மதுக்கரை, வாளையார் தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்றி திட்டத்தை விரைந்து
மதுக்கரை, வாளையார் தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்றி திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக #மதிமுக மாநில இளைஞரணிச் செயலர் வே.ஈஸ்வரன் நெடு ஞ்சாலைத்துறை அமைச்சருக்கு எழுதிய கடித விவரம்:
மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் தலைமையில் சென்னையில் தமிழக தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை நிறைவேற்றுவது தொடர்பாக அண்மை யில் கூட்டம் நடந்தது. தேசிய நெடுஞ்சாலை எண். 47 பற்றியும் பேசப்பட்டுள் ளது.
இச்சாலையில் சாலைப்பணிகளை டெண்டர் எடுத்த ஐவிஆர்சிஎல் நிறுவனத் தின் நிர்வாக இயக்குநர், திட்டத்தைச் செயல்படுத்த நிதி இல்லாததால்தான் காலதாமதம் ஆவதாகவும் விரைவில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதி செய்து கொள்ளாததால் கடன் வழங்க வங்கி மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார். கூட்டம் முடிந்து 3 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை ஒப்பந்தம் இறுதிசெய் யப்படவில்லை.
மதுக்கரை வாளையார் சாலையில் பாதி வேலை முடிந்த நிலையில்இப்பாதை யில் பயணம் செய்வது அபாயகரமாக மாறியுள்ளது. சாலை விபத்துகளில் தொடர்ந்து அதிகம் பேர் உயிரிழந்து வுருகின்றனர். ஆனால் இதைக் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை தருகிறது.
வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு மாநில அரசின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் இல்லையென்றால் தமிழகத்தின் வளர்ச்சி மிகவும் பாதிக் கப்படும்.
உடனடியாக மாநில அரசு இப்பிரச்னையில் தலையிட்டு சாலைப் பணிகளை விரைந்து முடிக்க் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment