#வைகோ உரை ,பூலித்தேவன் பிறந்த நாள் விழா 18.10.2008
இந்தச் செய்தி அரண்மனைக்கு வருகிறது. அரசர் பூலித்தேவனின் காதுக்கு வருகிறது. கலகலவென்று சிரிக்கிறான், அப்பொழுது பக்கத்தில் நிற்கிறான் ஒண்டிவீரன். அரசனே, நான் போய் முடித்து வருகிறேன். இந்தச் சபதத்தை நிறைவேற்றி வருகிறேன் என்று இவன் கும்பினியாரிடம் போகிறான். தந்திர மாகப் போகிறான். நயமாகப் பேசுகிறான். அங்கு சிலவேலைகளைச் செய்கி றான். அந்த முகாமில் சேர்த்துக் கொள்கிறார்கள். தக்க நேரம் பார்த்தான். பட் டத்து குதிரை கட்டப்பட்டு இருக்கிற இடத்தில் இருந்து அந்தக் கயிற்றை அவிழ்த்தான். குதிரையைக்கொண்டு அமாவாசை இருட்டில் இரவோடு இர வாக கொண்டுவந்துவிடலாம் நெற்கட்டுஞ்செவலுக்கு என்று கொண்டுவரு கிற போது குதிரை மிரண்டுவிட்டது.
குதிரை மிரண்ட சத்தத்தைக்கேட்டு கும்பினிப் படையினர் ஓடிவந்துவிட்டார் கள். ஓடி வந்தவுடன் இவன் என்ன செய்தான் தெரியுமா? குதிரையை விட்டு விட்டு அங்கே இருக்கக்கூடிய புல்லை எடுத்து மேலேபோட்டு அந்தப் புல்லுக் குள் படுத்துக் கொண்டான். தேடிவந்த காவலர்கள் என்ன குதிரை கட்டுத் தறி யைவிட்டு ஓடிவந்து இருக்கிறதே என்று குதிரையின் கயிற்றைபிடித்து சரி இதைக் கொண்டுபோய் லாயத்தில் கட்டவேண்டாம். இங்கேயே கட்டிவிடு வோம் என்று அங்கே முளையை அடிக்கிறார்கள். முளை உள்ளே இறங்கு கிறது. முளை அடிக்கிற இடத்தில் படுத்துக்கிடக்கின்றான் ஒண்டிவீரன்.
அவன் கையில்தான் முளையை அடிக்கிறார்கள். அவன் உள்ளங்கையைத் துளைத்துக் கொண்டு அந்த முளை இறங்குகிறது. அந்தக்கூரிய முளை உள்ளே நுழைகிறது கூச்சல் போடவில்லை. அலறவில்லை. சத்தம் போடவில்லை. இவையெல்லாம் நினைத்துப் பார்க்கக்கூடிய காட்சியா? அவன் கையைத் துளைத்துப் போகிறது. அவன் முனகவில்லை. அங்கே இருக்கின்றவர்களுக்கு அவன் உள்ளே இருப்பது தெரியவில்லை. போய்விட்டார்கள். அதன்பிறகு, ஒண்டிவீரன் எழுந்து துளைக்கப்பட்ட கையோடு இன்னொரு கையால் முளை யைத் தூக்கிவிட்டு எறிந்துவிட்டு கயிற்றை எடுத்து குதிரையையும் அழைத் துக்கொண்டு அரண்மனைக்கு வந்துவிட்டான் ஒண்டிவீரன்.
இந்தக் கை சிதறியிருப்பதைக் கண்டு பதறியவராக மன்னர் பூலித்தேவன் என் ன நேர்ந்தது என்று கேட்கிறபோது, என் கரம் போனால் என்ன, மன்னா உங்கள் மனதில் எளியவனுக்கு ஒரு இடம் இருக்கிறதே! அது ஆயிரம்கோடி தங்கத் தை விட உயர்ந்தது அல்லவா என்றான். பெயருக்குப் பொருத்தமாக ஒண்டி வீரன் ஒண்டியாக சென்று சாதித்துவிட்டு வந்திருக்கிறான். அவன் அருந்ததி யர் குலத்தில் பிறந்தவன்.
இப்படி அனைவரையும் அரவணைத்து யுத்தகளத்தில் நின்று சாகசங்கள் புரிந்த வர்தான் பூலித்தேவர்.
ஆறு ஆண்டுகள் கழிந்தன. 1767 ஆம் ஆண்டு மீண்டும் போர் - கடைசிப் போர். டொனல்டு காம்பெல் பெரும் பீரங்கிகளோடு வந்தான். அப்பொழுது அவன் சொல்கிறான். அந்தச் சண்டையில்தான் அனந்த நாராயணன் துரோகத்தால் பூலித்தேவர் தோற்றதாக சரித்திரம் சொல்கிறது. காம்பெல் எழுதுகிறான். நினைத்தேப் பார்க்கமுடியாது. பீரங்கிகளின் குண்டுகள் விழுந்து கொண்டே இருந்தன. கோட்டைத் தகரவில்லை. கோட்டையின் சுவர்களில் ஓட்டைகள் விழுந்தன.
ஆனால், அந்த மறவர்கள் அந்த ஓட்டைகளை அடைப்பதற்கு அவர்கள் பனை
ஓலைகளையும், ஈரமண்ணையும் கொண்டுவந்து அந்த ஓட்டைகளை அடைத் தார்கள் என்று எழுதுகிறான். இந்த வீரத்தை எங்கும் பார்த்தது இல்லை. மறவர் கள் சிலரின் உடலைப் பீரங்கிகுண்டுகள் துண்டு துண்டாகவும் சின்னாபின்ன மாகவும் சிதறவைத்தன. குண்டுகள் விழுந்து கொண்டே இருந்தன. பக்கத்தில் நிற்பவன் செத்து விழுகிறான். அதைப்பற்றிக் கவலைப்படாமல் அந்த இடத் தின் சிதிலமான பகுதிகளை செப்பனிடுவதில் பனை ஓலைகளையும், ஈரமண் ணையும் கொண்டுவந்து அந்த ஓட்டைகளை அடைப்பதிலே உறுதியாக இருக் கக்கூடிய வீரர்களை இந்த உலகத்தில் எங்கே பார்க்க முடியும். வாசுதேவநல் லூரில் தான் பார்க்க முடிந்தது என்று எழுதுகிறான்.
இந்தத் திருநெல்வேலி சரித்திரத்தை மிக முறையாக எழுதியவர் திராவிட மொழிகளில் ஒப்பிலக்கணம் எழுதிய இன்றைக்கு இடையன்குடியில் அடக்கம் செய்யப்பட்டு கல்லறையில் துயிலும் கால்டு வெல். திருநெல்வேலி சரித்திரம் எழுதி இருக்கிறார். அதில் பூலித்தேவனைப் பற்றிச் சொல்கிறார். “இந்த மேற் கத்திய பாளையக்காரர்கள் மத்தியில் உயர்ந்த இடத்துக்கு வந்தவர்தான் பூலித் தேவன். அவர் படைபலம் குறைவாக இருந்தாலும் பண்பால், வீரத்தால், திற மையால் அவருடைய ஆளுமைக்கு உட்பட்ட இடத்தைவிட செல்வாக்கும் புகழும் பெற்றார்” என்று எழுதுகிறார்.
தொடரும் ...
No comments:
Post a Comment