Monday, October 7, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 24

நாள்:-06.03.2008

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை துப்பாக்கிச்சூடு!

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

மிகுந்த வேதனையுடனும், மனவருத்தத்துடனும் இந்தக் கடிதத்தைத் தங்க ளுக்கு எழுதி இருக்கிறேன்.

இலங்கைக் கடற்படை, தமிழக மீனவர்களைத் தாக்கிக் கொன்று வருகின்ற
நடவடிக்கைகள், அன்றாட நிகழ்வுகளாகி விட்டன.


கச்சச்தீவு கடல் பகுதியில் மீன் பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு முழு உரி மை உண்டு. அவ்விதம், நேற்று(5.3.2008) மீன்பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் மீது, பட்டப்பகலில், பிற்பகல் மூன்று மணி அளவில், இலங்கைக் கடற்படை துப்பாக்கியால் சுட்டதில், டி.என்.10 MFP 442 என்ற எண்ணுள்ள மீன் பிடிப் படகில் இருந்த மீனவர் கிறிஸ்டி அந்தோணிசாமி (45) தலையில் துப்பாக் கிக் குண்டு பாய்ந்து, ரத்த வெள்ளத்தில் பிணமாகி இருக்கிறார்.

தவறுதலாக அல்ல, மிகக் குறுகிய தொலைவில், இலங்கை இராணுவம் குறி பார்த்துச் சுட்டு, இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கிறது. இறந்த மீனவர் கிறி ஸ்டிக்கு, மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர்.

இது மட்டும் அல்ல. அதே நாளில், அதே பகுதியில், மற்றொரு துப்பாக்கிச்சூட் டையும் இலங்கைக் கடற்படை நடத்தி இருக்கிறது. இந்தச் சம்பவத்தில்  ஃபிரா ன்சிஸ் நஸ்ரீன் (49) என்ற மீனவர் படுகாயம் அடைந்து, உயிருக்கு ஆபத் தான நிலையில் இருக்கிறார்.

கச்சத்தீவுக்கு மிக அருகில், டெல்ஃப்ட் தீவு என்ற இடத்தில் அமைந்து உள்ள
இலங்கைக் கடற்படைத் தளத்தில் இருந்து படகுகளில் வந்த சிங்களக் கடற் படையினர்தான் இந்தத் தாக்குதலை நடத்தினர் என்பதைத் தமிழக மீனவர்கள் உறுதியாகத் தெரிவித்து இருக்கின்றனர்.

இந்திய மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்கின்ற கவலை கிஞ்சிற்றும்
இல்லாத இந்தியக் கடற்படை, ஒரு நொண்டி வாத்தைப்போல இருக்கிறது.அது மட்டும் அல்லாமல்,இந்தியக் கடற்படை அதிகாரிகள்,இலங்கைக் கடற்படைக் கு அனைத்து உதவிகளையும் செய் து வருவது, மன்னிக்க முடியாத கொடுமை ஆகும்.

இந்திய மீனவர்களைக் காக்க வேண்டிய கடமையில் இருந்து இந்திய அரசு
வேண்டும் என்றே தவறி இருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறேன். அதற்கு ஏற் ப, இந்தியக் கடற்படையும், இலங்கைக் கடற்படையுடன் கைகோத்துச் செயல் பட்டு வருகிறது என்றும் குற்றம் சாட்டுகிறேன்.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று இலங்கை
அரசுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று இந்திய
அரசை வலியுறுத்துகிறேன்.

தங்கள் அன்புள்ள,

வைகோ

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

No comments:

Post a Comment