Monday, October 28, 2013

ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் வைகோவின் மேல் முறையீடு !

ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் #வைகோ வின் மேல் முறையீடு !

தூத்துக்குடியில் உள்ள நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று, கடந்த 17 ஆண்டுகளாக,மறுமலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழகப் பொதுசசெலயாளர் வைகோ மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத் திலும் பேராடி வருகிறார். 

வைகோ தொடுத்த ரிட் மனு மீது, 2010 செப்டெம்பர் 28 இல் சென்னை உயர்நீதி மன்றம், ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தீர்ப்பு வழங்கியது. அதனை எதிர்த்து , ஸ்டெர்லைட் நிர்வாகம், உச்சநீதிமன்றத்தில் இடைக்காலத் தடை ஆணை பெற்று, ஆலையை இயக்கியது. 

அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற 33 அமர்வுகளிலும், வைகோ கலந்து கொண்டு வாதங்களை எடுத்து வைத்தார். ஆனால் உச்நீதிமன்றம், இந்த ஆண்டு ஏப்ரல் 2 ஆம் நாள், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை ரத்துச் செய்து, ஆலையை இயக்கத் தீர்ப்பு அளித்தது. 
அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வைகோ தாக்கல் செய்த மறு ஆய்வு மனு, நிலுவையில் உள்ளது. 

இதற்கு இடையில் மார்ச் 31 அம் தேதி, ஸ்டெர்லைட் ஆலையை மூடிட தமிழ் நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆணை பிறப்பித்தது. அதனை எதிர்த்து, ஸ்டெர்லைட் நிர்வாகம், சென்னையில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தின் தென் மண்டல அமர்வில் மேல் முறையீடு செய்தது. அந்தத் தீர்ப்பு ஆயத் தில் வைகோவும், மனு தாக்கல் செய்து, வாதங்களை முன்வைத்தார். ஆனால், தகுந்த காரணங்கள் இன்றியே, ஸ்டெர்லைட் வழக்கை, டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தலைமை அமர்வு, மாற்றுதல் பெறச் செய்து, வழக்கை விசாரித்தது. 

டெல்லித் தீர்ப்பு ஆயத்திலும் வைகோ தொடர்ந்து பங்கேற்று, ஸ்டெர்லைட் டுக்கு எதிரான வாதங்களை எழுப்பினார். பசுமைத் தீர்ப்பு ஆயம், ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு, ஆகஸ்ட் 8 ஆம் தேதியன்று, ஆணை பிறப்பித்தது. அந்த ஆணையை எதிர்த்து, டெல்லி உச்சநீதிமன்றத்தில் வைகோ இரண்டு மேல் முறையீடுகளைத் தாக்கல் செய்தார். 

இன்று, 28.10.2013, உச்சநீதிமன்றத்தில் வைகோ, தன்னுடைய மேல் முறையீடு களை ஏற்றுக்கொண்டு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்து இருக்கின்ற மேல் முறையீடுகளோடு சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று, உச்சநீதிமன்ற நீதிபதிகள், நீதியரசர் ஏ.கே. பட்நாயக், நீதியரசர் சுரேந்திரசிங் நிஜார், நீதியரசர் முகமது இப்றாகிம் கலிஃபுல்லா ஆகிய மூவர் அமர்வில் கோரிக்கை வைத்தார். அந்தக் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண் டது. ஸ்டெர்லைட் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும். 

இன்றைய விசாரணையில், கழகத்தின் சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் தேவதாஸ், துணைச்செயலாளர் ஆசைத்தம்பி, தலைமைக் கழக வழக்கறிஞர் ஆனந்தசெல்வம், உடன் இருந்தனர்.

‘தாயகம்’                                                         தலைமை நிலையம்
சென்னை - 8                                                   மறுமலர்ச்சி தி.மு.க.,

No comments:

Post a Comment