ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு காலத்தின் கட்டாயம்!
விருதுநகர் மாநாட்டில் மு.செந்திலதிபன் முழக்கம்
செப்டம்பர் 15,விருதுநகரில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டில்,#மதிமுக அரசியல் ஆய்வு மையச் செயலாளர் மு.செந்திலதிபன்
ஆற்றிய உரையில் இருந்து...
தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் வீறுகொண்டு எழுந்த விருதுநகர் மண்ணில், கழகம் நடத்துகின்ற அறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 105 ஆவது பிறந்தநாள் விழா மாநாடு மிகுந்த சிறப்புடன் நடைபெற்றுக் கொண்டு
இருக்கின்றது. முக்கியமான கால கட்டத்தில் நடைபெற்றுக் கொண்டு இருக் கின்ற இந்த மாநாட்டில்,“சுயநிர்ணய உரிமையும் பொது வாக்கெடுப்பும்” என்ற தலைப்பில் உரையாற்றிடப் பணித்த தலைவர் வைகோ அவர்களுக்கு எனது நன்றி.
2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் நமது தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள் இலட்சக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டப் பிறகு இரண்டு ஆண் டுக்காலம், ஈழப்பிரச்சினையில் அடுத்து என்ன செய்யப்போகிறோம்? என்று உலகத் தமிழினம் கண்ணீரோடும் கவலையோடும் தவித்துக் கொண்டு இருந் தது. விடுதலைப்புலிகளின் வீரஞ் செறிந்த போராட்டம் முற்றாக அழிக்கப்பட்டு விட்டது. சிங்கள கொலை வெறியன் ராஜபக்சேவுக்கு இந்திய அரசும் உடந்தை யாக இருந்து,தமிழீழத்தையே அழித்துவிட்டனர். இனி என்ன செய்ய முடியும்? என்று தமிழ்ச் சமூகம் நம்பிக்கை இழந்திருந்த வேளையில்தான், நமது தலை வர் வைகோ அவர்கள் 2011ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி, பெல்ஜியம் நாட்டின்
தலைநகரம், பிரஸ்ஸல்சில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் களும், இடதுசாரி பசுமைக் கட்சிகளும், தமிழ் ஈழ மக்களவை அனைத்து உலகச்
செயலகமும் இணைந்து நடத்திய, ஈழத் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை
குறித்த கருத்தரங்கத்தில் பங்கேற்றார்.
பிரஸ்ஸல்ஸ் மாநாட்டில் தலைவர் வைகோ அவர்கள், ஈழத்தமிழர்களின் துய ரம் தோய்ந்த வரலாற்றை எடுத்துச் சொல்லி, இலங்கை அரசினால் ஈழத்தமி ழர்கள் எப்படியெல்லாம் கொடுமைப் படுத்தப் பட்டார்கள், தமிழினம் எல்லா
உரிமைகளையும் இழந்து எவ்வாறு அங்கே அடிமைப்படுத்தப்பட்டது என்பதை யெல்லாம் சுட்டிக் காட்டினார்.தமிழர்களின் அறப்போராட்டங்கள் சிங்கள இன வாத அரசுகளால் நசுக்கப் பட்ட பிறகு, விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தி, போ ராட்டம் நடத்த வேண்டிய நிலை உருவான வரலாற்றையெல்லாம் அழுத்த மாக பதிவு செய்தார். புலிகளின் வீரஞ்செறிந்த விடுதலைப் போராட்டம் வெற் றிப்பாதையில் சென்றபோது அது எவ்வாறு நசுக்கப்பட்டது என்பதை எடுத்துக் காட்டினார்.
நான்காம் கட்ட ஈழப்போரில் தமிழ்மக்கள் இலட்சக்கணக்கில் ராஜபக்சே கொ லை வெறி அரசால் கொன்று குவிக்கப்பட்டதையும் உலக நாடுகள் இந்த இனப் படுகொலையைக் கண்டும் காணாமல் இருந்ததையும் வருத்தத்துடன் சுட்டிக் காட்டினார்.
ஐ.நா. மூவர்குழு அறிக்கை
இலங்கையில் நடைபெற்ற இனப்படு கொலைகளை மனித உரிமை மீறல் களை ஆய்வு செய்வதற்கு ஐ.நா. சபை பொதுச்செயலாளர் பான் கி மூன், மூவர் குழு ஒன்றை அமைத்தார். மாருஸ்கி தருஸ்மன், ஸ்டீபன் ராட்னர், யாஸ்மின் சூகா ஆகியோர் அடங்கிய மூவர் குழு 2011, ஏப்ரல் 25 இல் தனது அறிக்கையை வெளியிட்டது.
அந்த அறிக்கையில் பக்கம் 28முதல் 50வரையில் உள்ள செய்திகள் மனிதகுலத் தை நடுநடுங்கச் செய்பவை ஆகும். அவற்றையெல்லாம் தலைவர் வைகோ அவர்கள் பிரஸ்ஸல்சில் நடந்த மாநாட்டில் பட்டியல் இட்டார். மூவர் குழு
அறிக்கையின்படி ஒரு லட்சத்து முப்பத்து ஏழு ஆயிரம் ஈழத்தமிழ்மக்கள் சிங் கள இராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்ட அதிர்ச்சிமிக்க தகவலை அங்கே
ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
இலங்கைத் தீவில் இரு தேசங்கள் உள்ளன. வரலாற்றுக்காலம் தொட்டு அங்கு வாழ்ந்து வரும் தமிழர்கள் அந்த மண்ணின் பூர்வ குடிமக்கள். தங்களுக்கு என்று தனித்தாயகத்தைப் பெற்றவர்கள்;தனி அரசு செலுத்தியவர்கள். ஆங்கிலேயர் கள் இலங்கைத் தீவை அடிமைப்படுத்திய பின்னர் 1948 இல் விடுதலை கொடுத் தபோது, சிங்களவர்கள் கையில் அதிகாரத்தைத் தந்துவிட்டுச் சென்றனர்.
சிங்களவர்கள் தமிழர்களின் இன, மொழி,பண்பாட்டு அடையாளங்களை அழிக் க முற்பட்ட போது, தங்கள் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள அறவழியில்
போராடினார்கள்.உரிய நீதி வழங்காமல் சிங்கள இனவெறியர்கள் தமிழர்களின்
உரிமைப் போராட்டத்தை இராணுவ பலத்தைக் கொண்டு நசுக்கினார்கள்.அதன் பிறகுதான் தலைவர் பிரபாகரன் தலைமையில் புலிகள் ஆயுதம் ஏந்தி, தங்கள் தாயகத்தை மீட்பதற்காகப் போராடினார்கள். முப்பது ஆண்டுக்கால புலிகளின் ஆயுதப்போராட்டம் அடைந்த வெற்றிகள், பின்னர் சிங்கள அரசுடன் நடைபெற் ற அமைதிப் பேச்சு வார்த்தைகள், 2006 ஆம் ஆண்டு தொடங்கி 2009 மே 19 ஆம் தேதி வரையில் நடத்தப்பட்ட ஈழத்தமிழர் இனப்படுகொலை, இவற்றையெல் லாம் அந்த மாநாட்டில் சுருக்கமாக எடுத்துக் காட்டிய தலைவர் வைகோ அவர் கள்,தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டங்கள்,
முத்துக்குமார் உள்ளிட்ட 17 தமிழ் இளைஞர்கள் தீக்குளித்து உயிரை தியாகம் செய்ததை உருக்கமாக எடுத்து வைத்தார்.
இவ்வளவுக்குப் பிறகு இனி ஈழத்தமிழர் பிரச்சினையில் அடுத்து சர்வதேசச்
சமுதாயம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெளிவாக எடுத்துக் காட்டி னார்.
பொதுவாக்கெடுப்பு
அப்போதுதான் ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க ஐ.நா. சபை, பன்னாட்டு பார்வையாளர்கள் முன்னிலையில் இலங்கைத் தமிழர் களி டம் ஒரு பொதுவாக்கெடுப்பு நடத்திட வேண்டும். ஈழத்தில் உள்ள தமிழ் மக்க ளும், புலம் பெயர்ந்து உலகின் பல நாடுகளில் வாழுகின்ற ஈழத் தமிழர்களும், தமிழ்நாட்டில் ஏதிலிகளாக வாழ்ந்து வருகின்ற ஈழத்தமிழர்களும் வாக்களிப் பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதன் பின்னர் ஐ.நா. மன்றம் ஈழத்தமிழர்க ளுக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு, தமிழ் ஈழத்தை உருவாக்க முன்வர வேண்டும் என்று தலைவர் வைகோ அவர்கள் மிகத் தெளிவாக எடுத்துரைத் தார்.
ஈழத்தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதன் முத லில் சொன்னவர் நமது தலைவர் வைகோ மட்டுமே. அதுவரையில், முள்ளி
வாய்க்கால் முடிந்து இரண்டு ஆண்டுக்காலத்தில் எவரும்‘பொதுவாக்கெடுப்பு’ என்ற கருத்தை முன்வைத்தது இல்லை.
2011, ஜூன் 1 இல், பெல்ஜியத்தில் நமது தலைவர், பொதுவாக்கெடுப்பு நடத்துவ துதான் இன்றைக்கு ஈழத் தமிழர்களுக்கு ஒரே தீர்வாக இருக்க முடியும் என்று திட்டவட்டமாகக் கூறியதற்குப் பின்னர், தமிழ்நாட்டில் பலரும் தலைவர் வைகோ முன் மொழிந்ததை வழிமொழிந்து கொண்டு இருக்கிறார்கள். வைகோ கூறியதை கலைஞரும் வழிமொழிகிறார். இதிலிருந்து என்ன தெரிகிறது?
கருணாநிதிக்கும் சேர்த்து தலைமை தாங்குகிற தகுதியை நமது தலைவர்
வைகோ பெற்றிருக்கிறார்.
சட்டமன்றத் தீர்மானம்
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும் வழிமொழிந்தார். நான் எண்ணிப்பார்க் கிறேன். பத்து ஆண்டுக் காலத்துக்கு முன்பு 2002 ஆம் ஆண்டு ஜூலை மாதம், தலைவர் வைகோவும்,கழகத்தின் தளகர்த்தர்கள் எட்டு பேரும் பொடா சட்டத் தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.விடுதலைப்புலிகளின் இலட்சியமான தமிழ் ஈழத்திற்கு ஆதரவாக பேசிய காரணத்தால், விடுதலைப் புலிகளை நேற்றும் ஆதரித்தேன், இன்றும் ஆதரிக்கிறேன், நாளையும் ஆதரிப் பேன் என்று தலைவர் வைகோ பேசிய காரணத்தால், பத்தொன்பது மாதம்
வேலூர் சிறைச்சாலையில் அடைக்கப் பட்டார்.
தலைவர் வைகோ உள்ளிட்ட ஒன்பது பேரை பொடாவில் சிறையில் தள்ளிய
ஜெயலலிதாதான் இன்றைக்கு பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் முதல்வராகி இருக்கிறார். அதே முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழ்நாடு சட்டமன்றத்தில் விடுதலைப்புலிகளின் இலட்சியமான தமிழ் ஈழத்தை உருவாக்க பொதுவாக் கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றுகின்றார் என்றால், இந்த மாற்றத்தை தமிழ்நாட்டு அரசியல் களத்தில் உருவாக்கியது நம்முடைய
தலைவர் வைகோ.இது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கிடைத்திருக்கின்ற மாபெரும் வெற்றி.வேறு எவரும் இதற்கு சொந்தம் கொண் டாட முடியாது.
‘பொதுவாக்கெடுப்பு’ நடத்த வேண்டும் என்ற கருத்து தலைவர் வைகோ அவர் களுக்கு எப்படி வந்தது என்று நான் சிந்தனைசெய்து பார்த்தேன். தமிழ் ஈழத்தில் விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு ராஜபக்சே உலக நாடுகள் ஏற்றுக்கொண்ட ‘பயங்கரவாதம்’ என்கிற ஒற்றைச் சொல்லைப் பயன்படுத்திக் கொண்டான். ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று உலகநாடுகளை நம்ப வைத்து, புலி கள் இயக்கத்தை அழித்தது மட்டுமல்ல, இரண்டு இலட்சம் தமிழர்களையும் கொன்று குவித்து இருக்கின்றான்.
ராஜபக்சே எந்த ஆயுதத்தை எடுத்தானோ அதையே பயன்படுத்த வேண்டும் என்று கருதித்தான் தலைவர் வைகோ அவர்கள் உலக நாடுகளும் ஐ.நா.சபை யும் ஏற்றுக்கொண்டிருக்கின்ற ஜனநாயக வழிமுறையான பொது வாக்கெடுப்பு என்ற ஒற்றைச் சொல்லைப் பயன்படுத்தி, தமிழீழத்தை உருவாக்க வேண்டும். தலைவர் பிரபாகரனின் இலட்சியத்தை நிறைவேற்ற வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டு,சர்வதேச அரங்கத்தில் ‘பொது வாக்கெடுப்பு’ ஈழத்தில் நடத் த வேண்டும் என்று தலைவர் வைகோ முதல் குரல் எழுப்பினார்.
காங்கோவுக்கு ‘கான்சாய்’ ஈழத்திற்கு ‘வைகோ’
பெல்ஜியத்தில் நடைபெற்ற மாநாட்டில் தலைவர் வைகோ பங்கேற்று, ‘பொது வாக்கெடுப்பு’ என்ற கருத்தை முன் வைத்ததை எண்ணுகிறபோது,எனக்கு ஒரு வரலாற்றுச் சம்பவம் நினைவுக்கு வருகிறது. பெல்ஜியம் நாடு ஒரு காலத்தில் ஆப்பிரிக்க தேசமான காங்கோ நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருந்தது. காங் கோ நாட்டின் கறுப்பர் இன மக்களின் விடுதலைக்காக, பெல்ஜியத்தை எதிர்த் துப் போராடியவர் ‘பேட்ரிஸ் லுமும்பா’ என்ற மாபெரும் தலைவர். அவர்தான் பெல்ஜியம் நாட்டின் பிடியிலிருந்து ‘காங்கோ’வை விடுவிக்க மக்களைத் திரட்டி விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர். அஞ்சல்துறை ஊழியராக வாழ்க்கையைத் தொடங்கிய லுமும்பா, போராளியாக உருவெடுத் தார்.
விடுதலைப் போராட்டம் தீவிரம் அடைந்தபோது, காங்கோ போராட்டத் தலை வர்களை பெல்ஜியம் நாடு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.பெல்ஜியம் நாட்டில் நடந்த பேச்சு வார்த்தைக்கு லுமும்பா செல்லவில்லை.‘கான்சாய்’ என்ற இரு பத்தி ஆறு வயது வாலிபனை பேச்சுவார்த்தைக்கு அனுப்பிவைத்தார் பேட்ரிஸ் லுமும்பா. அந்த இளைஞன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படித்து பட்டம் பெற்றவன்.பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்சில் நடைபெற்ற பேச்சு
வார்த்தையில் கான்சாய் கலந்து கொண்டான். அப்போது பெல்ஜியம் நாட்டுத் தலைவர்களை வைத்துக் கொண்டு சொன்னான்.
“எங்கள் தேசத்தை நீங்கள் அடிமைப் படுத்தி வைத்திருக்கிறீர்கள். உடனடியாக எங்கள் காங்கோவுக்கு விடுதலை தர வேண்டும். அதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும்,எங்கள் மக்களை கல்வி அறிவு இல்லாமல் அறிவிலிகளாக ஆக் கி வைத்து இருக்கிறீர்கள். பெல்ஜியம் ஆட்சியில் எங்கள் நாட்டில் பட்டம் பெற் றவர்கள் நான் உட்பட பதின்மூன்றுபேர்கள்தான்.ஒருபோதும் இனி உங்கள் ஆட்சியின் கீழ் இருக்க மாட்டோம். காங்கோவை விட்டு வெளியேறுங்கள்” கான்சாயின் கர்ஜனை பெல்ஜியம் நாட்டை யோசிக்க வைத்தது. பின்னர் காங் கோவுக்கு விடுதலை தந்தார்கள்.
அதே, பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்சில் அன்றைக்கு காங்கோ வின் விடுதலைக்காக முழக்கமிட்டான் கான்சாய்.இன்று ஈழத்தின் விடுதலைக்
காக தலைவர் வைகோ முழக்கமிட்டார்.காங்கோ விடுதலை பெற்றதைப் போல தமிழீழம் மலரும் காலமும் வந்தே தீரும். இதை எவரும் தடுக்க முடி யாது.
வரைபடங்கள் மாறுகின்றன
தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை எவரும் பறிக்க முடியாது. புதிய புதிய நாடுகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. 1960 இல் உலகில் 106 நாடு கள் இருந்தன.இன்றைக்கு ஐ.நா.மன்றத்தில் 194நாடுகள் அங்கீகரிக்கப்பட்டிருக் கின்றன.இது எதைக் காட்டுகிறது. உலகின் வரைபடங்கள் ஒவ்வொரு தேசிய
இனமும் சுயநிர்ணய உரிமைக்காக போராடியபோது மாறிக் கொண்டே இருக் கின்றன.
இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர் நடைபெற்ற தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் பல நாடுகளை உருவாக்கி இருக்கின்றன.தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களை ஐ.நா.சபை அங்கீகரித்தவுடன் பல நாடுகள் ‘பொதுவாக்கெடுப்பு’ மூலம் மலர்ந்து இருக்கின்றன.
1990 ஆம் ஆண்டிற்கு பிறகு நடைபெற்ற பொது வாக்கெடுப்புகளைப் பார்க்கிற போது, 1996 இல் ஸ்லோவேன்யா; 1991 இல் குரோசியா;மாசிடோனியா, உக் ரைன், ஜார்ஜியா,டிரான்ஸ்னிஸ்டீரியா; 1992 இல்மால்டோவா; 1999 இல் கிழக்கு திமோர்; 2006 இல் மாண்டிநிக்ரோ, தெற்கு ஒசேடியா; 2011 இல் தெற்கு சூடான்
ஆகிய நாடுகளில் பொது வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டு, அந்த நாடுகளை சுதந் திர நாடுகளாக ஐ.நா.சபை அங்கீகரித்துள்ளது.
இன்னும் சில நாடுகளில் பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கு தேதிகள் குறிக்கப் பட்டிருக்கின்றன. போகைன் வில்லே, நியூகலிடோனியா, மேற்கு சகாரா மற் றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகள் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக் கின் றன.
இப்படி பொதுவாக்கெடுப்பு நடந்த நாடுகளிலெல்லாம், ஈழத்தைப்போல இனப் படுகொலைகளும், மனித குலத்தை நடுங்கச் செய்கின்ற கொடூரங்களும் நடை பெற்றது இல்லை.ஈழத்தில் தமிழர்கள் சந்தித்த துயரத்தைப் போல அந்த நாட்டு இனங்கள் சந்தித்தது இல்லை. தமிழர்களைப் போல மக்கள் தொகையில் உலக முழுவதும் பரந்து விரிந்தவை அல்ல;தமிழீழத்தில் ‘பொதுவாக்கெடுப்பு’நடந்தே ஆக வேண்டும் என்பதற்கு நியாயமான, சர்வதேச சட்டபூர்வமான காரணங்கள்
இருக்கின்றன. இது காலத்தின் கட்டாயம்.
தடையைத் தகர்ப்போம்
பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு தடைகள் என்னென்ன? அந்தத் தடைகளைத் தகர்ப்பதற்கு நாம் என்ன செய்யப்போகிறோம்? அதுதான் இன்றைக்கு நம் முன் னே இருக்கின்ற கேள்வி.
ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த ஐ.நா.மன்றமே முன்வந்தாலும், அதைத்
தடுக்கக்கூடிய சக்தியாக இருப்பது இந்திய அரசு. இதை மறுக்க முடியாது.காங் கிரஸ் அரசுதான் தமிழர்களைக் கொன்றுகுவிக்க ராஜபக்சேவுக்கு துணை நின் றது. இன்றைக்கு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உலக நாடுகளே ஒரு வேளை குரல் கொடுக்க முன்வந்தாலும் அதற்கு தடையாக இருப்பதும் காங்கிரஸ் கூட்டணி அரசுதான். நம் முன்னே இருக்கின்ற முதல் கடமை டெல் லி ஆட்சி பீடத்திலிருந்து காங்கிரஸ் அரசைத் தூக்கி எறிய வேண்டும்.
டெல்லியில் புதிய அரசு அமையுமானால்,இலங்கைப் பிரச்சினையின் வெளி யுறவுக் கொள்கையில் உடனடி மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியுமா? புதிய ஆட்சி வருகின்ற போது ஈழத்தமிழர்கள் மீது பரிவுள்ள அரசாக,அந்த ஆட் சியின் கொள்கைகளை வகுப்பதற்கு நாடாளு மன்றத்தில் நமது தலைவர் வைகோ இடம் பெற்றாக வேண்டும். வைகோ நாடாளுமன்றம் சென்றால் தான், இந்திய அரசின் பார்வையை ஈழத்திற்கு ஆதரவாகத் திருப்ப முடியும். நமது இலட்சியமான தமிழீழத்தை உருவாக்கு வதற்கு பொது வாக்கெடுப்பை நடத்தச் செய்ய முடியும்.
எனவே தலைவர் வைகோவின் வெற்றிக்கு வித்திடுவோம்! வரலாறு நமது வெற்றியை எழுதப்போகிற காலம் வந்து கொண்டே இருக்கிறது! வருங்காலம் வைகோவின் காலம்! நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை பிறக்கும்!நாட்டின் அடிமை விலங்கு உடைந்து நொறுங்கும்!
மு.செந்திலதிபன் இவ்வாறு உரை ஆற்றினார்.
No comments:
Post a Comment