#வைகோ தலைவர் மட்டும் அல்ல; உலகத் தமிழர்களுக்கு தாயும் ஆனவர்!
விருதுநகர் மாநாட்டில் டாக்டர் நடேசனார், டாக்டர் டி.எம்.நாயர்,பிட்டி தியாக ராயர் படங்களைத் திறந்து வைத்து, கவிஞர் தமிழ்மறவன் பேச்சு
செப்டம்பர் 15 அன்று, விருதுநகரில் நடைபெற்ற கழக மாநாட்டில்,டாக்டர் நடே சனார்,டாக்டர் டி.எம்.நாயர், பிட்டிதியாகராயர் படங்களைத் திறந்து வைத்து, தலைமை நிலையச் செயலாளர் கவிஞர் தமிழ்மறவன் ஆற்றிய உரை.....
இமயம் எனது எல்லை என உலகத்திற்குப் பறைசாற்றுகின்ற விதத்தில் சேர-சோழ-பாண்டியர்கள் இமயத்தின் உச்சியில் கொடிபொறித்த காட்சியினையும்,
“கயல் எழுதிய இமய நெற்றில்
அயல் எழுதிய புலியும் வில்லும்”
எனச் சான்று பகர்கிற சரித்திரம் அடங்கிய இலக்கிய வரியினையும் நினைவு
படுத்துகின்ற விதத்தில், இந்த மாநாட்டிற்குத் தலைமை வகித்து இருக்கின்ற இமயம் ஜெபராஜ் அவர்களே,
இன்றைய அரசியல் வரலாற்றில் ஊழல் களும் ஒழுங்கீனங்களும் கொண்டு
அசிங்கப்பட்டு வரும் தலைவர்கள் உலாவரும் இத்தமிழகத்தில், மண்ணின்
மைந்தர் களின் மறுமலர்ச்சிக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு, பெண் ணியத்தையும் கண்ணியத்தையும் காத்து வருகின்ற தலைவர் வைகோ அவர் களுக்கு என் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இரண்டாம் மூவேந்தர்கள் என்று சொல்லப்படக்கூடிய டாக்டர் சி.நடேசனார், டாக்டர் டி.எம்.நாயர்,வெள்ளுடை வேந்தர் வள்ளல் தியாகராயர் ஆகிய திரா விட இயக்கத்தின் மூலவர்களின் திருஉருவப் படங்களைத் திறந்து வைப்பதற் கான வாய்ப்பினைப் பெற்றிருப்பது எனது வாழ்நாளில் யான் பெற்ற பெரும் பேறாகும்.
தீவரு வனத்திடை இட்டுத் தீர்ந்ததோர்
தாய்வர நோக்கிய கன்றின்
தன்மையார்...
என்று கம்பன் ஒரு காட்சியினைப் படம் பிடித்துக் காட்டுகின்றார். அடர்ந்த காட் டில் ஒரு பசு, கன்றுக்குட்டியினை விட்டுப் பிரிந்து சிறிது தள்ளிப்போய் விடு கிறது. தாய்ப் பசுவைக் காணாத அந்தப் பச்சிளங்கன்றுக்கு திக்குத் திசை எது வும் தெரியாது. மாட்டுத் தொழுவம் எந்தத் திசையில் இருக்கிறது என்பதும்
தெரியாது.
இந்த நிலையில் தாய்ப்பசுவைக் காணாத அந்தக் கன்றுக்குட்டி அச்சத்தால் நடுங்கி, மிரண்டுபோன நிலையில்,எந்தப் பக்கம் போவது என்று தெரியாமல்
திணறிக் கொண்டிருக்கிறது.
இப்படி ஒரு இக்கட்டான நேரத்தில் தாய்ப்பசுவே அந்த இடத்திற்கு வந்துவிடுகி றது. உடனே தாய்ப்பசுவைக் கண்ட கன்றுக்குட்டி, மகிழ்ச்சியில் துள்ளிக் குதித் து ஆனந்தப்படுகிறது.
அதைப்போல,இருண்ட அரசியலில் எந்தப்பக்கம் போவது என்று தீர்மானிக்க முடியாமல் திக்குத் தெரியாமல் திணறிக் கொண்டிருக் கும்போது - வழிகாட் டும் தலைவர் வைகோ அவர்களே அந்த இடத்திற்கு வந்து விடுகிறார். தாய்ப் பசுவைக் கண்ட கன்றுக்குட்டியைப் போல தலைவரைக் கண்ட இலட்சக்கணக் கான மக்களும் கையொலி எழுப்பி ஆரவாரம்செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத் தினீர்கள்.
இதிலிருந்து ஒரு உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். வைகோ என் றாலே தலைவர் என்றுதான் நீங்கள் எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். அதில்
பாதி அளவில்தான் உண்மை இருக்கிறது. மீதியை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
வைகோ என்றாலே அவர் தலைவர் மட்டுமல்ல, உலகத் தமிழர்களுக் கெல் லாம் தாயும் ஆனவர்.
வைகோ அவர்கள் மேடையில் வீற்று இருக்கின்ற தோற்றத்தைப் பார்த்தால்,
உலகப்புகழ் வாய்ந்த ஒரு மாவீரனின் வீரம் செறிந்த வரலாறு என் நினைவுக்கு
வருகிறது. புகழ்பெற்ற மாமன்னன் ஃபிலிப்-ஆளும் மாசிடோனியாவில் ஆண் டுதோறும் குதிரைப் போட்டி நடைபெறும். பல்வேறு நாட்டுக்குதிரைகள் அங் கே வரும். அடங்காக் குதிரைகளின் அணிவகுப்பும் நடைபெறும்.
அந்தக் குதிரைகளை அடக்கும் திறன் படைத்த பயிற்சிபெற்ற வீரர்கள் பலர்
நூற்றுக்கணக்கானோர் அங்கே கூடியிருப்பார்கள். மாசிடோனியாவின் வீரம் செறிந்த விளையாட்டுகளில் இதுவும் ஒன்றாகும்.
அன்று நடைபெற்ற குதிரைப்போட்டிக்கு வந்திருந்தகுதிரைகளில் தெஸ்ஸாலி நாட்டுக் குதிரை -அனைவரது கண்களையும் கருத்து களையும் கவர்ந்தது. வலி வும் வனப்பும் கொண்ட அந்தக் குதிரையின் பெயர்தான் Bucephalas.
அந்தக் குதிரையை அடக்கும் விதத்தில் ஏறமுயன்றபோதே தூக்கி எறியப்பட்டு
வீரர்கள் பலர் பலத்த காயத்துடன் வீழ்ந்துகிடந்தனர். இப்படி ஒரு அடங்காக் குதிரையை இதற்குமுன் மாசிடோனியா மக்கள் பார்த்ததே இல்லை. குதிரை யின் அருகில் செல்லவே பலரும் பயந்தனர்.
“எனது குதிரையை அடக்கும் திறன் படைத்த வீரர்கள் எவருமே இந்த மாசிடோ னியாவில் இல்லையா? இருந்தால் வந்து அடங்கிப் பாருங்கள்”என்று அக்குதி ரைக்குச் சொந்தக்காரன் சவால் விட்டுக்கொண்டே நின்றான்.மக்கள் ஆர்வத் துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இந்த நேரத்தில் மாசிடோனியா மன்னர் ஃபிலிப் அவர்களின் அருமை மகன்
அலெக்சாண்டர் எழுந்து வந்து “தந்தையே இந்தக் குதிரையை நான் அடக்கிக் காட்டுகிறேன். எனக்கு அனுமதி தாருங்கள்” என்று வேண்டினான்.
மாமன்னர் பிலிப் தன் மகனைப் பார்த்து அலட்சியமாகச் சிரித்தபடி “வேண்டாம்
மகனே! விபரீதமான விளையாட்டு.இந்தக் குதிரை பொல்லாதது! இதோ பார், அதனால் தூக்கி எறியப்பட்ட வீரர்கள் பலரும் கை கால்கள் முறிந்து பலத்த காயத்துடன் எழுந்திருக்க முடியாமல் கிடக்கின்றார்கள். இந்த நிலையில் நீ அக்குதிரையை அடக்க நினைப்பது ஆபத்தான முடிவு” என்றார்.
அலெக்சாண்டர் கேட்கவில்லை.மீண்டும் மீண்டும் வற்புறுத்தினான். மாசிடோ னியாவுக்கு விடப்படும் சவால் இது. எனக்கு அனுமதி தாருங்கள். இந்த மண் ணின் மகத்தான வீரம் செறிந்த புகழை நிலை நாட்டிக் காட்டுகிறேன் என்று அடம்பிடித்து ஆவேசம் பொங்கப் பேசினான் அலெக்சாண்டர்.
வேறு வழியில்லாமல் அரைமனதுடன் ஃபிலிப் அனுமதி கொடுத்தார். “மகனே,
நீ மட்டும் அந்தக் குதிரையை அடக்கி விட்டால் அந்தக் குதிரையை விலை
கொடுத்து வாங்கி உனக்கே பரிசாகத் தந்து விடுகிறேன்” என்றும் சொன்னார்.
மன்னர் அனுமதி கொடுத்த மறுநொடியிலேயே அலெக்சாண்டர் விரைந்து சென்று, ஒரே தாவில் ஏறி குதிரையின்மீது அமர்ந்து கடி வாளத்தைப் பிடித்து அடக்கி விட்டான்.அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது அவனது வீரச் செயல்.
“அடங்காக் குதிரையை அடக்கிய அலெக்சாண்டர் வாழ்க!” எனும் குரல் எங்கும் எதிரொலித்தது. கையொலியும்,ஆரவாரமும் அடங்கப் பல நொடிகள் ஆயின. மகனின் வீரம் கண்டு மன்னர் பூரித்துப் போனார்.
“எவருக்கும் அடங்காத தெஸ்ஸாலி நாட்டுக் குதிரையை அலட்சியமாக அடக் கிக் காட்டிய அலெக்சாண்டரைப் போல-தமிழ்நாடு என்றாலே அடங்காத மத் தி யஅரசை நான் அடக்கிக்காட்டுகிறேன்”என்று வெல்லும் சொல் வீரர் வைகோ அவர்கள் அலெக்சாண்டர் உருவத்தில் உங்களிடம் அனுமதி கேட்கின்றார்.
“வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எனக்கு வெற்றி வாய்ப்பைத்தாருங்கள்,
மத்திய அரசை அடக்கிக் காட்டுகிறேன்” என்று கேட்கிறார் வைகோ.
கடந்த காலத்தில் வைகோ அவர்கள் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி
களுக்கு விடை பகர முடியாமல் அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி எத்தனை யோமுறை எழுந்து ஓடியிருக்கிறார். “ஓடாதீர் நில்லுங்கள்! என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்!” என்று வைகோ மடக்கிய உரைவீச்சுகள் நாடாளுமன் றத்தில் பதிவாகியுள்ளன.
இப்படியெல்லாம் இனத்திற்காகப் போராடிய வீரர்களின் கோட்டம்தான் திரா விட இயக்கம். இந்த இயக்கத்தின் மூலவர்களான முப்பெரும் தலைவர் களின் படங்களைத் திறந்து வைக்கப் படுகிறபோது அவர்களின் வரலாற்றுச் சுவடு களையும் நாம் ஒருமுறை திரும்பிப் பார்க்க வேண்டும்.
வாளும் வேலும் தாங்கி ஆண்ட பரம்பரையாம் தமிழினம் ஆரியத்தால் வீழ்ந்து அடிமைத் தளையில் இருந்து மீள முடியாமல் போனதற்குப் பல்வேறு கார ணங் கள் உள்ளன.
அவற்றுள் முக்கியமாக மூன்று காரணங்களைச் சொல்லலாம். கல்லாமை, இல்லாமை, இயலாமை எனும் படுகுழியில் வீழ்ந்து கிடந்த தமிழ் இனத்திற்கு,
விடியல் தந்து, விழிப்புணர்ச்சி உண்டாக்கிய முதல் மாமனிதர்தான் டாக்டர் சி.நடேசனார். சின்னக்காவனம் நடேசனார் என்பதே அதன் முழுப் பெயராகும். சென்னை திருவல்லிக்கேணியில் வாழ்ந்த இப்பெருமகனார்தான் வரலாற்றில் ஆரியருக்கு எதிராக-திராவிடர் எனும் இனமானத்திற்கு உயிரோட்டம் தந்தவர்.
நாம் கடந்துவந்த வரலாற்றை ஒருமுறை திரும்பிப்பார்த்தால்தான் நமக்கு ஏற் பட்ட தடைகளைத் தெரிந்து தெளிந்து எதிர்காலத்தைச் சரியாக அமைத்துக் கொள்ள முடியும்.
100 ஆண்டுகளுக்கு முன்பே 1912 இல்டாக்டர் சி.நடேசனார் அவர்கள் திராவிடச்
சங்கம் தொடங்கினார் என்றால், அதற்கு என்ன காரணம் என்பதனை எண்ணிப்
பார்க்க வேண்டும். திராவிட இனம் ஆரியர்களை முந்திச் செல்ல முடியாமல்
அவர்களுக்கு அடிமையாகக் கிடந்து உழலும் நிலை இருந்தது.
தமிழினம் தாழ்ந்துபோனதற்குக் காரணம் கல்லாமைதான். நூறு ஆண்டுகளுக் கு முன் மட்டுமல்ல, 500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கல்வித்துறையில் தமி ழன் கால் வைக்க முடியாத நிலை இருந்து வந்தது.
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் நாயக்க மன்னரின் ஆட்சிக் காலத் தில் 10 ஆயிரம் மாணவர்கள் படித்தார்கள். அவர்களில் பெரும் பகுதியானவர் கள் பிராமணர்கள்.ஒவ்வொரு வகுப்பிலும் 200 முதல் 300 பேர் வரை இருந்தனர் என்று 1610 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் நாள் ராபர்ட் டி நொபிலி எழுதிய கடிதக் குறிப்பு சுட்டிக் காட்டுகிறது. சூத்திரர்கள் படிக்கக்கூடாது என்று ஆரியர்கள் செய்த சூழ்ச்சி ஆதிக்கம் செலுத்திய காலம் இது.
9 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டுவரை மன்னர்கள் எவரும் தமி ழர்கள் படிப்பதற்கு கல்விக்கு முதலிடம் கொடுக்கவே இல்லை.வெள்ளையர் ஆட்சியில் தூத்துக்குடிக்கு அருகில் உள்ள“புன்னைக்காயல்” என்ற ஊரில்தான் 1567 இல் முதல் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் 1912 ஆம் ஆண்டில் திராவிட மாணவர்கள் படித்து முன் னேற வேண்டும் என்பதற்கான அடித்தளம் அமைத்து, அதற்கு திராவிடச் சங்
கம் என்றும், மாணவர்கள் தங்கும் விடுதி ஒன்றையும் நிறுவி, அதற்கு திராவி டன் இல்லம் என்றும் பெயர் வைத்தார் சி.நடேசனார்.
சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச் சராக இருந்த ஆர்.கே.சண்முகம் செட் டியார் அவர்கள், சி.நடேசனார் நிறுவிய திராவிடன் இல்லத்தில் தங்கிப் படித் துப் பட்டம் பெற்றவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதைப் போல டி.எம்.நாராயணசாமி, உயர்நீதி மன்ற நீதிபதியாக இருந்த சுப்பிரமணியம் ஆகி யோர் இந்த விடுதியில் தங்கிப் படித்தவர்கள்.
இன்று நம்மால் போற்றப்படுகின்ற திராவிட இயக்கத்திற்கு உருவகம் தந்த பெருமகன் டாக்டர் சி.நடேசனார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.அடுத்து பிட்டி தியாகராயர் அவர்களைப் பார்க்கிறோம். நீதிக் கட்சியின் வெற்றிக்குத் துணைநின்ற வைரத் தூண்களில் பிட்டி தியாகராயர் முதன்மையானவர். அவர் வாழ்ந்த காலத்தில் அள்ள அள்ளக் குறையாத செல்வத்திற்குச் சொந்தக் கார ராக விளங்கியவர்.
1916 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 20 ஆம் நாள் தென் இந்திய நல உரிமைச் சங் கம் உருவாக்கப்பட்டபோது, அதன் கொள்கை அறிக்கை Non Brahmin Manifesto ஒன் றை வெளியிட்டார்.அந்த அறிக்கையின் திட்டங்கள் இதுவரை முழுமையாக நிறைவேற்றப் படவில்லை.
பிட்டி தியாகராயர் 40 ஆண்டு காலம் சென்னை மாநகராட்சியில் தொடர்ந்து
உறுப்பினராக இருந்தவர். அங்கே இருக்கின்ற செங்கோலும், மேயர் அணிந்து வருகின்ற வைரமாலையும் தியாகராயரால் நகர சபைக்கு வழங்கப் பட்டவை. தியாகராயர் அவர்களின் வள்ளல் தன்மைக்கு இலக்கணமாகத் திகழும் எடுத் துக்காட்டுகளில் இதுவும் ஒன்றாகும்.
1912ஆம் ஆண்டிலேயே பிராமணர் ஆதிக்கத்திற்கு எதிராக திராவிட இன உணர் வுடன் கூடிய திராவிடச் சங்கம் ஏற்பட்ட பிறகு, அதே திராவிடத்தை மய்யப்
படுத்தாமல் “தென்னிந்திய நல உரிமைச் சங்கம்” எனும் அமைப்பு ஏன் என்பதற் கான விளக்கத்தை அப்போது வெளியிடப்படவில்லை.
அன்றைய நிலையில் இந்தியாவை ஆண்ட வெள்ளை ஆட்சியினர் ஐந்து பகுதி களாகப் பிரித்து ஆள்வதென்றும்,அவற்றுள் “தென்னிந்தியா” என்று பெரும் பகுதியைக் குறிப்பிடுவதற்கும் திட்டமிட்டிருந்தார்கள். அதன் அடிப்படையில் தான் “தென்னிந்திய நல உரிமைச் சங்கம்” எனும் அமைப்பை உருவாக்கும் நிலை ஏற்பட்டது.
எனினும் திராவிட இன நலம் சார்ந்த இயக்கமே தென் இந்திய நல உரிமைச்சங் கம் என்பதனை மக்கள் தெளிவாகத் தெரிந்துகொண்டனர். இந்த இயக்கத்திற் காக “ஜஸ்டிஸ்” என்ற பெயரில் ஒரு ஆங்கில ஏடும், “திராவிடன்”என்ற பெய ரில் தமிழ் ஏடும், “ஆந்திரப் பிரகாசிகா”என்ற பெயரில் ஒரு தெலுங்கு ஏடும் தொடங்கப்பட்டன.
நாளடைவில் ஆங்கிலப் பத்திரிகையான “ஜஸ்டிஸ்” பத்திரிகையின் பெயரே
ஜஸ்டிஸ் பார்ட்டி என்றும், “நீதிக்கட்சி” என்றும் மக்களிடையே பரவத் தொடங் கி விட்டது.
1916 இல் தொடங்கிய நீதிக்கட்சி 4 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக் கு வளர்ந்து விட்டது. 1920 டிசம்பர் 17 இல் ஆட்சிக்கு வந்து விட்டது.
உடனே நீதிக் கட்சியின் தலைவர் சர்.பிட்டி தியாகராயர் அவர்களை ஆட்சி
அமைத்திட வருமாறு அன்றைய மாநில ஆளுநர் வெலிங்டன் பிரபு அழைப்பு
விடுத்தார்.
தியாகராயர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்க விரும்பவில்லை.பதவி இல் லாமலேயே மக்களுக்குத் தொண்டாற்ற முடியும் என்கிற எண்ணம் அவரிடம் மேலோங்கி இருந்தது.அதனால் அவருக்குப் பதிலாக கடலூரில் பிரபல வழக் கறிஞராக இருந்த ஏ.சுப்பராயலு ரெட்டியார் முதல் அமைச்சராகவும், பனகல் அரசரை 2ஆவது அமைச்சராகவும், கே.வி.ரெட்டி நாயுடு அவர்களை 3ஆவது அமைச்சராகவும் நியமிக்குமாறு தியாகராயர் பரிந்துரை செய்து அனுப்பினார். அந்தக் காலத்தில் முதல் அமைச்சரை (ஃபஸ்ட் மினிஸ்டர்) என்பது வழக்க மாகும்.
அன்று தியாகராயர் செய்த அதே தியாகத்தை - தியாகச் சுடர் வைகோவும் செய் தார் என்பதை மறந்துவிடக்கூடாது.மத்திய அமைச்சர் பதவியை ஏற்க வருமா று பிரதமர் வாஜ்பாய் அவர்கள் வைகோவுக்கு அழைப்பு விடுத்தபோது, தானா கத் தேடி வந்த பதவியை தனக்கு வேண்டாம் என்று இரண்டு தறுதலை களுக் குக் கொடுக்குமாறு தள்ளிவிட்ட தியாகச் சுடர் வைகோ அவர்களைத்தான்
இங்கே பார்க்கிறீர்கள்.
இனி டாக்டர் டி.எம்.நாயர் அவர்களைப் பார்ப்போம். தாரவாத் மாதவன் நாயர்
என்பது அவரது முழுப்பெயர்.லண்டனில் படித்துப் பட்டம் பெற்று ENT டாக்ட ராக தொழில் புரிந்தவர்.தந்தை பெரியார் அவர்களால் அந்தக் காலத்திலேயே திராவிட லெனின் என்று பாராட்டப்பட்டவர். நீதிக் கட்சியின் சட்ட திட்டங் களை வரையறுத்துச் செயல் படுத்துவதில் முனைந்து நின்றவர்.சென்னை மாநகராட்சியில் உறுப்பினராக இருந்த காலத்தில் எதிலும் துடிப்புடன் வாதிடு வதில் வல்லவர்.
டி.எம்.நாயர் அவர்களும், பிட்டி தியாகராயர் அவர்களும் தொடக்கத்தில் காங் கிரசில் இருந்தார்கள். அப்போது இருவரும் எதிரும் புதிருமாகவே இருந்தார் கள். டி.எம்.நாயர் பகுத்தறிவுச் சிந்தனை மிக்கவர். தியாகராயர் சிறந்த பக்திமா னாகத் திகழ்ந்தவர்.
அந்தக் காலத்தில் ஒரு சமயம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதிகோயில் தெப் பக்குளம் வறண்டுபோக நேர்ந்தது.தெப்பத் திருவிழா நடத்துவதற்காக தெப்பக் குளத்தில் நீர் நிரப்ப வேண்டும் என்கிற கோரிக்கை மாநகராட்சி மன்றத்தில் வந்தது. அப்போது மாநகராட்சி தண்ணீர் மக்கள் பயன்பாட்டுக்கு உரியது. என வே அதை ஒரு கோயில் குளத்தில் நிரப்பக்கூடாது” என்று நாயர் பேசினார்.
உடனே தியாகராயர் எழுந்து “கோயில் திருவிழாவும் மக்களுக்கான பொதுப்
பணிதான். ஆகவே, அக்குளத்தில் நகராட்சி தண்ணீர் வழங்குவதில் தவறில் லை” என்று பேசினார்.இரு தலைவர்களும் இப்படி நீண்ட காலமாகவே எதிரும் புதிருமாகவே இருந்தார்கள்.
இந்த இருபெருந் தலைவர்களையும் ஒரு நிகழ்ச்சிதான் ஒன்று சேர்க்கக்காரண மாக இருந்தது. சென்னை கபாலீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்கு பிட்டி தியாகராயர் அவர்கள் 10,000 ரூபாய் நன்கொடை வழங்கினார். அந்தக் காலத்தில் 10 ஆயிரம் ரூபாய் என்பது சாதார ண தொகை அல்ல. ஒரு சவரன் தங்கம் 10 ரூபாயாக இருந்த காலம் அது. அந் தக் காலத்தில் இவ்வளவு பெரிய தொகையை வேறு எவரும்நன்கொடையாகக் கொடுத்ததில்லை.
குடமுழுக்கு நிகழ்ச்சிக்கு தியாகராயர் அவர்கள் தமது குடும்பத்துடன் சென்று
இருந்தார். கபாலீசுவரர் கோயிலுக்குள் சூத்திரர்கள் அமரும் பகுதியிலேயே
தியாகராயரையும் உட்காரவைத்தார்கள் பிராமணர்கள். ரூபாய் 10 ஆயிரம்
கொடை வழங்கிய தியாகராயரை ஒரு பொருட்டாகவே பிராமணர்கள் மதிக்க
வில்லை.
அதற்கு மாறாக, தியாகராயரிடத்தில் கிளார்க் வேலை பார்க்கும் ஒரு பிராமண னைக் கோபுரத்தின் உச்சிக்கே அழைத்துச் சென்றார்கள். இச்சம்பவம் தியாகரா யரைப் பெரும் அவமானத்திற்கு ஆளாக்கியது.
அவரது குடும்பமே அவமானத்தில் தலைகுனிந்து நின்றது. அப்போது தான் தியாகராயருக்கு பிராமண ஆதிக்கத்தின் இன ஒதுக்கல் கொடுமை, பிராம ணன்-சூத்திரன் எனும் பேதமையில் ஏற்படும் மானக்கேடு ஆத்திரத்தை உண்டு
பண்ணியது
கட்டுக்கு அடங்காத கோபம் கொந்தளித்த நிலையில்,குடும்பத்துடன் கோயி லை விட்டு வெளியே வந்து காரில் உட்கார்ந்து கொண்டு, கார் ஓட்டுநரைப் பார்த்து “நேரே டி.எம்.நாயர் வீட்டுக்குப்போ” என்று கூறினார் தியாகராயர்.
நாயர் வீட்டுக்கு முன் கார் போய் நின்றது.காரில் தியாகராயர் இருப்பதைப் பார்த்த நாயர் ஆச்சரியப்பட்ட நிலையில் ஓடிவந்து, காரின் கதவைத் திறந்து
வரவேற்றார். இருவரும் கண்ணிர் மல்க கட்டிப் பிடித்து ஆறத் தழுவினர்.
நடந்த நிகழ்ச்சியை நாயரிடம் சொல்லி,நாம் இருவரும் இனிமேல் ஒன்றாக
இணைந்து பிராமண ஆதிக்கத்தைஒழித்தே தீரவேண்டும் என்று முடிவு செய்த னர். நீண்ட காலமாக எதிரும் புதிருமாக இருந்த இரு துருவங்களையும் பிரா மண சூத்திர இன ஒதுக்கல் கொள்கை இணைத்து வைத்தது.
எதிரிகள் கேட்கும் கேள்விகளுக்கு உடனே நெற்றியடியாக அடித்துப் பதில்
சொல்வதில் டி.எம்.நாயர் தனித்திறன் பெற்றவர்.ஆங்கிலப் புலமைமிக்க நாயர் அவர்கள் நீதிக் கட்சியின் பிரச்சார பீரங்கி என்று புகழ்பெற்றவர்.
பிராமண ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு திராவிட இனம் கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் உரிய இடங்களைப் பெற்று முன்னேற வேண்டுமானால், அதற்கு ஒரே வழி வகுப்புவாரி உரிமை இடஒதுக்கீடுதான் சரியான தீர்வாகும் என்பதிலே நீதிக்கட்சி உறுதியாகச் செயல்பட்டு வந்தது.
1919 ஆம் ஆண்டில் இலண்டனில் நடைபெற்ற ஜாயிண்ட் பார்லிமெண்டரி குழு முன், இது தொடர்பான விளக்கங்களை அளிப்பதற்கு பல்வேறு குழுக்கள் சென் றன. அப்போது நீதிக் கட்சியின் சார்பில் டாக்டர் டி.எம்.நாயர் அவர்களும் அங் கே சென்றார்கள்.
அரசுப் பணிகளிலும் பொது நிறுவனங்களிலும் ஏகபோகமாக ஆக்கிரமித்துக் கொள்ளும் பிராமண ஆதிக்கத்தை முறியடிக்க வேண்டு மானால், புதிய சட்டத் திட்டத்தில் வகுப்பு வாரி உரிமை முன்னிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி டி.எம்.நாயர் பேசினார். தேர்தல் காலங்களிலும் பொதுத் தொகுதி களில் பிராமணர் அல்லாதவர்களுக்கு இட ஒதுக்கீடு அவசியம் வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது.
இக்கோரிக்கை பிரிட்டனில் உள்ள அரசியல் அறிஞர்களுக்கு வியப்பாக இருந் தது. ஏனென்றால், மிகவும் சிறுபான்மையான பிராமணர்களிடம் இருந்து- மிகப் பெரும்பான்மையாக விளங்கும் சமுதாயம் பாதுகாப்புக்கோருவது ஏன் என்பது அவர்களுக்குப் புரியவில்லை.
அதனால்,இதற்குச்சரியான விளக்கம் கூறுமாறு டாக்டர் டி.எம். நாயரிடம் ஆங் கிலேயர்கள் கேட்டார்கள். உடனே டாக்டர் நாயர் அவர்கள், “ஒரு ஓநாய்க்கு அஞ்சி மிகப்பலவான ஆடுகளைப் பாதுகாக்க முனைகிறோமே ஏன்?அதைப் போலதான் இதுவும்” என்றார்.அவ்வளவுதான் கேள்வி கேட்டவர்கள் வாயே திறக்கவில்லை.”
திராவிட இயக்கத்தின் மூலவர்களான டாக்டர் சி.நடேசனார், டாக்டர் நாயர்,
வள்ளல் பெருந்தகை பிட்டி தியாகராயர் ஆகிய முப்பெரும் தலைவர்களின் திரு உருவப் படங்களைத் திறந்து வைத்து உரையாற்றுவதற்கான வாய்ப்பை எனக்கு வழங்கிய பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கு மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கவிஞர் தமிழ்மறவன் இவ்வாறு உரை ஆற்றினார்.
No comments:
Post a Comment