதாது. அணி களத்தில் வரவேண் டும். அவர் தெளிவாக இருக்கிறார், என்னிடம் பேசும்போதே சொன்னார், அண் ணே 370 ஆவது பிரிவில் கை வைக்கக்கூடாது பி.ஜே.பி., காமன் சிவில்கோடு என்று சொல்லி விட்டு இசுலாமியர்களுடைய தனிப் பட்ட உரிமைகளில் அவர் கள் தலை நீட்டக் கூடாது. உச்சநீதிமன்றத்தில் பாபர் மசூதி சம்பந்தப்பட்ட தீர்ப்பு வருகிற வரையில் அந்தப் பிரச்சினையை அவர்கள் கையில் எடுக்கக் கூடாது.அவர் எனக்கு வைத்த நிபந்தனையைத்தான் நான் ஜூனியர் விகடனில் கட்டுரை எழுதினேன். எனவே, நிபந்தனைகள் இல்லாமல் ஒப்பந்தம் போடுகிற
கொத்தடிமை அல்ல வைகோ. நல்ல நிபந்தனையின் அடிப்படையில் சிறுபான் மை சமுதாயத்தின் நலனையும் காத்து, ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்தின் நலனையும் காத்து,ஒட்டுமொத்த இந்திய சமுதயாத்தின் நலனையும் காக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால், என் முயற்சிக்கு நீங்கள் துணை நில்லுங்கள். 

வைகோவுக்குத் தேர்தல் பிரச்சாரத்தை காந்திய மக்கள் இயக்கம் இன்று இந்த
இடத்தில் தொடங்கிவிட்டது. நாடாளு மன்றத்தில் வைகோ போய் அமருகிற
வரையில் காந்திய மக்கள் இயக்கத் தினுடைய களப்பணி தொடரும்.

தமிழருவிமணியன் இவ்வாறு உரை ஆற்றினார்.

களப்பணி ஆற்றுவோம்; காங்கிரசை அகற்றுவோம்!-பகுதி 2

No comments:

Post a Comment