Wednesday, October 2, 2013

பன்னாட்டு இளைஞர் மாநாடுயில் வைகோ உரை

காமன்வெல்த் அமைப்பின் அடிப்படைக் கொள்கையைக் கைவிட்டால், அந்த அமைப்பே குழிதோண்டிப் புதைக்கப்படும்! 
கொழும்பில் மாநாட்டை நடத் தாதே! 

சென்னைக் கருத்தரங்கில் #வைகோ

தமிழ் ஈழத்துக்கான மாணவர்கள் போராட்டக்குழுவும், சேவ் தமிழ் இயக்கமும் இணைந்து,07.09.2013 அன்று சென்னையில் நடத்திய கருத்தரங்கில்,மதிமுக
பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து....

நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில்,ஒரு பேரழிவு ஏற்பட்டு பெருங் கவலை சூழ்ந்து இருந்த நேரத்தில், இளைஞர் உலகம், இனி நாங்கள் கிளர்ச்சிக் கொடி ஏந்துகிறோம்;ஈழத்தமிழர் படுகொலைக்கு நீதி கேட்கிறோம்;கொடியவன் ராஜபக்சேயைக் குற்றக் கூண்டில் நிறுத்துவதற்கு, அகிலத்தின் மனசாட்சியின்
கதவுகளைத் தட்டுவதற்கு, தமிழகத்து வீதிகளில் திரளுகிறோம் என்று போராட் டக் களம் அமைத்த மாணவச் செல்வங்கள்.

தமிழ் ஈழத்துக்கான மாணவர்கள் போராட்டக் குழுவும், சேவ் தமிழ் இயக்கமும் இணைந்து, இன்று காலை தொடங்கி நடத்துகின்ற, காலத்துக்குத் தேவையான விழிப்புணர்வுக்கருத்தரங்கத்தின் அரசியல் அமர்வில், உங்களைச் சந்திக்கின்ற வாய்ப்பைப் பெற்று நிற்கின்றேன்.

தமிழ் ஈழ விடுதலை இலட்சியத்தை நெஞ்சில் ஏந்தி தன்னலம் இன்றி, நெடுங் காலமாகப் போராடி வருகின்ற அமைப்புகளைச்சேர்ந்தவர்களும் இங்கே வந்து இருக்கின்றார்கள்.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள்,ஏன் கடல் கடந்த நாடு களில் இருந்தும் வந்து,இந்தப் பன்னாட்டு இளைஞர் கருத்து அரங்கத்தில் பங்கு ஏற்று இருக்கின்றார்கள்..


புதைகுழிகள் திறந்து கொண்டன
கல்லறைகளின் வாயில்கள் திறந்து கொண்டன
மறைந்த மாவீரர்கள் மீண்டும் வருகிறார்கள்
கையில் வாள் ஏந்தி வருகிறார்கள்
எரிதழல் ஏந்தி வருகிறார்கள்
வாலிபனே நீயும் வா
அவர்களோடு நீயும் இணைந்து கொள்
இந்த இலட்சிய அணிவகுப்பிலே
உன்னை இணைத்துக் கொள்ள வா
அந்நியனே வெளியேறு,
தமிழ் ஈழத் தாயகத்தை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கின்ற கொடியவனே
வெளியேறு

என்று தரணி எங்கும் வாலிபர்கள் போர்க்கொடி உயர்த்துவதற்குக் கட்டியம்
கூறுகின்ற விதத்தில், இந்த நிகழ்வு நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.

நாங்கள் நீண்ட காலமாகப் போராடி வருகிறோம். இனி நீங்கள் முன்னின்று
நடத்துங்கள்; நாங்கள் பார்வையாளர்களாக இருக்கின்றோம் என்று செய்தியா ளர்களைச் சந்தித்தபோது சொன்னேன். (கைதட்டல்).

விடைபெற்று வருகையில், ஒரு ஆங்கில ஏட்டின் செய்தியாளரான தங்கை  என்னிடம் கேட்டார்: இந்த இளைஞர் மாநாட்டில் பங்கு ஏற்று இருக்கின்றீர்கள்;
இந்திய அரசுக்கு என்ன சொல்லப் போகின்றீர்கள்? என்று.

சோனியா காந்தி இயக்குகின்ற,மன்மோகன் சிங் தலைமை தாங்குகின்ற ஐக் கிய முற்போக்குக் கூட்டணி அரசு, தமிழ் இனத்துக்கும், ஈழத் தமிழர் களுக்கும், மன்னிக்க முடியாததுரோகத்தைச் செய்து இருக்கின்றது.இந்த அக்கிரமங் களை அடியோடு தகர்ப்பதற்கு, இளைஞர்களால்தான் முடியும். அவர்கள் முன் னெடுத்துச் செல்வார்கள் என்று நான் குறிப்பிட்டேன்.

தோழர்களே, துயரங்கள் நிறைந்த ஒரு நெடிய வரலாற்றின் பக்கங்களை இங் கே நினைவுபடுத்துவதற்கு நேரம் இல்லை.ஆனால், 2009 ஆம் ஆண்டு, அகிலத் தின் மனசாட்சி நடுங்கத்தக்க விதத்தில் ஒரு பெரும் படுகொலை நிகழ்ந்தது. பச்சிளம் குழந்தைகள்,தாய்மார்கள், வயது முதிர்ந்தவர்கள் என இலட்சத்துக் கும் மேற்பட்டோரை, ஈவு இரக்கம் இன்றித் துடிக்கக் துடிக்கக் கொன்று குவித் தார்கள். அதே ஆண்டு மே திங்களில், ஜெனீவாவில் கூடிய மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தில், கொலைகார ராஜபக்சே அரசுக்குப் பாராட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். இது, ஐ.நா.வரலாற்றில் இதுவரை நடக் காத அக்கிரமம். கொலைகாரனுக்குப் பாராட்டுத் தீர்மானம். அதை நிறைவேற் ற, இந்திய அரசு கச்சை கட்டிக்கொண்டு வேலை பார்த்தது,கியூபாவுடனும், சீனாவோடும் சேர்ந்து அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியது.

அப்போது நெஞ்சம் கொதித்த நாங்கள், வீதிவீதியாகப் போய் அடிவயிற்றில்
இருந்து எங்கள் வேதனையைக் கொட்டித் தீர்த்தோம். கடந்த ஆண்டு, இந்திய அரசின் பிரதிநிதி ஐ.நா.மன்றத்தில் சொன்னார்: இன்னொரு நாட்டின் உள் விவ காரத்தில் எவரும் தலையிடக் கூடாது என்றார். அதற்கும் கண்டனக் குரல் எழுப்பினோம். இதற்கு மன்னிப்பே கிடையாது என்று பிரதமருக்குக் கடிதம் எழுதினேன்.அந்தத் துரோகம், இந்த ஆண்டும் தொடர்ந்து இருக்கும். ஆனால்,
பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றிய அதே இடத்தில், நீர்த்துப் போனது என்றா லும், எதிர்காலத்தில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையைத் தருகின்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு, தமிழகத்து வீதிகளில் திரண்ட மாணவர் கள், இளைஞர் பட்டாளம்தான் வழிவகுத்தது.

கொலைகாரன் தலைமையில் காமன்வெல்த் மாநாடு

ஆனால், அருமைத் தம்பிகளே,அவையெல்லாம் பாழாகி விடுமோ?என்று நான் கவலைப்படுகிறேன்.காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களுடைய மாநாடு, இலங்கையில் நடக்கப் போகிறது. அது நடந்தால்,அடுத்த இரண்டு ஆண்டு களுக்கு அந்த அமைப்புக்கே, ராஜபக்சே தலைவன் ஆகி விடுவான். கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது; இப்போது அந்த நாட்டின் பிரதமர்
தலைவர்; அடுத்து மொரீசியசில் நடக்கப் போகிறது. இப்படி ஒரு திட்டத்தை
வகுத்ததே இந்திய அரசுதான்.

இங்கே பேராசிரியர் ஜவாஹிருல்லா குறிப்பிட்டதைப் போல,1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காமன்வெல்த் அமைப்பின் அடிப்படைக் கொள்கை என்ன நெறிகள் என்ன? ஜனநாயகம்,மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி.இவற்றுக்கு எங்கே கேடு நேர்ந்தாலும்,அந்த அமைப்புக்கு உட்பட்டு இருக்கின்ற நாடு, தற் காலிகமாக நீக்கி வைக்கப்படும். அப்படி நீக்கி வைக்கப் பட்ட நாடுகளைப் பற்றி அவர் இங்கே சொன்னார்.

மனித உரிமைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று அந்த அமைப்பு சொல்லு கிறது. ஒரு பழங்குடி இனத்தின் மதிப்பிற்குரிய தலைவன் தூக்கில் இடப்பட்ட தற்காக, ஒரு உயிர் போனதற்காக, 1995 நவம்பர் 11 ஆம் நாள் முதல் 99 வரை யிலும், நான்கு ஆண்டுகளுக்கு நைஜீரியா காமன்வெல்த் அமைப்பில் இருந்து
தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டது.

அதே 1999 அக்டோபர் 18 முதல்,பாகிஸ்தான் நீக்கி வைக்கப்பட்டது.இராணுவத் தளபதியாக பர்வேஸ் முஷாரப் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டதால், பாகிஸ்தானில் ஜனநாயகத்துக்கு ஆபத்து என்று சொல்லி 2004 மே 24 வரை நீக் கி வைத்தார்கள். இதே காரணத்துக்காகத் தான், இப்போது ஃபிஜி தீவுகள் நீக்கி வைக்கப்பட்டு இருக்கின்றது. இன ஒதுக்கல் கொள்கையைக் கடைப்பிடித்த
தென் ஆப்பிரிக்கா அரசு, காமன்வெல்த் அமைப்பில் சேர விடுத்த விண்ணப்பத் தை, காமன்வெல்த் நிராகரித்தது.

தம்பிகளே, அங்கே உங்களைப் போல உருவானவன்தான், ஒரு பள்ளி மாண வன் தான் ஹெக்டர் பீட்டர்சன்.இராணுவ அடக்குமுறையை எதிர்த்து வீதி களில் அணிவகுத்து வந்தபோது,மார்பிலே குண்டு தாங்கி மடிந்தான்.அதனால், வலுப்பெற்றது, கருப்பர்களின் விடுதலைப் போராட்டம்.

ஈழத்தமிழர்கள் படுகொலையில் இந்திய அரசு ஒரு கூட்டுக்குற்றவாளி. இவர் கள் தான் அந்தஆயுதங்களை அள்ளிக் கொடுத்தார்கள். அனைத்து உதவிகளை யும் செய்தார்கள். திட்டமிட்டு யுத்தத்தை இயக்கினார்கள்.

அந்தக்கொலைகாரனைக் குற்றக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக் கை உலக நாடுகளில் வலுப் பெறுகிறதே என்பதற்காக, தமிழகத்து இளைஞர் கள் போராடுகிறார்களே, அதை மறைப்பதற்காகத்தான், இவர்கள் திட்டமிட்டு, கொழும்பிலே இந்த மாநாடு நடத்துவதற்கு ஏற்பாடு செய்து இருக்கின்றார்கள். காமன்வெல்த் அமைப்பின் பொதுச்செயலாளர் கமலேஷ் சர்மா, ஒரு இந்திய அரசு அதிகாரி. 2000 ஆம் ஆண்டில், ஐ.நா.பொதுச்சபையில் உரை ஆற்றச் சென் றபோது, நான் பலமுறை சந்தித்து இருக்கின்றேன். ஐ.நா. பொதுச்சபையில்,
காமன்வெல்த் அமைப்புக்கு பார்வையாளர் என்ற தகுதி இருக்கின்றது. இந்த
கமலேஷ் சர்மாதான் அங்கே உட்காருவான்.

நீதி வேண்டும் என்று நாம் துடிக்கின்ற போது, ஈழத்தமிழர்கள் படுகொலை குறித்து அசைக்க முடியாத ஆவணங்களும், சாட்சியங்களும் இருக்கின்ற போது, உலகம் விழித்துக் கொண்டால் நிலைமை விபரீதமாகி விடும் என்று கருதித்தான், மன்மோகன் சிங் அரசு திட்டமிட்டு, கொழும்பில் இந்த மாநாட் டைக் கூட்டுகிறது. நவம்பர் 17, 18 தேதிகளில் மாநாடு நடக்கப் போகிறது.

இந்தக் கொடுமையை எதிர்த்துத்தான்,ஜெனீவாவில் செந்தில்குமார் தீக்குளித் து மடிந்து இருக்கின்றான். தமிழ் ஈழத்திலே பிறந்தவன். அதே ஜெனீவாவில் 2009 ஆம் ஆண்டு தீக்குளித்து மடிந்த முருகதாசன், தனது மரண சாசனத்தில்
எழுதினான். உலகத்தின் மனசாட்சி செத்துப் போய்விட்டது என்று. ஈழத்தமிழர் கள் மனிதர்கள் இல்லையா? எங்களுக்கு நீதி கிடைக்காதா? என்று கேட்டான். அந்த நீதி இன்னமும் கிடைக்கவில்லையே? உலகத்தின் மனசாட்சி இன்னமும் விழிக்க வில்லையே?

இளைஞர்களே, மாணவர்களே, என்னை உயிராயுதமாக ஏந்திச் செல்லுங்கள்
என்றான் முத்துக்குமார். இப்போது நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்:
நீங்கள் முன்னெடுத்துச் செல்லுங்கள்.போராட்டம் முடிந்து விட்டது என்கி றான் ராஜபக்சே. முடியாதடா, புதிய இளைஞர்கள் வருவார்கள். தொடர்ந்து
போராடுவார்கள்.

இந்தக் கட்டத்தில், சரியான கோரிக்கைகளை முன்வைத்து, இந்த மாநாட்டைத்
தம்பிகள் நடத்துகிறார்கள். காமன்வெல்த் அமைப்பில் இருந்து கொலைகார
இலங்கை அரசை நீக்க வேண்டும்.

அடிப்படைக் கொள்கையை நீயே குழிதோண்டிப் புதைத்து விட்டால், அதற்குப் பிறகு, காமன்வெல்த் அமைப்பு எதற்காக? காமன்வெல்த் அமைப்பே குழி தோண்டிப் புதைக்கப்பட்டு விடும். (கைதட்டல்).

கனடா நாட்டின் தலைமை அமைச்சர் ஸ்டீபன் ஹார்ப்பர், மனித உரிமைகளை
அழித்த இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடக்கக்கூடாது; பங்கு ஏற்கமாட் டேன் என்று அறிவித்து இருக்கின்றார். எலிசபெத் மகாராணியார் தான், அந்த அமைப்பு அலங்காரத் தலைவர். அவரும் போக மாட்டார் என்று செய்தி வரு கிறது. இங்கிலாந்து வெளி விவகாரங்களைக் கவனிக்கின்ற குழு, பிரதமர் டேவிட் கேமரூன் கலந்து கொள்ளக்கூடாது என்று கோரிக்கை விடுத்து இருக் கின்றது. இலங்கை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஷிவானி பண்டார நாயக நீக்கப் பட்டதால், இலங்கையில் நீதி குழி தோண்டிப் புதைக்கப்பட்டு விட்டது;எனவே, அந்த மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று, காமன் வெல்த அமைப்பில் உள்ள 25 நாடுகளின் உச்சநீதிமன்றங்களின் முன்னாள்
தலைமை நீதிபதிகள், அனைத்து நாடுகளுக்கும் கோரிக்கை விடுத்து இருக்கின் றார்கள்.

நீதி கிடைக்குமா? என்பதைப் பார்ப்போம். நீதி மறுக்கப்பட்டால், காமன்வெல்த் தில் நீதி இல்லை என்றால்,தமிழகத்து இளைஞர்கள் ஆர்த்து எழுவார்கள். எண் ணிக்கை சிறிதாக இருக்கலாம். நெஞ்சிலே உறுதி இருந்தால் அவர்களை எவ ராலும் வெற்றி கொள்ள முடியாது. இனி நீங்கள்தான் மறுக்கப்பட்ட நீதியைப் பெற்றுத் தர முடியும். இலட்சக்கணக்கான மாணவர்கள் கிளர்ந்து எழுந்தார்கள்
என்ற நிலைமையை உருவாக்க வேண்டும்.

1995 ஆம் ஆண்டில், காவிரி ஆற்றங் கரையில், திருச்சியில் நடைபெற்ற எங் கள் மாநில மாநாட்டில், சுதந்திரத் தமிழ் ஈழம் ஒன்றுதான் என்று அறிவித்த
நாள் முதல், எந்தக் கட்டத்திலும் நாங்கள் சமரசம் செய்து கொண்டது இல்லை.
அதே உறுதியோடு இருக்கின்றோம்.பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ் ஸல்ஸ் நகரில், நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற மாநாட்டில், அதைத் தான் கோரிக்கையாக முன் வைத்தோம்.

தமிழ் ஈழம் அமைவதற்கான பொது வாக்கெடுப்பு நடத்துவதற்காக, நமது பணி களை முன்னெடுத்துச் செல்வோம்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment