Sunday, October 27, 2013

புகழேந்தி தங்கராஜ் நூல் வெளியீடு - வைகோ உரை -பாகம் 4

புகழேந்தி தங்கராஜின் “இது இல்லை எனில் எது இனப்படுகொலை?” நூல் வெளியீட்டு விழா #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ ஆற்றிய உரை பாகம் 3 யின் தொடர்ச்சி வருமாறு...

அங்கயற்கண்ணியின் தியாகம்

எவ்வளவு வீரத்தோடும் தீரத்தோடும் விடுதலைப்புலிகள் போராடினார்கள்?களத்தில் பலியான முதல் கரும்புலி கேப்டன் மில்லர். முதல் வீராங்கனை
அங்கயற்கண்ணி.

யாழ் குடா நாடு, ஏழு தீவுகளைக் கொண்டது. வேலனைத் தீவில் பிறந்தவள் அங்கயற்கண்ணி. ஒரு முக்கியமான தாக்குதலுக்காக அவள் தேர்ந்து எடுக்கப் படுகிறாள். வீட்டுக்கு வருகிறாள். அம்மாவைப் பார்க்கிறாள். தம்பிகளை நன்கு படிக்க வையுங்கள் என்கிறாள். புறப்படுகையில், அம்மா நான் காற்றோடு காற் றாக விரைந்து போய்விடுவேன் என்கிறாள். அப்போது அந்தத் தாய்க்கு அது புரியவில்லை.காங்கேசன் துறை துறைமுகத்தில்,இலங்கைக் கடற்படையின் ஒரு கட்டளைக் கப்பல் நிற்கிறது. 6300 டன் எடை. அதைத் தகர்ப்பதற்குத்தான் 50 கிலோ எடை கொண்ட அங்கயற்கண்ணி தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கின் றாள்.17 கடல் மைல், 35 கிலோமீட்டர் நீச்சல் அடித்துப் போனாள். சகதோழிகள் உடன் வந்து அனுப்பி வைக்கிறார்கள்.வெடிகுண்டுகளையும் சுமந்துகொண்டு
போகிறாள். அந்தக் கப்பலின் மீது மோதுகிறாள். வெடித்துச் சிதறுகிறது.பக்கத் தில் நின்று கொண்டு இருந்த இன்னொரு கப்பல் டோரா, அதுவும் வெடிக்கிறது. நெடுந்தொலைவுக்கு வெளிச்சம் தெரிகிறது. தொலைவில் கரையில் நின்று கொண்டு இருந்த தோழிகள் அதைப்பார்த்து ஆரவாரம் செய்கிறார்கள். அதே வேளையில் அங்கயற்கண்ணியை எண்ணி வேதனைப்படுகிறார்கள்.

தோழர்களே, கடல் சொல்லுகிறது;அலைகள் சொல்லுகின்றன. அங்கயற்கண் ணி சமுத்திரகுமாரி ஆகி விட்டாள்; எங்கள் புதல்வி ஆகி விட்டாள்; அவளை
எங்கள் மடியிலே சுமக்கிறோம் என்று சொல்லுவதாக, அந்தச் சத்தம் தங்கள்
செவிகளில் வந்து மோதுவதாகக் கருதி தோழிகள் வருந்துகிறார்கள்.

நான் ஓரளவுக்கு உலக வரலாறைப் படித்தவன், யுத்த களங்களைப் படித்தவன். வியட்நாமிலே இப்படி நடந்தது உண்டா? சீனத்திலே இதைப் போலச் செய்து இருக்கின்றார்களா? ஃபிடல் கேஸ்ட்ரோ படையில் செய்து இருக்கின்றார்களா? கிடையாது. நான் கேஸ்ட்ரோவை மதிக்கிறேன்,மாவோவை மதிக்கிறேன், ஹோ-சி-மின்னை மதிக்கிறேன். அவர்களைக் குறைத்துப் பேசவில்லை. ஆனால், என் தலைவன் பிரபாகரன் படையினர் நிகழ்த்திய சாகசங்களைப் போல இவர்கள் எவரும் செய்தது கிடையாது.



இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது ஒன்று. அங்கயற்கண்ணி சொல் லுகிறாள்: நல்லூர் கந்தசாமி கோவில் திருவிழா நடக்கின்றபோது நான் அந்தத் தாக்குதலை நடத்த வேண்டும் என்கிறாள். ஏன்? என்று தோழிகள் கேட்கிறார் கள். அப்பொழுது தான், கச்சான் வித்த காசு என் அம்மாவுக்குக் கொஞ்சம் பணம்
கிடைக்கும். என் நினைவு நாளாகக் கொண்டு,என் வீட்டுக்கு வருவார்கள்.அவர் களுக்கு உணவு அளிப்பதற்கு அப்போதுதான் அம்மாவிடம் கொஞ்சம் காசு இருக்கும்; எனவேதான் அந்த நாளைத் தேர்ந்து எடுத்தேன் என்கிறாள்.அத்தகை ய உறுதியோடு போராடினார்கள்.

இரண்டு செய்திகளைப் பதிவு செய்வதற்காகவே, நான் இந்தக் கூட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்றேன்.

ஐ.நா.வின் வஞ்சகம் குறித்து சார்லஸ் பெற்றி ஐ.நா. கடமை தவறி விட்டது
என்று தொடுத்த குற்றச்சாட்டுகளின் பேரில், பான் கி மூன் ஒரு குழுவை நிய மித்தார், உள்ளக விசாரணைக்கு.அந்தக் குழு அறிக்கை தந்து விட்டது; ஆனால், வெளியே வரவில்லை.

ஐந்து நாள்களுக்கு முன்பு, ஒன்பதாம் தேதி, ஜேன் எலியாசென் என்பவர், அந்த
அறிக்கை குறித்துச் சொல்லுகிறார்: 2009 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் நாள் தான், ஐ.நா.வின் யுனிசெஃப் கடைசியாக, யுத்தகளத்தில் பாதிக்கப்பட்ட, ஆயு தம் ஏந்தாத தமிழ் மக்கள், குழந்தைகள்,பெண்கள், வயது முதிர்ந்தவர்கள், எல் லோரையும் பட்டினி போட்டுச் சாகடிக்க ராஜபக்சே முடிவு எடுத்த காலத்தில், அவர்களுக்கு உணவு அனுப்புவதற்கு, யுனிசெப் 18.000 மெட்ரிக் டன் உணவை, பத்து நாள்களுக்கு ஒருமுறை கப்பலில் அனுப்ப வேண்டும்.

அப்பொழுது, சிங்கள இராணுவமும் விலகிக் கொள்ளும்; புலிகளும் விலகிக்
கொண்டு வழி விட்டு விடுவார்கள்.அப்படிக் கடைசியாக அவர்களுக்கு உணவு சென்றது, ஜனவரி 15 ஆம் நாள்தான். அதற்குப் பிறகு, உணவு போகவில்லை. மக்கள் சாகிறார்கள். ஒரு மாதத்துக்குப் பிறகு, அங்கே உள்ள ஐ.நா. அதிகாரி களின் கணக்குப்படி, 8500 பேர் செத்து இருக்கின்றார்கள். இதுமாதிரி உலகத்தில் வேறு எங்கும் நடக்கவில்லை.

இப்பொழுது சிரியாவில் டமாஸ்கசுக்குப் பக்கத்தில் 900 பேர்களை அதிபர் பசார்
அல் அஸ்ஸாத் விமானங்கள் குண்டு வீசிக் கொன்று விட்டன என்று குற்றம்
சாட்டி, உலக யுத்தத்துக்கே தயாராகிக்கொண்டு இருக்கின்றார்கள். அமெரிக்கா
கடற்படையை அனுப்பியது. பிரான்சும்,பிரிட்டனும் முண்டா தட்டின.கடைசி யில், ரஷ்யாவின் புடின், ரசாயன ஆயுதங்கள் இருந்தால் அதைக் கொண்டு வந்து ஒப்படைக்கட்டும் என்று பேசி முடித்து விட்டார்கள்.அதை நாம் வரவேற் கிறோம். அப்படியானால்,இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட் டார்களே, எங்கே இருக்கிறது நீதி? எங்கே இருக்கிறது ஐ.நா. சபை?

இதற்கெல்லாம் காரணம் என்ன? உலகின் பல நாடுகள் தமிழர்களுக்கு வஞ்ச கம் செய்தன; ஐ.நா.வே துரோகம் செய்தது. கேள்வி கேட்பார் கிடையாதா? மடிந் த மாவீரர்களின் இரத்தத் துளிகள் பேச வைக்கின்றன. நீதி கிடைக்காமல் போய் விடாது.

தமிழர்களுக்கு வஞ்சகம் செய்த பிரணாப் முகர்ஜி

என்ன ஆயிற்று தெரியுமா? இங்கே ஜனாதிபதி பதவியில் ஒளிந்து கொண்டு
இருக்கின்ற மனிதர் பிரணாப்முகர்ஜி,தமிழர்களுக்கு வஞ்சகம் செய்தவர்.என்ன
வழக்கு வேண்டுமானாலும் போடு.(பலத்த கைதட்டல்). முன்னாள் ராணுவ
அமைச்சர், முன்னாள் வெளியுறவு அமைச்சர், சென்னைக்கு வந்து, தி.மு.க.
தலைவர் கருணாநிதி வீட்டுக்கு முன்னால் நின்றுகொண்டு, இலங்கையில் போரை நிறுத்தச் சொல்வது எங்கள் வேலை இல்லை என்று சொன்னாரே? போர் வளையத்துக்குள்ளே மொத்தம் 70,000 பேர்கள் தாம் இருக்கின்றார்கள் என்று நாடாளுமன்றத்தில் பொய் சொன்னார்.அதை எதிர்த்துத்தான், தூத்துக் குடிக்கு வந்த பிரணாப் முகர்ஜிக்குக் கருப்புக் கொடி காட்டி நாங்கள் கைதா னோம்.

2009 மார்ச் 8 ஆம் தேதி, இலங்கைக்கு ஐ.நா. அதிகாரிகள் குழு ஒன்று வருகிறது.
உணவு இன்றி, நிறையப் பேர் செத்து விட்டார்கள் என்று கணக்குக் கொடுக்
கின்றார்கள். ஈழத்தமிழர் படுகொலையைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டுக்கு ஐ.நா. ஆளாக நேரிடும் என்றும் எச்சரிக்கின்றார்கள்.

அந்தக்குழு அடுத்த நியூயார்க் போகிறது.மார்ச் 12ஆம் தேதி ஒரு கூட்டம் போடு கிறார்கள் ஒரு உயர்மட்டக்குழு உட்கார்ந்து பேசு கிறது. ஒரு மின் அஞ்சல்
அனுப்புகிறார்கள். யாருக்கு? மனித உரிமைகள் கவுன்சில் தலைவர் நவநீதம்
பிள்ளைக்கு அனுப்புகிறார்கள். என்ன சொல்லுகிறார்கள்? இலங்கையில் இறந் தவர்களின் எண்ணிக்கையை சரியாக உறுதி செய்யாமல், நீங்கள் அறிவிக்கக் கூடாது. போர்க்குற்றம் என்றோ, மனித உரிமைகள் அழிக்கப் படுவதாகவோ, இலங்கை அரசு மீது நீங்கள் இப்போது குற்றச்சாட்டு எதுவும் சொல்லக்கூடாது. அது புத்திசாலித்தனம் ஆகாது.அடுத்த வரிதான் மிகவும் முக்கியம்.விடுதலைப் புலிகள் மீது குற்றச்சாட்டுகளை வைக்க வேண்டும்.

உடனே, மனச்சாட்சி உள்ள ஐ.நா.அதிகாரிகள், புலிகள் மீது குற்றச்சாட்டுகளை வைப்பதற்கு எந்த நியாய மும் இல்லை. இப்போது, தமிழர்கள்தான் அழிக்கப்பட் டுக் கொண்டு இருக்கின்றார்கள் என்கிறார்கள். 

விஷத்தைக் கக்கிய நவநீதம் பிள்ளை 

இந்த மின் அஞ்சலை அனுப்பியவன் யார் தெரியுமா? விஜய் நம்பியார். யாருக் கு? நவநீதம் பிள்ளைக்கு. அந்த அம்மையாரின் பெயரில் நீதி என்ற சொல் இருப் பதால், அவரிடம் நீதி இருக்கும் என்று எண்ணி, உங்களைப்போல ஏமாந்தவர் களுள் நானும் ஒருவன்.அவரை இந்த வயதில் திருமணம் செய்து கொண்டு, இலங்கையைச் சுற்றிக்காண்பிக்கிறேன் என்று சிங்கள மந்திரி ஒருவன் சொன் னான். அதைக் கண்டித்து, முதல் அறிக்கை கொடுத்தவன் நான். 

அந்த நவநீதம் பிள்ளை, விஷத்தைக் கக்கி இருக்கின்றார். அதை நான் இன்று வரை யிலும் கண்டிக்கவில்லை.ஏன் தெரியுமா? ஏற்கனவே, புலிகளுக்கு எதி ரான ஏடுகள், ஊடகங்கள்இங்கே இருக்கின்றன. நான் கண்டித்து அறிக்கை
கொடுத்தால், பார்த்தீர்களா, நவநீதம் பிள்ளையே புலிகள் மீது குற்றம் சாட்டி
விட்டார்;அவர்கள் தான் கொலை செய்தார்கள், பயங்கரக் குற்றங்களைச் செய் தார்கள் என்று சொல்லிவிட்டாரே என்பார்கள். புலிகளைக் கொச்சைப் படுத்த முனைவார்கள்.

ராஜபக்சே அரசுக்கு நற்சான்றுப் பத்திரம் வாசிப்பார்கள். அதற்காகத்தான் வட
மாகாணத்தில் தேர்தல் நடத்தினார்கள்; இப்போது காமன்வெல்த் மாநாட்டை
நடத்துகிறார்கள். இலங்கையில் ஜனநாயகம் திரும்பி விட்டது;இனி அவர்களே பார்த்துக் கொள்வார்கள் என்று சொல்லுவதற்காக இந்த மாநாடு.நமக்குக் கிடைக்க இருந்த நீதி, இப்பொழுது மறுக்கப்படுகிறது.

உண்மையை உடைத்துக் காட்டிய பினாங்கு இராமசாமி

ஒரு அடிதான் முன்னே வைத்தோம்; இப்பொழுது நம்மை மூன்று அடிகள் பின் னே தள்ளி விட்டார்கள். நவநீதம் பிள்ளையின் அறிக்கையில் விஷத்தைக்
கக்கி இருந்தார். அதைப் படித்தவுடன், கொளத்தூர் மணிக்குத்தான் முதலில்
பேசினேன். தமிழனுக்குத் தமிழன்தான் முதல் எதிரி. இது இந்த இனத்துக்குச்
சாபக்கேடு என்று சொன்னேன். அடுத்து கோவை இராமகிருட்டிணனோடு பேசி னேன், தம்பி திருமுருகன் காந்தியோடு பேசினேன். என் ஆத்திரத்தையெல் லாம் கொட்டித் தீர்த்தேன்.ஆனாலும் அப்போது அறிக்கை விடவில்லை.இன்று
வரையிலும் அறிக்கை விடவில்லை.

ஆனால், பினாங்கு துணை முதல்வர் இராமசாமி, இந்த உண்மையை உடைத் துக் காட்டி இருக்கின்றார். அவர் சொன்னதை, நான் நூற்றுக்கு நூறு வழிமொழி கிறேன்.

நவநீதம் பிள்ளையிடம் கேட்கிறார்கள்.இலங்கையில் இனப்படுகொலை நடந் ததாக யாரும் என்னிடம் சொல்ல வில்லை என்கிறார். ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலை நிரூபிக்கப் பட்டது. இங்கே அப்படி நடக்கவில்லை என்கி றார். இசைப்பிரியா சிதறடிக்கப் பட்டாளே, அது உனக்குத் தெரிய வில்லையா? நீயும் ஒரு பெண்தானே?

சேனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப் பியதே, அவன் சொன்ன வார்த்தைகளை
எழுத முடியுமா? எட்டுத் தமிழ் இளைஞர்களை அம்மணமாக இழுத்துக் கொண் டு வந்து சுட்டுக் கொன்றானே? இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும் இனப்
படுகொலைக்கு? பச்சைக் குழந்தைகளைக் கொன்றானே? உன்னுடைய ஐ.நா. நியமித்த மூவர் குழு அறிக்கையில் என்ன சொல்லி இருக்கின்றது? பட்டினி
போட்டுக் கொன்றான்; மருத்துவ மனைகள் மீது குண்டுகளை வீசிக் கொன் றான்? என்று சொல்லுகிறதே? இது இனக்கொலை இல்லாவிட்டால் எது இனப் படுகொலை?

எனவே, இது திட்டமிட்ட சதி.காமன்வெல்த் மாநாட்டை அங்கே நடத்திவிட்டு, வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தி விட்டோம் என்று சொல்லி, இந்த இனக் கொலையின் கூட்டுக் குற்றவாளியான இந்திய அரசு, சோனியா காந்தி இயக்கு கின்ற இந்திய அரசு, அது சிசிலி இரத்தம், மறந்து விடாதீர்கள். அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கின்றன. மன்மோகன்சிங் பாவம். சின்னப் பயல் எல்லாம் அவரைப் பார்த்து முட்டாள் என்கிறான். (கைதட்டல்).

காமன்வெல்த் பொதுச் செயலாளராக இருப்பவன் ஒரு இந்திய அதிகாரி கம லேஷ் சர்மா. மாநாட்டை நடத்துவான். இந்தியப் பிரதமர் போகாமல் கூட இருந் து கொள்வார்.இதை நான் தொடக்கத்திலேயே எச்சரித்தேன். இளைஞர்களிடம் அதைத் தான் சொன்னேன். இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்ற கோரிக் கையை வைக்காதீர்கள். கொழும்பில் இந்த மாநாடு நடக்கக்கூடாது. காமன் வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை இடை நீக்கம் செய். இதுதான், நமது
கோரிக்கை. இங்கிலாந்து ராணி எலிசபெத், அந்த மாநாட்டுக்குப் போகாமல் இருக்கக்கூடும். அந்த அம்மையார்தான், அந்த அமைப்புக்குத் தலைவர். அவர் போகவில்லை. வெளியுறவுத் துறை போக வேண்டாம் என்று சொல்லுகிறது. டேவிட் கேமரூன் போனாலும் போவார். இலங்கை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சிலானி பண்டாரநாயகாவை நீக்கிவிட்டு,இராஜபக்சே கைக்கூலி பீரி சை அந்தப் பதவியில் அமர்த்தினான். அதனால், அந்த அமைப்பில் உள்ள 25
நாடுகளின் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள், கொழும்பு மாநாட்டுக்கு யாரும் போகக்கூடாது என்று கடிதம் எழுதி இருக்கின்றார்கள். கனடா பிரதமர்
ஸ்டீபன் ஹார்பர் அந்த மாநாடு கொழும்பில் நடக்கக்கூடாது என்கிறார்.எதிர்க் கட்சியான லிபரல் கட்சித் தலைவரும் அதையே கூறுகிறார்.கடைசியில் மன் மோகன் சிங் போகாமல்,ஒரு எடுபிடியை அனுப்பலாம்; அப்படி ஒரு நாடகத் தையும் நடத்துவார்கள்.

அந்த மாநாடு அங்கே நடந்துவிட்டால்,அதற்குப்பிறகு, நமக்கு நீதியே கிடைக் காமல் போய்விடுமே? என்று நினைக்காதீர்கள்.அப்படி அவன் அந்த மாநாட்டை அங்கே நடத்தினால் காமன்வெல்த் என்ற அமைப்பே முடிந்து போய்விட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள். நாம் உலகில் 65 நாடுகளில் இருக்கிறோம். நம்மை விட அறத்தைச் சொன்னவர்கள் உண்டா? மானத்தைச் சொன்னவர்கள் உண்டா? நம்மை விடப் பண்பாட்டைப் போதித்தவர்கள் உலகில் உண்டா?யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தத்துவத்தை, உலகத்துக்குத் தந்தவனே
தமிழன்தானே? நாம் கவலைப்பட வேண்டாம். வீரர்கள் சிந்திய இரத்தம், அவர் கள் செய்த தியாகம் வீண் போகாது.

ஐ.நா.வில் நீதி இல்லை

பலமான எதிரிகளை எதிர்த்து மோதப் போகிறோம். ஐ.நா.வில் நீதி இல்லை,
காமன்வெல்த்தில் நீதி இல்லை. இராஜபக்சேயைக் குற்றவாளிக் கூண்டில்
நிறுத்த வேண்டும். தமிழர் தாயகத்தில் இருந்து சிங்களவனை வெளியேற்ற
வேண்டும்.

மாலதி, கார்த்திகேயன் என்ற இருவர் ஆராய்ந்து அறிவித்ததை, இந்தப் புத்தகத் தில் எழுதி இருக்கிறார். அந்த வீடியோவைப் பார்த்தால் நீங்கள் சாப்பிட முடி யாது. எல்லாம் புலிப்படையின் போராளிப் பெண்கள். முகத்தைக் காட்டவில் லை. நாசப்படுத்துகிறான்.ஐயோ, அதைப் பார்க்கவே முடிய வில்லை. அந்தப் பிள்ளைகள் சொல்லுவதைக் கேட்க முடியவில்லை.சிங்களர்களின் கருவைத் தமிழ்ப் பெண்களின் வயிற்றில் சுமக்கச் செய்கின்ற இன அழிப்பு வேலை நடக் கிறது அங்கே. இப்போது,இந்த நிமிடத்தில் நடந்துகொண்டு இருக்கின்றது. இது, கொலையை விடக் கொடூரமானது. ஒரு பெண்ணிடம் இப்போது என்ன நடக் கிறது அங்கே என்று கேட்கிறார்கள். அவள் சொல்லுகிறாள். மற்றொரு சகோ தரனும் அதைத்தான் சொல்லுகிறான். சிங்களச் சிப்பாய்களை வைத்து, தமிழ்ப் பெண் களோடு இனக்கலப்பு செய்கிறார்கள் என்கிறான். அதைத்தான் எழுதி
இருக்கிறார்.

தமிழ்நாட்டில் நாம் ஏழு கோடிப் பேர் இறந்தே பிறந்த நடைப்பிணங்களா?கேட் கிறார் புகழேந்தி தங்கராஜ். இந்தத் தியாகராயர் அரங்கத்தில் அந்தக் கேள்வி யைத்தான் அவர் முன்வைக் கின்றார்.

கடமைகள் நிரம்ப இருக்கின்றன; ஆயத்தமாவோம்

இது முக்கியமான கட்டம். சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு
என்ற கருத்தை முதன்முதலாக முன்வைத்து, பிரஸ்ஸல்ஸ் மாநாட்டில் வலி யுறுத்தினேன். உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கின்ற ஈழத்தமிழர்கள் அதில்
வாக்களிக்க வகை செய்ய வேண்டும் என வலியுறுத்தினேன்.இந்தக் கருத்துக் கு இன்று உலகம் முழுவதும் வாழுகின்ற தமிழர்கள் இடையே வரவேற்புக்
கிடைத்து வருகின்றது. அதுதான் நம்முடைய இலக்கு. அதை நாம் அடைய முடியும்.

வருகின்ற நவம்பர் 8  ஆம் தேதி, முள்ளிவாய்க்கால் முற்றம், அண்ணன் பழ. நெடுமாறன் அவர்களால் திறக்கப் படுகிறது. உணர்வுள்ள தமிழர்கள் அனைவ ரும் அங்கே திரண்டு வாருங்கள். கடமைகள் நிரம்ப இருக்கின்றன. அதைச் செய்து முடித்திட, இளைஞர்கள் ஆயத்தமாக வேண்டும். தமிழ் ஈழம் மலரும்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.

புகழேந்தி தங்கராஜ் நூல் வெளியீடு - வைகோ உரை -பாகம் 3

No comments:

Post a Comment