Thursday, October 24, 2013

பூலித்தேவன் விழா-வைகோ உரை-பகுதி 5

#வைகோ உரை ,பூலித்தேவன் பிறந்த நாள் விழா 18.10.2008

இரண்டாம் முறையாக கான்சாகிப் 1760 டிசம்பர் 12 இல் திருநெல்வேலியில் இருந்து பெரும்படையுடன் வந்து நெல்கட்டும் செவலில் இருந்து மூன்று கல் தொலைவில் உள்ள மலையடிவாரத்தில் முகாம் போட்டான் 1760 டிசம்பர் 20 இல் போர் தொடங்கியது. வீரமறவர்கள் நூறுபேர் மடிந்தார்கள். பூலித்தேவரே இம்முறையும் வென்றார். கான்சாகிப் தோற்றான்.

மூன்றாம் முறையாக கான்சாகிப் 1761 மேமாதத்தில் மீண்டும் பெருமளவில் கும்பினிப் படைகளுடன், பீரங்கிகளுடன் போர் தொடுத்தான். மே 3 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி முடிந்தது போர். இப் போரில்தான் பூலித்தேவர் தோற் றார். வாசுதேவநல்லூர் கோட்டை, பனையூர் கோட்டை, நெற்கட்டும் செவல் கோட்டைகள் வீழ்ந்தன. கான்சாகிப்பும் பின்னர் வெள்ளையரை எதிர்த்து மதுரையில் தளம் அமைத்தான். வீரத்தில் சிம்மமான பூலித்தேவர் ஆலய வழி பாட்டில் சிறந்து கோவில் திருப்பணிகள் பலவற்றை செய்தார்.

அவர் கட்டிய ஆலயங்கள் பலப்பல. சங்கரன்கோவில் கோவிலுக்கு சபாபதி மண்டபம் கட்டியவர் பூலித்தேவன்தான். அங்கே தெப்பக்குளம் வெட்டியவர் பூலித்தேவன். கரிவலம் வந்த நல்லூர் பால்வண்ணநாதர் ஆலயத்துக்கு முன் மண்டபம் கட்டியவர் பூலித்தேவன். அந்த ஆலயத்துக்குத் திருத்தேர் செய்தவர் பூலித்தேவன். வெள்ளி ஆசனங்களை அமைத்தவர் பூலித்தேவன். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மூலஸ்தானத்து அம்மனுக்கு தங்க நகைகள், வைர அட்டிகைகள் செய்துவைத்தவர் பூலித்தேவன். இங்கே பக்கத்தில் இருக் கக்கூடிய தாருகாபுரத்தில் 16 கால் மண்டபத்தைக் கட்டி அன்னதானம் செய்த வர் பூலித்தேவன். அதுமட்டுமல்ல, சீவலப்பேரி மருகால் தலையில் பூலுடை யார் கோவில் மண்டபம் கட்டியவர் பூலித்தேவன். அங்கே நெல்லையில் வாகையம்மன் கோவிலை கட்டிவைத்தவர் பூலித்தேவன்.

இத்தனைக் கோவில்களையும் கட்டி - இத்தனைத் திருப்பணிகளையும் செய்து
மக்களை அரவணைத்து மக்கள் வாழ்வு செழிப்பதற்கு பாடுபட்டு அனைவரை யும் சகோதரர்களாக ஏற்றுக் கொண்டதனால்தான் நான் இந்தக் கருத்தை வலி யுறுத்தவிரும்புகிறேன். எந்த மாபூஸ்கான் ஆர்க்காடு நவாப்பின் தம்பி எதிர்த்து வந்தானோ அவன் பூலித்தேவனிடத்தில் வந்து நான் உங்கள் நண்பனாக அரண் மனையில் இருக்கிறேன் என்றான். அவர் ஏற்றுக் கொண்டார். இந்த அரண் மனையில் நீண்டநாட்களாக மாபூஸ்கான் இருந்தான்.

இதெல்லாம் சரித்திரம் தோழர்களே, நான் ஆதாரம் இல்லாமல் பேசமாட்டேன். இதை நான் பேசுகிறபோது ஒலிநாடாவில் ஒளிநாடாவில் பதிவுசெய்யப்படும் என்ற உணர்வோடு பேசுகிறேன். இந்தப்பேச்சு ஒரு வரலாற்றுச் சுவடாக இருக் க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் பேசுகிறேன். ஏனென்றால் ஏராளமான தம்பிகள், இளைஞர்கள் வந்திருக்கிறார்கள். இந்தத் தம்பிகளின் உள்ளத்தில் வீரஉணர்ச்சியும், மானஉணர்ச்சியும் அவர்கள் உள்ளங்களில் பொங்கவேண் டும் என்பதற்காகத்தான் இங்கே வந்திருக்கின்ற தம்பிகள் இடத்தில் உன்னு டைய பாட்டன், முப்பாட்டன் எல்லாம் போராடி இருப்பான் பூலித்தேவன் படை யில். அவன் எல்லாம் வாளெடுத்து இருப்பான். அவன் எல்லாம் பீரங்கிக்கு எதிரே போய்நின்று இருப்பான். அவர்களுடைய பேரப்பிள்ளைகள்தான் நீங்கள். அந்த உணர்ச்சியைப் பெறவேண்டும் என்பதற்காக நான் இதைப்பேசுகிறேன்.

காரணம், பிரெஞ்சு நாட்டுத் தளபதி டியூப்ளே. அவன் மிகப்பெரிய தளபதி இரா பர்ட் கிளைவ்வோடு போரிட்டவன். சந்தர்ப்பவசத்தால் தோற்றுப்போனவன். பாண்டிச்சேரியைக் கைப்பற்றியவன். அந்தப் பாண்டிச்சேரியை பிரெஞ்சின் காலனியாக்கிய டியூப்ளேயின் மொழிபெயர்ப்பாளர்தான் துபாஸ் ஆனந்தரங்
கம் பிள்ளை. அவர் நாட்குறிப்பு எழுதியிருக்கிறார்.

ஆனந்தரங்கம் பிள்ளையின் டைரி. சரித்திரப் புகழ்பெற்ற டைரி. எப்பொழுது 1736 செப்டம்பர் 6 இல் தொடங்க 1761 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி வரை டைரி எழுதி இருக்கிறார். அந்த டைரி ஆவணக் காப்பகத்தில் இருக்கிறது. அந்த டைரியில் அவர் 11 பாகங்கள். 11 ஆவது பாகத்தில் மன்னர் பூலித்தேவரைப் பற் றி எழுதுகிறார். அப்பொழுது சொல்கிறார். இவரது பண்பாட்டை மாபூஸ்கான் என்பவன் மன்னர் அரண்மனையில் இருந்து அவன் விடைபெற்றுப் போகிற போது அவனது பட்டுச் சட்டையும், பொன்னாபரணங்களையும் அவனுடைய கைவசம் இருந்த பொன்னையும், பொருளையும் பாதுகாப்பாக வைத்து விட் டுப்போனான்.

இதை இங்கேயிருந்து அனுப்பிவைக்கிறார் பூலித்தேவன். அவர் இதை எழுது கிறார். ஒரு தேதியைக் குறிப்பிட்டு 1757 ஆம் ஆண்டில் டிசம்பர் 21 தேதியைக் குறிப்பிட்டு பூலித்தேவன் அரண்மனையில் இருந்து பொன்னும் பொருளும் பட்டாடைகளும் திருவண்ணாமலை கம்மந்தானிடம் ஒப்படைக்கப் பட்டது என்று செய்தி கிடைத்திருக்கிறது என்று டைரியில் எழுதுகிறார். விலைமதிப் பற்ற பொருள்கள் அனைத்தையும் பத்திரமாக அனுப்பி வைத்தார் பூலித்தேவர் என்பது அவரது நேர்மை நாணயத்துக்கு வரலாற்றுச் சான்றாகும்.

தொடரும் ...

பூலித்தேவன் விழா-வைகோ உரை-பகுதி 4

No comments:

Post a Comment