Wednesday, October 2, 2013

வ.உ.சி “சிவஞான போதம்” உரை நூல் விழா-வைகோ உரை- பாகம் 3

திருநாவுக்கரசர் இதே கருத்தையே சொல்கிறார்.

ஞானத்தால் தொழுகின்றவர்களைக் கண்டு
ஞானத்தாய் நினை ஞானும் தொழுகிலேனே.

ஞானத்தைத்தான் தொழுகிறேன் என்று திருநாவுக்கரசர் சொல்கிறார்.

ஞானம்தன்னை, நலனை முன்னிறுத்துகின்ற நன்மை என்று மாணிக்க வாசகர் சொல்கிறார்.

ஞானசம்பந்தரும் ஞானத்தையே சொல்கிறார்.ஞானத்தால் பேருருவாகக் காட் சி அளிக்கின்ற பெருமான்.

இதையேதான் திருமூலரும், ‘ஞானத்தை நோக்கினும் ஞானத்தைவிடச்சிறந்த அறம் நாட்டிலே இல்லை’ என்கிறார்.

ஞானத்தை விட சிறந்த சமயம் நாட்டிலே இல்லை.

ஞானத்திலே மிக்கார் நரரிலும் மிக்காரே’

ஞானத்தில் மிக்கவர்கள் என்றால் மனிதர்களில் மிக்கவர்கள்.

இது திருமூலர் திருமந்திரத்தில் 1440 ஆவது பாடல். ஆக, இதுதான் மொத்த சாரம்.

சிவஞான போதத்தைத் தந்த வ.உ.சி. அவர்களின் பெருமையைப் பேசுகின்ற நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி. இந்த நூலை பதிப்பித்துத் தந்திருக்கின்ற திவான் அவர் களுக்கு தமிழகம் கடமைப்பட்டு இருக்கிறது. நம் திருநெல்வேலிச் சீமையைச் சேர்ந்தவர். பொதிகைத் தென்றல் வீசும் குற்றால மலைக்கு அருகே பிறந்த இந்த மாபெரும் ஆராய்ச்சி அறிவாளர்,எத்தனை நூல்களை வெளியேகொண்டு வந்து இருக்கிறார். ஒட்டப்பிடாரத்தில் வ.உ.சி அவர்கள் இல்லத்தில் அரசுக் குறிப்பில் இருக்கிறது. அந்த நூல்களுள் பல வ.உ.சி. எழுதியவை. அவைகள் அச்சில் ஏறவில்லை, மக்கள் மன்றத்துக்கு வரவில்லை என்கிறார் திவான்.


என்னென்ன நூல்கள்?

முதல் நூலாக, ‘அழகும் ஆரோக்கியமும் -ஆயுளை நீடிக்க வழி - ஆயுளை நீடிக் கும் ஆறு -ஊழை வெல்லும் உபாயம் - சிவமதம் -இது வ.உ.சி.எழுதியது. யாருக் கும் தெரியாது. ‘விக்ஷ்ணு மதம்’ ‘புத்த மதம்’, ‘கிறிஸ்தவமதம்’, ‘இஸ்லாம் மதம்’ வ.உ.சி.எழுதியது. யாருடைய கண்களுக்கும் படவில்லை. அச்சேறவில் லை. எவரும் இன்றைக்குப் படிக்க வாய்ப்பு இல்லை. Universal ..... வ.உ.சி. எழுதிய து அச்சேறவில்லை. ‘முக்திபேறு’ ‘திருக்குறளின் பொருட்பால்,’ ‘இன்பத்துப் பால்’ ‘திலக மகரிஷி’ என பல நூல்கள், வ.உ.சி. எழுதியது, எவருக்கும் தெரி யாது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது அல்ல. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு
முன் எழுதப்பட்டது அல்ல. உ.வே.சா. தேடித்திரிந்தாரே தமிழ் இலக்கியங்கள், அதைப்போல இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கிய நூல் கள் அல்ல. இதோ எழுதியவரின் திருமகன் இந்த மேடையில் அமர்ந்து இருக் கிறார். எழுதிய அந்த மாபெரும் தலைவனின் மகன் வாலேஸ்வரன் இந்த மேடை யில் அமர்ந்து இருக்கிறார். என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த பெரும்பேறு, அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தவும் அவர்கள் இருக்கின்ற மேடையில் பேசுவதும் ஆகும். அரசியல் மேடைகள் ஆயிரம் கிடைக்கலாம். எத்தனையோ மன்றங்களில் நான் பேசலாம் ஆனால், இந்த நாட்டுக்காகவே தன்னுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் தந்த தலைவனின் பிள் ளைக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டு பேசுவது எனக்குப் பெருமை.

வ.உ.சி. அவர்களின் நூல்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவை அல்ல. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவை அல்ல. உ.வே.சா. தேடித்திரிந்தாரே தமிழ் இலக்கியங்கள், அதைப்போல இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முற்பட்ட சங்க இலக்கிய நூல்கள் அல்ல. இந்த நூல்கள் நூறாண்டு களைக்கூட கடக்கவில்லையே! வ.உ.சி. மறைந்து எண்பது ஆண்டுகள் கூட முடியவில்லையே? அந்த நூல்கள் என்ன ஆயிற்று? ஏன் பதிப்பிக்கவில்லை? என்ன முயற்சிகள் எடுக்கப்பட்டன? ஒவ்வொரு நூலாகத் தேடிக்கொண்டு வருகிறார் திவான். திருக்குறளின் அறத்துப்பால் மாத்திரம் பதிப்பித்து இருக்கி றார்கள். பொருட்பால் - இன்பத்துப்பால் ஆகியவை கிடைக்கவில்லை. வ.உ.சி. எழுதிய இன்னிலை என்ற நூலுக்கு, எழுதிய விளக்க உரையை திவான் தான் பதிப்பித்து வெளியிட்டார்.

இன்றைக்கு என்ன நடக்கும்?

திவான் பதிப்பித்து இலவசமாக வெளியிட வேண்டியது. எழுத்துத் திருடர்கள் சிலர் இருக்கிறார்கள். இப்படிப் பதிப்பிக்கப்பட்ட புத்தகத்தை எல்லாம் சேகரித் து, ஒரே புத்தகமாகப் போட்டு நல்ல விலைக்கு விற்பனை செய்துவிடுகிறார் கள். ராயல்டி எல்லாம் ஒன்றும் கிடையாது. இவர் அதைப் பற்றிக் கவலைப்படு வது கிடையாது. வ.உ.சி.யின் நூல்கள், நாட்டு மக்கள் மத்தியில் வந்தால் நல் லது என்று நினைக்கிறார் திவான்.

வ.உ.சி. எழுதிய அழகும் ஆரோக்கியமும் என்ற புத்தகத்தைக் கண்டுபிடிப்பதற் கு இவர் அலைகிறார், அலைகிறார். திவானுடைய வீட்டிலேயே ஐம்பது ஆயி ரம் புத்தகங்கள் இருக்கின்றன. நூலகங்களில் இல்லாத அரிய நூல்கள் கூட திவானின் நூலகத்தில் இருக்கின்றன. அவர் ஒரு நடமாடும் கணினி. கருத்துக் களஞ்சியம். பத்து நிமிடங்களுக்குள் இருபது பழைய புத்தகங்களைப் புரட்டிப் பார்க்கக்கூடிய ஆற்றல் இவருக்கு இருக்கிறது. நான் பல ஆண்டுகளாகப் பார்த்து இருக்கிறேன்.

தொடரும் ....

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே.

No comments:

Post a Comment