பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் 38 ஆவது வருடமாக #வைகோ மலர் அஞ்சலி
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 106ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 38ஆவது வருடமாக மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர் கள் தேவரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி னார். மாவட்டச் செயலாளர்கள் மதுரை மாநகர்-புதூர் மு.பூமிநாதன், சிவகங் கை-புலவர் செவந்தியப்பன், மதுரை புறநகர் கிழக்கு-வீர தமிழ்ச்செல்வன், மதுரை புறநகர்மேற்கு-முனியாண்டி, தேனி சந்திரன், திண்டுக்கல் என்.செல்வ ராகவன், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் எம்.டி.சின்னசெல்லம், கொள்கை விளக்க அணிச் செயலாளர் க.அழகுசுந்தரம், மாணவர் அணிச் செயலாளர் தி.மு.இராசேந்திரன், தொண்டர் அணிச் செயலாளர் ஆ.பாஸ்கர சேதுபதி, மாநில மருத்தவர் அணி துணைச் செயலாளர் டாக்டர் பி.சரவணன் ஆகியோரும் கழக முன்னணியினரும் தோழர்களும் உடன் உள்ளனர்.
பின்னர் செய்தியாளரிடம் பேசியபோது, இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழக அரசுக்கு எதிராக செயல்படுகிறது காங்கிரஸ் அரசு. சுதந்திரப் போராட்ட வீரரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் காங்கிரஸை கடைசி வரை எதிர்த்தார். அவர் இன்று இருந்திருந்தால் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட்டிருப்பார்.
இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தி போர்க்குற்றவாளி ராஜபட்ச வுக்கு அங்கீகாரம் அளிப்பது ஒன்றே மத்தியில் ஆளும் காங்கிரஸின் நோக்க மாக உள்ளது. எனவே, காங்கிரஸ் அரசை வீழ்த்துவதே முதல் நோக்கம் என்றார்.
No comments:
Post a Comment