Tuesday, October 8, 2013

மறுமலர்ச்சி பயணம் தூத்துக்குடி மாவட்டம் -2–வது கட்டம்-பகுதி 2

மக்களை சந்திக்கும் மறுமலர்ச்சி பயணத்தை #மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ மேற்கொண்டு வருகிறார். நேற்று (07.10.13 )மாலை கன்னியாகுமரி யில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடிமாவட்டம் விளாத்திகுளம் யூனியன் பகுதி யில் சுற்றுப்பயணம் செய்தார். குளத்தூரில் இருந்து வைகோ தனது சுற்றுப்பய ணத்தை தொடங்கினார். முன்னதாக அங்கு அவர் பேசியதாவது:- 

578 தமிழக மீனவர்களின் படுகொலைக்கு மத்தியஅரசு தான் காரணம். இலங் கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேசுவரன், சாத்தான் (இலங்கை அதிபர் ராஜபக்சே) கையால் பதவி ஏற்றுள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தொடர்ந்து 17 ஆண்டுகளாக போராடி வருகிறேன். 

தற்போதைய ஆட்சியாளர்களும் , கடந்த ஆட்சியாளர்களும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். கடைசியாக விஷவாயு வெளியே றியதால் மக்கள் போராட்டம் வெடித்தது. அதனால் மாசு கட்டுப்பாட்டு வாரி யம் ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதித்தது. 


ஸ்டெர்லைட் ஆலையின் நச்சு புகையால் தூத்துக்குடி மட்டுமல்ல. கொளத் தூர் வரை மக்கள் பாதிப்பு அடைகிறார்கள். முல்லை பெரியாறு பிரச்சினை, காவிரி பிரச்சினை, ஆந்திரா பாலாறு பிரச்சினை எதுவானாலும் சரி. அதில் தமி ழகம் தான் வஞ்சிக்கப்படுகிறது. 

இதற்கு மத்தியஅரசு தான் காரணம். மத்தியில் ஆளும் காங்கிரஸ் அடுத்த முறை ஆட்சிக்கு வரக்கூடாது. அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வால் மார்ட் போன்ற பெரிய அன்னிய நிறுவனங்கள் தமிழகத்தில் கால் பதிக்கத் தொடங்கி விடுவார்கள். 

இதனால் சிறு வணிகர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். எங்களி டம் காசு இல்லை. ஆனால் மனதில் மாசற்றவர்கள் நாங்கள். கட்சி பாகுபாடி ன்றி பொதுமக்களின் நலனுக்காக உழைக்க கூடிய இயக்கம் ம.தி.மு.க. 

இவ்வாறு வைகோ பேசினார். 

குளத்தூரை தொடர்ந்து வைப்பாறு, இ.வேலாயுதபுரம், சூரங்குடி, விளாத்தி குளம், சிங்கிலிப்பட்டி, படர்ந்தபுளி ஆகிய ஊர்களுக்கு வைகோ புறப்பட்டு சென்றார். இன்று புதூர் யூனியனில் சுற்றுப் பயணம் செய்கிறார்.

No comments:

Post a Comment