Saturday, October 12, 2013

வாலிபால் போட்டியும் வைகோவும்

பாளையங்கோட்டை சேவியர் பள்ளி சார்பில் பள்ளி மாணவர்களுக் கான மின்னொளி மாநில வாலிபால் போட்டி இறுதி விழாவில் #மதிமுக பொது செயலாளர் #வைகோ

 14 வது லூயிஸ் வெர்டியர் சுழற்கோப்பை மற்றும் புரொபசனல் கூரியர் சுழற் கோப்பைக்கான மின்னொளி மாநில வாலிபால் போட்டியில் மாநிலம் முழு வதும் இருந்து பங்கேற்றுள்ள 14 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 3 நாட் கள்  போட்டிகள் நடத்தப் பட்டன.

நேற்று (11.10.13 )இரவு நடந்த இறுதி போட்டியில் பாளை.,சேவியர் பள்ளி அணி, தஞ்சாவூர் அரசு பள்ளி அணிகள் மோதின. இதில் பாளை.,சேவியர் பள்ளி அணி வெற்றி பெற்று முதலிடத்தையும், தஞ்சாவூர் அரசு பள்ளி 2ம் இடத்தையும்,திரு வாரூர் பள்ளி அணி 3ம் இடத்தையும், திருப்பூர்  வித்யவிகாசி பள்ளி அணி 4ம் இடத்தையும் பிடித்தன.

பரிசளிப்பு விழா

இதனையடுத்து போட்டிகளில் முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு பாளை.,சேவியர் கலைமனை கள் அதிபர் டேனிஸ் பொன்னையா தலைமை வகித்தார். 

தமிழக கைப்பந்து கழக பொதுச் செயலர் மார்டின் சுதாகர் முன்னிலை வகித் தார். 

விழாவில் ம.தி.மு.க., பொதுசெயலாளர் வைகோ, வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பைகளை வழங்கி பேசியதாவது:

நான் படிக்கும் போது மாணவர்கள் ஜாதி, மதம் பார்ப்பதில்லை. நான் சினிமா வுக்கு எதிரி அல்ல. பழைய சினிமா படங்களில் வன்முறை இருக்காது. சமூக அக்கறை உள்ள கருத்துக்கள் அதிகம் இடம்பெற்றிருந்தன. தற்போது வெளி வரும் சினிமா படங்களில் வன்முறை அதிகமுள்ளதோடு, சமூக அக்கறை உள்ள கருத்துக்கள் இல்லை. 

விளையாட்டு மூலம் மாணவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த முடியும். விளையாட்டு மாணவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கும், ஒழுக்கத்திற்கும் அவசியமாகும். தாய், தந்தையருக்கு அடுத்த படியாக உள்ள ஆசிரியர்களுக்கு மாணவர்கள் கட்டுப்பட்டு நடந்தால் எதிர்காலம் சிறந்து விளங்கும்.இவ்வாறு வைகோ பேசினார்.






No comments:

Post a Comment