Thursday, October 10, 2013

விவசாயிகளின் பாசன உரிமையில் கைவைக்காதீர்கள்-பகுதி 2

விவசாயிகளின் பாசன உரிமையில் கைவைக்காதீர்கள்..... #வைகோ


ஸ்டெர்லைட் போன்ற நிறுவனங்களுக்கு தண்ணீர் கொடுத்துவிட்டு எங் கள் மக்களின் வயிற்றில் அடிக்காதீர்கள்!


தூத்துக்குடி மாவட்ட-தாமிரபரணி நதிநீர்ப் பாதுகாப்புப் பேரவையின் விவசாயிகள் வாழ்வாதார விழிப்புணர்வு மாநாட்டில் #வைகோ


அலைமோதும் நினைவுகள்

முதன் முதலாக என் கிராமத்திலிருந்து பாளையங்கோட்டை சவேரியார் கல் லூரியில் பயில்வதற்காக வந்தேன்.நான் என் கிராமத்துப் பள்ளிக்கூடத்திலே
படித்துவிட்டு, அதிகம் மதிப்பெண் பெற்றதனால் பரிந்துரை இல்லாமல் பாதர் கத்தோலிக்க சாமியார் சூசைஅவர்கள் முதல்வராக இருக்கும்போது நான் சேவியர் கல்லூரியில் போய்ச் சேர்ந்தேன். எனக்கு பட்டணமே தெரியாது. எனக்குத் திருநெல்வேலியே சொர்க்கலோகமாகத் தெரிந்தது. மாடுகள் பூட்டப் பட்ட வில்வண்டிதான் எங்களுக்கு கார்.அங்கு நான் சந்தித்த என் உயிர் நண்பன் நான்கு ஆண்டுகள் உயிருக்கு உயிராகப் பழகிய நண்பன் இந்த ஏரலைச் சேர்ந்த ஆனந்த முதலியாருடைய குடும்பத்துப் பிள்ளை மாரி இராமச்சந்திரன். நாங் கள் உயிருக்கு உயிராகப் பழகினோம்.சித்திரம்போல் எழுதுவார்.சிறந்த கவிஞர் உயர்ந்த ஒழுக்கமான குடும்பத்திலே உள்ளவர்.நானும் அவரும் உயிர் நண்பர் கள்.
பழைய நினைவுகள் என் நெஞ்சிலே அலைமோதுகின்றன. 50 வருடத்திற்கு
முன்னால், இதே காலகட்டத்தில், இதே செப்டம்பர் 29 இல், 1963 ஆம் வருடம்.
அப்போது கால் ஆண்டுத் தேர்வு விடுமுறையில் இந்த ஏரல் திருநகருக்கு
வந்து, ஐந்து நாட்கள் என் நண்பன் மாரி இராமச்சந்திரன் வீட்டிலே தங்கி இருந் தேன்.

மாலை நாலரை மணிக்கு ஒரு சிறிய கடைக்கு அழைத்துச் செல்வார். அந்தக்
கடையில் சுட்டுத் தருகின்ற அடை மிகவும் சுவையாக இருக்கும். அந்த அடை யைச் சாப்பிட்டுவிட்டு, சூரிய வெளிச்சம் இருக்கின்றபோதே தாமிரபரணிக்கு வந்துவிடுவோம்.தண்ணீர் சலசலவென்று ஒரு பக்கத்தில் ஓடிக்கொண்டிருக் கும். ஒரு பக்கத்தில் பசுமை திட்டுத்திட்டாக இருக்கும். சில இடங்களில் தான் மணல் திட்டுகள் இருக்கும்.ஐந்தரை மணியில் இருந்து இரவு எட்டு மணி வரை உட்கார்ந்து பேசிகொண்டிருந்துவிட்டு, அதற்குமேல் புறப்பட்டு வீட்டிற்குப் போவோம். 50 வருடங்களுக்கு முன்னால், ஐந்து நாட்கள் இதே செப்டம்பர் மாதத்தில் ஏரலில் வந்து நான் தங்கியிருந்தேன்.

மீண்டும் டிசம்பரில் அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்கு வந்து என் நண்பனு டைய வீட்டில் தங்கி இருந்தேன். நட்பை மிக உயர்வாகக் கருதுகிறவன் நான். அவன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தபொழுது மருத்துவமனையில் போய் பார்த்தேன்.பேச முடியாமல்,என் கைகளைப் பிடித்து கொண்டான்.கடந்த ஆண்டு அந்தக் குடும்பத்திலே பெரும் துயரம் நேர்ந்தது. ஒரு விபத்து நடந்தது. இன்று மாலையில் அதே இல்லத்திற்குச் சென்று, அவரது மாமனார் காங்கிரஸ்
கட்சிக்காரர். இப்பொழுது மதச்சார்பற்ற ஜனதாதளத்தில் இருக்கிறார் சொக்க லிங்கம். நான் அந்த இல்லத்திற்குச் சென்றேன் இப்பொழுது புதுப்பித்திருக் கிறார்கள். நான் மாடிக்குச் சென்று அந்த பழைய அறையைச் சென்று பார்க்க லாம் என்று போனேன்.

நான் நினைத்துப் பார்க்கிறேன் தோழர்களே, இந்த ஏரலுக்கு வருகிற போது எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேல் என்று பசுமை நிறைந்திருக்கும். மரகதக்
கம்பளம் விரித்தால் போலக் காணப்படும் இந்த நெற்பயிர்களை, அந்த வாழைத்
தோட்டங்களை இந்தச் செழிப்பைப் பார்த்து, இவர்கள் இவ்வளவு செழிப்பாக
இருக்கிறார்களே என்று நான் மகிழ்ந்தவன்.அவ்வளவு செழிப்பை ஊட்டிய இந்த செழுமையான பகுதி அழிந்துபோவதா? தமிழ்நாட்டில் அனைத்துப் பகுதிகளுக் கும் ஆபத்து வந்துவிட்டது. இந்த ஆபத்தை நாமே வரவழைத்துக்கொள்வதா?

அதுமட்டுமல்ல, ஒவ்வொரு பகுதிக் கென்று சில பொருள்கள் விளை கின்றன. கன்னியாகுமரி மாவட்டத்திற்குப் போனால் அங்கே கிடைக்கின்ற பழ வகை கள் மிகச் சுவையாக இருக்கும்.அங்கே கிடைக்கும் மட்டிப் பழம் தேனாக இனிக் கும். அங்கிருந்து திருவனந்தபுரத்திற்கு கொண்டு சென்று விமானத்தில் பண்டி த ஜவஹர்லால் நேருவுக்கு இந்தப் பழங்களை அனுப்பி வைப்பார்கள் என்று ஒரு காலத்திலே சொல்வார்கள். அதைப்போல ஏரலுக்கு வந்தால், பூலாஞ் செண்டு பழம் எனக்குக் கொடுத்துவிடுவார்கள்.


அழிவைத் தடுக்கும் கடமை

இவ்வளவு செழிப்பைத் தந்திருக்கக் கூடிய நெல் விளைவித்து மனித குலத்துக் கு உணவு வழங்கக்கூடிய இந்தப் பகுதியில் நிலங்கள் அடியோடு அழிந்துபோ கக்கூடிய நிலைமை ஏற்படுவதா? இதை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கின்றது.கீழக்கால்வாய் திட்டத்திற்கு மதிப்பீடு போட்டீர்களே, நிறைவேற்றுங்கள்.

நான் கேட்கிறேன், இவை எல்லா வற்றையும் விட இந்த வட்டார மக்களின்
- நாற்பது கல் சுற்றளவு இருக்கக்கூடிய மக்களின் உயிருக்கு எமனாக இருக்கக்
கூடிய ஸ்டெர்லைட் ஆலைக்கு ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி லிட்டர் தண் ணீர் எதற்காகத்தருகிறாய்?ஒன்றரை பைசா விலைக்கு ஸ்டெர்லைட் ஆலைக் கு எதற்குத் தருகிறாய்? நம் உயிருக்கு ஆபத்து.நுரை ஈரலில் புற்றுநோய்வரும்.
சருமத்தில் புற்றுநோய் வரும். உயிர் குடிக்கும் இந்த எமன் ஆலைக்கு ஒன்ற ரைக்கோடி லிட்டர் தண்ணீர் தந்துவிட்டு, ஒன்றரை பைசா அளவில் கொடுத் துவிட்டால் ஒரு நாளைக்கு பதினெட்டு கோடி ரூபாய் சந்தை மதிப்பு.நீங்கள் சந்தை மதிப்பு 15, 20 கணக்கு போட்டுக்கொண்டிருப்பார்கள்.கணக்குப் போட்டுக் கொடுத்திருக்கும் ஒரு பட்டியலில் 14 ரூபாய் என்று வைத்துக்கொண்டாலும் சந்தை மதிப்பிலே ஒரு லிட்டர் தண்ணீரை பாட்டிலில் அடைத்து 14 ரூபாய்க்கு
விற்கிறார்கள் என்று சொன்னால், ஒரு நாளைக்கு பதினெட்டுக் கோடி ரூபாய்
சந்தை மதிப்பு உள்ள தண்ணீரை இருபத்து இரண்டு இலட்சத்துக்குத் தருகி றான். அப்படியென்றால், ஒரு மாதத்திற்கு 540 கோடி ரூபாய் மதிப்புள்ள தண் ணீருக்கு 6 கோடியே 70 இலட்சம் ரூபாய் பணத்தைக் கொடுக்கிறான் அனில் அகர்வால்.

வேதாந்த குழுமத்தின் சார்பில் பழங்குடி மக்களை அழிப்பதற்கு ஜார்கண்டிலே,
ஒரிசாவிலே இயற்கைச் சூழலை, மக்கள் வாழ்வாதாரங்களை அழித்துக்கொண் டு இருக்கின்றானே அவன் இந்த ஸ்டெர்லைட் ஆலையை நடத்து வதால் மக் கள் உயிருக்கு ஆபத்து. தூத்துக்குடி வாழ் மக்களினுடைய உடல் நலனுக்கு
ஆபத்து. ஆனால், இங்கே இருக்கக்கூடிய மக்களினுடைய தண்ணீரை ஸ்டெர் லைட்டுக்குக் கொடுக்கிறாய்.ஒன்றரை கோடி லிட்டர் தண்ணீர் ஒவ்வொரு நாளும் கொடுக்கிறாய்.

என்னுடைய அன்புக்குரியவர்களே,இந்த மண்ணிலே பிறந்திருக்கக்கூடிய பாக் கியத்தைப் பெற்றவன் நான்.உலகத்தின் மிகப் புண்ணிய பூமி தமிழ்நாடு. வள்ளு வன் பிறந்த நாடு, இளங்கோ பிறந்த நாடு, தொல்காப்பியர் பிறந்த நாடு, மானம் வளர்ந்த நாடு, பண்பாடு செழித்த நாடு.என்னுடைய கடமையைச்செய்ய வேண் டும் என்று நினைக்கிறவன் நான்.இந்த மண்ணுக்குச் செய்ய வேண்டிய கடமை.
இந்த நீர்க்குமிழி போன்ற வாழ்க்கையில்,இந்தப் பகுதி வாழ் மக்களைத் திரட்டி
இந்த ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வேண்டும் என்று இதே திருவைகுண் டத்திலே இருந்துதானே 1997 ஆம் ஆண்டு ஒரு நெருப்பு வெயில் வேளையில், ஆயிரக்கணக்கான தோழர்களோடு நான் புறப்பட்டேன். ஆழ்வார் திருநகரில் இருந்து கிராமம் கிராமமாக செவத்தியார்புரம், சாயர்புரம் என ஒவ்வொரு கிரா மத்திலும் மக்களிடம் போய் விவசாயம் அழிந்து போகும்.தண்ணீரை எல்லாம் கொண்டு போவார்கள், மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும். இந்த ஆலையை அகற்ற வேண்டும். மக்கள் திரளுவோம்,இலட்சக் கணக்கில் திரளுவோம்.இந்த
ஆலையை அகற்ற வேண்டும் என்று இந்தப் பகுதியிலே நான் நடந்து செல்கிற போது நான் கேட்டதை ஞாபகப்படுத்துகிறேன்.

அந்த வழக்கு உச்சநீதிமன்றத்திலே நடந்தது. போராட்டத்தின் ஒரு கட்டத்தில் இருபதாயிரம் பேர் சூழ்ந்து முற்றுகைப் போராட்டம் நடத்துகிற போது, அன் றைக்கு ஒரு குற்றச்சாட்டை வைத்தார்கள். இரண்டு தொழிலாளிகள் இறந்து போனார்கள், வைகோ தலைமை தாங்கி நடத்துகிற போராட்டம் என்பதனால், விடுதலைப் புலிகள் உள்ளே புகுந்து நாசவேலை செய்து விட்டுப் போயிருக்க வாய்ப்பு இருக்கிறது.அதனால் இந்த விபத்தில் இரண்டு பேர் இறந்துபோனார் கள் என்று ஒரு அறிக்கை கொடுத்தது ஸ்டெர்லைட் நிர்வாகம். ஆனால், அப் பொழுது காவல்துறை எஸ்.பி.யாக இருந்த ஜாங்கிட் பத்திரிகையாளர்களை
அழைத்து உடனே மறுத்தார். இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. விடுதலைப்
புலிகள் வந்து நாசவேலைகள் செய்தது என்பது அப்பட்டமான பொய். அங்கே
நடந்த விபத்து இயந்திரத்தில் ஏற்பட்ட விபத்து. அதன்பிறகு போராட்டத்தை
வேறு திசையிலே கொண்டுபோய் குற்றஞ்சாட்ட முயற்சிக்கிறான் என்ற போது, கடைசியாக நடைபெற்ற அந்த மறியல் போராட்டத்தில் சொன்னேன். இனி நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டுவோம். ஏற்கனவே ஒரு ரிட் மனு தாக்க லாகி இருக்கிறது.பொதுநல மனு. நானும் ரிட்மனு தாக்கல் செய்கிறேன். உயர் நீதிமன்றத்தில்போராடுவோம் என்று சொன்னேன்.

கோடீசுவரர்கள் நெருங்க முடியாது

ஆண்டுக்கணக்கிலே போராடினோம்.அதன் விளைவாக 2010ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைத்தது.சென்னை உயர்நீதிமன்றம் ஸ்டெர்லைட் நாசகார நச்சாலையை மூட வேண்டும் என்று தீர்ப்புக் கொடுத்தது.அந்தத் தீர்ப்பு வந்தபோது, ஏரலிலே, திருவை குண்டத்திலே தேநீர் கடையில் காலை பத்திரி கையை எடுத்து வைத்து பார்த்துப் படித்துக்கொண்டிருந்தவர்கள் இதோ போரா டியிருக்கிறான் வைகோ.அவன் நேர்மையானவன். உலகக் கோடீசுவரர்கள் அவனை நெருங்க முடியாது. ஸ்டெர்லைட் அவனை வளைக்க முடியாது. அவன் எதற்கும் சமரசம் செய்துகொள்ள மாட்டான் என்று தெருமுனையில், டீக்கடைகளில் பேசுகிறார்கள் என்று என் தம்பி காசி தொலைபேசியில் சொன் னான்.

என்னுடைய அருமைக்குரியவர்களே, அந்தத் தீர்ப்பை எதிர்த்து உடனடியாக
உச்சநீதிமன்றத்திற்குப் போனது ஸ்டெர்லைட். உச்ச நீதிமன்றத்திலே ஸ்டெர் லைட் ஆலை மனு தொடுத்தது.உச்ச நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகள் 33 அமர்வுகளுக்கும் நானும் எனது சகோதரர் தேவதாஸ் அவர்களும் எங்களது சொந்தச் செலவில் டெல்லி உச்ச நீதிமன்ற வாய்தாவில் நாங்கள் பங்கெடுத்தி ருக்கிறோம். கடைசியாக நிறைவு நாளில் நான் ஒன்றரை மணி நேரம் வாதாடி யிருக்கிறேன். மன நிறைவாக கடமையாற்றிய நாட்களில் என் வாழ்வில் அது வும் ஒன்று என்று என்னுடைய நாள் குறிப்பிலே எழுதி வைத்திருக்கிறேன். அப் பொழுது நீதியரசர் பட்நாயக், கோகலே ஆகியோருடைய அமர்வுக்கு வந்தது.
அப்போது நான் அவரிடத்தில் மக்கள் உயிருக்கு ஆபத்து, சுற்றுச் சூழலுக்கு
ஆபத்து, இந்த ஆலை 40 கல் தொலைவிற்கு விவசாயத்தை அழித்து விட்டது. கடல்வாழ் உயிரினங்களை நாசமாக்கிவிட்டது. 

எனவே, இந்த ஆலை இருக்கக் கூடாது என்று வாதங்களை எழுப்புகிறபோது ஒரு கட்டத்தில் அவரிடத்திலே சொன்னேன்.

இந்த ஆலையை அமைக்க வேண்டும் என்று குஜராத்தில் அனுமதி கேட்ட போது, குஜராத் அனுமதி மறுத்தது.கோவாவில் கேட்டபோது அதுவும் மறுத் தது. மகராஷ்டிரத்திலே அனுமதி பெற்றது. சரத்பவார் முதலமைச்சர். இரத்தி னகிரி மாவட்டத்தில் இந்த ஆலைக்கு கட்டடம் கட்டப்பட்டது.இயந்திரங்கள் பொருத்தப்பட்டன. 300 கோடி ரூபாய் செலவழித்துவிட்டார்கள்.ஆனால், அல் போன்சா மாம்பழம் அங்கு பிரசித்தி பெற்றது. அப்பழங்கள் உலக ஏற்றுமதித் தரம் வாய்ந்தவை.

இரத்தினகிரி மாவட்டத்தில்தான் அல்போன்சா மாம்பழங்கள் அதிகம் விளை கின்றன. அங்குள்ள விவசாயிகள் அனைவரும் ஒன்று திரண்டு ஒரு அமைப் பை உருவாக்கினார்கள். இந்த ஸ்டெர்லைட் ஆலையின் நச்சுக் காற்று பரவி னால், இந்த மாம்பழங்களின் தரம் கெட்டுப்போய்விடும் என்றும், இதை ஏற்று மதி செய்ய முடியாமல் போகும். நம் பிழைப்பில் மண் விழுந்துவிடும் என்று -
உயிருக்கு ஆபத்து வரும் என்றுகூட அவர்கள் போராடவில்லை -மாம்பழத் திற்கு ஆபத்து வந்துவிடும் என்று சொல்லி அவர்கள் ஒன்று திரண்டு போராடி னார்கள்.

பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டு இரும்புக் கம்பி களோ டும், சம்மட்டிகளோடும் சென்று உடைத்து நொறுக்கினார்கள். கட்டடத்தை உடைத்தார்கள்.இயந்திரங்களை உடைத்தார்கள். இதிலிருந்து மூன்றாவது ஆலையின் லைசென்சை சரத்பவார் அரசு இரத்து செய்தது. அரசு லைசென்சை இரத்து செய்தவுடன் 300 கோடி ரூபாய் செலவழித்துவிட்டேன் என்று நீதிமன் றம் சென்றார்களா? இல்லை.நேராக தூத்துக்குடிக்கு வந்து அனுமதி வாங்கி ஆரம்பித்துவிட்டார்கள்.

நாங்கள் போராளிகள்

நான் நீதிபதிகளிடம் சொன்னேன்,மாட்சிமை தங்கிய நீதிபதிகளே அங்கே போ ராட்டம் நடத்து அடித்து நொறுக்கி அவர்கள் அனுப்பினார்கள். நான் அந்த நீதி பதியிடம் கேட்டேன், இந்த நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் முதலாவது
வீரத்தோடு போராடியவர்கள் எங்கள் தூத்துக்குடி மாவட்டத்து மக்கள். 

எங்க ளுக்கு அப்படி ஈடுபடத் தெரியாதா? நாங்கள் ஈடுபட்டோமா? நாங்கள் உடைத்து நொறுக்கப் போனோமா? ஸ்டெர்லைட் மீது கல் எறிந்தோமா? நீதி பதிடம் கேட் டேன். நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி இருக்கிறேன். நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உங்கள் முன்னால் நிற்கிறேன். நாங்கள் போராளிகள்,மிகப்பெரிய போராட்டக்காரர் கள்.அஞ்சாத படைவீரர்கள் தமிழர்கள் என்று நீதிமன்றத்தில் நான் கூறினேன்.
அனேகமாக ஆலையை மூடிவிட தீர்ப்பு வரும் என்று எதிர்பார்த்தபோது,அந்தக்
கட்டத்தில்தான் திடீரென்று அதிகாலைப் பொழுதில் மார்ச் மாதம் 23 ஆம் தேதி நச்சுப்புகை பரவியது.தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட்டில் இருந்து விஷப் புகை வந்துவிட்டது என அலறினார்கள். சகோதரி பேராசிரியை பாத்திமா பாபு உடனே தொலைபேசியில் எனக்கு தகவல் தருகிறார். ஜோயல்,மகாராசனை தொடர்புகொள்கிறேன்.வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் அண்ணன் நடரா சன் அவர்களைத் தொடர்புகொள்கிறேன். உடனே போராட்டக்களத்திற்கு வந்து
போராடுகிறோம். அடுத்து மக்களைத் திரட்டுகிற போராட்டம். தகவல் தருகி றோம், அண்ணன் நல்லகண்ணு,அண்ணன் வெள்ளையன் ஆகியோர் வருகி றார்கள். போராட்டம் நடக்கிறது.

தூத்துக்குடி மக்கள் கொந்தளித்து எழுந்துவிட் டார்கள் என்றதற்குப் பிறகு,உச்ச நீதிமன்றத்தில் மூடச் சொல்லி விடுவார்கள் என்ற நிலை வந்தபோது, மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலையை மூடியது. மின் இணைப்பைத் துண்டித்தது. அவர்கள் உடனடியாக பசுமைத் தீர்ப்பாயத்திற்குச் சென்றார்கள். சென்னையில் உள்ள தீர்ப்பாயத்தில் வாதாடினோம்.

அண்ணாச்சி இரத்தின வேல் பாண்டியனிடம் நான் ஜூனியராக இருந்தவன். இந்த ஏரலில் திராவிட முன்னேற்றக் கழகத்தை கட்டிக் காத்து வளர்த்து விவ சாயிகளுக்காகவே போ ராடிய அண்ணன் ஏரல் முத்து காலத்தில் என்னை அழைத்துக் கொண்டு வந்து கூட்டம் நடத்தினார் அவர். அண்ணாச்சி இரத்தின வேல் பாண்டியனோடுதான் முதன் முதலில் நான் ஏரல் பகுதிக்கு வந்தேன். அவர் மாவட்டச் செயலாளர் தி.மு.க.வில்.அப்பொழுது எந்த ஊருக்குச் சென்றா லும் சரி, அவர் என்ன செய்வார் என்றால், தம்பி நீ பேசப்பா, நான் கடைசி ஐந்து நிமிடம் பேசிக்கொள்கிறேன் என்று என்னை பேசச் சொல்லிவிடுவார்.

நான் அப்பொழுதுதான் படித்துவிட்டு வந்திருக்கிறேன். மாவட்ட மாணவர்
அமைப்புக்குத் தலைவராக இருந்தேன்.அவர் எத்தனை ஆண்டுகளாகக் கட்சி யை வளர்த்தவர். என்னிடம் பேச்சுத் திறமை இருக்கிறது என்று திருவேங்கடம் பொதுக்கூட்டத்தில் நான் எம்.ஏ. படித்துக்கொண்டிருந்தபோது, என் பேச்சைக் கேட்டு, தம்பி நன்றாகப் பேசுகிறாய் என்று பேசச் சொல்லிவிட்டு, பேசி முடித்த பின்பு அவர் பேசிவிட்டு,வீட்டுக்கு சாப்பிடப் போகும்போது, மேடையில் பேசிய அந்த காலேஜ் பையனைக் கூப்பிடுங்கள் என்று சுப்பையா தேவர் வீட்டிற்கு என்னை சாப்பிடக் கூட்டிச் சென்றார்.

சாப்பிட்டு கொண்டிருக்கும்போது எந்த ஊர் என்றார், இங்கு தான் பக்கத்தில் உள்ள கலிங்கப்பட்டி என்றேன்.சைக்கிளில் வந்தேன் என்றேன். சைக்கிளை யாரிடமாவது கொடுத்து விடு. காரில் வந்து உங்கள் வீட்டில் இறக்கிவிட்டுச் செல்கிறேன் என்று கலிங்கப்பட்டியில் எங்கள் வீட்டு வாசலில் வந்து இறக்கி விட்டுவிட்டு திருநெல்வேலிக்குப் போனார்.அண்ணன் இரத்தினவேல் பாண்டி யன் அவர்களிடத்தில் நான் ஜூனியராக இருந்தது மட்டும் அல்ல, எந்தக் கூட் டத்திற்குச் சென்றாலும் சரி, திராவிட முன்னேற்றக்கழகத்தில் என்னை வளர்த் துவிட்டவர். நான் அந்த நன்றி மறக்காமல் சொல்கிறேன்.

அந்தக் கூட்டங்களில் என்னை முக்கால்மணி நேரம் பேசவிடுவார். கடைசி யாக அவரும் பத்து நிமிடம் பேசுவார்.அப்படி நான் ஓரளவுக்கு வழக்கறிஞராகப் படித்தது விடுதலைப்புலிகள் தடையை உடைப்பதற்கு தீர்ப்பாயத்திலும் உயர் நீதிமன்றத்திலும் வழக்குப் போட்டுப் போராடுகிறேன்.ஸ்டெர்லைட் கொடுமை யை எதிர்த்துப் போராடுகிறேன்.

பொருநை என்றாலே அதில் பொருள் இருக்கிறது.மலைகளில் இருந்து குதித்து வருகிறபோது அலைகள் கரைகளில் மோதுகின்றன. அலைகள் ஒன்றொ டொன்று மோதுகின்றன.மோதுதல் என்றால் பொருநல் என்று பொருள். தமிழி லே பொருநல் என்றால்,போர்க்களத்திலே வேலும் வாளும் தூக்கிச் சென்று மோதுதல் என்று பொருள். பொருதல், பொருநை இந்த மண்ணே போருக்கு அடையாளமான மண் என்பதனால் இந்த நதிக்கே பொருநை என்ற பெயர் வந்தி ருக்கிறது.

மூன்றுபேர் தூக்கு வழக்கிலே சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கக்கூடா து.விசாரித்தால் கலவரம் வரும் என்று ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் உச்சநீதி மன்றத்திற்கு மாற்றினார்கள். அதே போல ஒரு பின்னணியில் ஸ்டெர் லைட் மிகவும் பலம் வாய்ந்தவன். இன்றைக்கு உலகக் கோடீசுவரர்கள் வரிசையில்
இருப்பவன். பல நாடுகளில் அவனுடைய ஆலைக்கு தடைகூட செய்யப்பட்டி ருக்கிறது.

நான் ஒன்றும் நீதிபதிகளைக் குறை சொல்லவில்லை.அவர் வாதங்களை ஏற்க வில்லை. அதைவிட ஸ்டெர்லைட் நிர்வாகத்தை சேர்ந்த வழக்கறிஞர் கேட் கிறார், மின்சாரத்தை நிறுத்திவிடு வார்கள் போல் தெரிகிறது. இப்பொழுது
நாங்கள் இயக்கிக் கொண்டு இருக்கிறோம். அநேகமாக நிறுத்திவிடு வார்கள் போல் இருக்கிறது. கவலையாக இருக்கிறது என்று ஸ்டெர்லைட் வழக்கறிஞர் சொல்கிறார்.

நீதி எங்கு இருக்கிறது?

இந்தத் தீர்ப்பாயத்தினுடைய நீதிபதி சொல்கிறார், நீங்கள் ஏன் கவலைப் படுகி றீர்கள்? 23 ஆம் தேதி வாய்தாவில் உங்களுக்கு சாதகமாக எல்லாம் நடக்கும். நீங்கள் ஏன் கவலைப் படுகிறீர்கள் என்று கூறுகிறார். எனக்குத் தெரிய ஒரு நீதிமன்றத்தில் வழக்கின் நீதிபதி உனக்கு ஒரு தீர்ப்பு வரும் நீ ஏன் கவலைப்படு கிறாய் என்று சொன்னதைக் கேள்விப்பட்டதே கிடையாது. உடனே நான் வெளி யே வந்தவுடன் நிருபர்கள் கேட்டார்கள்,இனிமேல் இந்தத் தீர்ப்பாயக் கோர்ட் டுக்கு வரமாட்டேன் என்று சொன்னேன்.

நீதிபதி என்ன நினைக்கிறார் என்பது எனக்குத் தெரிந்துவிட்டது. இங்கே நீதி
எங்கே இருக்கிறது? இப்பொழுது தீர்ப்பு வந்து விட்டது. மிகவும் கவனமாகப்
போட்டு இருக்கிறார்கள். தீர்ப்பாய ஆர்டரை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருக்கிறேன். எண் வந்து விட்டது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் எதிர்த்து மறுஆய்வு மனு போட்டிருக்கிறேன்.அது வும் எண் வந்துவிட்டது. ஒரு பக்கத்திலே நீதிக்காகப் போராடுகிறோம். ஆனால், நான் மிக வருத்தத்தோடு சொல்கிறேன். நான் யாரையும் குற்றம்
சாட்டவேண்டும் என்று நினைக்க வில்லை. இந்தத் தீர்ப்பாயத்தில் நீதிபதி கேட் டார், மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் சார்பிலே ஆஜரான தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞரைப் பார்த்து கேட்டார், நீங்கள் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடக்கிற போது கடைசி வாய்தா வரையில் இந்த ஸ்டெர்லைட்டை ஆதரித்து எல்லாமே முறையாக இருக்கிறது. மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.

சுற்றுச் சூழலுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று நீங்கள் அங்கு பிரமாண வாக் கு மூலம் தாக்கல் செய்து இருக்கிறீர்களே என்று நீதிபதி சுட்டிக்காட்டி இருக் கிறாரே. அன்றைக்கு உச்சநீதி மன்றத்தில் அப்படி பிரமாண வாக்கு மூலம் தாக் கல் செய்துவிட்டு,அதற்குள்ளாக வந்து ஆலையை மூட வேண்டும் என்று சொல்கிறீர்களே என்று நீதிபதி கேட்டார். அவருக்கு பதில் சொல்ல முடிய வில்லை.

உச்ச நீதிமன்றத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக வே தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பிரமாண வாக்கு மூலங்களை தாக்கல் செய்தது. நான் ஆதாரங்களை வைத்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் நீதி பதி நேரடியாகக் கேட்டார். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வழக்கறிஞரை ஸ்டெர் லைட் ஆலைக்காக வாதாட வந்திருக்கிறாயா? என்று கேட்டார். முன்பு மாதிரி இப்போது இல்லை. மூச்சுவிட்டால் போதும் உடனே வார பத்திரிகைகள்,ஊட கங்கள், இணைய தளங்கள்,வலைதளங்கள் போன்ற வற்றில் மின்னல் வேகத் தில் உலகம் முழுவதும் செய்தி பரவிவிடும். அடி உதவுவது மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான் என்று நான் சொல்லவில்லை. நமது பாட்டான் பூட்டன் காலத்தில் சொல்லி இருக்கிறார்கள். இரத்தினகிரி மாவட்டத்துக் காரனுக்குத் தான் வீரம் இருக்கிறதா? வெள்ளையனை எதிர்த்து இந்த நாட்டில் முதன் முத லாக வீரவாள் ஏந்தியவர்கள் இந்தத் தெற்குச் சீமையைச் சேர்ந்தவர்கள்.

பிரிட்டிஷ் காரன் சிறையை உடைத்து விடுவித்துக் கொண்டு போன வரலாறு
எங்காவது உண்டா? இங்கே பாளையங்கோட்டை சிறையை உடைத்து, ஊமத் துரையை விடுவித்துக் கொண்டுவந்து ஏழு போர்க் களங்களில் வல்லநாட்டு மண்ணிலே தோற்கடித்த மக்கள் என்னுடைய வீரப் பரம்பரையைச் சேர்ந்தவர் கள் இந்தப் பகுதியில் வாழ்கிறார்கள். தாமிரபரணி கரையோரத்தில் வாழ்கிறார் கள்.

வீர சிதம்பரம்பிள்ளை உலவிய மண்.மகாகவி பாரதி உலவிய மண். சுப்பிரம ணிய சிவா முழக்கமிட்ட மண்.அப்படிப்பட்ட வீரம் செறிந்த இந்தப் பூமியிலே வீரம் பட்டுப்போய்விட்டதா? மான உணர்வு மழுங்கிப்போய்விட்டதா? இல்லை தோழர்களே, மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை அவர் சீவகப் பெருவழுதி போர்க்களத்திற்குப் போகிற பொழுது தன்னுடைய படைக்களத்துச் சிப்பாய் களைப் பார்த்து அழகாகச் சொல்கிறார்.

அலையெறிந் தீதோ ஆர்த்தனள்.கேண்மின்!
முலைசுரந் தூட்டிய முதுநதி மாதா!

தாமிரபரணியினுடைய அலைகள் ஆரவாரம் செய்வதை கேளுங்களடா கேளுங்கள்.

ஒருதுளி யேனும்நீர் உண்டுளீர் ஆயின்
கருதுவீர் தாம்பர பன்னியின் கட்டுரை.
“மக்காள்! அருந்தி வளர்மின்! நுமக்கு
மிக்கோர் இல்லா வீரமாய்ப் பரந்து
முதுசுதந் தரத்தின் முத்திரை ஆகி,
இதுபரி ணமித்து உம் இதயத் துறைக!
அன்னியன் கைப்படா இந்நீர் கற்பிற்கு
இழிவுறின் மார்பினின் றிதுவே சோரியாய்ப்
பொழிகநீர் பொன்றிடும் அளவும்!”

இந்தத் தண்ணீரைப் பருகி வளர்ந்த மக்கள். உன் இதயத்திலே உறைந்து இருக் கிறது தாமிர பரணி தண்ணீர்.அன்னியன் கைபடா இந்தக் கற்புக்கு பங்கம் ஏற் பட்டால், உங்கள் மார்பிலிருந்து தாமிரபரணி தண்ணீர் இரத்தமாகக் கொட்டட் டும், நீங்கள் சாகிறமட்டும். போர்க்குறின் காயமே புகழின் காயம் ‘அடடா’, யாருக்கு அது வாய்க்கும் எங்கள் மண் இந்த மண்.நான் அரசாங்கத்திற்குத் தெரி விக்கிறேன். தூத்துக்குடிக்குத் தண்ணீர் கொடுங்கள். ஸ்டெர்லைட்டுக் குக் கொடுக் கின்ற தண்ணீரை நிறுத்துங்கள். ஸ்டெர் லைட்டைப் பூட்டுங்கள். ஸ்டெர்லைட் காரனுடைய ஆலை உயிர்களைக் அல்லவா, அவன் கொள்ளை அடித்துக் கொண்டு போகிறான். பணத்தையும் கொள்ளையடித்து. இது நியாய மா? மக்கள் கிளர்ந்து எழ வேண்டாமா? ஆகவே கடலில் வீணாகும் தண்ணீரை
அணை கட்டி தூத்துக்குடி மக்களுக்குக்கொடுங்கள்.ஆயிரக்கணக்கான ஆண்டு களாக அனுபவித்து வருகின்ற பாசன உரிமையில் கை வைக்காதீர்கள்.

நீ மருதூர் அணையிலிருந்து கொண்டு போகாதே! 507 ஆண்டுகளுக்கு முன்னா லே குலசேகர மன்னன் காலத்திலே கட்டப்பட்ட அணை. கரிகாலன் கட்டிய கல்லணையைப்போல அற்புதமான தொழில்நுணுக்கத்தோடு கட்டப்பட்ட அணை. வளைந்து வளைந்து செல்லக்கூடிய தொழில் நுட்பத்தில் கட்டப்பட் டது. தண்ணீர்,அணையை உடைத்து விடாத அளவுக்கு கட்டப்பட்டிருக் கக் கூடிய அணை மருதூர் அணை.

எனவேதான், ஏறத்தாழ 47 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் இன்றிப் போய்விடக்
கூடாது. எப்படி வாழ்வது? ஏற்கனவே விவசாயிகள் வெளியேறிக் கொண்டு
இருக்கிறார்கள். இந்தத் தமிழ்நாட்டிலே செழிப்பான பகுதி என்று கருதப்படுகிற
இந்தத் தாமிரபரணிக்கே ஆபத்து வந்திருக்கிறது என்றால், மக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்துவதற்காக தொண்டு செய்து பழுத்திருக்கக்கூடிய நயினார் குலசேகரன் அவர்கள் குரல் கொடுத்து அழைக்கிறாரே, எதற்காக? சுயநலத்திற் காகவா? இத்தனை ஆண்டுகள் போராடியதற்குப் பிறகு இந்த மக்களுக்காக, வருங்கால பிள்ளைகளுக்காக, சந்ததிகளுக்காக இதை உங்கள் பிள்ளைகளுக் குச் சொல்லுங்கள். உங்கள் பேரப் பிள்ளைகள் வாழ்வு நன்றாக இருக்க வேண் டும் என்பதற்காகத்தான் இது.அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தப் பகுதியிலே இருந்து மருதூர் அணையிலே இருந்து பொதுப்பணித்துறை யினுடைய தலைமைப் பொறியாளர் அனுப்பிய ஆட்சே பனையை மீறி நீங்கள் தண்ணீர் கொண்டுபோக வேண்டுமென்று அதே முனிசிபல் கார்ப்பரேசன் கமி சனுடைய ஆணையர் சென்ற வருடம் அக்டோபர் 22 ஆம் தேதி, 2012 ஆம் ஆண்டு இந்தத் தண்ணீரைக் கொண்டு போவதற்கு உத்தரவு பிறப்பிக்கிறார்.

ஆகவே, இங்கே உள்ள விவசாயிகள் வாழ்வை அழித்து தண்ணீரைக் கொண்டு போக முயற்சிக்காதீர்கள்.ஸ்டெர்லைட் போன்ற கேடுகெட்ட நிறுவனங்க ளுக்கு கொடுத்துவிட்டு,எங்கள் மக்களின் வயிற்றில் அடிக்காதீர்கள்.

எனவே இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் திரளட்டும்.கட்சிகளைக் கடந்து திரண்டு வாருங்கள். கட்சிக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது. இது இந்தப் பகுதி மக்களுக்காக, இந்தத் தென்னாட்டினுடைய பழமையைப் பாது காப்பதற்காக ஒரு அருமையான காரியத்தை அய்யா நயினார் குலசேகரன்
அவர்கள் செய்திருக்கிறார்கள்.அவர்களுடைய அழைப்பை ஏற்று அனைவரும் திரண்டு எழுங்கள். நீங்கள் போராட்டம் அறிவித்தால், நாங்களும் அதிலே பங் கேற்போம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

No comments:

Post a Comment