பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியில் பேராசிரியர்கள் தற்காலிக சஸ் பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து 3வது நாளாக பேராசிரியர்கள், மாணவர் கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு #மதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
ஜான்ஸ் கல்லூரியில் பேராசிரியர்கள், மாணவர்களின் ஓய்வு அறைகளை திறக்க வேண்டும். மாணவர் பேரவைக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே வரலாற்றுத் துறை தலை வர் பீட்டர் பேரின்பராஜ், ஆங்கிலத் துறை பேராசிரியர் ஹெய்ஸ் தாசன் ஆகி யோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்து மாணவர்கள், பேராசிரியர்கள் நேற்று முன் தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே தேர்வு நெருங்கி வரும் நிலையில் இளங்கலை வகுப்புகளை திறக்க வேண்டும். பேராசிரியர்களின் தற் காலிக பணியிடை நீக்கம் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி 3 வது நாளாக நேற்று கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு மதிமுக ஆத ரவு தெரிவித்துள்ளது.நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பெருமாள்,மாநில மாவட்ட மாணவரணி செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் மாணவர்களை சந் தித்து உள்ளிருப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அவர்களுடன் போராட்டத்தில் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment