கல்லூரி முதல்வர் படுகொலை #வைகோ வேதனை;
வளரும் தலை முறைக்கு வேண்டுகோள்!
இதயத்தை உறைய வைக்கும் கொடூரமான துன்பச் செய்தி, அறிந்த மாத்திரத் தில் அனைவரையும் பலத்த அதிர்ச்சிக்கு ஆளாக்குகிறது. திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்குச் செல்லுகின்ற வழியில், வல்லநாட்டுக்கு அருகில் உள்ள குழந்தை ஏசு பொறியியல் கல்லூரியின முதல்வர் சுரேஷ் அவர்கள், இன்று காலை, அதே பொறியியல் கல்லூரியின் மூன்று மாணவர்களால், கல் லூரி வளாகத்துக்கு உள்ளேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.
பேருந்துகளில் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறுகளில் இம்மாண வர்கள் நடந்து கொண்ட விதம் கல்லூரியின் ஒழுங்குக்குக் கேடு ஏற்படுத்தும் என்று எண்ணி, இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தற்காலிக நீக்கம் செய்து உள்ளார். அதனால், இம்மாணவர்கள், அவரைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்து உள்ளனர்.
தமிழ்நாட்டில் இலட்சோபலட்சம் மாணவர்கள், கல்வியில் முனைப்போடு, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற துடிப்போடு, பெற்றோரின் கனவு களை நனவாக்க வேண்டும் என்கின்ற குறிக்கோளோடு பயின்று வருகிறார் கள், அமைதி காத்து வருகிறார்கள். ஆனால், அண்மைக்காலமாக, ஒருசில மாணவர்கள், கல்லூரிகளுக்குள் மோதிக் கொள்வதும், ஆயுதங்களைக் கொண் டு தாக்கும் வன்முறையில் ஈடுபடுவதும், மிகவும் விபரீதமான நிலையை ஏற் படுத்துகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பு, கல்லூரிகளில் மாணவர்கள் இடையே அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்கூட, வேறுவிதமான குறுகிய உணர்வு களோ, எண்ணங்களோ ஏற்பட்டது கிடையாது. ஆகக்கூடுதாலாக சத்தம் போட் டுப் பேசி சண்டை போட்டுப் பின்னர் சேர்ந்து கொள்வார்களே தவிர, கத்தி, அரி வாள் கொண்டு தாக்குவது போன்ற நிகழ்வுகள் கிடையாது.
கடிதோச்சி மெல்ல எறிக என்பது போல, ஆசிரியர்கள் கண்டிப்பது, மாணவர் களின் நன்மைக்காகத்தான்; ஒரு தந்தை பிள்ளையைக் கண்டிப்பதைப் போலத் தான். ஆனால், மாணவர்கள், கொடிய ஆயுதங்களைக் கொண்டு வன்முறை யில் ஈடுபடுவது, விதைநெல்லே அழியும் பெருங்கேடு ஆகும். பள்ளி ஆசிரியர் களை, தலைமை ஆசிரியர்களை, கல்லூரி முதல்வரை, பேராசிரியர்களை, மாணவர்கள் தாக்குகின்ற ஒரு நிலை ஏற்படுமானால், பயிரே வேலியை அழிக் கின்ற கேடாக முடியும்.
இத்தகைய வன்முறை இளம் உள்ளங்களில் மாணவர்களின் மனதில் வளர்வ தற்கு, அண்மையில் வருகின்ற திரைப்படங்களின் வன்முறைக் காட்சிகளும் ஒரு காரணம் ஆகும். பல இடங்களில் மதுவும் ஒரு காரணம் ஆகும்.
இந்தப் படுகொலைக்குப் பலத்த கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, இதைச் செய் த மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட் டுக் கொள்கிறேன்.
உயர்ந்த இலட்சியங்களுக்காக, தமிழகத்தின் உயர்வுக்காகப் பாடுபட வேண் டிய மாணவர் சமுதாயம், நமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பொறுப்பு வாய்ந்த மாணவர் சமுதாயம், வள்ளுவப் பெருந்தகை உள்ளிட்ட நமது முன் னோர்கள் வகுத்த அறநெறிகளை மனதில் கொண்டு, வன்முறைகளுக்கு இடம் கொடுக்காமல், தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டுகிறேன்.
‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச்செயலாளர்
10.10.2013 மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச்செயலாளர்
10.10.2013 மறுமலர்ச்சி தி.மு.க.
No comments:
Post a Comment