Tuesday, October 22, 2013

பூலித்தேவன் விழா-வைகோ உரை-பகுதி 3

#வைகோ உரை ,பூலித்தேவன் பிறந்த நாள் விழா 18.10.2008

அவருடைய காந்தசக்தி மகத்தானது. ஆர்க்காட்டு நவாப்பின் படையில்வந்த மூன்று இஸ்லாமிய தளபதிகள் முடேமியா எனும் முகம்மது மியானச், மியா னோ எனும் முகம்மது பார்க்கி, நபிகான் கட்டாக் ஆகிய மூன்று தளகர்த்தர்கள் மன்னர் பூலித்தேவர் முகத்தைக்கண்டு அவரால் கவரப்பட்டு அவரது படை யில்  சேர்ந்தார்கள். சேர்ந்து வீரப்போர் புரிந்தார்கள். 12 மாதம்கழித்து 1756 மார்ச் 21 இல் திருநெல்வேலியில் மீண்டும் போர் நடத்தி வெள்ளையரை தோற்கடித் தார்,மன்னர் பூலித்தேவன்.அந்தப்போரில் இஸ்லாமியனாகப் பிறந்து ஆர்க் காடு நவாப்புக்குப் பக்கத்தில் இருந்து மன்னர் பூலித்தேவர் படைக்கு வந்து சேர்ந்த முடேமியா என்கின்ற இÞலாமியத் தளபதியின் மார்பில் குண்டு பாய்ந் து இரத்த வெள்ளத்தில் அவன் புரண்டு கொண்டிருந்த வேளையில் மன்னர் பூலித்தேவ ருக்குத் தகவல் கிடைத்து ஓடிச்சென்று முடேமியாவை எடுத்து மடியிலே கிடத்தி இந்த மண்ணில் அந்நியனை எதிர்த்து வீரப்போர் புரிந்த தங்க மே! உன் ஆவி பிரிகிற வேளையில் உன் மேனியின் இரத்தம் என் மடியில் பாய் கிறது என்று உச்சி மோந்து அவனை அரவணைத்துக் கொண்டார். மன்னா,நான் கடமையாற்றி விட்டுத்தான் மடிகிறேன் என்று முடேமியா இறந்துபோனான். இஸ்லாமியக் குலத்தில் பிறந்து தன்னோடு வந்து படையிலே சேர்ந்து போரி லே உயிர் விட்டவனுக்கு நடுகல் எழுப்பினார் பூலித்தேவன். அவருடைய பணி கள் அளப்பரிய பணிகள்.
பூலித்தேவர் தோற்றம் ஆறடி உயரம் இருக்கும். இரும்புபோன்ற தேகம். ஒளி வீசும் கண்கள். பகைவருக்கு அஞ்சாத உள்ளம். நட்புக்குத் தலைவணங்குகின் ற பண்பாளன். அடக்குமுறைக்கு அஞ்ச மாட்டார். குதிரையில்லா விட்டாலும் 40 கல் தொலைவு வேகமாக நடக்கக்கூடிய ஆற்றல் இருந்தது என்றும் வீரர்கள் தொடர்ந்து ஓடித்தான் வரவேண்டும் என்றும் அவரைப்பற்றி நாட்டுப்பாடல் சொல் கிறது. 40 கல் தொலைவும் அயர்வின்றி ஒரு குதிரையின் ஓட்டத்தில் நடக்கக்கூடிய ஆற்றல் மன்னர் பூலிக்கு இருந்தது என்று நாட்டுப்பாடல்கள் தெரிவிக்கின்றன.

அப்படிப்பட்ட மன்னனை அதற்குப்பிறகு எவனும் வெல்லமுடியாது என்ற
வகை யில் அவர் அமைத்தது தான் முதல் கூட்டமைப்பு. இப்பொழுது தேர்தல் களில் கூட்டணி வருகின்றன. ஒரு பொது எதிரியை வீழ்த்துவதற்கு ஒன்றுசேர வேண்டும் என்ற எண்ணத்தைப்போர்க்களத்தில் இந்தியாவில் முதன் முதலாக ஏற்படுத்தியவரே பூலித்தேவர்தான். இது வரலாறு. அவருடைய உயர்ந்த மதி நுட்பம். ஆகவே தான், அவர் இதை அமைத்தபிறகு இராமநாதபுரம், சிவகங்கை சீமையில் சிவகங்கை மன்னர்கள் பூலித்தேவரை முன்மாதிரியாகக் கொண்டு கூட்டமைப்பை உருவாக்கினார்கள்.

அந்தக் கூட்டமைப்பில் அங்கே இராமநாதபுரம் மேலப்பனும், முத்துகருப்பத் தேவரும், சிவகிரி மாப்பிள்ளை வன்னியரும், மதுரைக் கள்ளர்களும் அதில் - அந்தக் கூட்டமைப்பில் சேர்ந்தார்கள். அதையடுத்து பாஞ்சாலங்குறிச்சியில் ஒரு கூட்டமைப்பு. அந்தக் கூட்டமைப்பு கட்டபொம்மனும் - கோலார்பட்டி ஜமீ னும் -நாகலாபுரம் பாளையமும் குளத்தூர் பாளையமும் சேர்ந்து அவர்கள் ஒரு கூட்டமைப்பு அமைத்தார்கள். நான்காவது கூட்டமைப்பாக கள்ளர் நாட்டு மன் னர்களை ஒருங்கிணைத்து விருபாட்சி மன்னர் கோபால் நாயக்கர் திண்டுக் கல்லை மையமாகக்கொண்டு வெள்ளையனை எதிர்த்துப் போர்புரிந்தார். ஐந் தாவது கூட்டமைப்பாக மலபார் கோயம்புத்தூரை மையமாக வைத்து கேரளா வர்மா தலைமையில் ஒரு கூட்டமைப்பு உருவாயிற்று.

இது தென்னாட்டுப் போர்க்களங்களின் வரலாறு. இதற்கு அகரம் எழுதியவர் பூலித்தேவன். பிள்ளையார் சுழிபோட்டவர் பூலித்தேவன். அந்த உணர்வு அவ ருக்கு இருந்த காரணத்தினால் அவரை எவராலும் வெல்லமுடியாது. அவரை வெல்ல வேண்டும் என்று வந்தவன் யார் தெரியுமா?

அவன் கம்மந்தான் கான்சாகிப். அவன் பிரிட்டிக்ஷ் படையில் இருந்தவன். பிரிட் டிக்ஷ் படையில் படைத்தளபதியாக இருந்து பல போர்க்களங்களில் வெற்றி பெற் றிருக்கிறான். அவனுடைய வீரம் நிகரற்றதுதான். காரணம்,ஹைதர் அலி யைத் தோற்கடித்தான். திப்பு சுல்தானின் தகப்பன் மைசூர் புலி என்று அழைக் கப்பட்ட திப்புசுல்தானின் தகப்பன் ஹைதர் அலியைப் போர்க்களத்தில் தோற் கடித்த கம்மந்தான் கான்சாகிப் தெற்கே வந்தான். வாசுதேவநல்லூரில் ஒரு மன்னன் இருக்கிறான் பூலித்தேவன். அவனை எவராலும் வெற்றி பெற முடிய வில்லை என்று பிரிட்டிக்ஷ்காரன் அவனுக்குத் துணையாக நாகப்பட்டினத்தில் இருந்து படை - திருச்சியில் இருந்து படை - தூத்துக்குடியில் இருந்து படை - பாளையங்கோட்டையில் இருந்து படை - மதுரையில் இருந்து படை - திருவ னந்தபுரத்தில் இருந்து மன்னன் அஞ்செங்கோவின் படை இவ்வளவு படை களும் வாசுதேவநல்லூரை நோக்கிவந்தது.

இங்கே மலையடிவாரத்தில் கம்மந்தான் கான்சாகிப் அந்தப் பெரும் படைக ளைக்  கொண்டு வந்து முகாம் அமைத்தான். இந்தப் பாளையத்துக்கு மாமன் னர் பூலித்தேவருடைய ஆளுமைக்குரிய அரசின் எல்லை எது தெரியுமா? அவர் நெற்கட்டுஞ் செவல் பாளையத்துக்கு எல்லை கிழக்கே குவளைக்கண்ணி. மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலை. தெற்கே முத்துக்குளம் சிவகிரிக்குப் பக்கத் தில். வடக்கே தலைவன் கோட்டை. இதுதான் அவருடைய அதிகாரத்துக்கு உட்பட்ட சட்டப்பூர்வமான பகுதியாக முதலில் இருந்தது.

தொடரும் ....

பூலித்தேவன் விழா-வைகோ உரை-பகுதி 2 

No comments:

Post a Comment