Wednesday, October 30, 2013

அந்த ஒரு நாள்!

தொலைபேசி மணி ஒலித்தது, நம் தோழர் தமிழ்மணி பாலாவிடம் இருந்து
வந்த அந்தத் தகவல், “தலைவர் #வைகோ மார்ச் 6 ஆம் தேதி மும்பைக்கு வரு கிறார்.ஈழத் தமிழர் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள”, மிகவும் மகிழ்ந் தேன்.ஜனவரி 3,4,5 ஆகிய தேதிகளில் அவர்களை அருகில் இருந்து தரிசிக்கிற
வாய்ப்பைப் பெற்றதை எண்ணியும் விரைவில் அடுத்து தரிசிக்க காத்திருகி றேன் என்று எண்ணியும்.இதற்கு காரணம் உண்டு. எப்படி இருந்தாலும் தலை வர் மார்ச் 5 மும்பை வந்துவிடுவார். நான் என் பிறந்தநாள் அன்றே காண முடி யும் என்று மகிழ்ந்தேன்.3 நாட்கள் உருண்டோடின தலைவர் வருகிற தேதி அறி விக்கப் படாமல் ஒத்திப்போனது.

ஒருவாரம் கழித்து எனக்கு தகவல் கிடைத்தது. தலைவர் வருகிற மார்ச் 20 வரு கிறார் என்று. செம்பூரில் சர்வ தமிழ் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம்,
எப்படி இந்தப் போராட்டத்தை நடத்துவது. எந்தத் தீர்மானத்தை முன்வைப்பது என்று கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு,சுதந்திர தமிழ் ஈழம் அதற்கு பொதுவாக் கெடுப்பு தான் தீர்வு.


கடந்த மார்ச் 18, மதியம் 1.45 மணிக்கு தலைவர் மும்பை வருகிற வானூர்தி விவரம் குறித்து எனக்கு அண்ணன் அருணகிரி சொன்னார் கள்.பின்பு இதை முகநூல் பக்கத்தில் உள்ள மும்பை நண்பர் களுக்கு தெரியப் படுத்தினேன்.
அவர்களையும் தலைவரை வந்து வரவேற்குமாறு கேட்டுக்கொண்டேன்.

மார்ச் 19 நானும் எனது நண்பர்களும் தமிழ் மணி பாலா மற்றும் அவரது நண் பர் களும் குர்ல இரயில் நிலையத்தில் இருந்து வானூர்தி நிலையம் நோக்கிப்
பயணித்தோம். நாங்கள் மாலை 7 மணிக்கு வானூர்தி நிலையம் சென்று அடைந்தோம்.

தலைவர் வருகின்ற வானூர்தி இரவு 8 மணிக்குத்தான் தரை இறங்கியது.அதற் குள் பல தமிழர்கள் கேப்டன்தமிழ்ச்செல்வன் தலைமையில் வானூர்தி நிலைய வரவேற்பு அறையில் திரண்டனர். தலைவரை காண ஆவலாக காத்திருந் தோம். தலைவர் ஒரு மென் பொறியாளர் போல் அவ்வளவு இளமையாக இருந் தார். அவரிடம் இருந்து பெட்டியை தோழர் தமிழ் மணி பாலா வாங்கிட நாங்கள் முன்னே சென்றோம். கேப்டன் தமிழ்செல்வன் மற்றும் பலர் மாலை அணிவித் து படம் எடுத்துக்கொண்டனர். இணையதள நண்பர்கள் அனைவரும் ஒரு படம்
எடுத்துக்கொண்டோம். நான் என்னுடன் பணிபுரியும் நண்பர்களை தலைவ ருக்கு அறிமுகம் செய்தேன்.

தலைவர் தங்கும்விடுதிக்குச் செல்ல மகிழுந்தில் பயணித்தோம் அப்பொழுது
தலைவருடன் நானும்,கேப்டன் தமிழ்செல்வன் மற்றும் தோழர்கள் வந்தார்கள். பயணத்தின் போதே நான் தலைவர் மும்பை வந்ததை என் முகநூலில் பதிவு செய்துகொண்டு இருந்தேன். கேப்டன் தமிழ்செல்வன் நாளைய ஆர்ப்பாட்டத் தைப் பற்றியும் ஆசாத் மைதானத்தின் சிறப்பு பற்றியும் தலைவருக்கு சொல் லிக்கொண்டே வந்தபோது “உங்களுடன் உதவிக்கு யார் தங்குவார்கள்?” என்று கேட்டார்.முன்இருக்கையில் இருந்த தலைவர் சற்று திரும்பி ஒரு பையன் மட்டும் தங்குவான் என்று என்னைப் பார்த்து சிரித்துத்கொண்டே சொன்னார். நானும் சிரித்துவிட்டு முகநூலில் என் வேலையைப் பார்த்தேன்.

vorli-Bandra Sea link இல் சென்று கொண்டு இருந்தோம். அப்போது தலைவரிடம் இந்த sea link சிறப்பை விளக்கினார் கருண். varli கும் Bandra கும் உள்ள கடல் மீது
கட்டப்பட்டுள்ள ROPE BRIDGE இது.இதன் மூலம் பயணிப்பதால் 12 கி.மீ செல்ல வேண்டி உள்ள தரைவழி சாலையை நாங்கள் வெறும் 2.5 கி.மீ இல் கடந்து தங்கும்விடுதியை அடைந்தோம்.

தலைவரின் பெட்டியை எடுத்துக் கொண்டு வரவேற்பறை சென்றேன். பின்பு, முறைப்படி அறை பதிவு செய்யப்பட்டு தலைவருக்கான அறை ஒதுக்கப்பட் டது. அப்போதும் கேப்டன் தமிழ்செல்வன் உங்களோடு உதவிக்கு யார் தங்கு வார்கள் என்று கேட்டார்.தலைவரிடம் இருந்து வந்த பதிலை கேட்டு நான் வியந்து போனேன் “தம்பி ஆனந்த்ராஜ் என்னுடன் இருப்பார்” என்றார். கட்சி யில் பல வருடமாக இருக்கும் தோழர்களுக்கு கூட இந்த பாக்கியம் கிடைத்தி ருக்காது ஆனால் எளியவன் எனக்கு கிடைத்தது. என் மடிகணினி, பை மற்றும் தலைவரின் பெட்டியை எடுத்துக்கொண்டு அறைக்கு சென்றேன்.

மார்ச் 17 மெரினா கடற்கரையில் மே 17 இயக்கத்தின் சார்பில் மக்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சியில் சக மனிதனாக கலந்து கொண்ட நம் தலைவர் அன்று அங்கு ஒலிபெருக்கி சாதனம் இல்லாமல் ஆற்றிய உரையின் காரணமாக அவ ரின் குரலில் சற்று பாதிப்பை என்னால் உணரமுடிந்தது.

அறையில் குடிதண்ணீர் இல்லாததால் அதை வரவழைத்தோம் அதற்குள் தலைவரின் பெட்டியில் இருந்து ஒரு தண்ணீர் பொத்தலை என்னிடம் தந்தார்.
நான் அதை நல்ல கொதிக்கும் வெந்நீராக செய்து அதில் உப்பு போட்டு தலைவ ரிடம் தந்தேன். அதில் வாய் கொப்பளித்து சற்று இளைப்பாறினார். அண்ணன் அருணகிரி எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிய சங்கொலி கட்டுரையை பிரதி எடுக்க நான் சென்றேன். தலைவரிடத்தில் தெரிவித்து விட்டு. பிரதி எடுத்து முடித்து நான் மீண்டும் கதவை திறந்து உள்ளே சென்றேன். அப்போது தலை வர் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தார்.

தம்பி ஒரு 5 நிமிடம் வெளியில் இருங்கள் என்றார்.என் மனம் புண்பட்டது. தலைவருக்கு தொந்தரவு கொடுத்து விட்டோமே, கதவை தட்டாமல் உள்ளே
சென்று விட்டேனோ என்று வேதனை என் நெஞ்சைப் பிசைந்தது. இதில் என்
தலைவன் ஒரு ஒழுக்கத்தை எனக்கு போதித்தார். யாருடைய அறைக்கு சென் றாலும் அவருடைய அனுமதி பெற்று செல்ல வேண்டும் என்பதை உணர்ந் தேன்.

நான் அறைக்கு வெளியே காத்திருந்த போது டெல்லி எண்ணில் இருந்து எனக் கு ஒரு அழைப்பு வந்தது. வணக்கம் என்று காதில் வைத்தேன் “என்ன ஆனந்த் ராஜ் நலமா, நான் டெல்லியில் இருந்து பாண்டியன், தலைவரை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்”. தலைவர் காலையில் என்ன எல்லாம் சாப் பிடுவார் என்ற உடன் அனைத்தையும் விளக்கமாகவும், பொறுமையாகவும் சொன்னார். என் மனதில் அதை பதிந்து கொண்டேன். அண்ணன் பாண்டியன் தொடர்பை துண்டித்தவுடன், 30 நொடிகள் ஓடின. அறையின் கதவை திறந்த தலைவர் வாங்க தம்பி என்று உள்ளே அழைத்தார்.

இரவு உணவிற்காக menu card பார்த்தபடி உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். தான் சாப்பிட்ட மீதியை தொண்டன் சாப்பிடுவான் என்று இருக்கும் பல தலைவர்களுக்கு மத்தியில் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்கும் எங்கள் தலைவர் எங்கே? இந்த பாச ஓட்டத்தினால் தான் நம் இயக்கத்தை எவ ராலும் அழிக்க முடியவில்லை. நீங்கள் சாப்பிடுவதையே நானும் சாப்பிடு கிறேன் என்றேன். நீங்கள் அசைவம் சாப்பிடுவீர்களா என்றார். நான் ஆம் சாப் பிடுவேன் என்ற உடன்,உங்களுக்கு ஒருckicken fried rice சொல்லுங்கள், எனக்கு 4 சப்பாத்தி ஒரு mixed vegetable curry சொல்லுங்கள் என்றார். என் மனதில் அய்யா வை விட்டு நான் மட்டும் எப்படி அசைவம் சாப்பிடுவது என்ற ஏக்கம், ஆனால்
தலைவர் 2009 முள்ளி வாய்க்கால் படுகொலையை நினைத்து அந்த தமிழ் மக் கள் கஷ்டப்படுவதை நினைத்து அசைவம் சாப்பிடுவதை நிறுத்தியது என்
நினைவுக்கு வந்தது.

பிரதி எடுத்து வந்த சங்கொலி கட்டுரைகளை தலைவரிடம் கொடுத்தேன். தலைவர் அதைப் பார்க்கத் தொடங்கிய ஒரு நிமிடத்தில் இளங்கோவிற்கு
தொடர்பு கொள்ளுங்கள் என்றார்.அவரை தொடர்பு கொண்டு தலைவரிடம் என் அலைபேசியை தந்தேன் “விவசாயிகள் உண்ணாநிலை போராட்டத்தின் பேச் சையும்,வந்தியத்தேவன் கட்டுரையையும் போடுங்கள், என் பேச்சில் உள்ள
திருக்குறளில் ஒரு பிழை உள்ளது அதை மட்டும் மாற்றம் செய்யுங்கள். நீங் கள் வேண்டுமானால் திருக்குறளை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்” என் றார். தலைவரின் தமிழ் ஆற்றலும் அவரின் நம்பிக்கையும் கண்டு நான் வியந் தேன். உண்மையில் தமிழ் மீது தணியாத காதல் கொண்டுள்ள மனிதன் என்ப தை என்னால் உணர முடிந்தது.

இதற்கிடையில் உணவு எங்கள் அறைக்கு வந்தது. புத்தகம் படிக்கத் தொடங் கினார். நானும் முகநூலில் நம் இயக்கப் பணிகளைத் தொடர்ந்தேன். தம்பி “வான் ஹிம் பக் 2ஆம் உலக போர் சம்பவம் இணையத்தில் பார்க்க முடியுமா” என்று கேட்டார். அதை நான் பார்த்து இந்த தேதி இந்த ஆண்டு என்று எடுத்து சொன்னேன். அப்போது தன் கையில் இருந்த தாளை என்னிடம் காண்பித்தார். அதில், நான் சொல்வதற்கு முன்பே தலைவர் சரியாக அந்த தேதியை ஏற்கன வே எழுதி இருந்தார். 8 ஜூன் 1972. தலைவரின் நினைவு ஆற்றலை பாருங்கள் இணையத்தை விட வேகமாக இருந்தது.

தலைவருக்கு உணவு பரிமாற, அவர் சாப்பிடத் தொடங்கினார். மணி 10.45.
சாப்பிட்ட தட்டுடன் எழுந்த தலைவர் தட்டை சுத்தம் செய்து வந்து என்னிடத் தில் கொடுத்தார். உலகில் இதை போல ஒரு தலைவர் உண்டா? தொண்டர் களையும் மதிக்கின்ற ஒரு தலைவர். தான் சாப்பிட்ட எச்சில் தட்டை தொண் டன் தொடக்கூடாது என்று எண்ணும் எங்கள் தலைவர். சாப்பிட்ட உடன் பல் துலக்கி விட்டு, என்னை சாப்பிடும்படி சொன்னார். நான் கொஞ்சம் சாப்பிட்ட உடன் சாப்பிட முடியாமல் திணறியதை கண்ட தலைவர் “என்ன தம்பி சின்ன வயசுல நல்லா சாப்பிடுங்க, எல்லாத்தையும் சாப்பிடுங்க” எந்த தலைவருக்கு வரும் இந்த அக்கறை.கொஞ்சம் சாப்பிட்டால் செலவுகுறையும் என்று யோசிக் கும் தலைவர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு தலைவரா?

எல்லாவற்றையும் சாப்பிட்டு முடித்தவுடன் தட்டை சுத்தப் படுத்தி அறைக்கு வெளியில் வைத்துவிட்டு கதவை அடைத்தேன். வழக்கம் போல் தலைவர் புத்தகம் படிக்க நான் இணையத்தில் என் வேலையைப் பார்த்தேன். சற்று நேரம் கழிந்தது மணி 12 இருக்கும் தலைவர் உறங்கச் சென்றார். அப்போது நீங்கள் இந்த கட்டிலில் படுத்துக் கொள்ளுங்கள் என்றார். என்னை ஒரு சக மனிதராக
பாவித்தார். நான் மின் விளக்குகளை அணைத்துவிட்டு உறங்கச் சென்றேன்.

தலைவர் படுத்த சில மணித்துளிகளில் உறங்கிவிட்டார். ஆனால், எனக்கு தூக் கம் வரவில்லை.காலையில் தலைவர் எத்தனை மணிக்கு விழிப்பார்,அவருக் கு முன் நான் விழித்தாக வேண்டும்,காலையில் அவருக்கு தேவையான அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற வேட்கை என் எண்ணத்தில் ஓடிக்
கொண்டே இருந்தது இதன் காரணமாக எனக்கு தூக்கம் வரவில்லை, அப் போது மணி 5.30. என்னை அறியாமல் நான் உறங்கிவிட்டேன் பிறகு எழுந்து
பார்க்கிற போது மணி 7. உடனே பல் துலக்கி விட்டு குளியல் அறையில்
இருந்து நான் வந்தேன். உடனே தலைவர் எழுந்தார். ஆனால், அவர் முன்பே எழுந்து விட்டார் என்று என்னால் உணர முடிந்தது. காரணம் என்னவென்றால் எந்த ஒரு மனிதனும் படுக்கையில் இருந்து எழும்போது சற்றே சோம்பலுடன் தான் எழுந்திருக்க நான் பார்த்திருக்கிறேன். அப்போது நான் உணர்ந்தேன் எங் கே தான் எழுந்து என் தூக்கம் கெட்டுவிடும் என்று தலைவர் கருதினாரா?

ஆங்கிலம் , தமிழ் நாளேடுகளை வாங்கிக் கொண்டு அறைக்கு விரைந்தேன். கதவு மூடி இருந்தது. நேற்று இரவு செய்த தவறை நான் மீண்டும் செய்யவில் லை கதவை தட்டி பின்பு உள்ளே சென்றேன்.அப்போது,தலைவர் தொலைபேசி யில் பேசிக்கொண்டு இருந்தார். என்னிடம் விகடனில் எழுத்தாளர் திருமாவே லன் கட்டுரை வந்துள்ளது அது கிடைக்குமா என்றார். நான் இணையத்தில் முயற்சித்து அது முடியாமல் போனதால் நம் இணையதள நண்பர் அம்மா பேட் டைஞானசுந்தரம், கருணாகரன் அவர்களை தொடர்பு கொண்டு இது கிடைக்கு மா என்றேன் அடுத்த 20 நிமிடத்தில் என் முகநூலில் அதை பதிந்துவிட்டார்.

ஒரு காபி ஆர்டர் செய்தேன் தலைவருக்கு மட்டும். காபி வருவதற்கு முன் வெந்நீர் கொடுத்தேன் குடிப்பதற்கு. அப்போது தலைவர் நாளேட்டைப் படிக்கத் தொடங்கினார்.அப்போது காபி கொண்டு வந்தார் அந்த விடுதியில் பணிபுரி கின்ற நண்பர். தலைவருக்கு காபி கொடுத்து அவர் நாற்காலி அருகில் இருந் தேன். இந்த ஆர்பாட்டத்திற்கு நாங்கள் கொடுத்த விளம்பரத்தை அவரிடத்தில் சுட்டிக் காட்டி இது நம் இணையதள நண்பர்கள் கொடுத்தது என்றேன்.

நான் குளிப்பதற்கு சென்றேன். தலைவர் “தம்பி எங்கேயும் போக வேண்டாம்
இங்கேயே குளித்துவிடுங்கள்”என்றார். அப் போதும் நான் நெகிழ்ந்தேன். குளித் து முடித்தவுடன் தலைவர் குளிக்க சென்றார். அப்போது, மீசை ஒதுக்க பிளேடு தேவை பட்டது. வானூர்தியில் பிளேடு வைத்திருந்தால் அனுமதி கிடையாது என்று என் மனதில் பட்டது.பிளேடு உடன் அறைக்கு வந்தேன். தலைவரும் குளித்து முடித்து கருப்பு துண்டுடன் கம்பீரமாக கட்சி அளித்தார்.காலை சிற் றுண்டிக்கு தயாராகி இருந்தோம். தலைவருக்கு 4 பிரட் மட்டும் சொல்லச் சொன்னார். நான் விடுதியில் காலை சிற்றுண்டி அன்பளிப்பு என்பதால், அங்கே சென்று சாப்பிட்டு விட்டு வந்தேன். தொலைக் காட்சியில் times now அலை வரிசை பார்த்தபடி நாற்காலியில் அமர்ந்து இருந்தார் தலைவர், அருகில் நான்.


அப்போது ப.சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் காபினெட் அமைச்சர்கள் கொடுத் துக் கொண்டு இருந்த பேட்டியை பார்த்துக் கொண்டு இருந்த போது லோக்சபா
காட்சி, அதில் நம் நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி சபாநாயகர் இருக் கை அருகில் சென்று தமிழ் ஈழத்திற்கு ஆதரவாக முழக்கம் எழுப்பிய வாறு, மேலும், அடல் பிகாரி வாஜ்பாய், ராம் ஜெத்மலானி, ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற பி.ஜே.பி தலைவர்கள் ஈழ மக்களுக்கும் நமக்கும் ஆதரவாக இருந்தார் கள் என்றார்.அப்போது எனக்கு ஒரு தேநீர் போட்டு தாருங்கள் என்றார்.சுட வைத் திருந்த வெந்நீரை கொண்டு சக்கரை இல்லா தேநீரைப் போட்டு தலைவ ரிடம் கொடுத்தேன்.

ஸ்டெர்லைட் வழக்கு தீர்ப்பு என்ன ஆயிற்று. ஜனவரியில் வந்துவிடும் என்று
செய்தித்தாளில் நான் பார்த்தேன்.ஆனால், இன்னும் அது பற்றி தகவல் இல் லையே என்றேன். அப்போது தலைவர் சொன்னார். சில வழக்குகள் இப்படி தள்ளிப்போகும். நாம் போராடுகிற வரை போராடிவிட்டோம் இனியும் போராடு வோம் என்றார். அந்த விடா முயற்சி என்னை கவர்ந்தது “மலையையும் நகர்த் தலாம் என்று நினைப்பேன் எதையும் முடியாது என்று நான் நினைப்பது இல் லை” என்று நெல்லை மாநாட்டில் தலைவர் பேசியதும் என் நினைவில் வந் தோடியது.இந்த ஆண்டு மாநாட்டை கூட விருதுநகரில் நடத்த திட்டமிட்டு
உள்ளேன் என்றார். அப்போது நான் இல்லை அய்யா நீங்கள் கரூர் மாநாட்டு
நிறைவில் அடுத்த மாநாடு தஞ்சையில் அதுவும் முதல் நாள் பேரணி மற்றும்
மாநாடு என்று குறிப்பிட்டீர்கள் என்றேன். அப்போது தலைவர் ஆம், ஆனால் நாம் கட்சியில் எல்லாரும் நடுத்தர பிரிவு மக்கள் இரண்டு நாட்கள் என் தொண்டர்கள் ரொம்ப சிரமப்படு வாங்க என்றார். நாமும் southy ரொம்ப strong இருக்கோம். என்னோடு வெறும் 5 எம்.பி. வெற்றி பெற்றால் போதும் இந்திய அரசியலில் பெரும் மாற்றத்தை கொண்டுவர முடியும். நிச்சயம் நடக்கும்
அய்யா நிறைய நடுநிலையாளர்கள் மத்தியில் உங்களுக்கும், அய்யா நெடுமா றன் அவர்களுக்கும் நிறைய ஆதரவு இருக்கிறது. கணினியை பயன்படுத்தும் என்னை போல மென் பொறியாளர்கள் கூட உங்களை கவனிக்கிறார்கள். நாங் கள் இணையத்தில் நம் இயக்கத்திற்கான ஆதரவை வலுப்படுத்துகிறோம் என் று சொன்னேன். மற்றும், நம் இணையதள பணிகளை எடுத்துச் சொன் னேன்.
தலைவர் அதைப் பாராட்டினார். எனக்கு நம்பிக்கை இருக்கிறது இந்த இளை ஞர்கள் மீது என்றார்.

கேப்டன் தமிழ்செல்வன் சொன்னது போல 11.30 மணிக்கு தலைவரை அழைக்க வண்டி வராததால் நான் கருண் மற்றும் மாரிக்கு அழைப்பு விடுத்தேன்.அவர், தலைவரை கூப்பிடத்தான் வந்துகொண்டு இருக்கிறோம் என்றார். தலைவர் சாப்பிட்டு தயாராக இருந்தார்.நான் தலைவரிடம் “நீங்கள் பேசுவதற்கு முன்பு பல கூட்டங்களில் ஒரு கப்பில் குடிப்பதை நான் பார்த்திருக்கிறேன் அது என்ன என்று சொல்லுங்கள் என்றேன்,அது வெந்நீர் தம்பி என்றார்” அப்படி என்றால் நம்மிடம் flask உள்ளது நான் வெந்நீர் இதில் கொண்டு வரட்டுமா என்றேன். விடுதி நிர்வாகம் இதை வெளியில் கொண்டு செல்ல அனுமதிக்காது என்றார். தலைவரின் கவனம் எனக்கு பிடித்தது.

தலைவர் வெயில் அதிகமாக இருந்தால் sun glass படயளள போடுவேன், sun glass யும்,நாட்குறிப்பையும் கவனமாக வைத்து கொள்ளுங்கள் என்று என்னிடம்
தந்தார். கதவை யாரோ தட்டினார்கள் திறந்தால் மாரி, அய்யா கூட்டத்திற்கு
போகலாம் நல்ல கூட்டம் வாருங்கள் என்றார். மகிழுந்தில் ஆசாத் மைதானம்
நோக்கி பயணித்தோம்.ஆசாத் மைதானம் சென்றவுடன் தமிழர்கள் ஆரவாரிக்க தலைவரை கவனமாக மேடைக்கு அழைத்துச் சென்றோம்.

கேப்டன் தமிழ்ச்செல்வன் உரை ஆற்றினார்.“இலங்கைக்கு பொருளாதாரதடை, தமிழக எம்.பி.கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும்” என்றும் பல கோரிக்கைகளை முன்வைத்தார்.ராஜா உடையார், கருண் இலங்கைக்கு எதி ராக கண்டன கோசம் எழுப்பினர்.பின்பு மேடையில் இருந்த அனைவரும் பேசி முடிக்க இறுதியாக BJP Raj Prokith “தலைவர் வைகோவின் பேச்சுக்கள் பலவற் றை அவர் கேட்டு வியந்ததாகவும், தலைவர் வைகோவை போல ஒரு நல்ல அரசியல் தலைவர் இல்லை என்றும், காங்கிரஸ் தமிழர்களுக்கு செய்த துரோ கங்களையும் பட்டியலிட்டுப் பேசினார்”

வெயில் உச்சத்தின் எல்லையை எட்டியது. கூட்டத்தில் ஒரு அசைவு கூட இல் லை. மக்கள் தலைவர் வைகோ பேசுவார் என்ற உடன் கூட்டம் ஆரவாரிக்க தலைவர் “கொலை வாளினை எடடா மிக கொடியோர் செயல் அறவே” என்று தன் உரையைத் தொடங்கினார். தமிழ் உணர்வாளர் களும், கழகத் தோழர்களும், மென் பொறியாளர்களும் என் நண்பர்களும் மற்றும் பலரும் இருந்த அந்தக்
கூட்டத்தில் தலைவர் உரையாற்ற தொடங்கினார் மணி 1.00 இருக்கும்.

தலைவரின் பேச்சு அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்தது.பேச்சு அனைத்துமே எனக்கு பிடித்தது. அதில் என் மனம் கவர்ந்த வரிகள் பிரதமர் ஒரு குற்றவாளி. பல தமிழர்களை கொன்று,இன்று குடியரசு தலைவர் பதவியில் ஒளிந்து கொண்டு இருக்கும் பிரணாப்முகர்ஜி ஒரு குற்றவாளி. இந்திய குடியரசு தலை வரை இப்படி விமர்சிக்கலாமா? சட்டம் பாயாதா? எந்த வழக்கு வேண்டு மானா லும் போட்டு கொள்ளுங்கள் சந்திக்கத் தயாராக உள்ளான் வைகோ. ஏற்கனவே 2 வழக்குகளை சந்தித்துக் கொண்டு இருக்கிறேன்” என்ற வரிகள் கூட்டத்தில்
பெரும் உணர்ச்சியை ஏற்படுத்தியது.இதை தட்டச்சு செய்யும் போது கூட என்
உடம்பு சிலிர்த்தது.

அப்போது சிலர் தலைவருக்கு தண்ணீர் கொடுத்தனர்.வெயிலில் பேசிக்கொண் டு இருக்கிறாரே என்று, ஆனால் அவர்களுக்கு தெரியாது  தலைவர் பேசுகிற போது இடையில் ஏதும் சாப்பிடுவது கிடையாது என்று. பேச்சு தொடர்ந்து கொண்டு இருந்த போது எனக்கு ஒரு குறுஞ்செய்தி like this any one will speak, I am not able to understand his language but I am able to understand what he is trying to explain என்று கூட்டத் தில் இருந்த என்னோடு வேலை செய்கிற ஒரு மராட்டிய நண்பர் அனுப்பியது. அப்போது பெருந்தலைவர் காமராஜர் பீகார் காங்கிரஸ் கூட்டத்தில் தமிழில் பேசியதை கேட்டு அங்கு திரண்ட மக்கள் கை தட்டி வரவேற்ற போது, ஒருவர் கேட்டார். இவர் தமிழில் பேசினார் உங்களுக்கு ஒன்றும் புரிந்திருக்காது பிறகு எதற்கு கை தட்டினீர்கள் என்ற போது, காமராஜர் பேசியது எங்களுக்கு ஒன்றும் புரிய வில்லை. ஆனால் காமராஜர் நல்லதை பேசினார் என்று எங்களுக்கு புரிந் தது என்ற சம்பவம் எனக்கு நினைவுக்கு வந்தது. இந்த நண்பர் இந்த கூடத்திற்கு வர காரணம் GENOCIDE OF EELAM TAMILS HEARTS BLEED - MARATHI” CDயை அவரி டம் நாங்கள் கொண்டு போனது அவருக்கு ஈழத்தை பற்றிய ஒரு புரிதலை கொண்டு வர முடிந்தது.2.15க்கு தலைவர் தன் பேச்சைமுடித்தார், பிறகு அங்கே யே செய்தியாளர்களைச் சந்தித்தார். ஒரு 10 நிமிடம், கூட்டம் தலைவரை காண
மேடையை நோக்கி படையெடுப்பு, என் மனதிற்குள் ஒரு கவலை எப்படி சமா ளிக்க போகிறோம், நாம் பயிற்சி பெற்ற தொண்டரணி இல்லை என்ற கவலை, பிறகு காவல் துறை உதவியது,அவர்கள் ஒட்டு மொத்த கூட்டத்தையும் வெளி யில் அனுப்பாமல் தலைவரையும்,கேப்டன் தமிழ்செல்வனையும் அனுப்பினார் கள், அப்போது தலைவர் முதலில் என்னை வெளியில் அனுப்பும் படி அவர் களிடம் சொன்னார்.

கூட்டத்தில் நான் சிக்கிவிடுவேன் என்ற அக்கறை. யாருக்கு வரும்? ஆசாத் மைதானத்தை விட்டு வெளிவந்தோம், இருப்பினும் சாலையில் உள்ள மக்கள்
நெருங்க அப்போது ஒரு தோழர் தலைவரைத்தொட முயற்சிக்க அவர் கை என் கழுத்தில் பட்டு முதுகு வரை ஒரு ஜான் அளவு கீறியது, வெயிலில் எரிச்சல் தாங்க முடியவில்லை.இருப்பினும் மகிழ்ச்சியே,தலைவருக்கு ஏதும் ஆகாமல் தடுத்தோமே என்று.இதை நான் தலைவரிடமும் சொல்ல வில்லை, இதை சொல்லி அவரை கவலைக்குள்ளாக்க வேண்டாம் என்று கருதினேன்.

எங்களை விடுதியில் விடுவதற்கான மகிழுந்து வருவதற்கு சற்று தாமதம் ஆனதால் நாங்கள் கேப்டன் தமிழ்ச் செல்வன் அலுவலகத்துக்கு சென்றோம்
அப்போது கேப்டன் தலைவரின் உரையை பாராட்டினார். தலைவர் கேப்டனை பாராட்டினார். ஒரு நல்ல தலைவராக மும்பையில் உள்ள தமிழர்களுக்கு நீங் கள் உள்ளீர்கள்.உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துகள் என்றார். 3மணிக்குள் நம் விடுதியில் உணவு முடிந்துவிடும் என்று நினைவு ஊட்டினேன் அப்போது மணி 2.35.

எங்களை விடுதியில் விடும் வண்டிதயாராக இருந்ததால் அங்கு இருந்து கிளம் பினோம். அப்போது, எங்களுடன் மாயி மற்றும் சரவணன் வந்தனர். மாரி எதிர் பாராத விதமாக தன்னுடைய பர்சை இந்தக் கூட்டத்தில் பறிகொடுத்துவிட்டார். இதை தலைவரிடம் சொன்ன போது மாரி கவனமாக இருக்க வேண்டாமா? இதற்கு என்றே சில பேர் வந்து இருப்பார்கள். நான் என் சட்டையில் உள்ள மூக் கு கண்ணாடியை பிடித்துகொண்டே வந்தேன்.ஏனென்றால் இதை பணம் என்று நினைத்து பிக்பாக்கெட் அடித்து விடுவார்கள் என்று.ஜனவரி5 நிகழ்ச்சியில்கேப் டன் தமிழ்செல்வன் தன் அலைபேசியை தொலைத்தார்,இனியாவது கவனமாக இருங்கள் என்றார். அப்போது, விடுதியை அடைந்தோம். 2.45 மணிக்கு அறைக் கு சென்றவுடன் தலைவர் உரை நன்றாக இருந்தது என்று அனைவரும் சொன் னாலும் தலைவர் மனதில் ஒரு சிறு கவலை என் குரல் சரிவர இல்லை என்று என்னிடம் சொன்னார். இல்லை அய்யா, நன்றாகத் தான் இருந்தது என்று சொன்னேன். menu card பாத்துவிட்டு எனக்கு ஒரு சூப், மற்றும் நான்கு சப்பாத்தி சொல்லுங்கள். உங்களுக்கு என்ன வேண்டும் என்றார். எனக்கும் நான்கு சப் பாத்தி போதும் என்றேன்.தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இதை சொன் ன போது, உணவு இல்லை முடிந்து விட்டது என்றார்கள்.

உடனே மாரி மிக அருகில் ஒரு உணவகம் உள்ளது அங்கு சென்று சாப்பிடு வோம் என்றார், தலைவர் நான் சாப்பிட செல்கிறேன் நீங்கள் புகைப் படங்கள் மற்றும் செய்திகளை சங்கொலிக்கும் மின்னலுக்கும் அனுப்பிவிடுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றார். மடிகணினியை on செய்து கொண்டே, நம் இணைய தள நண்பர் முருகேசன், தமிழ் மணி பாலா விற்கு தொடர்புகொண்டு புகைப் படத்துடன் வருமாறு சொன்னேன்.அப்போது தமிழ்மணி பாலா என் அழைப்பை எடுக்க வில்லை. பின்பு தான் அதற்கான காரணத்தை நான் அறிந்தேன் வெயி லில் படம் எடுத்துக்கொண்டு இருந்தபோது அவருக்கு தலை சுற்றல் வந்தது என்று.அதன் காரணமாக அவரால் வரமுடிய வில்லை. முருகேசன் கொண்டு வந்த படங்களை மின்னஞ்சல் வழியாக அண்ணன் அருணகிரிக்கும், சங்கொ லிக்கும், மின்னலுக்கும் அனுப்பி வைத்தேன். இதை வைகோவின் முகநூல் பக்கத்திற்கும் அனுப்பினேன்,என் முகநூல் சுவரிலும் பதித்தேன்.

மணி 5 இருக்கும் தலைவர் அறைக்கு வந்தார். அப்போது இந்த செய்தி times now அலைவரிசையில் ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்தது. அதையும் மற்றும் oneindia.com,thatstamil.com போன்ற இணையதளத்திலும் வந்துவிட்டது. இதை தலை வருக்கு என் மடிக்கணினியில் காண்பித்த போது மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அப்போது எனக்கு வாங்கிவந்த உணவு பொட்டலத்தை தந்தார் மாரி. தலைவர்
என்னை சாப்பிடும்படி கூறி, சிறிது நேரம் கட்டிலில் படுத்து இளைப்பாறிக் கொண்டு இருந்தார். நானும் சாப்பிடத் தொடங்கினேன்.

தமிழ்செல்வன் தயாரானதும் “நான் உங்களை வழியனுப்ப வானூர்தி நிலையத் திற்கு வர வேண்டுமா, 3 நாட்களாக கூட்டம் இன்று தான் கடைசி நாள் பகல் பொழுது ஆர்பாட்டத்தில் முடிந்தது. இப்போது சென்றால் பேச விடுவார்களா என்று தெரியவில்லை என்று சொன்னார் கேப்டன். உடனே தலைவர் நீங்கள் செல்லுங்கள் நல்லா பேசுங்கள் என்றார். அப்போது தலைவர் எப்படி பாராளு மன்ற உரைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார் என்று என்னால் உணர முடிந் தது.

அறையை காலி செய்து கொண்டு கிளம்பினோம் அப்போது மணி 6.15 இருக் கும். பின்பு அறை கணக்கை தலைவர் முடிக்க சிலர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பிறகு இந்த கூட்டத்தின் காணொளி சிடி தலைவருக்கு கொடுக் கப்பட்டது, “ தம்பி என் பெட்டியை கொடுங்கள் என்று என்னிடம் இருந்து வாங் கி அதில் அந்த சிடியை வைத்து பூட்டி என்னிடம் கொடுத்தார்.” பின்பு தலைவ ரின் பெட்டியை வண்டியில் வைத்துவிட்டு வெளியில் நின்றேன். என் கையை
பிடித்துக் கொண்டு தலைவர் “ ரொம்ப உதவியா இருந்தீங்க தம்பி ரொம்ப நன் றி”  என்றார் 20 ஆண்டுகளாக கட்சியில் உள்ளவர்களுக்கு கூட இந்த வாய்ப்பு கிடைத்திருக்காது எனக்கு கிடைத்துள்ளது, யாருக்கும் கிடைக்காத பாக்கியம் எனக்கு கிடைத்தது. நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என் றேன்.

வண்டியில் தலைவர் அமர்ந்தவுடன் நாங்கள் (தலைவர், நான், ராஜா உடை யார், மாரி, கருண், நம்பி) வானூர்தி நிலையம் நோக்கி பயணித்தோம்.தலைவர் அலைபேசியில் பேசிக்கொண்டே வந்தார். நல்ல கூட்டம்,நிறைய வாலிபர்கள், வெயில் என்று கூட பார்க்காது நிறைந்த கூட்டம் என்று சொல்லிக் கொண்டே வந்து போது, “நம் கட்சியில் நல்ல ஈடுபாடு கொண்ட ஒரு தம்பி ஆனந்த்ராஜ் என்னைப் பார்த்துக் கொண்டார்” என்று சொன்னார். அப்போது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. “சரத் நல்லா இருக்கானா?”என்று கேட்டார் அவர் யாரு என்று எனக்கு தெரியாது அப்போது நம்பியிடம் தலைவர் சொன்னார் “நான் ஈழம் சென்று திரும்பிய போது என்னை பத்திரமாக கொண்டு வந்து சேர்த்த தம் பிகளில் ஒருவர் சரத் என்கிற பீட்டர் கென்னடி, அவன் நினைவாக என் தம்பி மகனின் மகனுக்கு, என் பேரனுக்கு இந்தப் பெயரை வைத்தேன்” என்றார், அப் போது தலைவர் அடிக்கடி சொன்னது என் நினைவுக்கு வந்தது ““I supported LTTE
yesterday, I do support LTTE today, I will too support LTTE tomorrow” எந்த அளவுக்கு விடுத லைப் புலிகளையும் அந்த மக்களையும் தலைவர் நேசிக்கிறார் என்று புரிந்து கொண்டேன். அரசியலுக் காகவும், பிழைப்புக்காகவும் பேசும் தலைவர்களுக்கு மத்தியில் நம் தலைவரின் உண்மையான உணர்வை கண்டு என் கண்களில் நீர் வந்தது.

வானூர்தி நிலையம் வந்து அடைந்தோம்,தலைவரின் பெட்டியை எடுத்துக்
கொண்டு நடந்தேன். வண்டியில் வந்த சில தோழர்கள் தலைவர் உடன் புகைப் படம் எடுத்துக் கொண்டனர்.அப்போது இந்த கூட்டத்தை புகைப்படம் எடுத்த தோழர் சிவா இதை album போட்டு தலைவர் இடம் கொண்டு வந்து கொடுத்தார். இதன் சிடி நாளை கிடைக்கும் என்றவுடன் என்னிடம் அதை வாங்கி என் சென் னை வீட்டிற்கு அனுப்புங்கள் மற்ற கடிதங்கள் உடன் சேர்ந்து விடும். பிரசாந் தை கூப்பிட்டு தனியாக வைக்க சொல்லுங்கள் என்றார்.அப்போது தலைவரி டம் நான் ஒரு கட்டுரை எழுதலாம் என்றுள்ளேன் அந்த ஒரு நாள் என்று. எந்த ஒரு நாள் என்று தலைவர் கேட்க “ உங்கள் உடனான ஒரு நாள் அனுபவம் பற்றி” என்றேன் “ ஓ.. தாராளமாக எழுதுங்கள் நிச்சயம் சங்கொலியில் போட்டு விடுவோம் என்று விடை பெற்றார்.

உடனே அண்ணன் பாண்டியன்,அருணகிரி, அடைக்கலம் மற்றும் தம்பி பிர சாந்த் அனைவருக்கும் தலைவரை வானூர்தி ஏற்றிவிட்டோம் என்று சொல்லி விட்டு, வந்த வண்டியில் ஏறி என்னை செம்பூர் இரயில்நிலையம் நோக்கி சென் றேன், அப்போது பிஜேபியைச் சேர்ந்த ராஜா உடையார், ஆனந்த்ராஜ் எப்போது இருந்து கட்சியில் உள்ளீர்கள் என்றார், எனக்கு வயது 16 இருக்கும் போது, எதற்கு கேட்கிறேன் என்றால் நாங்கள் எல்லாம் அய்யா உடன் மதியம் சாப்பி டப்போனோம், சாப்பிட்டு விட்டு உணவகத்தை விட்டு வெளியேற நினைத்த போது அய்யா கேட்டார் ஆனந்த்ராஜ்க்கு சாப்பாடு வாங்கி விட்டீர்களா என்று. இதை போல தொண்டர்கள்மீது பாசம் வைத்துள்ள தலைவரை நான் இப்போது தான் பார்க்கிறேன், அந்த இயக்கத்தில் இருப்பதற்கு நீங்கள் பெருமைப்பட
வேண்டும் என்றார். செம்பூர் இரயில் நிலையம் வந்தது. இந்த சம்பவங்களை
நினைத்துக் கொண்டே வீடு திரும்பினேன். அன்று முழுவதும் மற்றும் மறுநாள் காலையும் இதை என் நண்பர்களுக்கு சொல்லிக்கொண்டே இருந்தேன் இதை நாம் இயக்க வாலிபர்களும் இணையதள நண்பர்களும் படிக்க வேண்டும் என்ப தற்காகவே எழுதினேன்.இது நான் எழுதும் முதல் கட்டுரை பிழைகள் இருந் தால் மன்னிக்கவும்.

ஆனந்த்ராஜ் -மும்பை 

No comments:

Post a Comment