Tuesday, October 1, 2013

எந்நேரத்திலும் விவசாயிகளுடன் போராட தயாராக உள்ளோம்

தாமிரபரணி பாசன பகுதி விவசாயிகளுக்காக எந்நேரத்திலும் விவசாயிகளு டன் போராட தயாராக உள்ளோம் என ஏரலில் நடந்த விவசாயிகள் மாநாட்டில் #வைகோ யும் நல்லகண்ணுயும் அறிவிப்பு.

தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி நதிநீர் பாதுகாப்புபேரவை சார்பில் விவசாயி கள் வாழ்வாதார விழிப்புணர்வு மாநாடு ஏரல் ராசி திருமண மண்டபத்தில் நடந் தது. நதிநீர் பாதுகாப்பு பேரவை தலைவர் நயினார் குலசேகரன் தலைமை தாங் கினார். விவசாயி சம்பத் மாநாட்டை தொடங்கி வைத்தார். விவசாயி சிவஞான வேல் வரவேற்றார்.

மாநாட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோயின் உரை 

தாமிரபரணி நதி என்பது கங்கை நதியைவிட மூத்த நதியாகும். புராணக்காலத்
திலேயே இந்த நதியை வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். தூத்துக் குடி பகுதிக்கு தண்ணீர் கொடுப்பதற்காக 46ஆயிரத்து 107 ஏக்கர் விவசாய நிலங் களை அழிப்பதா? விவசாயமும் பாதுகாக்க வேண்டும். அதே நேரத்தில் தூத்துக் குடிக்கும் தண்ணீர் கொடுக்க வேண்டும். அதற்காக சேர்ந்தமங்கலம் அருகில் ஒரு லோயர் டேம் அமைத்து தூத்துக்குடிக்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும்.

2011–ல் தூத்துக்குடி பகுதி மக்களுக்கு தண்ணீர் பிரச்சினை தீர்க்கப்படும் என முதல்வர் அறிவிக்கிறார். அதற்கான திட்டமும் உடன் தயார் செய்து மருதூர் அணையிலிருந்து தண்ணீர் எடுக்க திட்டம் அனுப்பபடுகிறது.

அதற்கு பொதுப்பணித்துறை அதிகாரியாக இருந்த சம்பத்குமார் இத்திட்டத்தி னால் விவசாயம் அழிந்துவிடும் என இத்திட்டத்தை திருப்பி அனுப்பினார். ஆனால் தற்போது இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் செயல் படுத்தினால் விவசாயம் அழிந்துவிடும். எனவே கடலுக்கு செல்லும் 10 டி.எம்.சி தண்ணீரை அணைகட்டி முக்காணியில் தடுத்து அந்த தண்ணீரை தூத்துக்குடி மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டியதுதானே.

தூத்துக்குடி தொழிற்சாலைக்கு நாள் ஒன்றுக்கு ஒன்றரை கோடி லிட்டர் தண் ணீர் கொண்டு செல்லப்படுகிறது. உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் தொழிற் சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை நிறுத்தி தூத்துக்குடி மக்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும். எனவே மருதூர் அணையில் இருந்து தண்ணீர் எடுக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். விவசாயி களை பாதுகாக்க வேண்டும். விவசாயிகள் நடத்தும் எந்த ஒரு போராட்டத் திலும் நாங்களும் கலந்து கொள்வோம்.

இவ்வாறு வைகோ பேசினார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழு தலைவர் ஆர்.நல்ல கண்ணு கலந்து கொண்டு உரையாற்றினார்..

தாமிரபரணி ஆறு நமக்கு முன்னோர்கள் கொடுத்த சொத்து. இதனை பாது காப் பது நமது கடமையாகும். அதனை நாம் பாதுகாக்க தவறினால் நமது சந்ததி யி னருக்கு துரோகம் செய்ததாகும். தாமிரபரணி ஆற்றில் மணிமுத்தாறு, பாப நாசம், சேர்வலாறு உட்பட அணைக்கட்டில் இருந்து தண்ணீர் தாமிரபரணி ஆற் றிற்கு வருவதால் இப்பகுதிகளில் நெல்லை மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்க ரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 46 ஆயிரத்து 107 ஏக்கர் நிலங்களும் விவசாயம் நடந்து வருகிறது.

தற்போது தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்கும் திட்டத்தால் ஆபத்துவந்து
விட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் 8 அணைகள் உள் ளது. இதில் மருதூர் அணை 505 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இப்போது அந்த அணையில் இருந்து தண்ணீர் தூத்துக்குடிக்கு கொண்டு செல்லும் திட்டம் உள்ளது. இந்த திட்டம் நிறைவேறினால் வருங்காலத்தில் விவசாயம் முற்றி லும் இப்பகுதியில் அழியும் நிலை ஏற்படும்.
 
நாங்கள் தூத்துக்குடி மக்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டாம் என சொல்லவில்லை.அதற்கு மாற்று திட்டமாக முக்காணி பகுதியில்அணைகட்டி தண்ணீர் கொண்டு செல்லுங்கள் என சொல்லுகிறோம். விவசாயிகள் தாமிர பரணியை பாதுகாக்க பெரிய போராட்டம் நடத்திட வேண்டும். அதில் நானும் கலந்து கொள்வேன்.

இவ்வாறு நல்லகண்ணு பேசினார்.

மாநாட்டில் மாவட்ட ம.தி.மு.க செயலாளர் ஜோயல் ஏரல் சேர்மன் அருணா சல சுவாமி கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ. கருத்தப்பாண்டிய நாடார், நகர பஞ்சாயத்து தலைவர் பாலகிருஷ்ணன், , இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், வியாபாரிகள் சங்கம் செயலாளர் தசரபாண்டியன், தாமிரபரணி பாசன உரிமை பாசன சங்கம் வியனரசு, வெற்றிலை கொடிக்கால் சங்கம் தலைவர் சதிஷ்குமார், சூளைவாய்க்கால் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சாதிக்குல்அமீன், வியாபாரிகள் சங்க செயலாளர் தர்மராஜ், மாவட்ட விவசாய சங்க தலைவர் ராமையா, மாவட்ட பா.ஜ.க விவசாய அணியை சேர்ந்த ஏரல் கருப்பசாமி உள்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நல்லாசிரியர் வில்சன் வெள்ளையா நன்றி கூறினார்.

No comments:

Post a Comment