Monday, October 21, 2013

நிலத்தடி நீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-மதிமுக

நாகை மாவட்டத்தில் விவசாயத்தை பாதுகாக்க நிலத்தடி நீரை சேமிப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என #மதிமுக வலியுறுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மாவட்ட இளைஞரணி அணி கலந்து ரையாடல் கூட்டம் நடைபெற்றது. மாநில துணை அமைப்பாளர் மார்கோனி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாநில இளை ஞரணி அமைப்பாளர் ஈஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது: 

நடைபெறவுள்ள ஏற்காடு இடைத்தேர்தல் குறித்து பொதுக்குழுவு கூடி முடிவெ டுக்கும். விவசாயத்திற்குப் பெயர் பெற்ற நாகை மாவட்டத்தில் இன்றைக்கு நிலத்தடி நீர் குறைந்துகொண்டே வருகிறது. காவிரி ஆற்றில் விடப்படும் தண் ணீரும் விவசாயத்திற்குப் பயன்படுத்திக்கொள்ள முடியாத அள விற்கு ஆறு, வாய்க்கால் தூர் வாரப்படாமல் ஆற்றுநீர் கடலுக்குச் செல்கிறது. உபரியாக கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் யாரும் பயன்படுத்திக்கொள்ள முடியாமல் வங்கக்கடலில் கலந்து வீணாகியது. 
  
கடலில் வீணாகக் கலந்த நீரை உரிய முறையில் தடுத்து அதனைப் பயன்படுத் திக்கொள்ள இன்றைய ஆட்சியாளரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. 

நாகை மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், ஆறுகள் முறையாகப் பராமரிக்கப் பட வில்லை. அவற்றை தூர்வாரி ஆற்று நீர் மற்றும் வெள்ளநீரை தேக்கி வைத் தா லே நிலத்தடி நீரைக்கொண்டு கொண்டு குறுவை விவசாயம் செய்ய முடியும். 


நாகை மாவட்டத்தில் குத்தாலம்,மயிலாடுதுறை,செம்பனார்கோவில், சீர்காழி, கொள்ளிடம் போன்ற பகுதிகளில் நிலத்தடி நீரைக்கொண்டு குறுவை விவசா யம் ஓரளவிற்கு செய்து வருகின்றனர். கடற்கரை ஓரங்களில் நிலங்கள் அனைத்தும் உப்புநீராக மாறிவிட்ட நிலையில் பல்வேறு கிராமங்களின் குடி நீரும் உவர்ப்பு நீராகிவிட்டது. 30 அடியில் நிலத்தடி நீரை எடுத்து விவசாயம் செய்து வந்த நிலை மாறி இன்றைக்கு 200 அடிமுதல் 500 அடிவரை நிலத்தில் போர்போட்டு நீர் மூழ்கி பம்ப்செட் மூலம் தண்ணீர் எடுத்து விவசாயம் செய்யப் பட்டு வருகிறது. நிலத்தடி நீரை சேமிக்கவும், வீணாக கடலில் கலக்கும் நீரை தடுப்பணை மூலம் தேக்கி வைக்கவும், ஏரி குளங்களுக்கு அனுப்ப உரிய நட வ டிக்கை எடுக்க அரசு முன்வரவில்லை என்றால் 30ஆண்டுகளில் நாகை மாவட் டத்தில் விவசாயம் என்பதே மறைந்து விடும் என்றார்.

மகாலிங்கம், அழகிரி, பன்னீர்செல்வம் உட்பட அனைத்து மதிமுக பொறுப்பா ளர்களும் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment