கட்டாய கல்வி உரிமை சட்ட இடஒதுக்கீட்டு முறைப்படி, தனியார் பள்ளி களில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு முதல் கட்ட கட்டணத் தொகை குறித்த விவகாரத்தில், கல்வித்துறை அதிகாரிகள் மவுனம் காத்து வருகின்றனர். இத னால், எதிர்காலத்தில் இத்திட்டத்தின் செயல்பாடு கேள்விக்குறியாகியுள்ளது.
கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்படி (ஆர்.டி.இ.,), ஒவ்வொரு தனியார், மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும் மாற்றுத்திறனாளிகள், எய்ட்ஸ் பாதிப்பு உள்ள குழந்தைகள் மற்றும் ஆண்டு வருமானம் இரண்டு லட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ள குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு,தொடக்க நிலை வகுப் புகளில் மொத்த மாணவர்கள் எண்ணிக்கையில் 25 சதவீத இடத்தை ஒதுக்க வேண்டும்.
கோவை மாவட்டத்தில் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தில், நடப்பு கல்வி யாண்டில் 4135 இடங்களுக்கு 2163 மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப் பட்டுள்ளனர். அரசு விதிமுறைப்படி, 50 சதவீத இடங்களில் மாணவர்கள் சேர்க் கப்பட்டுள்ளதாக கல்வி அதிகாரிகளால் கூறப்படுகிறது.
இச்சட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு மத்திய அரசும் மாநில அரசும் முதல் தவணைக்கான பணத் தை செப்டம்பரில் தரவேண்டும். ஆனால், அதற்கான எவ்வித நடவடிக்கை களும் எடுக்கவில்லை என்று தனியார் பள்ளி நிர்வாகங்கள் அதிருப்தி தெரி வித்துள்ளன.
மதிமுக மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் கூறுகையில், "கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு மத்திய அரசும், மாநில அரசும் இரண்டு கட்டமாக செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதற்கான கட்டணத் தொகையை செலுத்தவேண்டும்.
"அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத பட்சத்தில், தனியார் பள்ளிகளில் மாணவர்களை நிறுத்தவோ, பணம் கேட்டு துன்புறுத்தவோ வாய்ப்பு கள் உள்ளன. மாநிலம் முழுவதும், பல்லாயிரக்கணக்கான மாணவர் கள் பாதிக்கப்படுவர்" என்றார்.
இதற்கான, கோரிக்கை மனு முதன்மை கல்வி அதிகாரியிடம் மதிமுக.,சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி, தனியார் பள்ளி களில் சேர்ந்த மாணவர்களுக்கு மத்திய அரசும், மாநில அரசும் இரண்டு கட்ட மாக செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதற்கான கட்டணத் தொகை யை செலுத்த வேண்டும்.
அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத பட்சத்தில், தனியார் பள்ளிகளில் மாணவர்களை நிறுத்தவோ, பணம் கேட்டு துன்புறுத்தவோ வாய்ப்புகள் உள்ளன.
No comments:
Post a Comment