புகழேந்தி தங்கராஜின் “இது இல்லை எனில் எது இனப்படுகொலை?” நூல் வெளியீட்டு விழா #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ ஆற்றிய உரை பாகம் 1 தொடர்ச்சி வருமாறு:
ஈழத்தமிழ்ப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள்
இந்த நூலில், எடுத்த எடுப்பிலேயே இந்தக் கேள்வியை முன்வைத்து இருக் கி றார் புகழேந்தி தங்கராசு. அடுத்து, ஈழத்தில் நடந்த துயரங்களை விவரிக்கிறார். நான் தொடக்கத்தில் கூறியதைப்போல, அந்தப் புனிதவதியின் துயரமான வாழ் வை, உச்சிதனை முகர்ந்தால் என்ற காவியமாக ஆக்கினாரே,அவர் கேட்கிறார்: 1996 ஆம் ஆண்டு, பிப்ரவரி 11 ஆம் நாள், குமாரபுரம் என்ற இடத்தில் இருந்து, பள்ளிக்குச் சென்று திரும்பிய 16 வயது மாணவி தனலெட்சுமி, தம்பியோடு சைக்கிளில் வந்து கொண்டு இருக்கின்றார். இராணுவ நடமாட்டத்தைப் பார்த் துப் பயந்துபோய், ஒரு கடைக்குள் நுழைந்து ஒளிந்து கொள்கிறார்.அதை சிங் கள இராணுவம் பார்த்து விடுகிறது. அவளைத்தூக்கிக் கொண்டு போகிறார்கள். மிகக் கொடூரமாக அவளைச் சின்னாபின்னப்படுத்துகிறார்கள். தங்கைகள்
இருக்கின்ற இடங்களில் பேசுகையில், நான் என்சொற்களில் மிகக் கவனமாக இருப்பேன்
நாய்களுக்கு நன்றி உண்டு. ஆனால், அதுவே வெறிநாயாகி விட்டால், அது பிறரை அழிக்கும்; தன்னையும் அழித்துக் கொள்ளும். அதன் மூச்சுக் காற்று
பட்டாலே விஷம் பரவும்.அதுபோன்ற சிங்கள வெறிநாய்கள்,அவளைச் சிதைக் கிறார்கள். கடைசியாக வந்த ஒருவன் கொடுத்த வாக்குமூலம் என்ன தெரி யுமா?....
குமார என்பவன் சொல்லுகிறான்: “கடைசியாக நான் அந்தப் பெண்ணைப் பார்த் தேன். அவளது ஆடைகள் எல்லாம் கிழிக்கப்பட்டு இருந்தன. உடம்பெல்லாம்
பற்களால் கடித்த காயங்கள். அவள் அழுது கதறிக் கொண்டு இருந்தாள்.அதைப் பார்க்கச் சகிக்கவில்லை.இனி இந்தத் துன்பத்தோடு அவள் இருக்கக்கூடாது
என்பதற்காக, நான் அவளைச் சுட்டுக் கொன்றேன்.”
இது சிங்களச் சிப்பாயின் வாக்குமூலம்.
கோனேசுவரி அம்மையாரைப் பற்றி இங்கே சொன்னார்.நான், 98 ஆம் ஆண்டு அக்டோபர் கடைசியில் ஜெனீவாவுக்குச் சென்றபோது, மனித உரிமைகள்
ஆணையத்தின் துணைத்தலைவர், இப்போது அது கவுன்சில், அப்போது அது கமிசன்; அதனுடைய துணைத்தலைவராக இருந்த, பின்லாந்து முன்னாள் பிர தமர் ஹோர்ஸ்ட் அவர்களைச் சந்தித்தபோது,அவரிடம் நான் தாக்கல் செய்த ஆவணத்தில், இந்தக் கோனேசுவரி அம்மையாரைப் பற்றிக் குறிப்பிட்டு இருக் கின்றேன். அவர் ஒரு கோவில் குருக்களின் மனைவி. மூன்று குழந்தைகளுக் குத் தாய்.
‘a grenade was inserted into her body,which exploded'
இதை யார் எழுதியது? அந்த அம்மையாரின் உடலை ஆய்வு செய்த மருத்துவர் பீரிஸ் எழுதுகிறார். எதற்காக இப்படிச் செய்தார்கள்? அந்தப் பெண் பலரால், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட தடயங்களை அழிப்பதற்காக வெடிகுண்டு கட்டி வெடிக்கச் செய்து இருக்கின்றார்கள்.
அதைப்போலத்தான் ஹேமலதா. 16 வயதுப் பெண்.பள்ளித் தேர்வுக்காகப் படித் துக் கொண்டு இருந்தாள்.இரவு பத்து மணிக்கு இராணுவம் வீட்டுக்கு உள்ளே
நுழைந்தது. தாய் தந்தையரின் கைகளைக் கட்டிப் போட்டு, வாயைத் துணியால் அடைத்து விட்டார்கள்.இந்தப் பிள்ளையைத் தூக்கிக் கொண்டு போய் விட்டார் கள். மறுநாள் பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து பார்த்து அவர்களை விடுவித்த னர். ஹேமலதாவைத் தேடினார்கள்; தேடினார்கள். மூன்று நாள்களுக்குப் பிறகு அவளது உடல் கிடைத்தது. நாராகக் கிழித்து எறியப்பட்டுக் கிடந்தாள். இதையும் உள்ளடக்கிய ஆவணம்.
அடுத்து கிருஷாந்தி. மட்டக்களப்புக்குக் பக்கத்தில் கைதடி என்ற ஊரைச் சேர்ந் தவள். யாழ்ப்பாணம் சுண்டுகுழி கல்லூரியில் ரசாயனப் பிரிவில் படித்துக்
கொண்டு இருந்த மாணவி. காலையில் கல்லூரித் தேர்வு எழுதுகிறாள். பிற்பக லில், தன்னுடைய உயிர்த்தோழி ஜனாநந்தினி இறந்த துக்கத்தைக் கேட்டுவிட் டுத் தன் வீட்டுக்கு வருகிறாள்.
சிங்கள இராணுவம் மறிக்கிறது. அதற்குப் பிறகு அவளைப் பற்றிய எந்தத் தடய மும் இல்லை. இராணுவம் அவளை மறித்த செய்தி, தாய் இராசம்மாளுக்குக்
கிடைக்கிறது. அவர் பக்கத்து வீட்டில் இருந்த தன்னுடைய உறவுக்காரர் கிருபா னந்த மூர்த்தியையும்,தன் மகன் பிரணவனையும் அழைத்துக் கொண்டு இரா ணுவப் பாசறைக்குச் செல்கிறார். இந்த இடம், யாழ்ப்பாணம் செம்மணி பகுதி. அதற்குப் பிறகு,விசாரிக்கப் போன அந்த மூன்று பேரையும் காணவில்லை. இது 96 செப்டெம்பர் 7 ஆம் தேதி நடக்கிறது. அவர்கள் மூன்று பேரும் கொலை
செய்யப்பட்டு, கிருஷாந்தி புதைக்கப்பட்ட இடத்திலேயே புதைக்கப்பட்டார்கள்.
செம்மணி புதைகுழிகள்
இதன்பிறகு, சோமரட்ண ராஜபக்சே என்பவன் நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்கு மூலம் தருகிறான்:‘நான் இராணுவத்தில் இருந்தேன். நிறையப் படுகொலைகள்
செய்து இருக்கிறோம். கிருஷாந்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிக் கொல்லப்பட்டார்.அவரைப் போல இறந்தவர்கள் அனைவரையும் செம்மணி யில் தான் குழிதோண்டிப் புதைத்து இருக்கின்றோம். கைவிலங்கோடு பலரைப் புதைத்து இருக்கின்றோம்’ என்கிறான்.
இந்தக் கட்டத்தில், நான் 98 அக்டோபரில், மனித உரிமைகள் ஆணையத்தின் துணைத்தலைவரிடம் கோரிக்கை விண்ணப்பத்தைக் கொடுக்கிறேன். ஈழத் தில் நடைபெறுகின்ற கொடுமைகளை எடுத்துச் சொன்னேன். எங்கள் பிள்ளை கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்படுகின்றார்கள்; எங்கள் பெண்கள் பாலி யல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்;அவர்களுக்கு நீதி வேண் டும்; நாங்கள் எங்கே போவோம்? மனித குலத்தின் மனசாட்சியாகத் திகழ்கின்ற இந்த மனித உரிமைகள் ஆணையத்தின் கதவைத் தட்ட நான் வந்து இருக்கின் றேன். நீதி கொடுங்கள்’ என்று கேட்டேன்.
கொசோவாவில் கொல்லப்பட்ட 80 முஸ்லிம்கள் புதைக்கப்பட்டது குறித்த உண்மைகளைக் கண்டு அறிவதற்கு, Physicians of Human Rights என்ற குழுவை அனுப்பி, புதைகுழிகளைத் தோண்டி எடுத்து, உண்மைகளை வெளியே கொண் டு வந்தீர்களே,அதுபோல, அதே குழுவினரை, யாழ்ப்பாணத்துக்கு, செம்மணிக் கு அனுப்புங்கள்; புதைகுழிகளைத் தோண்டுங்கள்; எங்கள் தமிழர்கள் கொடூர மாகக் கொன்று புதைக்கப்பட்ட கொடுமையை உலகத்துக்கு எடுத்துக் காட்டுங் கள்’ என்று கேட்டேன்.
சரியாக 15 ஆவது நாளில், அதே குழுவினரை அவர் அனுப்பியதால், அவர்கள் செம்மணிப் புதைகுழிகளைத் தோண்டி எடுத்து, உண்மையை உலகுக்கு உரைத் தார்கள் என்றால், அந்தக் கடமையைச் செய்தவன் என்ற தகுதியோடு உங்கள் முன்னால் நிற்கின்றேன்.
இந்தப் புத்தகத்தில்,அந்தக் கொடுமைகளை எல்லாம் புகழேந்தி தங்கராஜ் எழுதி இருக்கின்றார். மலேசியாவில் டோடோ என்ற பறவை இனம் 1500 ஆண்டுக ளுக்கு முன்பு முற்று முழுதாக அழிந்து போனதே, அதைப்போல ஈழத்தமிழர் என்ற இனம் அழிந்து போவதா? என்று கேட்கிறார்.
புகழேந்தி தங்கராஜ் எழுப்பும் கேள்விகள்
1984 டிசம்பர் 2 ஆம் தேதி,போபால் யூனியன் கார்பைடு ஆலையில் விஷவாயுக் கிடங்கு வெடித்தது.ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.அன்றைக்கு இங்கே இருந்த அந்த நிறுவனத்தின் தலைவர் ஆண்டர்சனை, ராஜீவ் காந்தி தலைமையிலான மத்திய காங்கிரஸ் அரசு, அர்ஜூன்சிங் ஏற்பாட்டில் பத்திர மாகக் காப்பாற்றிக் கொண்டு போய், அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தது. இதைப் பற்றி எழுதுகிறார்.
இதே நிலைமைதானே, நாளை கூடங்குளத்துக்கும்? எங்கள் தெற்குச்சீமையை அந்த அணு உலை அழித்து விடுமே? இடிந்தகரையில் வீரஞ்செறிந்த போராட் டத்தை நடத்துகின்றார்களே, அந்தக் கேள்விகளை முன்வைத்து, இந்த இனத் தைக் காக்க வேண்டாமா? என்று கேட்கிறார். இப்படி வரிசையாகக் கேள்வி களை எழுப்புகிறார் இந்த நூலில்.
அடுத்து, 1919 ஏப்ரல் 13 பைசாகித் திருநாள் அன்று, பஞ்சாப்பிலே ஜாலியன் வாலாபாக்கில் நடந்த கொடுமையை விவரிக்கின்றார். அங்கே ஆயிரக்கணக் கான மக்கள் திரண்டு இருந்தார்கள். உள்ளே போகவும், வரவும் ஒரே வழிதான். அங்கே படையோடு வருகிறான் ஜெனரல் டயர். எச்சரிக்கை எதுவும் செய்யா மல், எடுத்த எடுப்பிலேயே திரண்டு இருந்த மக்களை நோக்கிச் சுடுகிறான். ஆயிரக்கணக்கானோர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ஆனால், வெள்ளையர்
ஆட்சி, இறந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துச் சொன்னது.
பழிக்குப் பழி
பத்து வயதுச்சிறுவனாக இருந்த பகத்சிங், அந்த மண்ணை எடுத்துக்கொண்டு வந்து, தன் தங்கையிடம் காட்டி, ‘இதை வணங்க வேண்டும்’ என்றான். சரியாக 21 ஆண்டுகளுக்குப் பிறகு, 1940 ஆம் ஆண்டு,லண்டனில் ஜெனரல் டயரை நெஞ்சில் சுட்டுக் கொன்றான் உத்தம்சிங். அவன் ஜூலையில் தூக்கில் இடப் பட்டான். அதை இந்த நூலில் எழுதுகிறார். ஏன் தெரியுமா? அப்படிப்பட்ட உத்தம் சிங்குகள் இந்த மண்ணிலும் தோன்றுவார்கள் (பலத்த கைதட்டல்) என்பதை, செம்பியன் போன்ற இளைஞர்களுக்குச் சொல்லுகிறேன்.
நான் வன்முறையைக் காதலிப்பவன் அல்ல. அறவழியில் இயங்குகின்ற ஒரு அரசியல் இயக்கத்தின் பொதுச் செயலாளர். எங்கள் இயக்கத்தின் அதிகாரபூர்வ வார ஏடான சங்கொலியை 1996ஆம் ஆண்டு,தைப்பொங்கல் நன்னாளை ஒட்டி, இராஜா அண்ணாமலை மன்றத்தில் வெளியிட்டபோது, அந்த நிகழ்ச்சி யில் கலந்து கொண்டு வாழ்த்து உரைத்தவர், இங்கே அமர்ந்து இருக்கின்ற அன்புச் சகோதரர் சத்யராஜ் அவர்கள். எந்த வன்முறையிலும் நாங்கள் ஈடுபட்டது இல்லை.தமிழகத்தில் துளி அளவும் வன்முறைக்கு நாங்கள் இடம் கொடுத்தது கிடையாது. நாங்கள் பொது அமைதியைக் காக்கின்றவர்கள்.
இலட்சியத்துக்காக நடத்தப்படுகின்ற வீரஞ்செறிந்த போராட்டத்தை, வன்மு றையாகச் சித்தரிக்கக் கூடாது.பிரபாகரன் வன்முறையாளன் என்றால், பகத் சிங் யார்? பிரபாகரன் வன்முறையாளன் என்றால், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் யார்? பிரபாகரன் வன்முறையாளன் என்றால், மருதுபாண்டியர்கள் யார்? தீரன் சின்னமலை யார்? பூலித்தேவன் யார்? வீரபாண்டிய கட்டபொம்மன்
யார்? சுந்தரலிங்கம் யார்? வேலு நாச்சியார் யார்?
நீதிக்காகப் போராடுவோம்.அந்த நீதி கிடைக்கவில்லை என்றால்,உத்தம்சிங்கு கள் தானாகவே உருவாகி வருவார்கள். (பலத்த கைதட்டல்).
பான் கி மூன் ஒரு குற்றவாளி
மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்தாரே பான் கி மூன், நீதி கிடைக்கின் ற தா? கடந்த ஆண்டு நவம்பர் 27 ஆம் நாள் நடைபெற்ற மாவீரர் நாள் கூட்டத்தில் உரை ஆற்றுகையில், இந்த இனப்படுகொலையில் பான் கி மூனும் ஒரு குற்ற வாளி; அவரையும் விசாரிக்க வேண்டும் என்று நான் பேசினேன். அதை இந்தப்
புத்தகத்தின் மூன்றாவது உட்தலைப்பில் எழுதி இருக்கின்றார். நான் ஒன்றும் அவசரப்பட்டுப்பேசவில்லை.ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளைத் தொ டுக்க மாட்டேன்.
அவரை மிகக் கேவலமாக, International pimb எனச் சித்தரித்து, இராஜபக்சே கூட்டம் இலங்கையில் விளம்பரத் தட்டிகள் வரைந்து வைத்தான். அதை தீர்ப்பு ஆயத் தில் எடுத்துச் சொன்னேன். அதைக்கேட்டு நீதிபதி அதிர்ச்சி அடைந்தார். அங்கே எழுதி வைத்து இருந்ததைத்தான் சொன்னேன் என்றேன்.
சத்யராஜ் அவர்கள் பேசும்போது, ‘சில பிரச்சினைகள் குறித்து ஆழ்ந்து படிக்க எனக்கு நேரம் இல்லை; ஆனால், வைகோ ஒரு நிலைப்பாடு எடுத்தால், அது
தமிழர்களுக்குச் சரியாகத்தான் இருக்கும்; அதிலே நீதி இருக்கும் என்பதால், அதை அப்படியே ஆதரிப்பேன்’ என்றீர்களே, அதைக்கேட்டபோது, என் மனதுக் கு அவ்வளவு நிறைவாக இருந்தது. நீங்கள் பேசியது, என் உள்ளத்துக்கு அமுத மாக இருந்தது. உங்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் கிடையாது; எதையும் எதிர் பார்த்து நீங்கள் பேசவில்லை. நீங்களும் ஒரு போராளிதான்.
தமிழனுக்கு எதிராக ஒன்று சேர்ந்த எதிரிகள்
இந்திய அரசு நமக்குத் துரோகம் செய்தது; அதைத் தொடர்ந்து செய்கிறது. அணு ஆயுத வல்லரசு நாடுகள், ஈழத்தமிழரை அழிப்பதற்கு ஆயுதங்கள் கொடுத்தன.
ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் பகை. ஆனால், நம்மை அழிப்பதிலே அவர்களுக் குள் ஒற்றுமை. பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே ஐந்து யுத்தங் கள்.ஆனால், ஈழத்தமிழர்களை அழிக்க இருவருமே ஆயுதங்கள் கொடுத்தார் கள். இப்படி ஒரு விசித்திரத்தைக் கேள்விப்பட்டதுண்டா உலகம்? இஸ்ரேலும், ஈரானும் பிறவிப் பகைவர்கள். ஆனால், இஸ்ரேல் கொடுத்த ஸ்கைபர் ஜெட் விமானங்களில் ஈரானின் ஆயுதங்கள். கேள்விப்பட்டதுண்டா இப்படி ஒரு முரண்பாட்டை? இத்தனையும் அணு ஆயுத வல்லரசுகள். இவர்கள் ஏழு பேரை யும் எதிர்த்து நின்றாரே பிரபாகரன், அவரது படை. (பலத்த கைதட்டல்).
மனித உரிமை கவுன்சிலை நம்ப முடியாது
இன்றைக்கு மனித உரிமைக் கவுன்சிலில் நமக்கு நீதி இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். நாம் ஏமாந்து விடக் கூடாது; எச்சரிக்கையாக இருக்க
வேண்டும். 2009 ஆம் ஆண்டு, அந்தக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அரசுக் குப் பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றினார்கள். இந்தியா, சீனா, கியூபா ஆகிய
நாடுகள் வரிந்து கட்டிக்கொண்டு அந்தத்தீர்மானத்தை நிறைவேற்றின. இதைக் கண்டித்து, கொளத்தூர் மணியும், நானும் ஊர் ஊராகப் போய் அடிவயிற்றில்
இருந்து கத்தினோம். 2010 இலும் அதே நிலைமைதான்.
2011 பிப்ரவரி 28 ஆம் தேதி, நான் மிகக் கடுமையாகக் கண்டனங்களைப் பொழிந் து ஒரு கடிதத்தை, டாக்டர் மன்மோகன்சிங்குக்கு எழுதினேன். ‘உங்கள் துரோ கத்துக்கு ஒரு எல்லையே கிடையாதா? முற்றுப்புள்ளியே கிடையாதா? எப்படி இந்தியாவின் பிரதிநிதி, இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் தலை யிடக் கூடாது என்று ஐ.நா. சபையில் பேசுகிறார்? இனப்படுகொலையை இந்தி யா ஆதரிக்கின்றதா? இதற்கு மன்னிப்பே கிடையாது’ என்று எழுதினேன்.
வழக்கத்துக்கு மாறாக, என் கடிதத்தை டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏடு இந்தியா முழுமையாக வெளியிட்டது. என் செய்தியை அவர்கள் போடவே மாட்டார்கள். அதற்குப் பல காரணங்கள் உண்டு. இவர்கள் எல்லாம் நமக்கு எவ்வளவு கொடு மை செய்தார்கள் தெரியுமா? இவர்கள் செய்தி போடுவது இல்லையே என்று நான் வருத்தப்படுவது கிடையாது.
2009 ஆம் ஆண்டு, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஒரு போராட்டம். டெல்லியில் இருந்து தேசியத் தொலைக்காட்சிகள் வந்து இருந்தார்கள். ஒரு பேட்டி வேண்டும் என்று என்னிடம் ஒரு வாரமாகக் கெஞ்சிக் கேட்டு, ஏற்பாடு செய்தார்கள். என்னை ஒரு இடத்தில் உட்கார வைத்து, காதில் கருவியைப் பொருத்தி விட்டார்கள். ‘இலங்கையில் போர் உச்சகட்டம்; வைகோ என்ன சொல்லுகிறார் என்பதை, இப்போது நீங்கள் பார்க்கலாம் என்கிறான்.
அதற்கு முன்பாக,‘ஈராக்கிலே சதாம் உசேன் எப்படிப்பிடிபட்டாரோ,அந்த நிலை மைக்கு ஆளாகி இருக்கிறார் பிரபாகரன் என்று கொச்சைப்படுத்திப்பேசுகிறான்.
நம்மால் தாங்க முடியாத அளவுக்கு வருணிக்கிறான்.அவர் இருந்த அறையில் இருந்து மதுப்பாட்டில்கள் எடுத்ததாகச் செய்தி போட்டான். அவர் காபி, டீ கூட
குடிக்க மாட்டாரே?புலிகள் புகை பிடிக்க மாட்டார்களே? அவரைக் கொச்சைப்ப டுத்திச் செய்தி போட்டான்.
என்னால் தாங்க முடியவில்லை. வெடித்துச் சிதறினேன்.அந்த வார்த்தைகளை எல்லாம் இப்போது சொல்ல முடியாது. டெல்லித் தொலைக்காட்சிக்காரனை
யெல்லாம் கிழித்து விட்டேன். அங்கே குண்டுகளை வீசி, இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்துக் கொண்டு இருக்கின்றான். டெல்லிக்காரன் கும் மாளம் போடுகிறான் என்று சொல்லி, காதில் பொருத்தி இருந்த கருவியைக் கழற்றி வீசினேன்.
அவனைத் தொலைபேசியில் அழைத்து, ‘உனக்கு என்ன திமிர் இருந்தால், என் னை உட்கார வைத்துக்கொண்டு இப்படிப் பேசுவாய்? என்று கேட்டேன். எல் லோரும் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். என்னைச் சந்திக்க வந்து இருந்த அந்தத் தொலைக்காட்சிக்காரர்களிடம், ‘நீங்கள் வேலையாட்கள்; உங்களை நான் குறை சொல்லவில்லை; உங்கள் கருவிகளைப் பத்திரமாக எடுத்துக் கொண்டு போங்கள்’ என்றேன்.
எங்கே இருக்கிறது பத்திரிகைச் சுதந்திரம்?
லசந்த விக்கிரமதுங்கேயைக் கொன்றார்களே எதற்காக?அவன் உண்மையைச் சொன்னதற்காக, தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்ததற்காக.
என்னை இவர்கள் கொன்று விடுவார்கள் என்று முன்பே எச்சரித்து எழுதினா னே?
ஜெர்மனியில் நடைபெற்ற ஒரு நிகழ்வை இங்கே எடுத்துக் காட்டினார்களே?
அவர்கள் கம்யூனிஸ்டுகளைக் கொல்ல வந்தார்கள். நான் கம்யூனிஸ்ட் அல்ல. அமைதியாக இருந்தேன். அவர்கள் யூதர்களைக் கொன்றார்கள்; நான் யூதர் அல்ல.அமைதியாக இருந்தேன். கடைசியில் என்னைக் கொல்ல வந்தார்கள். அப்போது எனக்காகக் குரல் எழுப்ப யாரும் இல்லை என்று, இதை லசந்த விக் கிரமதுங்க சுட்டிக் காட்டி இருக்கின்றார்.
அவர் கொல்லப்பட்டதற்குப் பிறகு, பிரடெரிகா என்ற சகோதரி அந்த சண்டே லீடர் பத்திரிகைக்கு ஆசிரியர் ஆனார். கோத்தபய இராஜபக்சே மனைவி நாய்
வளர்ப்பதில் ஆசை உள்ளவள். சுவிட்சர்லாந்து நாட்டின் ஜூரிச் நகரில் இருந்து ஒரு நாயை விமானத்தில் கொழும்புக்குக் கொண்டு வந்து இருக்கின்றார்கள்.
அதற்காகச் சில பயணிகளை விமானத்தில் இருந்து கீழே இறக்கி விட்டார்கள். அதைப்பற்றி சண்டே லீடரில் எழுதி விட்டார்கள். இதற்காக, 2009 அக்டோபரில் உன்னைத் துண்டுதுண்டாக வெட்டிக் கொல்வோம் என்று அவருக்கு மிரட்டல் வருகிறது. இரத்தக் கறையோடு கடிதம் வருகிறது. மிரட்டல்கள், அச்சுறுத் தல் கள் தொடருகின்றன. இதையெல்லாம் மீறி அந்தச் சகோதரி எழுதுகிறார்.
என்ன செய்தான் தெரியுமா கோத்தபயா?
அந்தப் பத்திரிகையின் 72 விழுக்காடு பங்குகளை விலைக்கு வாங்கி விட்டான். பத்திரிகை அவன் கைக்குப் போய்விட்டது. அந்தச் சகோதரியை ஆசிரியர் பொறுப்பில் இருந்து நீக்கி விட்டான். அவருடைய கட்டுரையை, புகழேந்தி தங்கராஜ் இந்த நூலில் பதிவு செய்து இருக்கின்றார். ஆஸ்திரேலியாவில் அபயம் கேட்டார். கொடுக்கவில்லை. தனது இரண்டு குழந்தைகளை அழைத் துக் கொண்டு அமெரிக்காவுக்குச் சென்று விட்டார். எங்கே பத்திரிகை தர்மம் இருக்கிறது?
தொடரும் ......
No comments:
Post a Comment