Saturday, October 5, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 22

நாள்:-03.01.2008

இலங்கைக்கு இந்திய ஆதரவு இழிவானது!

ஈழத்தமிழரின் வேதனைக் குரல்,இந்திய அரசின் காதுகளில் விழாதா?


அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

இலங்கைத் தீவில் வாழும் தமிழர்களின் விவரிக்க முடியாத துன்பங்களையும்,
துயரங்களையும் எண்ணி, உலகெங்கும் வாழும் தமிழர்களும்,நானும் படுகின்ற வேதனையையும், கவலையையும், தங்களுக்குத் தெரிவிக்கும் விதத்தில் 2008 ஆம் ஆண்டு உதயமாகும் இந்நேரத்தில், இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

வருகின்ற பிப்ரவரி 4, 2008 அன்று, கொழும்பில் இலங்கை அரசு கொண்டாட
இருக்கும் தேசிய சுதந்திர தின விழாவில், தாங்களும் பங்கு ஏற்க இருப்பதாகச்
செய்தித்தாள்களில் வந்த செய்தி மிகவும் கவலை அளிக்கிறது.

தமிழ் ஈழ மக்களின் வருந்தத்தக்க சோக வரலாறு, கடந்த ஐம்பது ஆண்டுகளா கக் கண்ணீரால் எழுதப்பட்டு வருகிறது. இந்துமாக்கடலின் வரைபடத்தில், இலங்கைத்தீவின் நிலப்பகுதி இரத்தக்கண்ணீர்த்துளி போலக் காட்சி அளிக் கிறது.

இலங்கையை ஐரோப்பியர்கள் கைப்பற்றுவதற்கு முன்பு வரையிலும், அங்கு
உள்ள மண்ணின் மைந்தர்களான தமிழர்கள், ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத்
தங்களுக்கென்று தனி அரசு அமைத்து ஆண்டு வந்தனர். இலங்கை யில் ஆட்சி புரிந்த ஐரோப்பியர்கள், 1948 ஆம் ஆண்டு, பிப்ரவரி 4 ஆம் நாள், இலங்கையின் சுதந்திரத்தைச் சிங்களவரிடம் அளித்து விட்டு, அந்த நாட்டை விட்டு வெளி யே றியதும், சிங்கள இனவாத அரசு நிறைவேற்றிய முதல் சட்டம், அங்கு வாழும் பத்து இலட்சம் இந்திய வம்சாவழித் தமிழர்களின் குடி உரிமையைப் பறித்த கொடுஞ்சட்டம் ஆகும். இதுபோன்ற மனிதாபிமானம் அற்ற சட்டம், உலகில் வேறு எங்கும் நிறைவேறியது இல்லை. இது அங்கு வாழும் இந்திய வம்சா வழித் தமிழர்கள் மீது விழுந்த பேரிடி ஆகும்.

பிப்ரவரி 4 ஆம் நாள் கொண்டாடப்படும் இலங்கை அரசின் சுதந்திர தினவிழா,
இந்தியத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை, வஞ்சகத்தை நினைவு படுத்துவதாகவே உள்ளது. ஆகையால்தான், தாங்கள் சிங்கள அரசின் தேசிய சுதந்திர தினவிழாக் கொண்டாட்டங் களில் கலந்து கொள்ள இருப்பதாக வந்த செய்தி, உலகெங்கும் வாழும் தமிழர்களின் மனதில் பெரும் வேதனையை ஏற் படுத்தி உள்ளது.

இலங்கை அரசு போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக, நேர்மை இன் றி ரத்து செய்ததால், அமைதிப்பேச்சுகளுக்காகத் திறந்து இருந்த கதவுகளை மூடிவிட்டது.

இங்கு மிக முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய உண்மை என்னவென்றால், 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் நாள், 30 நாள்களுக்குத் தாங்களாகவே போர் நிறுத் தம் அறிவித்தது சிங்கள அரசு அல்ல; விடுதலைப்புலிகள் இயக்கம்தான். தங் களை விட எண்ணிக்கையில் அதிகம் இருந்த சிங்கள இராணுவத்தை, யானை இறவு கணவாயில் நடைபெற்ற போரில் வென்று, களத்தில் வலுவான நிலை யில் இருந்துகொண்டு, போரை நிறுத்துவதாக அறிவித்தார்கள்.

இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை, 2002 ஜனவரி 22 ஆம் நாள், மேலும் 30 நாள்க ளுக்கு நீட்டித்து அறிவித்தனர்.உலக நாடுகள் கொடுத்த அழுத்தங்களால்,இலங் கை அரசு இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்க வேண்டிய சூழ்நிலையில், பிப்ரவரி 2002 இல் தானும் போர்நிறுத்தம் செய்வதாக அறிவித்தது.

ரனில் விக்கிரமசிங்கே பிரதமராகப் பொறுப்பு ஏற்றபின், நார்வே அரசின் முயற் சியால் அமைதிப் பேச்சுகள், அந்த நாட்டின் தலைநகர் ஆஸ்லோவில் நம்பிக் கையோடு தொடங்கியது. ஆனால், மூன்று சுற்றுப் பேச்சுகளுக்குப் பிறகு, அன் றைய அதிபராக இருந்த திருமதி சந்திரிகா குமாரதுங்க சதி செய்து, ரனில் விக் கிரமசிங்கே அமைச்சர் அவையில் இருந்த மூன்று அமைச்சர்களை பதவி நீக் கம் செய்து, அமைதிப் பேச்சுகளை முடக்கினார்.

இலங்கை அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பல நிகடிநவுகளைத் தக்க சான்றுகளுடன் நான் தங்களிடம் அளித்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளேன் என்பதைத் தாங்களே அறிவீர்கள். இலங்கை அரசு, 2005 ஆம் ஆண்டு ஜெனீவா வில் நடந்த இருதரப்புப் பேச்சுகளில் ஒப்புதல் அளித்த எந்த வாக்குறுதியையும் காப்பாற்றவில்லை.

இதற்கு இடையில், இலங்கை அரசு, அங்கு வாழும் தமிழர்கள் மீது தாக்குத லைத் தொடங்கியது. கோரமான செஞ்சோலைப் படுகொலையே இதற்கு ஒரு சான்று ஆகும். தமிழ்நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு ஜோசப் பரராஜசிங்கம், திரு ரவிராஜா நடராஜ், திரு மகேஸ்வரன் ஆகியோர், இலங்கைப் படையின ரால் மிருகத்தனமாகக் கொல்லப்பட்டு உள்ளனர்.

இந்திய-இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட வேண்டாம் என் ற  எனது வேண்டுகோளைத் தாங்கள் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்ட போதிலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, விமானப்படை ரேடார்களை யும், இராணுவத் தளவாடங்களையும் இலங்கை அரசுக்கு அளித்து, தமிழர்க ளுக்குத் துரோகம் இழைத்ததோடு மட்டும் அல்லாமல், தொலைநோக்குப் பார் வையோடு பண்டித நேரு அவர்களால் உருவாக்கப்பட்டு, திருமதி இந்திரா காந்தி அவர்களால் செயல்படுத்தப் பட்ட அணிசேராக் கொள்கையையும் காற் றில் பறக்க விட்டு உள்ளது.

இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சுக்குப் பலியாகி, அப்பாவித் தமிழர் கள் கொல்லப்படுகிறார்கள். மனித வாடிநக்கையின் அடிப்படைத் தேவைகளா ன, உணவு, மருந்து, மின்சாரம் ஆகியவை இல்லாமல், அங்கு வாழும் தமிழர் கள் தாங்கொணாத் துன்பங்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

ஐ.நா. சபையின் மனித உரிமைக் கழகத்தின் தலைவர் திருமதி லூயிஸ் ஆர்பர்
அவர்கள், இலங்கை அரசின் மனித உரிமைகள் மீறலை வருத்தத்துடன் சுட்டிக் காட்டி உள்ளார். அவரது குற்றச்சாட்டால் கோபம் அடைந்த இலங்கை அரசு, ஐ.நா.சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் அலுவலகம் ஒன்றை, கொழும்பு நகரில் திறப்பதற்கு அனுமதி மறுத்து உள்ளது. இந்த அராஜகமான முடிவுக்கு, ஐ.நா. மன்றத்தில் இந்தியாவும் ஆதரவு தெரிவித்து உள்ளது. இந்த இழிவான செயல், நமது நாட்டின் மதிப்பைக் குறைத்து உள்ளது. சிங்கள ஆட்சி யாளர்கள் நடத்துகின்ற கொடுமைகளால் அல்லலுறும் ஈழத்தமிழர்கள் எழுப்பு கின்ற வேதனைக்குரல், செவிடாய்ப்போன இந்திய அரசின் காதுகளில் விழவே இல்லை.

இந்தப் பின்னணியில், தமிழர்களின் இரத்தம் தோய்ந்த கைகளுடன் ராஜபக்சே
அரசு, கொழும்பில் பிப்ரவரி 4 ஆம் நாள் நடத்த இருக்கின்ற சுதந்திர தின விழா வில், தாங்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று தங்களை வேண்டிக் கொள் கிறேன்.

மேலும், இலங்கை அரசுக்குக் கொடுத்து இருக்கின்ற ரேடார்களைத் திரும்பப்
பெற வேண்டும் என்றும், இலங்கை இராணுவம் தமிழர்களைப் படுகொலை செய்வதை உடனடியாக நிறுத்துமாறு, உலக நாடுகளுடன் சேர்ந்து அரசியல்
அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தங்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

தங்கள் அன்புள்ள,

வைகோ

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே.

No comments:

Post a Comment