ஈரோட்டில் #மதிமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் வாக்குச்சாவடிகளில் முகவர்கள் பணியாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடிகள் குறித்தும், அதில் முகவர்களின் பணிகள் குறித்தும் மதிமுக சார்பில் ஈரோடு கருங்கல் பாளை யம் பாட்டாளிகள் படிப்பகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத் திற்கு மாநில இலக்கிய அணி துணை செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
ஈரோடு மாநகர செயலாளர் பொன்னுசாமி வரவேற்றார். இதில் தலைமை தேர் தல் பணிக்குழு துணை செயலாளர் சேதுபதி, தலைமை தணிக்கைக்குழு உறுப் பினர் பூங்கொடி சாமிநாதன், மாவட்ட பொருளாளர் முத்துமாணிக்கம்,வீரப்பன் சத்திரம் நகர செயலாளர் பழனிவேல் ஆகியோர் பேசினார்கள்.

இதில், பொதுக்குழு உறுப்பினர் வேலு, இலக்கிய அணி துணை செயலாளர்நாக ராஜ்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன்,துணை அமைப்பாளர் செந்தில்(எ)சாந்தகுமார், நகர பொருளாளர் ஆனந்தன், மாவட்ட பிரதிநிதி குணசேகரன், மாணவரணி துணை அமைப்பாளர் பாபு (எ) ஜாகிர் உசேன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர துணை செயலாளர் முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார். இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாநகர செயலாளர் பொன்னுசாமி செய்திருந்தார்.
No comments:
Post a Comment