Monday, October 21, 2013

பூலித்தேவன் விழா-வைகோ உரை-பகுதி 2

#வைகோ உரை ,பூலித்தேவன் பிறந்த நாள் விழா 18.10.2008

ஆனால், அந்த மன்னருக்கு விழா எடுக்க வேண்டும் என்று விரும்புவதற்குக் காரணம் நான் உலகத்தின் யுத்தகளங்களை ஆர்வத்தோடு படிப்பவன். உலகத் தின் மகாபெரிய வீரர்களின் போர்க்களக் காட்சிகளை நான் விருப்பத்தோடு படிப்பவன். சின்னவயதில் இருந்தே என் உணர்வு அதுதான். நான் சிறுவனாக பள்ளியில் படிக்கிறபோதும் நான் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் எழுதி ய வியாசர் விருந்தைப்படிப்பதற்கு முன்பு பெரிய எழுத்து மகாபாரதத்தை மழை வரவேண்டும் என்பதற்காக ஊர் மடத்திலே விராட பருவம் வாசிக்கின்றஅந்தக் காலத்தில் நான் சின்னஞ்சிறுவனாக மகாபாரதத்தைப் படிக்கிற போது என் மனம் கவர்ந்த காட்சி அந்த 13 ஆம் போர்சருக்கம். அபிமன்யு வதைக்காட்சி தான். அதைப்போல, கம்பனின் இராமாயணத்தில் என் உள்ளம் கவர்ந்த காட்சி நிகும்பலை வேள்வி சிதைக்கப்பட்டபோது களத்தில் போராடிய இந்திரஜித்தின் வீரக்காட்சிதான். இது என் உணர்வு.

அதே உணர்வோடு, உலகத்தில் எங்கெல்லாம் வீரபோர்க்களங்கள் நடைபெற் று இருக்கிறது என்று சரித்திர ஏடுகளைத் தேடிப்படிக்கின்ற வழக்கம் உண்டு. அப்படிப் படித்ததில் மனதைக் கவர்ந்த இடம் தான் தெர்மாப்பிளே போர்க்களம். 300 வீரர்கள் இலட்சம் வீரர்களைத் திகைக்கவைத்த அந்த வீரப்போர்க் களம்.

அந்தவகையில் இந்த மண் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த தமிழ்க்குடியின் வரிசையில்,

1715 ஆம் ஆண்டு பிறந்து 11 வயதிலேயே, அரியணைக்கு வரநேர்ந்த சின்னஞ் சிறு பிள்ளையாக வர நேர்ந்த மாவீரன்தான் காத்தப்ப பூலித்தேவன்.அவர் சித்தி ரபுத்திர தேவருக்கும் சிவஞான நாச்சியாருக் கும் பிள்ளையாக பிறந்து நடத்தி யிருக்கின்ற போர்க் களங்களைப் பார்த்தேன். அவருடைய வீரத்தை, படைக ளை வகுக்கக்கூடிய திறமையை எதிரிகளை சின்னாபின்னமாக்கக்கூடிய ஆற் றலை அவருடைய போர்முறையை, படித்தபோது நான் திகைத்துப்போனேன். அப்படிப்பட்ட பூலித்தேவர் வரலாற்றை இந்த மண்ணில் பதிவுசெய்ய வேண் டும் என்பதற்காக நான் இங்கே வந்திருக்கிறேன். இது ஏற்ற இடம்.

பக்கத்தில் நெற்கட்டான்செவல். இந்தப் பகுதி வளம் நிறைந்த பகுதி. 1767 இல்
கடைசியாக வெள்ளையர்களின் கொடுமையால் உடன் இருந்தவர்கள் துரோ கத்தால் மன்னர் பூலியின் படை வீழ்ந்ததற்குப்பிறகு இந்தப் பகுதியை அழிக்க வேண்டும் என்று நினைக்காத டொனல்டு காம்பல் ஆஹா, வளம் குவிந்து கிடக்கிறது வாசுதேவநல்லூர் பகுதி மரகதப் பச்சையைப்போல எங்கு கண்டா லும் கழனிகள் செழித்துக் கிடக்கின்றன. கரும்புத் தோட்டங்களும், செந்நெல் வயல்களும், வாழைத்தோப்பு களும் குவிந்து இருக்கின்ற வளம் நிறைந்த இந் தப்பகுதியை அழிக்க எனக்கு மனமில்லை என்று சொன்னானே. அந்தப் பகுதிக் கு ஏன் நெற்கட்டான்செவல் என்று பெயர் வந்தது என நான் பார்த்தேன்.

நெல்விளைகிற காரணத்தால், நெல்லை கட்டுகட்டாக கட்டிச்செல்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால், எனக்குக்கிடைத்த குறிப்பு இது. சிவந்த நிலம். வீரமறவர்கள் சிந்திய இரத்தத்தாலும் சிவந்த நிலம். இயற்கையிலேயே செம் மண் பூமி. அதில் நெல்கட்டான் என்கின்ற ஒரு செடி அதிகமாக இருந்தது என் றும் அந்த நெல்கட்டான் செடியை நினைவூட்டி நெல்கட்டும்செவல் என்று பெயர் வந்தது என்று சொல்லப் படித்து இருக்கிறேன்.

இந்த வாசுதேவநல்லூர் கோட்டைக்கு ஈடான கோட்டை எதுவும் இல்லை என் றும் பரங்கியர் சொன்னார்கள்.இது தென்னாட்டில் இருக்கின்ற மற்றக் கோட் டைகளைவிட, அபூர்வமான கோட்டை. பொறியியல் நுட்பத்தோடு கட்டப்பட்டு இருக்கின்ற கோட்டை. அந்தக் கோட்டையின் நீளம் 650 கெஜம். அகலம் 300 கெஜம். கோட்டையின் அடிமட்டத்தின் அகலம் 15 அடி. உச்சியின் அகலம் 5 அடி. கோட்டையின் மூலைகளில் கொத்தளங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்தக் கொத்தளங்களுக் குள்ளே நிலவறைகளைப்போல - வீரர்கள் உள்ளே இருந்து சண்டை செய்வதற்கு ஏற்ற அமைப்புகள் இருந்தன. வெளியே இருந்து பார்த்தால் வீரர்கள் இருப்பது தெரியாது.அதில் அமைக்கப்பட்டு இருந்த துவா ரங்கள் வழியாக அவர்கள் ஆயுதங்களை ஏவக்கூடிய அமைப்பு இருந்தது. அப்ப டிப்பட்ட கோட்டை. பதநீரும், கருப்பட்டியும், கம்பப் பசையும் மற்றும் பல்வே று பொருட்களையும் கொண்டு அமைத்த மிகச்சிறந்த கோட்டை. பீரங்கிக் குண் டுகளுக்கு ஈடுகொடுத்த கோட்டை.

1755 ஆம் ஆண்டு வெள்ளைக்காரன் கர்னல் ஹீரான் ஆர்க்காடு நவாப்பின் துணையோடு அப்பொழுது மாபூஸ் கானையும் துணைக்கு அழைத்துக்கொண் டு களக்காட்டுக் கோட்டையைக் கைப்பற்றினார்கள். களக்காட்டுக் கோட்டை வீழ்ந்தது. அப்போது வாசுதேவநல்லூரில் இருந்த பூலித்தேவருக்கு களக்காடு ஏன் வீழ்ந்தது என்று நினைத்தார்.மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்று நினைத் தார். அப்பொழுதுதான் அவர் முதன்முதலாக ஒரு கூட்டணியை உருவாக்கு கிறார். கூட்டமைப்பை உருவாக்குகிறார்.

எதிரியை வெள்ளைக்காரனை எதிர்க்க நாம் அணிசேர வேண்டும் என்று நினைத்து எதிரியாக அதற்குமுன் இருந்த திருவிதாங்கூர் மன்னருக்கு தகவல் கொடுத்து திருவிதாங்கூர் மன்னரையும் உடன் சேர்த்துக்கொண்டார். அவர் அமைத்த அந்தக் கூட்டமைப்பில் சேத்தூர் சேர்ந்தது - கொல்ல கொண்டான் சேர்ந்தது - தலைவன்கோட்டை சேர்ந்தது - நடுவக்குறிச்சி சேர்ந்தது - சொக்கம் பட்டி என்று அழைக்கப்படுகின்ற வடகரை சேர்ந்தது -சுரண்டை சேர்ந்தது-ஊர்க் காடு சேர்ந்தது - ஊத்துமலை சேர்ந்தது. இத்தனையும் சேர்ந்து ஒரு கூட்டமைப் பை மன்னர் பூலித்தேவர் ஏற்படுத்தினார். இந்தக் கூட்டமைப்பை வைத்துக் கொண்டு வெள்ளையன் படைகளை சிதறடித்தார்.

தொடரும்....

பூலித்தேவன் விழா-வைகோ உரை-பகுதி 1

No comments:

Post a Comment