கோவையில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி மைதானங்களில் வணிக வளா கங்கள் கட்டவும், வேறு பிற தனியார் பயன்பாட்டுக்காகவும் பயன் படுத்தப்படு வதற்கும், #மதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை எவ்வாறு அதிகரிப்பது எவ்வாறு என்பதை சிந்திப்பதை விடுத்து, பள்ளிகளையும், பள்ளி மைதானங்களும் கல்விசாரா நிகழ்ச்சிகளுக்கும், வணிக வளாகங்கள் கட்டுவதற்கும் பயன்படுத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கோவை, டாடாபாத் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானங்களில் வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன.மேலும் பல இடங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது.
அதிக மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட பள்ளிகளிலும், இது செயல் படுத்தப்பட உள்ளது.
இது குறித்து ம.தி.மு.க., மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் கூறுகை யில்,
""பள்ளிகளில் வணிக வளாகங்களை கட்டினால், எதிர்காலத்தில் பள்ளிகளை விரிவாக்கவேண்டிய தேவை இருக்கும்போது, இடம் இல்லாத அவலநிலை ஏற்படும். கடந்த 10 ஆண்டுகளில் கோவையில் மட்டும் 15க்கும் மேற்பட்ட பள்ளிகள் படிப்படியாக மூடப்பட்டுள்ளன.
பள்ளி மைதானங்களில் வியாபாரம் செய்வதை அனுமதிப்பது, ஏற்புடைய தல்ல. இதுசார்ந்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த, நவ., 6ம் தேதி வாகன விழிப்புணர்வு பிரசாரம் ம.தி.மு.க., சார்பில் நடக்க உள்ளது,'' என்றார்.
No comments:
Post a Comment