Monday, September 30, 2013

மறுமலர்ச்சி பயணம் ,தூத்துக்குடி மாவட்டம்-முதல் நாள்

மத்திய அரசு ஆட்டம் காண்கிறது விரைவில் நாடாளுமன்றத் தேர்தல்

#வைகோ சூசகம்

#மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மக்களைச் சந்திக்கும் மறு மலர்ச்சிப் பயணத்தை இன்று (30.09.2013) தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல் லூரில் மாலை 3 மணிக்கு தொடங்கினார். இரவு 8 மணிக்கு நாசரேத்தில் நிறைவு செய்து பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

தமிழ்நாட்டு அரசியலில் தன்னலமற்ற நேர்மையாலும் தந்தை பெரியாரின் சுய மரியாதையோடும் பேரறிஞர் அண்ணா அவர்கள் காட்டிய பாதையில் தமிழக நலனுக்காக பாடுபட்டு, அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, இலட் சத்தி உறுதி என மக்களிடம் விதைத்து, நாட்டு மக்களின் நன்மதிப்பைப் பெற்ற மறுமலர்ச்சி தி.மு.க. மக்களை சந்திக்கின்ற பயணத்தை தாமிரபரணி ஆற்றங் கரையில், தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளர் என் எண்ணத்தைச் செயல் படுத்துவதில் ஈடு இணையற்றவராக திகழ்கிற தம்பி ஜோயல் ஏற்பாட்டில் தொடங்க இருக்கிறது.

விருதுநகர் மாநாட்டு வைகோ உரை-3

இளைஞர்கள் நம்பிக்கையோடு நம்மை நெருங்குகிறார்கள்....
ஆம்; புதுவெள்ளம் பாய்கிறது!

விருதுநகர் மாநாட்டில் #வைகோ பெருமிதம்

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா -மறுமலர்ச்சி தி.மு.க. மாநாடு, 15.09.2013
அன்று, விருதுநகரில் மாபெரும் எழுச்சியுடன் நடைபெற்றது. மாநாட்டில் கழ கப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரையின் தொடர்ச்சி வருமாறு:

தியாகச்சுடர் காமராசர்

இது தியாகப் பெருஞ்சுடர் காமராசரின் மண்.எட்டு ஆண்டுகள் வெஞ்சிறையில் வாடிய, வீரத்திருமகனின் பூமி.

விவசாய தேவைக்கு மழை நீர் சேகரிக்க பண்ணை குட்டைகள் அமைக்கும் பணியை விரைவு படுத்துக

ஊராட்சிகள்  தோறும் விவசாய தேவைக்கு மழை நீர் சேகரிக்க புதிய  ண்ணை குட்டைகள் அமைக்கும் பணியை விரைவு படுத்த இயந்திரங்கள் மூலம் செய்ய அனுமதி வழங்க வேண்டுமென #மதிமுக விவசாய அணி வலியுறுத்தல்.

இது குறித்த மதிமுக விவசாய அணி மாநில துணை செயலாளர் வரதராஜன் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் வறட்சி ஏற்பட்டு விவசாயிகள் பெரும் இன்னலுக்கு உள்ளாகினர். தவிர கால்நடைகள் மற்றும் மக்கள் குடிநீருக்காக பல மைல் தொலைவு செல்லவேண்டிய நிலை ஏற் பட்டது. 

நடைபயணம் நிறைவு ,அடுத்து மத்திய அமைசர்களுக்கு கருப்புக்கொடி

கோவை மாவட்டம் வாளையார் - மதுக்கரை தேசிய நெடுஞ்சாலைப் பணியை உடனடியாக நிறைவேற்றக்கோரி, #மதிமுக  சார்பில் நடைபயணம் நேற்று (29.09.13 )நடந்தது.

வாளையார் - மதுக்கரை தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் (NH 47), கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டு, பாதியில் நிற்கிறது. ரோட்டின் இருபுறங்களிலும், பள்ளம் இருப்பதால், வாகனங்கள் கவிழ வாய்ப்புள்ளது. உடனடியாக பணிகளை துவக்க வேண்டும் என வலியுறுத்தி, மதிமுக இளை ஞர் அணி  சார்பில், நடைபயணம் வாளையார் பஸ் ஸ்டாண்ட் அருகே துவங் கியது. மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். 

மதிமுக கோவில்பட்டி பொதுக்கூட்டம்

கோவில்பட்டி நகர, ஒன்றிய #மதிமுக சார்பில் விருதுநகரில் நடைபெற்ற மா நாட்டு தீர்மானங்கள் குறித்த விளக்கப் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடை பெற்றது.

கோவில்பட்டி லாயல் மில் காலனி அருகே நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாவட்ட இளைஞரணிச் செயலர் விநாயகா ஜி.ரமேஷ் தலைமை வகித்தார். 

Sunday, September 29, 2013

பிரதமர் பதவிக்கு ஏற்பட்ட இழுக்கு , பிரதமர் மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் -வைகோ

தூத்துக்குடி ஸ்நோ மகாலில் நடந்த #மதிமுக மாநில மீனவர் அணி செயலா ளர் நக்கீரன் இல்ல திருமண விழாவில், மதிமுக. பொதுச்செயலாளர் #வைகோ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். தொடர்ந்து அவர் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். 

பேட்டியின் விவரம் :–

தூத்துக்குடி வீரம் விளைந்த மண். சுதந்திர போராட்டத்துக்கு பாடுபட்ட தலை வர்கள் பிறந்த மண். இங்கு கடல் அலைகள் ஓய்ந்தாலும் ஓயும், மீனவர்களின் துயரம் தீராதா. துன்பம் தீராதா?.

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 32

காவிரி நடுவர் மன்ற ஆணையை நடைமுறைப்படுத்தாவிடில்

சோவியத் யூனியன் போல இந்தியா உடைந்து சிதறும்!


கர்நாடகத்தில் முதலமைச்சர் பொறுப்பிற்கு யார் வந்தாலும், அவர்கள் அந்த மாநில அரசியலில் தங்களுக்கு ஒரு தனி இடம் பெற வேண்டும் என்று நினைப் பார்கள். உடனடியாக அதற்கு அவர்கள் செய்வதெல்லாம் தமிழ்நாட்டின் தலை யில் நெருப்பை அள்ளிக் கொட்டுவதுதான்.

ஆம்! யார் கர்நாடக முதல்வராக வந்தாலும், “தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் ஒரு சொட்டு கூட தர மாட்டோம்” என்று கூறுவது வாடிக்கை ஆகி விட்டது. கடந்த
40 ஆண்டுகளாக இதே நிலைதான்.காங்கிரஸ், ஜனதா, பிஜேபி எந்தக் கட்சி
ஆட்சியென்றாலும், ஆட்கள் மாறினார்களே தவிர, இந்தப் பல்லவி மட்டும் மாறவேயில்லை.

வ.உ.சி “சிவஞான போதம்” உரை நூல் விழா-வைகோ உரை- பாகம் 2

அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில், சமயவாதிகள் கூடுகின்ற மாநாட்டில் சிகாகோ நகரில், இந்தியாவில் இருந்து சென்ற விவேகானந்தருடைய ஆடைத் தோற்றத்தைக் கண்டு பலபேர் ஏளனமும் பரிகாசமும் செய்தவேளையில், Ladies and Gentlemen என்று பேசுகின்ற அரங்கில், ‘சகோதர, சகோதரிகளே’ என்று அழைத்த அவரது குரல் அந்த அரங்கத்தில் அனைவருக்கும் சிலிர்ப்பை ஏற் படுத்தியது.

இராமநாதபுரம் மன்னர்தான் அவரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார். விவேகானந்தரின் அற்புதமான கணீரென்ற ஆங்கிலச் சொற்களில் தவழ்ந்து வந்த கருத்துப் பிரவாகத்தில் அனைவரும் சொக்கிப்போனார்கள்.

அணுஉலை விபத்து இழப்பீட்டுச் சட்டம்

அணுஉலை விபத்து இழப்பீட்டுச் சட்டம்: அமெரிக்காவுக்கு அடிபணியும் மன் மோகன்சிங் அரசு 

சங்கொலி தலையங்கம் 

மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இந் தியாவை அமெரிக்க நாட்டின் அடிமை தேசமாக மாற்றிவிட்டது.கடந்த ஒன்பது ஆண்டுகால காங்கிரஸ் தலைமையிலான டெல்லி ஆட்சியில், இந்தியா, அமெ ரிக்காவைச் சார்ந்த நாடாக, அமெரிக்காவின் கண் அசைவுக்கு ஏற்ப இயங்கும் கையாலாகாத நாடாக ஆகிவிட்டது. உலகில் பெரும்பாலான நாடுகள் அணு உலைகள் அமைப்பதையும் அணுமின் உற்பத்தியையும் கைவிட்டு வரும் நிலையில், அமெரிக்காவின் கொள்ளை லாபத்திற்கு இந்திய-அமெரிக்க அணு சக்தி உடன்பாடு உருவாக்கப்பட்டது. அமெரிக்காவும் இன்னும் சில வளர்ந்த நாடுகளும் வழங்கும் அணுஉலைகளை இந்தியாவில் அமைத்து அணுமின் உற் பத்தியைப் பெருக்குவது என்று மன்மோகன் சிங் அரசு அமெரிக்காவுடன் அணு சக்தி உடன்பாட்டை 2005 ஆம் ஆண்டு உருவாக்கியது.

Saturday, September 28, 2013

வ.உ.சி “சிவஞான போதம்” உரை நூல் விழா-வைகோ உரை- பாகம் 1

#வைகோ உரை வ.உ.சிதம்பரனார் “சிவஞான போதம்” உரை நூல் வெளியீட்டு விழா -திருநெல்வேலி - 22.08.2008

இந்த நாள் என் வாழ்வில் எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருகின்ற திருநாள். தியாக மணிவிளக்காக காலங்களைக் கடந்தும் ஒளிவீசிக் கொண்டு இருக் கின்ற ஒரு மாபெரும் தலைவன் வழங்கிய நூல்களுள் ஒவ்வொன்றாக மக்கள் மன்றத்துக்குக் கொண்டு வருகின்ற அரிய பணியில் திவான் ஈடுபட்டு இருக் கின்றார். செக்கு இழுத்த செம்மல்- ஒரு சிறந்த இலக்கியவாதியும்கூட என்ப தை இன்னும் எண்ணற்றவர்கள் அறிகின்ற வகையில், வரவேண்டிய பல நூல் கள் வரலாற்றின் பார்வையில் வராமலே இருக்கின்ற கவலையோடு, அவற் றை வெளியே கொண்டுவரும் முயற்சியில் திவான் ஈடுபட்டு இருக்கிறார்.

மாவீரன் தீலிபன் நினைவு நாள் கூட்டம் படங்கள்

மாவீரன் தீலிபன் நினைவு நாள் நிகழ்வும் போர்க்குற்றவாளி இராஜபக்சே நடத் தும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது ஏன்? விளக்கப் பொதுக்கூட்டம்.நேற்று மாலை சென்னை லாயிஸ் சாலை வி.எம்.தெரு சந்திப் பு ராயப்பேட்டையில் நடைபெறது.

இதில் #மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ தந்தை பெரியார் திரவிடர் கழக பொதுச் செயலாளர் இராமகிருஷ்ணன் தமிழகவாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் மேலும் பலர் கலந்து கொண்டனர் ..


மதிமுக இளைஞர் அணி நடைபயணம்

கோவை மாவட்டத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தக்கோரி மதிமுக இளைஞர் அணி சார்பில் நாளை நடைபயணம் நடக்கிறது.

கோவை மாவட்டம் முழுவதும் சாலை போக்குவரத்து, ரயில்போக்குவரத்து, குடிநீர் விநியோகம், தெருவிளக்கு பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை கட்டமைப் பு வசதிகளை நிறைவேற்றி தரக்கோரி மதிமுக சார்பில் பிரசார நடைபயணம் நாளை காலை 10 மணிக்கு துவங்குகிறது. 

வாளையார் பகுதியில் இருந்து துவங் கும் இப்பிரசாரம், முக்கிய பகுதிகள் வழி யாக சென்று மதுக்கரையை அடைகிறது.மொத்தம் 15 கி.மீ தூரம் இந்த நடைபய ணம் நடக்கிறது.மாநில இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன் தலைமை தாங் கு கிறார். மதுக்கரை ஒன்றிய செயலாளர் வெள்ளிங்கிரி, மாணிக்கவாசகம், ஜோதிபாசு, பேன்சி மணி, கண்ணன் ஆகியோர் முன்னிலைவகிக்கின்றனர். 

விருதுநகர் மாநாட்டைத் திறந்து வைத்து புலவர் சே.செவந்தியப்பன் உரை

தமிழகம், மாற்று அரசியலுக்கான தேடலில் #வைகோ வை அடையாளம் கண்டுள்ளது...

மாற்று அரசியலுக்கான நுழைவாயில்தான் இம்மாநாடு!

செப்டம்பர் 15 -பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - விருதுநகர் மாநாட்டைத்
திறந்து வைத்து புலவர் சே.செவந்தியப்பன் ஆற்றிய உரை....

“செந்தமிழை செந்தமிழ் நாட்டைச் சிறைமீட்க
நந்தமிழர் உள்ளத்தில் வையம் நடுநடுங்க
வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று
குந்திக் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே”

Friday, September 27, 2013

பேரறிவாளன்,சாந்தன்,முருகன்,மற்றும் நளினியை சந்தித்த வைகோ

வேலூர் மத்திய சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன்,முருகன் மற்றும் நளினியை சந்திக்க, #மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ இன்று (27.09.13) வேலூர் வந்தார்.

வைகோ செய்தியாளர்களிடம் பேசும் போது

‘‘குற்றம் செய்யாமல் பேரறிவாளன், முருகன் ,சாந்தன்,மற்றும் நளினி ஆகி யோர் சிறையில் மிகுந்த மனவருத்தத்தில் உள்ளனர்.இவர்களுக்காகசென்னை உயர் நீதிமன்றத்தில் உலகப் புகழ் பெற்ற வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி வாதா டினார். ஆனால் காங்கிரஸ் தூண்டுதலின் பேரில், 'சென்னையில் வழக்கு நடந் தால் பிரச்னைகள் ஏற்படும். அதனால் வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்' என்று கூறி மாற்றினார்கள்.

சி.பா.ஆதித்தனார் அவர்களின் 109 ஆவது பிறந்த நாள்- வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சி.பா.ஆதித்தனார் சிலைக்கு #வைகோ மாலை அணிவித்தார்

தினத்தந்தி நிறுவனார் சி.பா.ஆதித்தனார் அவர்களின் 109 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருஉருவச்சிலைக்கு கழகப் பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை 7 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகளின் கோரிக்கைகளை மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும்!

தமிழக அரசுக்கு #வைகோ கோரிக்கை

தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் பார்வையற்றவர்கள் ஆசிரியர் களாக தகுதி பெற குறைந்தபட்சமாக 40 சதவிகித மதிப்பெண்களை நிர்ணயிக்க வேண்டும்.தமிழக அரசின் பார்வையற்றோருக்கான சிறப்புப்பள்ளிகளில் காலி யாக உள்ள ஆசிரியப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, பார்வையற்ற மாற்றுத்திறனாளி கல் லூரி மாணவர்களும், பட்டதாரிகளும் கடந்த 10 நாட்களுக்கு மேலாக வீதிக்கு வந்து போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.

Thursday, September 26, 2013

உழவர்களுக்குப் பாதக மசோதா!

உணவுப் பாதுகாப்பு மசோதா ,உழவர்களுக்குப் பாதக மசோதா!

நீண்ட நெடிய சர்ச்சைகளுக்கு உள்ளாக்கப்பட்ட மசோதா,சோனியா காந்தியின் கனவுத்திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இனி இந்தியாவில் உணவு இல்லாமல் யாரும் பட்டினி கிடக்கும் நிலை நீக்கப்
பட்டுவிட்டது. 80 கோடி மக்களுக்கு குறைந்த விலையில் அதாவது அரிசி கிலோ ரூ 3 க்கும், கோதுமை கிலோ ரூ.2 க்கும் கிடைக்கும். கிராமப்புறங்களில் 67 சதவிகித மக்களும், நகர்ப்புறங்களில் 50 சதவிகித மக்களும் பயன்பெறுவர்.
மூன்று ஆண்டுகளுக்கு இந்தத் திட்டம் அமுலில் இருக்கும். இதற்கு ஆகும்
மானியம் ஆண்டு ஒன்றுக்கு 1,25,000 கோடி ரூபாய்.

பான் கி மூன் ஒப்புதல் வாக்குமூலம்

ஈழத்தமிழரைக் காக்கும் கடமையில் ஐ.நா. தவறியது  பான் கி மூன் ஒப்பு தல் வாக்குமூலம் 

ஈழத்தமிழர் இனக்கொலைக்கு பன்னாட்டு நீதி விசாரணை தேவை

#வைகோ கோரிக்கை!

ஐக்கிய நாடுகள் மன்றம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து, உலக நாடுகளில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், மூண்ட யுத்தங்கள் போன்ற பல்வேறு நிகழ்வுகளில் கடமை ஆற்றி இருக்கிறது.ஆனால்,பல வேளைகளில், வல்லரசு நாடுகள் ஐ.நா. வின் ஆணைகளை உதாசீனப்படுத்தி விட்டு, பிற நாடுகள் மீது இராணுவத் தாக்குதல்களை நடத்தியும் உள்ளன. 

விருதுநகர் மாநாட்டு வரவேற்பு உரை

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியைக் குவிக்கபம்பரமாய்ச் சுழன்று பணி யாற்றுவோம்!

விருதுநகர் மாநாட்டு வரவேற்பு உரையில் ஆர்.எம்.சண்முகசுந்தரம்

விருதுநகரில் செப்டம்பர் 15 அன்று நடைபெற்ற மாபெரும் கழக மாநாட்டில்,
விருதுநகர் மாவட்டச் செயலாளர்ஆர்.எம்.சண்முகசுந்தரம் ஆற்றிய வரவேற் புரை:

மறுமலர்ச்சி பயணம் தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 30-ந் தேதி முதல் #மதிமுக பொதுச் செய லாளர் #வைகோ வாகன பிரசாரம் செய்கிறார்.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் எஸ்.ஜோயல் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வாகன பிரசாரம் மூலம் மக்களை சந்திக்கும் மறுமலர்ச்சி பயணம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 30, 1 ஆகிய தேதிகளில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வாகன பிரசாரம் செய்கிறார்.

ஜனநாயகக் கடமை ஆற்றுவீர்!

புதிய வாக்காளர் சேர்ப்பு: ஜனநாயகக் கடமை ஆற்றுவீர்!

#வைகோ அறிக்கை

வரவிருக்கின்ற 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு அளிக்க வசதியாக, பதினெட்டு வயது நிறைவு அடைந்தவர்கள், அக்டோபர் 1 முதல் 31 வரை தங் களை வாக்காளர்களாகப் பதிவு செய்துகொள்ளலாம் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதன்மூலம், பதினெட்டு வயது நிறைவு அடைந்து, இதுவரை வாக்காளர்களாக தங்களைப் பதிவுசெய்துகொள்ளாதவர்கள், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் விடுபட்டுப் போய்விட்டது; தமது பெயர் தவறாக பதிவாகி உள்ளது என வருந்துவோர், தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளவும், திருத்தங் களை மேற்கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Wednesday, September 25, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 20

நாள்:-09.12.2007


இந்தியக் கடற்படைக்குக் கண்டனம்!


பிரதமருக்கு #வைகோ கடிதம்

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

இந்தியக் கடற்படையின் தமிடிநநாடு பொறுப்பாளர், கம்மோடர் வேன் ஹேல் டரென் கூறியதாக, டிசம்பர் 8 ஆம் நாள் நாளிதடிநகளில் வெளியாகி உள்ள, தேவை இல்லாத, உண்மை இல்லாத, நியாயப்படுத்த இயலாத,பொறுப்பு அற்ற கருத்துகளைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

எழுச்சியுடன் இளைஞர் அணி -பகுதி 2

எழுச்சியுடன் கழக இளைஞர் அணி!

மாவட்டம் தோறும் கலந்தாய்வுக் கூட்டங்கள்



திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்ட இளைஞர் அணி கலந்தாய்வுக் கூட்டம் 5.9.2013 அன்று பல் லடத்தில் ப.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஆர்.ஆர்.ரத்தினசாமி
வரவேற்புரை ஆற்றினார். என்.ஈஸ்வரன், ப.மணி, சிவக்குமார், மு.சுப்பிர மணி யம், மா.பாலு, அப்புக்குட்டி, எஸ்.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித் தனர்.

விருதுநகர் மாநாட்டுத் தலைமை உரை

தமிழ் இனத்தைக் காப்பாற்ற...
தமிழகத்தைச் சூழ்ந்துள்ள அச்சுறுத்தல்களை முறியடிக்க,
#வைகோ வின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலித்தாக வேண்டும்!
விருதுநகர் மாநாடு அதற்கு வழி அமைக்கும்!

விருதுநகர் மாநாட்டுத் தலைமை உரையில் இமயம் ஜெபராஜ்

விருதுநகரில் செப்டம்பர் 15 அன்று பேரெழுச்சியுடன் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - மறுமலர்ச்சி திமுக மாநாட்டுக்குத் தலைமை
வகித்து, கழக உயர்நிலைக்குழு உறுப்பினர் இமயம் ஜெபராஜ்ஆற்றிய உரை வருமாறு:

Tuesday, September 24, 2013

பகத்சிங் நூற்றாண்டு விழா-பகுதி 17

07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை

நான் இந்த நேரத்தில் பதிவுசெய்யவிரும்புகிறேன். இந்தப் போரில் புலிகள் பின் னடைவதாகவும் எல்லா இடங்களையும் கைப்பற்றுவதாகவும் சரத் பொன் சேகா சொல்கிறான். இனி அவர்கள் வெளியே ஓட்டம் பிடிக்க வேண்டியது தான். நாங்கள் கைப்பற்றி விடுவோம் என்கிறான். இவ்வளவும் நடத்திக்கொண் டிருக்கின்ற சரத்பொன்சேகாவுக்கு நீங்கள் 500 மில்லியன் டாலர் கடன் கொடுத் தீர்கள். அடுத்தவாரம் பாகிஸ்தான் சென்று ஆயுதம் வாங்கிவிட்டான். எங்கள் வரிப்பணத்தில் இருந்து பணம் கொடுப்பீர்கள்.அவன் வாங்கிக் கொண்டு பாகிஸ்தானிடம் ஆயுதம் வாங்கி எங்கள் மக்களைக் கொல்வான். அதற்கு ஒரு அரசு இங்கே. அந்த அரசில் பங்கு வகிக்கின்ற தி.மு.க.

மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம்


திராவிட இயக்கத்தின் வேர் ஊன்றிப் பதிந்த விருதுநகர்!

விருதுநகர் மாநாட்டு நிறைவுப் பேருரையின் தொடக்கத்தில் #வைகோ

87 ஆண்டுகளுக்கு முன்னால் ‘விருதுபட்டி’ என்று அழைக்கப்பட்ட இந்தத் திரு நகரில் டபிள்யு.பி.ஏ. செளந்தர பாண்டியனார் அவர்களுக்கும், தமிழவேள் பி.டி. இராசன் அவர்களுக்கும் 1926 டிசம்பர் 27 இல், ஏ. இராமசாமி முதலியார் தலை மையில், இந்த மண்ணைச் சேர்ந்த பெருமக்கள் நடத்திய விருது வழங்குகின்ற நிகழ்ச்சியில் பங்கு ஏற்றார், வைக்கத்து வீரர் ஈ.வெ.ரா. என்று அழைக்கப்பட்ட பெரியார். அதில், பனகல் அரசர், குமாரசாமி ரெட்டியார், சுரேந்திரநாத் ஆர்யா, செந்திக்குமார நாடார், வி.வி.சண்முக நாடார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மக்களைச் சந்திக்கும் மறுமலர்ச்சிப் பயணம்

மக்களைச் சந்திக்கும் மறுமலர்ச்சிப் பயணம்

மறுமலர்ச்சி தி.மு.க. உயர்நிலைக்குழு தீர்மானம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு கூட்டம் இன்று (24.09.2013) கழகத் தலைமை அலுவலகம் ‘தாயக’த்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.

தமிழ்நாட்டு அரசியலில் பேரறிஞர் அண்ணா அவர்களின் கனவுகளை நன வாக்கும் இயக்கமாக, திராவிட இயக்கத்தின் காலத் தேவைக்கான புதிய பரி மாணமாக வார்ப்பிக்கப்பட்டு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கம் பீரத்துடன் தலைநிமிர்ந்து நிற்கிறது.

Monday, September 23, 2013

பகத்சிங் நூற்றாண்டு விழா-பகுதி 16

07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை

இந்த ஜெகஜாலபுரட்டு வார்த்தைகளை மாற்றி செய்த தவறுகளை அப்படியே மறைப்பது ரொம்ப நாளைக்கு நடக்காது. ரேடார்களைக் கொடுத்தது இந்தியா என்று உங்களுக்குத் தெரியும். ரேடார்களைத் திரும்ப வாங்கச் சொன்னீர்களா? ஆயுதம் கொடுத்தது இந்தியா என்பது உங்களுக்குத் தெரியும். ஆயுதங்களைத் திரும்ப வாங்கச் சொன்னீர்களா?

மாநில நிர்வாகிகள் நியமனம்

#மதிமுக தலைமைக் கழக அறிவிப்பு

அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் நியமனம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பணித் துணைச்செய லாளராக பணியாற்றி வந்த திரு. குட்டி (எ) சண்முகசிதம்பரம் அவர்கள் (முக வரி: குளத்தூர் மாளிகை, வெள்ளம் தாங்கிய பிள்ளையார் கோவில் தெரு, திரு நெல்வேலி - 627 006; கைப் பேசி எண். 94431 - 33324) அப்பொறுப்பிலிருந்து விடு விக்கப்பட்டு, கழகத்தின் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினராக நியமிக் கப்படுகிறார். இவர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள அரசியல் ஆலோசனைக் குழுச் செயலாளர் மற்றும் உறுப்பினர்களுடன் இணைந்து கழகப் பணியாற்று வார்.

முசாபர்நகர் மதக்கலவரம்

சங்கொலி தலையங்கம் 

“1947 பிரிவினையின்போது, எங்களை (முஸ்லிம்களை) ஜவஹர்லால் நேரு வும்,காங்கிரஸ் கட்சியினரும் பிரிந்து செல்லாதீர்கள், இங்கேயே இருங்கள் என்று கூறி ஏன் தடுத்தனர்? இப்போது பாருங்கள், சொந்த நாட்டிலேயே நாங் கள் அந்நியர்கள்ஆக்கப்பட்டுள்ளோம்.” மதக்கலவரங்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட உத்திரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில், இஸ்லாமிய மக்கள் அடைக்கலம் புகுந்துள்ள முகாமைப் பார்வையிட செப்டம்பர் 16 ஆம் தேதி பிர தமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா ஆகியோர் சென் றிருந்தபோது, சம்ஷத் செளத்ரி என்ற முஸ்லிம் பெரியவர் பிரதமரிடம் மேற் கண்டவாறு குமுறினார்.

Sunday, September 22, 2013

விருதுநகர் மாநாட்டு வைகோ உரை-2

இனிது இனிது

இவ்வுலகம் இனிமையானது.
இதில் காணும் வானம் இனிமையுடைத்து
காற்று இனிது; தீ இனிது;
நீர் இனிது; நிலம் இனிது
சூரியன் நன்று, திங்களும் நன்று.
வானத்துச் சுடர்களெல்லாம் இனியன
மழை இனிது, மின்னல் இனிது, இடி இனிது
கடல் இனிது மலை இனிது காடு இனிது
ஆறுகள் எல்லாம் இனியன
உலோகமும் மரமும் செடியும் கொடியும்
மலரும் கனியும் காயும் இனியன
பறவைகள் எல்லாம் இனியன
ஊர்வனவெல்லாம் நல்லன
விலங்குகள் எல்லாம் இனியன;
நீர் வாழ்வனவெல்லாம் இனியன
மனிதர் மிகவும் இனியர்;
ஆண் நன்று, பெண் இனிது, குழந்தை இன்பம்
இளமை இனிது முதுமை நன்று
உயிர் நன்று சாதல் இனிது

மாகாண சபை தீர்வைத் தராது

இலங்கையில் வடக்கு மாகாண தேர்தல் முடிவுகள்:

சிங்கள அராஜக அரசுக்கு எதிரான தமிழ் மக்கள் தீர்ப்பு
ஆனால், மாகாண சபை ஈழத் தமிழர்களுக்கு தீர்வைத் தராது


#வைகோ அறிக்கை

இலங்கையில் நேற்றைய தினம் நடைபெற்ற மாகாண சபை தேர்தல்களில், வடக்கு மாகாணத் தேர்தலில் மொத்தம் உள்ள 36 தொகுதிகளில்,28 இடங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்று இருக்கிறது.கொலைகார ராஜ பக்சே கட்சியும், துரோகக் கட்சிகளும் இணைந்து ஏற்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி படுதோல்வி அடைந்துள்ளது.

அணுமின் உலைகள் எதற்கு?

அணுமின் உலைகள் எதற்கு?


அலைகடலும் காற்றும் கதிரொளியும் இருக்கையிலே...


“மின்சாரமும் சோஷலிச சிந்தனையைக் கொண்ட அரசும் மனித இனத்தின்
வளர்ச்சிக்கு அவசியம்” என்று சோவியத் விடுதலையின்போது லெனின் குறிப் பிட்டார்.

மனிதர்களின் அன்றாட வாழ்க்கைப்பயன்பாட்டிற்கும் தொழிற்சாலைகள்இயங் கவும், மின்சக்தி இன்றியமையாதது. வாழ்க்கைத் தரமும் தொழில்வளமும் உயர்ந்துகொண்டே செல்லும் நிலையில், அதிகரிக்கும் மின்தேவையைப் பூர்த்தி செய்ய பல வழிகளில் மின் உற்பத்தியை அதிகமாக்க முயற்சிகள் மேற் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. வாகனங்களைக் கூடமின்சக்தியால் இயக்குவதற்கு ஆராய்ச்சிகள் முழுமையாகி, சோதனை ஓட்டங்களும் வெற்றி பெற்று, சில நிறுவனங்கள் உற்பத்தியிலும்கூட இறங்கிவிட்டன.

Saturday, September 21, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 19

நாள்:- 06.08.2007

தமிழ்  இனப்படுகொலைக்குத் துணைபோகும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு!

#வைகோ குற்றச்சாட்டு

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

கடந்த 2007 ஜூலை 16-ம் நாள் நான் தங்களுக்கு எழுதிய கடிதத்தின் தொடர்ச்சி யாக இந்தக் கடிதத்தை எழுகிறேன். இலங்கைத் தீவில் தமிழ் இனத்தைப் பூண் டோடு அழிக்க, தொடர்ந்து கொடூரமான இராணுவத் தாக்குதல்களை நடத்தி வரும் சிங்கள இனவெறி அரசுக்கு, இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட் டணி அரசு, இராணுவ ஆயுதங்களையும்,உதவியையும் வழங்கி வருவது குறித் து என்னுடைய வேதனையையும்,எதிர்ப்பையும் தெரிவிக்கிறேன்.

பகத்சிங் நூற்றாண்டு விழா-பகுதி 15

07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை

நமக்கு உலகத்தில் வேறுநாடுகளில் வீராதிவீரர்கள் தோன்றினால் கைதட்டிப் பழக்கப்பட்டவர்கள். இந்த இனத்தில் பிறந்த ஒருவன் ஒழுக்கத்தால் பண்பால் நேர்மையால் தனிமனித ஒழுக்கத்தால் தன் சாகசத்தால் ஒரு இனத்தை மீட்ப தற்கு களத்தில் நிற்கிறான். அவர்களுடைய போராட்டம் உங்களில் பலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். அவர்கள் ஆயுதக் கிளர்ச்சி உங்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம்.

நான் மத்திய அரசைக் கேட்கிறேன். மாநில அரசைக் கேட்கிறேன். புலிகளின் போர்முறை உங்களுக்கு உடன்பாடல்ல. சரி. அவர்கள் ஆயுதம் ஏந்துவது உங் களுக்கு உடன்பாடு அல்ல.சரி.அவர்கள் துப்பாக்கி ஏந்துவது உங்களுக்கு உடன் பாடு அல்ல சரி. நீங்கள் கைராட்டினமும் தக்கடியும் வைத்துத்தான் நாம் போரா டி வெற்றிபெற்றோம் என்று சொல்லிக்கொண்டு அவர்கள் எப்படி ஆயுதம் ஏந்த லாம் என்று சொல்லலாம். அது உங்கள் உரிமை.

விருதுநகர் மாநாட்டு வைகோ உரை- 1

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா -மறுமலர்ச்சி தி.மு.க. மாநாடு, 15.09.2013
அன்று, விருதுநகரில் மாபெரும் எழுச்சியுடன் நடைபெற்றது. மாநாட்டில் கழகப் பொதுச் செயலாளர் #வைகோ அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

‘உண்டால் அம்ம, இவ்வுலகம்; இந்திரர்;
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதெனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்,
புகழ்எனின், உயிருங் கொடுக்குவர்; பழியெனின்,
உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனையராகித்,
தமக்கென முயலா நோன்தாள்,
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே’

சம வாய்ப்பு வழங்குக!

செவிலியர்’ படித்த மாணவிகளுக்கும் கல்லூரியில் பயில சம வாய்ப்பு வழங்குக!

தமிழக அரசுக்கு #வைகோ வேண்டுகோள்

2013-2014 ஆம் கல்வி ஆண்டிற்கான செவிலியர் பட்டயப் படிப்பில் ஏற்பட்ட குளறுபடிகளால் 10,000 க்கும் மேற்பட்ட மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பிரிவில் பயின்ற மாணவர்கள் மட்டுமே செவிலியர் பட்டயப் படிப்பில் சேர முடியும் என்ற நிலையை மாற்றி, கடந்த ஆட்சிக் காலத்தில் மேல்நிலையில் எந்தப் பிரிவில் பயின்றவர்களும் சேர லாம் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இந்தக் கல்வி ஆண்டிலிருந்து அறி வியல் பிரிவில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை எனவும், காலி இடங்கள் இருந்தால் மற்றப் பிரிவுகளில் பயின்றவர்களை சேர்த்துககொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Thursday, September 19, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 18

நாள்:- 16.07.2007

இலங்கையுடன் தகவல் பரிமாற்ற ஒப்பந்தமா?

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

தமிழகத்தில் உள்ள தமிழர்கள் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு
மிகப்பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கின்ற பிரச்சினையைத்
தங்களின் மேலான கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

பகத்சிங் நூற்றாண்டு விழா-பகுதி 14

07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை

முதலில் பகத்சிங்கைத் தூக்கில் போட்டார்கள், ‘சுகதேவ் வருகிறேன். இராஜ குரு வருகிறேன். புரட்சி ஓங்குக. இன்குலாப் சிந்தாபாத்’ என்று அந்தத் தூக்குக் கயிற்றை வாயால் எடுத்து முத்தமிட்டார், அதற்குப்பிறகு கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டினார்கள். மற்ற இருவரும் அதேபோல ‘இன்குலாப் சிந்தாபாத்’ என்று அவர்களும் அந்தத் தூக்குக்கயிற்றை அணைத்தார்கள்.

விருதுநகர் மாநாடு -பகுதி 14

#மதிமுக விருதுநகர் மாநாட்டு காட்சிகள் 13


Wednesday, September 18, 2013

பகத்சிங் நூற்றாண்டு விழா-பகுதி 13

07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை

பகத் சிங் உடனே, ‘அப்படியா? ரொம்ப மகிழ்ச்சி. பிரிட்டிக்ஷ் அரசுக்கும் கருணை பிறந்து விட்டது. அடிமைப்பூச்சிகளாக இன்னும் ஒரு 12 மணி நேரம் இங்கே இருப்பதைவிட, சீக்கிரமாக விடைபெற்றுப் போவது நல்லது என்று எங்களை சீக்கிரமாக அனுப்புகிறார்கள் என்று சொல்கிறார். இதற்குள் இந்தச் செய்தி யைக் கேள்விபட்டு பர்கத் என்கின்ற முடி திருத்துகிற சகோதரன், அவனும் சிறைக்கைதிதான். அவனுடைய லாக்கப்தான் கடைசி. அவன் வரிசையாக ஓடி, எல்லா கொட்டடிக்கும் சென்று பகத்சிங், ராஜகுரு, சுகதேவைத் தூக்கில் போடப்போகிறார்கள் தூக்கில் போடப்போகிறார்கள் என்று சொல்லி விடுகி றான். அனைவருக்கும் தெரிந்து விட்டது.

வைகோவின் மேல்முறையீடு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: பசுமைத் தீர்ப்பாயத் தீர்ப்பினை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் #வைகோ மேல்முறையீடு!

வெளிநாடுவாழ் இந்தியரான அனில் அகர்வாலுக்குச் சொந்தமான வேதாந்தா
நிறுவனங்களின் சார்பில், தூத்துக்குடி அருகில் ஸ்டெர்லைட் தாமிர ஆலை யை நிறுவிட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை உயிரினவாழ்
மண்டலத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பாலும், ஆலையைச் சுற்றி 250 மீட்டர் அகல பசுமை வளாகமும் இருக்க வேண்டும் என்ற இரு முக் கிய நிபந்தனைகளுடன் மறுப்பின்மைச் சான்று (No Objection Certificate) 01.08.1994 இல் வழங்கியது.

மாணவர் சைக்கிள் பிரச்சாரம்

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்று திண்டிவனத் தில் #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ..


விருதுநகர் மாநாடு -பகுதி 13

#மதிமுக விருதுநகர் மாநாட்டு காட்சிகள் 12


Tuesday, September 17, 2013

பகத்சிங் நூற்றாண்டு விழா-பகுதி 12

07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை

இதோ இறுதிநேரம் வந்துவிட்டது. தூக்கில் போடப்பட வேண்டிய நாள் 24. 22 ஆம் தேதி வரை ஆணை வரவில்லை. 23 ஆம் தேதி மாலை 4 மணிக்கு சிறை யில் ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. ஆறு மணிக்குத்தான் கைதிகள் கொட்டடிக்கு உள்ளே செல்ல வேண்டும்.

திடீரென்று 4 மணிக்கு கத்தார் சிங் வந்து, ‘எல்லோரும் அறைக்குச் செல்லுங் கள் அறைக்குச் செல்லுங்கள். நாங்கள் எல்லா பிளாக்கையும் பூட்டப் போகி றோம்’ என்கிறார். எப்பொழுதும் ஆறு மணிக்குத்தான் செல்லைப் பூட்டுவார் கள், இன்றைக்கு 4 மணிக்கே பூட்டப் போகிறோம் என்கிறார்களே என்று ஒரு வருக்கும் ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் தலைமை வார்டன்மேல் அனைவருக்கும் மரியாதை. அவர் சொன்னால் சரியாக இருக்கும். அவர் நல்ல மனிதர். எல்லோரும் கொட்டடிக்குள் சென்று விடுகிறார்கள்.

திராவிடம் காக்க..

திராவிடம் காக்க விருதுநகரில் கூடுவோம்!

“நான்தான் திராவிடன் என்று நவில்கையில்
தேன்தான் நாவெலாம் வான்தான் என்புகழ்!
முன்னாள் என்னும் பன்னெடுங் காலத்தின்
உச்சியில் திராவிடன் ஒளி செய்கின்றான்
அன்னோன் கால்வழியாகிய தொடர் கயிற்று
மறுமுனை நான்! என் வாழ்வின் கால் வழி
யாகிய பொன்னிழை அளக்க ஒண்ணா
எதிர்காலத்தின் கடைசியோ டியைந்தது
சீர்த்தியால் அறத்தால் செழுமையால் வையப்
போர்த்திறத்தால் இயற்கை புனைந்த
ஓருயிர்நான்! என் உயிர் இனம் திராவிடம்!”

தந்தை பெரியார் பிறந்த நாள்

தந்தை பெரியார் அவர்களின் 135 ஆவது பிறந்த நாள் - #வைகோ மாலை அணி வித்து மரியாதை

தந்தை பெரியார் அவர்களின் 135 ஆவது பிறந்நாளை முன்னிட்டு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தலைமை அலுவலகம் தாயகத்தில் உள்ள அவ ரது திருஉருவச் சிலைக்கு கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.உடன் துணைப் பொதுச்செயலா ளர் மல்லை சத்யா,உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் ஜி.தேவ தாஸ், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், வடசென்னை மாவட்டச் செயலார் சு.ஜீவன், செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் கோ.நன்மாறன், மாநில மகளிர் அணிச் செய லாளர் குமரி விஜயகுமார், பகுதிச் செயலாளர்கள் எழும்பூர் தென்றல் நிசார், ஆயிரம் விளக்கு ரெட்சன் அம்பிகாபதி, சைதை சுப்பிரமணி உள்ளிட்ட ஏராள மான கழகத் தோழர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.

விருதுநகர் மாநாடு -பகுதி 12

#மதிமுக விருதுநகர் மாநாட்டு காட்சிகள் 11


Monday, September 16, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 17

நாள்:- 24.11.2006

இராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல்!

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களைக் கொல்வது அன்றாட நிகழ்வாகி
வருகிறது. இந்த மிக முக்கியமான பிரச்சினையை, தாங்கொணாத் துயரத் தோடும், மிகுந்த மனவேதனையோடும் தங்களின் மேலான கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

பகத்சிங் நூற்றாண்டு விழா-பகுதி 11

07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை

பகத்சிங்கின் தோழர்களிடம் இருந்து சிறைக்கு ஒருகேள்வி அனுப்பப்படுகிறது “நீ உயிர்வாழ ஆசைப்படுகிறாயா” என்பதே அக்கேள்வி. அதற்கு மார்ச் 22 ஆம் தேதி பகத்சிங் எழுதும் பதில் கடிதமே அவரது கடைசி எழுத்தாகும்.

அதில் பகத்சிங் கூறுகிறார்.

“வாழ வேண்டுமென்ற ஆசை இயற்கையானது. அது என்னிடமும் உள்ளது. அதை நான் மறுக்க விரும்பவில்லை. ஆனால், அந்த ஆசை நிபந்தனைக்கு உட்பட்டது.

மணிமேகலையா சோனியா காந்தி?

மணிமேகலையா சோனியாகாந்தி?காங்கிரஸ் அரசைத்தூக்கி எறிவோம்!
தென்சென்னை மாவட்ட நிதி அளிப்புக் கூட்டத்தில் #வைகோ

தென்சென்னை மாவட்டக்கழகத்தின் சார்பில் 5.9.2013 அன்று சைதாப்பேட்டை யில் நிதியளிப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கழக வளர்ச்சி நிதி - தேர்தல் நிதியினைப் பெற்றுக் கொண்டு, பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆற் றிய உரையில் இருந்து....

இனி இழப்பதற்கு எதுவும் இல்லை; காணப் போவது பொன் உலகம் என்ற நிறைந்த நம்பிக்கையோடு, இருபதாவது ஆண்டில் தனது அரசியல் பயணத் தை நடத்திக் கொண்டு இருக்கின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தின், தேர்தல் நிதி, கழக வளர்ச்சி நிதி வழங்குதல், செப்டெம்பர் 15 இல் நடை பெற இருக்கின்ற விருதுநகர் மாநாட்டுக்கு, தலைநகர் சென்னையில் நுழைவா யில் அமைக்கின்ற இலக்கோடு நடைபெறுகின்ற, தென்சென்னை மாவட்ட நிதி அளிப்பு விழா மாபெரும் பொதுக் கூட்டத்தில் உங்களை எல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

விருதுநகர் மாநாடு -பகுதி 11

#மதிமுக விருதுநகர் மாநாட்டு காட்சிகள் 10


Sunday, September 15, 2013

விருதுநகர் மாநாடு -பகுதி 10

#மதிமுக விருதுநகர் மாநாட்டு காட்சிகள் 9


விருதுநகர் மாநாடு -பகுதி 9

#மதிமுக விருதுநகர் மாநாட்டு காட்சிகள் 8


விருதுநகர் மாநாடு -பகுதி 8

#மதிமுக விருதுநகர் மாநாட்டு காட்சிகள் 7


விருதுநகர் மாநாடு -பகுதி 7

#மதிமுக விருதுநகர் மாநாட்டு காட்சிகள் 6


விருதுநகர் மாநாடு -பகுதி 6

#மதிமுக விருதுநகர் மாநாட்டு காட்சிகள்


விருதுநகர் மாநாடு -பகுதி 5

#மதிமுக விருதுநகர் மாநாட்டு காட்சிகள்


விருதுநகர் மாநாடு -பகுதி 4

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு விருதுநகர் - செப்டம்பர் 15, 2013

தீர்மானங்கள்

பேரறிஞர் அண்ணா 105 ஆவது பிறந்த நாள் விழா,மறுமலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழக மாநாடு, இன்று (15.09.2013) விருதுநகரில் நடைபெற்று வரு கிறது. இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

விருதுநகர் மாநாடு -பகுதி 3

#மதிமுக விருதுநகர் மாநாட்டு காட்சிகள் 3


விருதுநகர் மாநாடு -பகுதி 2

#மதிமுக -விருதுநகர் மாநாட்டு காட்சிகள்




Saturday, September 14, 2013

விருதுநகர் மாநாடு -பகுதி 1

#மதிமுக விருதுநகர் மாநாட்டு காட்சிகள் 1

எழுச்சியுடன் இளைஞர் அணி

எழுச்சியுடன் கழக இளைஞர் அணி! 
மாவட்டம் தோறும் கலந்தாய்வுக் கூட்ட ங்கள்

நெல்லை மாவட்டம்

நெல்லை மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் 26.08.2013 காலை 10 மணிக்கு, தென்காசியில் மாவட்டச் செயலாளர் ப.ஆ.சரவணன் தலைமையில்
நடைபெற்றது.தென்காசி ஒன்றியச் செயலாளர் இ.குட்டீஸ் வரன், செங்கோட் டை நகர செயலாளர் சங்கரநாராயணன், இளைஞர் அணி முகமது ஹக்கீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் எஸ்.எம்.இராமையா வரவேற்புரையாற்றினார். ஆயிரப்பேரி எம்.முத்துசாமி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.

ஒளி மலர; இருள் அகல

பொடா சிறைவாசத்தின் போது ஒளி மலர; இருள் அகல எனும் தலைப்பில், #வைகோ எழுதிய கடிதங்களில் இருந்து அண்ணாவின் நினைவுகள்

பன்னூறு ஆண்டுகள் வளைத்துவிட்ட வைதீகத்தின் பிடியில், வர்ணாசிரமத் தின் முற்றுகையில், வட ஆரியக்கலாச்சாரத்தின் ஆதிக்கத்தில் சிக்கிக் கிடந்த தமிழ் இனத்தின் மீட்பராகவன்றோ அண்ணா தோன்றினார். அவரது எழுத்தும்,
பேச்சும், எண்ணமும் செயலும், உணர்வும், வாழ்வும் ‘சகாப்த நாயகனாக்கிற்று அவரை!அவரது படைப்புகளில் பரவிக் கிடக்கும் எண்ண ஓட்டத்தை,கண்மணி களே உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

விருதுநகரில் விழாக்கோலம்

விருதுநகரில் நாளை நடைபெறும் #மதிமுக மாநில மாநாட்டில் 2 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள். #வைகோ சிறப்புரை ஆற்றுகிறார்.

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நாளை (15–ந்தேதி) விருதுநகர், சாத்தூர் ரோடு சூலக்கரையில் மதிமுக மாநில மாநாடு நடக்கிறது. மாநாடு காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.

Friday, September 13, 2013

பணி நிரந்தரம் செய்க!

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை (TNPL)யின் ஒப்பந்தத் தொழிலா ளர்களைப் பணி நிரந்தரம் செய்க!

#வைகோ கோரிக்கை

கரூர் மாவட்டம் புகளூரில் 1979 இல் அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை (TNPL), 1984 ஆம் ஆண்டு முதல் அதன் உற்பத்தியைத் தொடங்கியது.

நாள் ஒன்றுக்கு 300 டன் உற்பத்தியில் தொடங்கிய ஆலை, இன்று நாள் ஒன் றுக்கு 1200 டன் என்ற அளவில் உற்பத்தி செய்யும் அளவில் வளர்ந்துள்ளது. இந்த ஆலை இதன் உற்பத்தியில் 20 சதவிகிதத்தை 50 க்கும் மேலான நாடு களுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. தமிழ்நாடு அரசாங்கத்திற்கு இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு 100 கோடி ரூபாய்க்கும் மேல் நிகர லாபத்தை ஈட்டிக் கொடுக்கின்றது.

Thursday, September 12, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 16

நாள்:- 10.03.2007


உலகத் தமிழர் பேரமைப்பு திரட்டிய உதவிப் பொருள்களை, செஞ்சிலு வைச் சங்கம் வழங்கிடவழி செய்க!


அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

இலங்கைத் தீவில், தமிழ் ஈழ மக்கள் படும் துன்பங்கள் குறித்துத் தங்களின் மே லான கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். சொல்லொணாத் துயரங்களை யும், துன்பங்களையும் அனுபவித்து வருகின்ற தமிழ் ஈழமக்களுக்கு, அமைதி யும் ஆதரவும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டுகிறேன்.

பகத்சிங் நூற்றாண்டு விழா-பகுதி 10

07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை

இந்தநேரத்தில் மகாத்மா காந்தி மீது அவர் அப்பாவுக்கு நல்ல மரியாதை. கொஞ்ச நேரத்தில் இதைப் பற்றிப் பேச்சு வருகிறது. பகத்சிங் நினைக்கிறான் அப்பாவை ஏன் கக்ஷ்டப்படுத்த வேண்டும், அவர் காந்தி மேல் ரொம்ப மதிப்பு வைத்து இருக்கிறார். அவரிடம் போய் ஏன் விவாதம் செய்ய வேண்டும் என்று , ஒரு மிகப்பெரிய விழிப்புணர்வை இந்த நாட்டில் கோடிக்கணக்கான மக்களுக் கு மகாத்மா காந்தி ஏற்படுத்தி இருக்கிறார் என்று சொன்னவுடன், அவர் அப்பா வுக்கு மகன் வாயால் இதைக் கேட்டேனே என்று மகிழ்ச்சி அடைகிறார்.

மாற்றத்துக்கு மக்கள் தயார்

மாற்றத்துக்கு மக்கள் தயாராகி விட்டனர்....#வைகோ சாதனை படைப்பார்!

இலவசப் பொருட்களை வழங்குவதாக,தேர்தல் வாக்குறுதி அளிப்பது லஞ்சம்
கொடுப்பது சீட்டுகளை வாங்குவதற்கு சமம், தேர்தலை நேர்மையாக நடத்த
வேண்டும் என்ற அரசியல் சட்ட கட்டுப்பாட்டுக்கு எதிரானது. இலவச வாக்கு களை லஞ்சம் என அறிவிக்க வேண்டும். இலவச வாக்குறுதிகளை நிறைவேற் றுவதற்கு, அரசு கஜானா காலியாவதை தடுக்க வேண்டும் என்ற குரல் இந்தி யா முழுவதும் எதிரொலிக்க ஆரம்பித்து உள்ளது. அரசியல் ஆரோக்கிய நிலை மை அடைய வழி வகுப்பதாக உள்ளது.

சென்னை விமான நிலையம்

சென்னை-கொல்கத்தா விமான நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது

பிரதமருக்கு #வைகோ கடிதம்

சென்னை மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களைத் தனியாரிடம் ஒப் படைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரதமருக்கும், மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சருக்கும் கடிதங்கள் எழுதி உள்ளார்.

Wednesday, September 11, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 15

நாள் :- 24.11.2006

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

பார்வை :

இலங்கையில் வாழ் கின்ற ஈழத்தமிழ்  மக்களின் துயரங்கள் குறித்து, 30.08.2006, 6.11.2006 ஆகிய நாள்களில், நான் தங்களுக்கு எழுதிய கடிதங்கள். 

Vaiko filed an appeal against sterlite

#MDMK General Secretary Mr. Vaiko filed Appeals Before the Supreme Court of India against M/s Sterlite Industry 

Mr. #Vaiko, General Secretary of Marumalarchi Dravida Munnetra Kazhagam filed Civil Appeal before the Supreme Court of India against the order of the National Green Tribunal. New Delhi. By its Order dared 08-08-2013 the National Green Tribunal, New Delhi allowed the appeals preferred by the Sterlite Industry, Thoothukudi against the directions of the Tamilnadu Pollution Control Board darted 29-02-2013 for the closure of the industry consequent to the emission of Sulphur Di Oxide on 23.03.2013. 

உச்ச நீதிமன்றத்தில் வைகோ

உச்ச நீதிமன்றத்தில் பசுமைத் தீர்ப்பாயத்தினை எதிர்த்து ஸ்டெர்லைட் வழக் கில் #வைகோ மேல்முறையீடு

டெல்லி தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு கடந்த 08.08.2013 அன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப் பட்ட மேல் முறையீடுகளை ஏற்றுக் கொண்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் 29.03.2013 அன்று ஆலையை மூடிடவும், ஆலைக்குச் செல்லும் மின் சாரத்தை நிறுத்தி விடவும் பிறப்பிக்கப்பட்ட உத்திரவுகளை இரத்து செய்து ஆலை தொடர்ந்து செயல்படலாம் என்றும் தீர்ப்பளித்தது.

பகத்சிங் நூற்றாண்டு விழா-பகுதி 9

07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை

பண்டித ஜவஹர்லால் நேருவும் - சுபாக்ஷ் சந்திர போசும், பகத் சிங், சுகதேவ், ராஜகுரு மரண தண்டனையில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் உண்மையான ஈடுபாட்டோடு விரும்பினார்கள். இந்த சந்தர்ப்பத்தில் வைஸ்ராய் இர்வினைச் சந்திக்க மகாத்மா காந்தி போனார். என்ன நடந்தது? நான் பேசுவது எல்லாம் ஆவணங்களை வைத்து இருக்கிறேன்.மகாத்மா காந்தி இர்வினுக்கு எழுதிக் கொடுத்து இருக்கிறார். அதில் என்ன சொல்கிறார் என் றால்?

மதுஒழிப்பில் நாகம்மை

மதுஒழிப்பில் ஈ.வெ.ரா. நாகம்மையார்!

ஈ.வெ.ரா. நாகம்மையார் அவர்கள் தந்தை பெரியாரின் துணைவியார் பெரியார் நடத்திய பல போராட்டங்களிலும் பங்கு கொண்டவர். தந்தை பெரியார் அவர் கள், “நாகம்மையார் நான் காங்கிரசில் இருக்கும்போது நடத்திய பல்வேறு மறி யல் விஷயங்களிலும் வைக்கம் சத்தியாகிரக விஷயத்திலும் சுயமரியாதை இயக்கத்திலும் ஒத்துழைத்து வந்தது உலகம் அறிந்ததாகும்” எனக் கூறினார்.

வைக்கம் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் முக்கிய பங் காற்றிய நாகம்மையார் கள்ளுக்கடை மறியலிலும் போராடினார். இவரது
போராட்டம் பெண்கள் போராட்ட வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும்.

Tuesday, September 10, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 14

நாள்:- 24.11.2006

செய்திக் குறிப்பு:

பிரதமர் மன்மோகன்சிங்குடன், #வைகோ- #மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு!

இந்தியப் பிரதமருடனான சந்திப்பு குறித்து வைகோ செய்தியாளர்களிடம் கூறி யதாவது:

நானும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப் பினர்கள் டாக்டர் சி. கிருஷ்ணன், சிப்பிப்பாறை அ. இரவிச்சந்திரன் ஆகியோ ரும் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களை இன்று (24.11.2006) மாலை 5.00 மணிக்குத் தில்லியில் சந்தித்தோம். இந்தச் சந்திப்பு 30 மணித்துளி கள் நீடித்தது. எங்களுடைய விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டு உள்ள கோரிக் கைகளை பிரதமரிடம் விளக்கிச் சொன்னோம்.

பகத்சிங் நூற்றாண்டு விழா-பகுதி 8

07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை

லாகூர் சிறையில் மரணக் கொட்டடியில் அடைக்கப்பட்டார்கள். இந்தக் கால கட்டத்தில் அவர் படித்த நூல்கள் ஏராளம் ஏராளம். அவருடைய அறிவுப் பசிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை விதவிதமான புத்தகங்கள். கம்யூனிச புத்தகங் கள் அவர் மனதைக் கவர்ந்த புத்தகங்கள். லெனினைப் பற்றிய புத்தகங்கள். மார்க்சியத்தைப் பற்றிய புத்தகங்கள். அதைப் படித்தது மட்டுமல்ல ரொம்ப ஆச் சரியமாக இருக்கிறது. சின்கிலேர் எழுதிய ஒற்றன் என்ற ஒரு நாவல் அது கூட அவர் கேட்கிறார்.

உணர்த்தும் உண்மைகள்!

இந்திய ரூபாய் மதிப்பு சரிவு; பொருளாதார வீழ்ச்சி; உணர்த்தும் உண்மைகள்!

பொருளாதாரப் புலிகள் என்று வர்ணிக்கப்படும் பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதி அமைச்சர் ப. சிதம்பரமும் 2014 மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து பதவியை விட்டு வெளியேறும் போது, ‘நாடு திவால்’ ஆகி “மஞ்சள் கடுதாசி” கொடுக்க வேண்டிய நிலைமைக்கு இந்தியப் பொருளாதாரம் தள்ளப்பட்டு விட் டது. விடுதலை பெற்ற இந்தியாவில் நீண்டகாலம் ஆட்சிப் பொறுப்பை வகித்த காங்கிரஸ் கட்சி,இந்தியப் பொருளாதாரத்தை மலை உச்சியிலிருந்து உருட் டித் தள்ளி இருக்கின்றது.

Monday, September 9, 2013

தூத்துக்குடியில் மதிமுக அமோக வெற்றி

தூத்துக்குடி மக்களைவை தொகுதியில் #மதிமுக அமோக வெற்றி பெறும்: கோவில்பட்டி திருமண விழாவில் #வைகோ பேச்சு

கோவில்பட்டி நகர்மன்ற உறுப்பினர் தெய்வேந்திரன் மகன் திருமணம் ஆர்த்தி மஹாலில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்து இருந்த மதிமுக பொது செயலாளர் வைகோ மணமக்களைவ வாழ்த்தினார்.

கோவை மாவட்ட இளைஞரணி

கோவை மாவட்ட #மதிமுக இளைஞரணிக் கூட்டம் அமைப்பாளர் ஸ்ரீதர் தலை மையில் நேற்று (௦08.09.13)  நடந்தது. மாநில இளைஞர் அணிச் செயலர் வே.ஈஸ் வரன், மாவட்ட பொறுப்பாளர் ஆ.செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிப்பதோடு அதிலிருந்து இலங்கை யை நீக்கவும் இந்தியா வலியுறுத்த வேண்டும். 

பன்னாட்டு இளைஞர் மாநாடு

பல்வேறு மாண வர் இயக்கங்களைச் சேர்ந்த மாணவர்களும் இளைஞர்களும், #மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ உட்பட்ட அரசியல் தலைவர்களும் எழுத்தாளர் களும் தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டு மாநாட்டு கோரிக்கை களுக்கு வலு சேர்த்தனர்.

சேவ் தமிழ்ஸ் இயக்கமும், தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழுவும் இணைந்து, தமிழினப் படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என்ற முழக்கத்தோடு செப்டம்பர் 7 சென்னையில் பன்னாட்டு இளைஞர் மாநாடு நடைபெற்றது.

பகத்சிங் நூற்றாண்டு விழா-பகுதி 7

07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை

1929 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் குண்டு வீசினார்கள். மே 7 ஆம் தேதி விசாரணை தொடங்கியது. ஜூன் 12 ஆம் தேதி தீர்ப்பு. ஆயுள் தண்டனை. அந்தமானுக்கே அனுப்பலாம். ஆயுள்தண்டனை வந்து அந்த தண் டனையைத்தான் அனுபவிக்க இருக்கும் என்று கருதுகிற அந்த காலகட்டத் தில், ஷாண்டர்ஸ்சை சுட்டுக் கொன்றதில் பகத்சிங் குற்றவாளி என்று வழக்கு வருகிறது.

நிலம் கையகப்படுத்துதல்

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு தாரைவார்க்கிறது அரசு...
நாட்டின் விளைநிலங்களை தனியாரிடம் ஒப்படைக்கவே இச்சட்டம் பயன் படும்!

நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தால் வரும் ஆபத்தைச் சுட்டிக்காட்டி மக்கள வையில் #மதிமுக உறுப்பினர் அ.கணேசமூர்த்தி பேச்சு

Sunday, September 8, 2013

பகத்சிங் நூற்றாண்டு விழா-பகுதி 6

07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை

கல்கத்தா காங்கிரஸ் மாநாடு அங்கே நடக்கிறது. அதில் அவர்களுக்கு ஈடுபாடு இல்லை. அங்கே செல்கிறார் பகத் சிங். சலிப்புத் தட்டுகிறது. அங்கே உள்ள தீர் மானங்கள், நடவடிக்கைகள், சில பேச்சுகள் சலிப்புத் தட்டுகிறது. காங்கிரஸ் மாநாட்டைவிட்டு வெளியே வருகிறார்.அவர் சொல்கிறார்.அப்பொழுது எங்கே செல்வது என்று நான் கருதினேன். ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத் துயர வரலாற்றை விவரிக்கின்ற Uncle Toms Cabin என்கின்ற திரைப்படம் நடப்பதைக் கேள்விப்பட்டு, நான் அங்கே சென்றேன்’ என்று பகத்சிங் சொல்கிறார்.

பள்ளிக்கு வராத ஆசிரியர்

#மதிமுக விவசாயிகள் அணி மாநில துணைச் செயலாளர் வரதராஜன் மீது பொய் புகார் கூறிய தலைமை ஆசிரியர் , விசாரணையில் உண்மை வெளிப் பட்டு தலைமையாசிரியரை சஸ்பெண்ட் செய்து தொடக்க கல்வி அலுவலர் உத்தர விட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள அயன்வடமலாபுரத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு கோவில்பட்டியைச் சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். பள்ளியில் அயன்வடமலாபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மாணவ, மாணவி கள் படித்து வருகின்றனர்.

கச்சத்தீவு யாருக்குச் சொந்தம்?

சங்கொலி தலையங்கம் 

டெல்லியில் ஆட்சிபுரிகின்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக் குக்கூட்டணி அரசு, தமிழ் இனத்திற்கு எதிரான அரசு - தமிழ்நாட்டிற்கு விரோத மான அரசு என்பதை,மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்து இருக்கின்றது. 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா உச்சநீதி மன்றத்தில் கச்சத்தீவு தொடர்பாக ஒரு வழக்கு தொடர்ந்தார்.

“கச்சத்தீவு எந்த நாட்டுக்கும் சொந்தம் இல்லாமல் இருந்தது.ஆங்கிலேயர் ஆட் சிக் காலத்தில் கச்சத்தீவுக்கு யார் உரிமை கொண்டாடுவது என்ற பிரச்சனை இந்தியா, இலங்கை இடையே நீடித்து வந்தது. அதைத் தொடர்ந்து இந்தியா-இலங்கைக் கடற்பகுதியில், சர்வதேச எல்லைக்கோட்டை நிர்ணயித்தபோது, கச்சத்தீவு இலங்கை வரம்புக்குள் சென்றுவிட்டது. அதன் பிறகு இந்தியா மற் றும் இலங்கை அரசுகளுக்கிடையே 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் ஒப் பந்தங்கள் உருவாக்கப்பட்டன. இதன் அடிப்படையில் ராமேஸ்வரம் அருகே உள்ள கச்சத்தீவு இலங்கை அரசுக்கு தாரை வார்க்கப்பட்டது. எனவே, இந்த ஒப் பந்தங்களை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்” என்று மனுவில் ஜெய லலிதா குறிப்பிட்டிருந்தார்.

Saturday, September 7, 2013

வைகோ 50

வைகோவின் 50 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையை சில பக்கங்களில் தொகுத்து விட முடியாது இருந்தாலும் சிறிய முக்கியமான குறிப்புகள் மட்டுமே.

1964 -ஆகஸ்ட் மாதத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் முன்னிலையில், கோக லே அரங்கத்தில், இந்தி எதிர்ப்புக் கருத்து அரங்கில் வைகோ பேசினார் ,அன்று இரவு நுங்கம்பாக்கம் இல்லத்தில் அண்ணா அவர்களை சந்தித்தார். பாராட்டை யும் பெற்றார்.

1965 -ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போர்க்களத்தில், மாணவர் அமைப்பினரோ டும் திரு.பெ. சீனிவாசன் அவர்களோடும் இணைந்து களப்பணி ஆற்றினார் தலைமறைவாகவும் இருந்தும் செயல்பட்டார்.

பகத்சிங் நூற்றாண்டு விழா-பகுதி 5

07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை

பழிக்குப்பழி என்று முடிவெடுத்தபிறகு, அதற்குத் திட்டம் வகுக்கின்ற காலத் தில், ஏற்கனவே ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு, அந்த அமைப்புச் சற்று மந்த மாக இருந்த நிலைமையில், மீண்டும் எழுச்சி ஊட்டி, புதிய பெயரைச்சேர்த்து, ‘ஹிந்துஸ்தான் ரிபப்ளிக் அசோஷியசேன்’ என்ற பெயரை, ‘ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிக் அசோஷியேசன்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அதற்கு ஒரு ஆயுதப்பிரிவு உருவாக்கப்பட்டு, அதற்கு சந்திரசேகர் ஆசாத் தலைவர் ஆனார்.

தொழிற்சங்க விழா

தமிழக உரிமைக்காகப் போராடும் எங்களிடம் நீதி, நேர்மை, நியாயம் இருக் கிறது...நம்பிக்கை உள்ள தோழர்களே, எங்கள் கரங்களைப் பற்றிக் கொள்ளுங்கள்!

தமிழ்நாடு மின்வாரிய மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னேற்றச் சங்கத் தொடக் கவிழாவில் #வைகோ

தமிழ்நாடு மின்வாரிய மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னேற்றச்சங்கத்தொடக்க விழா, 02.09.2013 அன்று தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நடைபெற்றது. தொழிற்சங்கக் கொடியேற்றி, பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரையாற்றி னார்.விவரம் வருமாறு:

திருப்பூர் மாவட்ட இளைஞரணி

காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என #மதிமுக வலியுறுத்தியுள்ளது.

Friday, September 6, 2013

மஞ்சள் வளர்ச்சி நிறுவனம்

ஆன்லைன் வர்த்தகத்தால் மஞ்சள் விவசாயிகளுக்குப் பாதிப்பு...
மஞ்சள் வளர்ச்சி நிறுவனம் ஏற்படுத்துக!

பிரதமரிடம் #மதிமுக அ.கணேசமூர்த்தி எம்.பி., கோரிக்கை

தேசிய பண்டக வகையீடு சந்தையில் (NCDEX) முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ.
விசாரணை கோரியும், மஞ்சள் விவசாயிகளுக்கு தனியாக மஞ்சள் வளர்ச்சி நிறுவனம் ஏற்படுத்தித் தரவேண்டியும் 26 ஆகஸ்டு 2013 ஆம் நாள் ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி இந்தியப் பிரதமரிடம்
அளித்த கோரிக்கை மனு வருமாறு:

உப்பனாற்றில் தடுப்பணை

கடலில் தண்ணீர் வீணாவதை தடுக்க உப்பனாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும்:  #மதிமுக வலியுறுத்தல்

தடுப்பணை ஏன் ?

சீர்காழி அருகே தேனூர் புதுமண்ணியாற்றிலிருந்து உப்பனாறு பிரிந்து கொண் டல், பனமங்கலம், துறையூர், சட்டநாதபுரம், காரைமேடு, புதுதுறை, திருநகரி வழியாக சென்று திருமுல்லைவாசல் கடலில் கலக்கிறது.

இந்த ஆறு மழைக்காலங்களில் வடிகாலாக இருந்து வருகிறது.கோடைகாலங் களில் திருல்லைவாசல் கடலில் இருந்து உப்பு தண்ணீர் ஆற்றின் வழியாக சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ள பனமங்கலம் வரை சென்று விடுகிறது. 

இளைஞன் உயிர்த் தியாகம்!

ஈழத் தமிழருக்கு நீதி கேட்டு ஜெனிவாவில்
ஈழத்தமிழ் இளைஞன் தீக்குளித்து உயிர்த் தியாகம்!

#வைகோ இரங்கல்

அனைத்துலக நாடுகளின் மனச்சாட்சியின் கதவைத்தட்டுவதற்காக, ஈழத்தமிழ் இளைஞன் செந்தில்குமரன், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் உடலில் பெட்ரோலை ஊற்றி, நெருப்பு வைத்துக் கொண்டு, தமிழ் ஈழத்துக்கான நீதி கேட்டு உயிர்த் தியாகம் செய்துள்ளார். தமிழினத்தின் தேசியத் தலைவர் பிரபா கரன் அவர்களின் திருவுருவப் படத்தை ஏந்தியவாறு சென்று முழக்கமிட்டு பின்னர் மரண நெருப்புக்குத் தன் உயிரைத் தந்துள்ளார்.

கல்லூரியை அரசுடமை ஆக்குக

D.D மருத்துவ கல்லூரியை அரசுடமை ஆக்குக - #வைகோ கோரிக்கை

D.D மருத்துவ கல்லூரி நிர்வாகத்தின் முறைகேடான நடவடிக்கைகளாலும் , முறையற்ற செயல்களாலும் அதன் அங்கீகாரம் ரத்து செய்ய பட்டது எதிர்கால கல்வி கேள்வி குறியான நிலையில் கடந்த 16 நாட்களாக பாதிக்கப்பட்ட 103 மாணவ மாணவிகள் அற வழியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர் 

Thursday, September 5, 2013

பகத்சிங் நூற்றாண்டு விழா-பகுதி 4

07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை

பகத் சிங் பிறந்த ஊருக்குப் பெயர் கட்கர் கலான். நான் கண்ணப்பன் அவர்கள், மத்திய மரபுசாரா எரிசக்தித்துறை அமைச்சராக இருந்தபோது, அன்றைக்கும் பஞ்சாபில் முதல் அமைச்சராக இருந்த அகாலிதள தலைவர் பிரகாக்ஷ் சிங் பாதல் அவர்களின் அழைப்பினை ஏற்று, பகத்சிங் பிறந்த ஊருக்கு சூரிய வெப் பத் தில் இருந்து மின்சாரத்தைத் தருகின்ற திட்டத்தை நீங்கள் வழங்க வேண் டும் என்று கேட்டுக் கொண்டதை பெரிய பெருமிதமாகக் கருதி, அந்த திட்டத் துக்கு அனுமதி வழங்கியதால், அடிக்கல் நாட்டுகிற நிகழ்ச்சிக்கு அமைச்ச ரோடு என்னையும் சேர்த்து பிரகாக்ஷ் சிங் பாதல் அழைத்து இருந்தார்.


பணியாளர்கள் பணிநீக்கம்

திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் #மதிமுக விவசாய அணி மாநில துணை செய லாளர் வரதராஜன் தலைமையில் கோவில்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் புதுவாழ்வு திட்டம் கடந்த 7 ஆண்டுகளாக செயல் பட்டு வருகிறது. இத்திட்டத்தின் தலைமை அலுவலகம் கோவில்பட்டியில் உள்ளது. புதுவாழ்வு திட்டத்தின் மாவட்ட திட்ட மேலாளராக தரணி பணி யாற்றி வருகிறார். 

பாபரும் மதுவிலக்கும்!

பாபரும் மதுவிலக்கும்!

ஜவுஹுருத்தின் முகம்மது பாபர் 14.02.1483 - 26.12.1530. இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவியவர். அவரது விரிவான வரலாற்றை இந்திய வரலாற்றிலும் முகலாயர் வரலாற்றிலும் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

அவரது மதுவிலக்கு கொள்கை குறித்து அவர்தரும் தகவல்கள் மட்டும் இதோ:

ராணாசங்கா

ராஜபுத்த அரசர் வீரத்தின் இலக்கணம் இராணாசங்காவுடன் 1527 மார்ச் 17 ஆம்
நாள் கான்வாப் போர் நடத்தி வெற்றி கண்டவர் பாபர். அவர் அந்தப் படையெ டுப்பிற்கு செல்லும் முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சிகள் இதோ:

காங் தோற்கடிக்க வேண்டும்

எத்தனை கட்சிகளோடு சேர்ந்து கூட்டணி வைத்தாலும் மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்று ஆரணியில் நேற்று (04.09.13) இரவு நடைபெற்ற தேர்தல் நிதியளிப்பு விழாவில் #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ கூறினார்.

திருவண்ணாமலை மாவட்ட மதிமுக சார்பில் ரூ.18 லட்சத்து 60ஆயிரம் தேர்தல் நிதியாக வைகோவிடம் வழங்கப்பட்டது.

Wednesday, September 4, 2013

கர்நாடக புதிய அணை ?

கர்நாடக அரசு மேகதாது பகுதியில் அணைக்கட்ட முயற்சிப்பதை மத்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். காவிரி நீரை நம்பியுள்ள தமிழக விவ சாயிகளை வஞ்சிக்கும் இச்செயலில் ஈடுபட்டுள்ள கர்நாடக அரசுக்கு எங்கள் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்று #மதிமுக பொதுச் செயலர் #வைகோ கூறினார்.

வேலூரில் மதிமுக மாவட்டக் கழகங்கள் சார்பில் கட்சி நிதியளிப்பு விழா கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்திருந்த வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:

பொய்ச் செய்தி மறுப்பு

#மதிமுக இராயபுரம் பகுதிச் செயலாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் நான் இதன் மூலம் தெரிவிப்பதாவது:

நான் ம.தி.மு.க.வில் இருந்து விலகியதாகவும், தி.மு.க.வில் இணைந்து விட்ட தாகவும் கருணாநிதியின் குடும்ப நாளேடான முரசொலி செய்திவெளியிட்டுள் ளது. சிலரின் சுயநலத்திற்கு பலிகடாவாக்கி தனிமையில் இருந்தபோது ம.தி. மு.க.வில் இருந்து விலகிய சிலரும், தி.மு.க.வினர் சிலரும் சேர்ந்து என்னை வலுக்கட்டாயப்படுத்தி, நிர்பந்தத்திற்கு உள்ளாக்கி, மேடைக்கே அழைத்துச் சென்று நிறுத்திவிட்டார்கள்.

உண்மையில் நான் ம.தி.மு.க.வில் இருந்து விலகவில்லை. தி.மு.க.வில் இணையவில்லை. இவ்விஷமத்தனமான செய்தியை நான் வன்மையாக மறுத்துக் கண்டிப்பதோடு, நான் தொடர்ந்து தலைவர் வைகோ தலைமையில் மறுமலர்ச்சி தி.மு.க.வில் பணியாற்றுவேன் என உறுதி கூறுகின்றேன்.

இவண்
எம்.கே.இஸ்மாயில்

சென்னை
04.09.2013 

பகத்சிங் நூற்றாண்டு விழா-பகுதி 3

07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை

அந்த மாவீரன் பகத்சிங் பிறந்தது செப்டம்பர் 28 என்று சொல்பவரும் உண்டு. ஆனால், பலரும் அக்டோபர் 7 என்று பதிவு செய்துள்ள காரணத்தால், அந்த அக்டோபர் 7 என்பது, புரட்சி இயக்கத்தின் வரலாற்றில் முக்கியமான நாள் என்பதால், Oh October thy name is Lenin என்று அக்டோபர் 7 ஐ அகிலம் கொண்டாடு கிற காரணத்தால், பெரும்பாலானோரின் கருத்தை ஏற்று, அந்த அக்டோபர் 7 ஆம் நாளையே பகத்சிங்கின் பிறந்த நாளாகக் கருதி, நூற்றாண்டு நிறைவு பெறுகிற நேரத்தில் நாங்கள் இந்த நிகழ்ச்சியை இங்கே நடத்துகிறோம்.

மணப்பாறை மதிமுக கூட்டம்

மணப்பாறையில் #மதிமுக சார்பில் தந்தை பெரியார் சிலை அருகில் பொதுக் கூட்டம் ஒன்றியச் செயலாளர் துரைராஜ் தலைமையில் நடைபெற்றது. 

நிர்வாகிகள் முருகேசன், அடைக்கலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

நகர பொறுப்புக்குழுத்தலைவர் எம்.கே.முத்துப்பாண்டி வரவேற்றுப் பேசினார். 

வைகோ தனி நபரல்ல..

#வைகோ தனி நபரல்ல...திராவிட இயக்கத்தின் தொடர்ச்சி...!

“வைகோ ஒருவரை வைத்துத்தான் இந்த இயக்கம் வாழ வேண்டும் என்றால்,
அந்த விதையை வைத்து எல்லா செடிகளும் முளைத்துத் தீர வேண்டும். வைகோ -வை வைத்துதான் இந்த உலகம் விடிய வேண்டும் என்றால், அவர்
விடியலாகவே இருக்க வேண்டும்.வைகோ-வை வைத்துதான் இரவுகள் பூர்த்தி யாகவேண்டும் என்றால், அவர் நட்சத்திரமாக இருந்து தீர வேண்டும்.இது கவிதை அல்ல, தோழர்களே! உண்மையைச் சொல்லுகிறேன்.

Tuesday, September 3, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 13

நாள் :- 18.11.2006

ஈழத்தமிழரைப் பாதுகாப்போம்!
#வைகோ வுக்குப் பிரதமர் உறுதிமொழி!

‘ஏ-9 நெடுஞ்சாலையைத் திறக்க வேண்டும்; பட்டினிச்சாவில் இருந்து ஈழத்தமி ழர்களைக் காப்பாற்ற இந்தியா உணவுப்பொருள்களை அனுப்ப வேண்டும்’ என் று கோரி, இந்தியப் பிரதமருக்கு, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்து இருந்தார். இது தொடர்பாக, நீண்ட விளக்கம் அளித்து, இந்தியப் பிரதமர் மாண்புமிகு டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள்,
வைகோவுக்குக் கடிதம் எழுதி உள்ளார். நவம்பர் 12 ஆம் நாள் பிரதமர் எழுதிய கடிதம், 17.11.2006 அன்று தாயகத்தில் பெறப்பட்டது. கடித விவரம் வருமாறு:

வரும் தேர்தலில் மதிமுக

செப்டம்பர் 15, விருதுநகரில் அண்ணா பிறந்த நாள் மாநாட்டை மறுமலர்ச்சி தி.மு.க. நடத்துகிறது. இதற்கான பந்நதல் அமைக்கும் பணியினை 4 முறை யாக பொதுச்செயலாளர் #வைகோ அவர்கள் பார்வையிட்டார்.

மாவட்டச் செயலாளர் ஆர்.எம்.சண்முகசுந்தரம், புதூர் மு.பூமிநாதன், எம்.டி. சின்னசெல்லம், தி.மு.இராசேந்திரன், சிப்பிப்பாறை இரவிச்சந்திரன், ஆர்.வரத ராஜன், ஆர்.ஞானதாஸ், மின்னல் முகமது அலி ஆகியோர் உடன் இருந்தனர்.

அணுஉலையை எதிர்ப்பது

மக்கள் தலைவர் #வைகோ அணுஉலையை எதிர்ப்பது நியாயமானதே!

கூடங்குளம் அணுஉலையை மூட வேண்டும் என்று மக்கள் தலைவர் வைகோ தொலைநோக்குப் பார்வையோடு குரல் கொடுப்பது முற்றிலும் நியாய மான தே!

கூடங்குளம் பகுதி பொதுமக்கள் மற்றும் மீனவர்கள், அணுஉலைக்கு எதிராக, 700 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து அறவழியிலும், அமைதி வழியிலும்
போராடி, தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

பேசும் சக்தி இருக்கும் வரை

தமிழகம் பெரிய அரசியல் மாற்றத்திற்கு தயாராகி வருகிறது 

எனக்கு பேசும் சக்தி இருக்கும் வரை தமிழுக்காக பேசுவேன் எனக்கு போராடும் சக்தி இருக்கும் வரை தமிழருக்காக போராடுவேன்-#வைகோ 

தமிழ்நாடு மின்வாரிய மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் துவக்க விழா நேற்று தூத்துக்குடி அனல்மின் நிலைய வளாகத்தில் மாவட்ட மதிமுக செயலாளர் ஜோயல் தலைமையில் நடந்தது. சங்கரகோபால், டேவிட்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் எபநேசர் தாஸ் வரவேற்றார்.

மதிமுக தொழிற்சங்க கொடியை பொதுச்செயலாளர் வைகோ ஏற்றி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது;

Monday, September 2, 2013

வைகோ 25

அரசியல் மேடைகளில் #வைகோ உமிழும் ஒவ்வொரு வெப்ப வார்த்தையும், களத்தைக் கொதிகலனாகவே வைத்து இருக்கும். ‘போர்வாள், புரட்சிப் புயல்’ எனப் பளீர் பட்டங்களால் அடையாளம் காணப்படும் பிளாக் டைகர். பொது வாழ்க்கையில் பம்பரமாகச் சுழன்று கொண்டு இருப்பவரின் பெர்சனல் பக்கங் களில் இருந்து இங்கே கொஞ்சம்...

சிவகங்கை இளைஞரணி

சிவகங்கை மாவட்ட திருக்கோஷ்டியூரில் #மதிமுக ஒன்றிய நகர பேரூர் கழக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

மாவட்டச் செயலாளர் செவந்தியப்பன் தலைமை வகித்தார். குரு.தங்கபாண்டி யன், முத்துச்சாமி, சார்லஸ், மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நீலகிரி இளைஞரணி

நீலகிரி மாவட்ட #மதிமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மஞ்சூரில் நடைபெற்றது. மாவட்ட அமைப் பாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். 

ஒன்றிய துனை அமைப்பாளர் சுரேஷ், மாணவர் அணி அமைப் பாளர் செந்தில் குமார்,மஞ்சூர் இளைஞரணி அமைப் பாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

சிறைவாசிகளை விடுதலை செய்க!

பேரறிஞர் அண்ணா 105-ஆவது பிறந்த நாளையொட்டி
சிறைவாசிகளை விடுதலை செய்க!

#வைகோ கோரிக்கை

ஆயுள் தண்டனை அடைந்தோர், பத்து ஆண்டுகள் தண்டிக்கப்பட்டோர், சில குற்றப் பிரிவுகளில் தண்டனை பெற்றதைக் காரணம் காட்டி, 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள் கடந்தும் சிறையில் இருக்கின்றனர்.

வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒரு சிறைவாசி, நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தால், பரோல் விடுப்பு கிடையாது என்பதும், நியாயப்படுத்த முடியாத மனிதாபிமானம் அற்ற நடவடிக்கை ஆகும். 

உ.பா.ச அவசரத்தில்..

சங்கொலி தலையங்கம் 

உணவுப் பாதுகாப்புச் சட்டம் அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலம்!

காங்கிரஸ் கட்சியின் ஜனநாயக விரோதப் போக்கு மீண்டும் ஒருமுறை தேசி ய உணவுப் பாதுகாப்பு மசோதா மூலம் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. காங் கிரஸ் தலைவர் திருமதி சோனியா மூளையில் உதித்த திட்டம் என்று வெகு வாகப் புகழப்படும் உணவுப் பாதுகாப்பு மசோதா, நாடாளுமன்ற ஜனநாயக முறைகளை கேலிக்கூத்தாக்கிவிட்டு, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகவும்
நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

ஆகஸ்டு 26 ஆம் தேதி மக்களவையில், உணவு அமைச்சர் கே.வி.தாமஸ் உண வுப் பாதுகாப்பு சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.ஒன்றரை இலட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின்படி, கிராமப் புறங்களில் 75 சதவீத மக்களுக்கும், நகர்ப்புறங்களைச் சேர்ந்த 50 சதவீத மக் களுக்கும் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று மசோதாவை அறி முகம் செய்த அமைச்சர் கே.வி.தாமஸ் குறிப்பிட்டார்.

Sunday, September 1, 2013

உழவன் விரைவு ரயில்

தஞ்சாவூர் - சென்னை இடையே இன்று அறிமுகப்படுத்தப்படும் புதிய ரயிலுக்கு, "உழவன் விரைவு ரயில்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது."தஞ்சாவூர் - சென்னை இடையே புதிய விரைவு ரயில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்' என, மக்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர். மக்களின் கோரிக்கை போராட்டம் வெற்றி நோக்கி இன்று ரயில் அறிமுகம் செய்யப்பட்டது ..

தஞ்சை மாவட்டத்தில் திமுகவினர் வழக்கம் போல இரு பிரிவுகளாக பிரிந்து ஒரு பிரிவு இத்திட்டத்தை கொண்டுவந்தது டி.ஆர் பாலு என்று கூறி நன்றி அறிவிப்பு பலகைகள் வைத்துள்ளனர் ...

மாற்று அரசியல் கருத்துக் களம்

இனஎழுச்சி பிறந்த ஈரோட்டில்....

இளைய தலைமுறையினரின்
மாற்று அரசியல் கருத்துக் களம்...!

வாலிபர்கள் துணிவு கொள்ள வேண்டும். எந்தக் காரியமானாலும் சரி, நம் இலட்சியத்திற்கு ஒத்ததா என்று பார்க்க வேண்டும். மாறுபட்டதாயின் அதை எதிர்த்து வேலை செய்தாக வேண்டும்படியான துணிவு உங்களுக்கு ஏற்பட வேண்டும் என்று ஈரோட்டிலிருந்து தந்தை பெரியார் குடி அரசு ஏட்டில் 1944-ம் ஆண்டு எழுதுகிறார். மாறுபட்ட முரண்பாடுகள் நம் சமூகத்தில் இருக்குமா யின், அதிலிருந்து நம் மக்களை விடுவித்து நல்ல சமூக மாற்றத்தை உரு வாக் க வாலிபர்கள் போராட வேண்டும் என்பதையே குடி அரசு ஏட்டின் வாயி லாக தட்டி எழுப்பினார் தந்தை பெரியார். அந்த உணர்வு மங்கிட வில்லை.

கூடுதல் பேருந்து -மாணவரணி

கூடுதல் பேருந்து இயக்க #மதிமுக மாவட்ட மாணவரணி கோரிக்கை

உடுமலை அரசுக் கல்லூரிக்கு காலை நேரங்களில் கூடுதல் பேருந்து இயக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசுப் போக்குவரத்துக் கழக மேலாளருக்கு, மதிமுக மாவட்ட மாணவரணி சார்பில் அளிக்கப்பட்ட மனு விவரம்:

நாட்டை திவாலாகும் நிலை

மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு
நாட்டை திவாலாகும் நிலைக்குத் தள்ளி விட்டது

#வைகோ அறிக்கை

காங்கிரஸ் தலைமையிலான மக்கள் விரோத மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் மீண்டும் உயர்த்தி மக்கள் மீது தாக்குதல் நடத்தி வரு கிறது. ஜூன் மாதத்தில் இருந்து 6ஆவது முறையாக பெட்ரோல் விலையை யும், கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து 8ஆவது முறையாக டீசல் விலையை யும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி இருக்கின்றன.