Tuesday, October 22, 2013

புகழேந்தி தங்கராஜ் நூல் வெளியீடு - வைகோ உரை -பாகம் 1

புகழேந்தி தங்கராஜின் “இது இல்லை எனில் எது இனப்படுகொலை?” நூல் வெளியீட்டு விழா 14.10.2013 அன்று சென்னையில் நடைபெற்றது. நூலை வெளி யிட்டு #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ ஆற்றிய உரை வருமாறு

தாயகக் கனவினில் சாவினைத் 
தழுவிய சந்தனப் பேழைகளே!
எங்கள் குரல் ஒலி கேட்கிறதா, குழிகளில் வாழ்பவரே
எங்கே? எங்கே? எங்கே?
இப்பக்கம் உங்கள் விழிகளைத் திறவுங்களேன்
ஒருதரம் எங்களுக்கு உங்கள் திருமுகம் காட்டிவிட்டுத்
திரும்பவும் உறங்கச் செல்லுங்களேன்

என்ற கவிதை வரிகளைத் தாங்கி இருக்கின்ற,‘ இது இல்லையெனில், எது இனப்படுகொலை?’ எனும் இல்லையெனில், எது இனப்படுகொலை?’ கேள்வி யை, எழுத்துகளால் வார்ப்பித்து, இந்தக்காலகட்டத்துக்குத் தேவையான ஆயுத மாக, மனித குலத்தின் மனசாட்சிக்கு முன்பு உலவ விடுகின்ற, மானத்தமிழர் கள் முன்வைக்கின்ற கேள்வியாக, புதிய தலைமுறை மக்களுக்கு, ‘தமிழக அர சியல்’ என்கின்ற ‘தமிழக அரசியல்’ வார ஏட்டின் மூலமாக, நெஞ்சில் கனன்று கொண்டு இருக்கின்ற வேதனையை, சீறி வருகின்ற கோபத்தை, எதிரிகளு டை ய திமிர் வாதங்களைத் தவிடுபொடியாக்கு கின்ற கணைகளாக வடித்துத் தந்து இருக்கின்ற என் ஆருயிர்ச் சகோதரர் புகழேந்தி தங்கராஜ் அவர்களுடைய நூ லை இங்கே வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.



பல ஆண்டுகளுக்கு முன்னர், ‘சிறை’ என்கின்ற திரைக்காவியத்தை வெள்ளித் திரையில் பார்த்த மாத்திரத்தில், என் போன்றவர்களின் மனங்களைச் சிறைப் படுத்திய, தமிழ் ஈழ விடுதலைக் கனவை நெஞ்சில் சிறை வைத்து இருக்கின்ற மதிப்புமிக்க இயக்குநர் ஆர்.சி. சக்தி அவர்கள், இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்றுச் சிறப்பித்து இருக்கின்றார்கள்.

வஞ்சி மூதூரைத் தலைநகராகக் கொண்ட சேர நன்னாட்டில், அதற்குக் கருக்க ளமாகத் திகழ்ந்த கருவூரை மையப்படுத்தி இருக்கக்கூடிய கொங்கு நாட்டில், கொங்கு வேளிர்கள் வாழ்கின்ற பகுதியில், அரசர்களாக வாழ்ந்த ஒரு குடி வழி யில், அந்தக் கொடிவழியிலே வந்து, திரைப்படத் துறையில் வில்லனாக அறி முகமாகி, நடிகவேளைப் போல அனைத்துப் பாத்திரங்களிலும் சண்டைக் காட் சிகளிலும் சோபித்து,கடலோரக் கவிதைகளில் எங்கள் இதயங்களில் அழுத்த மாகப் பதிந்து, ‘வருத்தப்படாத வாலிபர்’ சங்கம் வரையிலே முத்திரை பதிப்ப வர் நமது அன்புக்குரிய சத்யராஜ் அவர்கள்.

அறிவாசான் தந்தை பெரியாரை, அவரது வாழ்க்கையை அப்படியே வெள்ளித் திரையில் கொண்டு வந்தவர்; வைக்கம் வீரரை நெஞ்சில் வைத்துப் போற்று கின்றவர்; சுயமரியாதை உணர்வாளர். ஈழத்தின் விடுதலைப் போருக்கு அடித் தளம் அமைத்துக் கொடுத்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களை மனதால் பற்றிக் கொண்டதோடு, தனக்கென்று எதையும் நாடாமல், துணிச்சலோடு கருத்துகளைக் கூறி வருகின்றார்.

மட்டக்களப்புக்குப் பக்கத்தில் வந்தாறு மூலையில் பிறந்த, ஒரு பதின்மூன்று வயதுச் சின்னஞ்சிறு பெண்ணின் வாழ்வு நாசமாக்கப்பட்டுச் சூறையாடப் பட்ட தே, அதை இன்றைக்கு உலக நாடுகள் விருது கொடுக்கின்ற அளவுக்கு உச்சி தனை முகர்ந்தால் என ஒரு திரைக்காவியமாக, புகழேந்தி தங்கராஜ் அவர்கள்
அமைத்து இருக்கிறார்கள் என்றால், அதிலே வருகின்ற நடேசனார் பாத்திரத் தை, இவர் உள்வாங்கிக் கொண்ட உள் ஒளியின் காரணமாகவே, அந்தக் கதா பாத்திரமாகவே அவர் மாற முடிந்தது; அத்தகைய சிறப்புக்குரிய அன்புக்குரிய ஆருயிர்ச் சகோதரர்,இன உணர்வுக்கலைஞர் சத்யராஜ் அவர்கள், இந்த நூலின் முதல் படியைப் பெற்றுக்கொண்டு சிறப்பித்து இருக்கின்றார்கள்.

‘திலீபன் அழைப்பது சாவையா? இந்தச் சின்ன வயதில் இது தேவையா?’ என்ற உணர்ச்சிக் கவிஞரின் கவிதை முழக்கத்தைக் கேட்டு, மாரடித்துக் கொண்டு நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு எதிரே, பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் அழுது கதறினார்களே, அதை ஆயிரம் மேடைகளில் சொல்லி இருப்பேன். நான் செல்லும் இடமெல்லாம் அவருடைய கவிதை வரிகளைச் சொல்லி வருகி றேன். அண்மையில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், செப்டெம்பர் 26 ஆம் நாள்,தியாக தீபம் திலீபனுக்குப் புகழ் அஞ்சலி நடத்துகின்றபோதும் சொன் னேன்.

மாவீரர் துயிலகங்கள் எல்லாம் இடிக்கப்பட்டு விட்டன; கல்லறைகள் எல்லாம் நொறுக்கப்பட்டு விட்டன; நான் நெஞ்சால் பூசிக்கின்ற தலைவர் பிரபாகரன் அவர்கள், கிளிநொச்சிக்கு அருகில் இருந்து போரை இயக்கிய இடம் இதுதான் என்று சொல்லி,‘வாருங்கள் சுற்றுலா காண்பதற்கு; நாங்கள் போரிலே வென்ற அந்த வீரத்தைப் பாருங்கள்; தமிழர்களை, விடுதலைப் புலிகளை நாங்கள் களத் தில் வென்றோம்; அவர்களை அழித்தோம் என்று கொக்கரிப்பதற்கு நாங்கள் அமைத்து இருக்கின்ற வெற்றித்தூணைப்பார்ப்பதற்கு வாருங்கள்; 15,000ரூபாய் செலவிலே உங்களுக்கு அழகான, அனைத்து வசதிகளும் கொண்ட அறை களைக் கொண்ட சுற்றுலா விடுதிகள் இருக்கின்றன;இதைக் காண வாருங்கள்’ என்று சிங்கள அரசு, கொழும்பிலே விளம்பரம் செய்து கொண்டு இருந்தது.

ஆனால், சிங்களர்களுடைய மனத்திமிருக்கு மாறாக,அங்கே வந்து காண்கின் றவர்களுடைய உள்ளத்தில், தமிழ் ஈழ விடுதலைத் தணல் எழுகிறது, அந்த
மண்ணைத் தொட்டு வணங்கி விட்டுப் போகிறார்கள் என்பதால், பத்து நாள் களுக்கு முன்னால், அந்த நிலவறை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும்,
குண்டுகளை வைத்துத் தகர்த்து மண்ணோடு மண்ணாக ஆக்கி இருக்கின்றார் கள். வல்வெட்டித் துறையில் அவரது வீடு தரைமட்டமாக்கப்பட்டு விட்டது.

இன்றைக்குத் தமிழர்கள் உலகின் 65 நாடுகளில் வாழ்கின்றார்கள். இந்தத்தாய்த் தமிழகத்தில் ஏழு கோடிப் பேர் வாழ்கின்றார்கள். ‘இறந்தே பிறந்த நடைப்பிணங் களா நாம்?’ என்ற கேள்வியை, புகழேந்தி தங்கராஜ் இந்த நூலில் வைத்து இருக் கின்றார். அல்லது முத்துக்குமார் வைத்த நெருப்பால், உதிரத்தில் உணர்ச்சி
சாகாமல் வாழுகின்றவர்களா? என்பதை,உலகம் கேட்கிறது.காலம் கேட்கிறது.


முள்ளிவாய்க்கால் முற்றம்


அதனால்தான், எங்கே ராஜராஜ சோழன் பெருவுடையார் கோவிலைக் கட்டி
எழுப்பினானோ, எந்தப் பகுதியில் இருந்து கரிகாலன் புறப்பட்டுச் சென்று, சிங் களவர் களைக் கைதிகளாகக் கொண்டு வந்து கல்லணையைக் கட்டினானோ, எந்தப் பகுதியில் இருந்து இராஜேந்திரன் கடல் கடந்து சென்றானோ, வருண குலத்தான் சென்றானோ, ரகுநாதன் படையை அனுப்பினானோ, அந்தத் தஞ் சைத் தரணியிலே, விளாருக்குச் செல்லுகின்ற வழியிலே, ஈழத்தமிழர் களு டைய துயரங்களை, நடத்தப்பட்ட படுகொலை களைச் சித்தரிக்கின்ற முள்ளி வாய்க்கால் முற்றத்தை அமைத்து இருக்கின்றார் அண்ணன் பழ.நெடுமாறன் அவர்கள்

அவை வெறும் சிற்பம் அல்ல; அந்தச் சிற்பங்கள் பேசுகின்றன.அவற்றில் ஜீவத் துடிப்பு இருக்கின்றது.கொல்லப்பட்ட தமிழர்களுடைய உடல்களை நாய்கள்
கவ்வித் தின்னுகின்றன; கொத்துக் கொத்தாகக் குண்டுகள் விடிந்து மடிகிறார் கள்; நெருப்பு எரிகிறது;கர்ப்பிணிப் பெண்களுடைய வயிறு கிழிக்கப்பட்டு அதற் குள் இருக்கின்ற குழந்தையின் கை வெளியே நீட்டிக் கொண்டு இருக்கின் ற கொடுமை; கண்ணீரோடும், கதறலோடும் கூட்டம்கூட்டமாக மக்கள் வெளி யேறுகின்றார்களே, இந்தக் காட்சிகள் எல்லாம் சிற்பங்களாக வடிவம் பெற்று இருக்கின்றன.

அந்தச் சிற்பங்களை வடித்த சிற்பிகள், தமிழ் ஈழத்தின் உணர்வுகளைத் தங்கள் நெஞ்சில் தாங்கிக்கொண்டு அவற்றை வடித்து இருக்கின்றார்கள். முத்துக் குமார் உள்ளிட்ட ஈகிகளின் உருவங்கள், செங்காந்தள் மலர் கல்லிலே படைக் கப்பட்டு இருக்கின்றது. இப்படிச் சிலைகள் ஒருபுறத்தில்.

இன்னொரு பக்கத் தில், இந்த மண்ணின் விடுதலைக்கு வாள் ஏந்திப் போராடிய தீரர்கள், மன்னர் கள், இந்திய விடுதலைப் போரில் இரத்தம் சிந்தியவர்கள், தமி ழுக்குத் தொண்டு ஆற்றியவர்களுடைய படங்கள், அது முத்தமிழ் மண்டபம்.

தியாக தீபம் திலீபன், குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட தீரர்களின் திருவுருவப் படங்கள். நம் தலைவரின் அன்னை பார்வதி அம்மாள், தந்தை வேலுப்பிள்ளை,
வீரமகன் சார்லஸ் ஆண்டனி ஆகியோரின் படங்கள்.தலைவர் பிரபாகரன் மனைவி மதிவதனியின் உடன் பிறந்தவன்தான் களத்தில் மடிந்த மாவீரன் பாலச்சந்திரன். அவன் பெயரைத்தான் தன் பிள்ளைக்கு வைத்து இருந்தார். அந் தச் சின்னஞ்சிறு பிள்ளையின் முகத்தில் பதற்றம் இல்லை, கண்களில் எந்த விதமான கலக்கமும் இல்லை. ஐந்து குண்டுகளையும் மார்பிலே தாங்கி மடிந் தானே மாவீர மகன் பாலச்சந்திரன், அவனது படங்கள். இது மாவீரர் மண்டபம்.

இவை அனைத்தையும் உருவாக்கித் தந்து இருப்பவர்,இந்தத் தமிழ் இனம் என் றைக்கும் நன்றி பாராட்ட வேண்டிய அண்ணன் பழ.நெடுமாறன்.

நேற்று முன்தினம், அந்த முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நின்றேன். அங்கே வரிசைப்படுத்தப்பட்டு இருக்கின்ற ஒவ்வொரு காட்சிக்கும் கீழே உள்ள கவி தை வரிகள், நெஞ்சைப் பிளக்கின்றன. அதைத் தந்தவர், காசி ஆனந்தன். அந்த உணர்ச்சிக் கவிஞர், இந்த நிகழ்வில் உரை ஆற்றி அமர்ந்து இருக்கின்றார்.

இந்த நூல் வெளிவருவதற்குக் காரணமாக, தமிழக அரசியல் இதழில் வாய்ப்புத் தந்த, ஆபிரகாம் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின் றேன்.

முத்துக்குமார் மடிந்தபோது, வெள்ளையன் அவர்களும், புகழேந்தி தங்கராசும், அண்ணனும்,தம்பியுமாகத் தான் அங்கே ஓடி வந்தார்கள். அவனது உயிர் அற்ற
சடலத்தைக் கொளத்தூருக்குத் தூக்கிக்கொண்டு போனோம். மூலக்கொத்தளம் சுடுகாட்டில் அவன் நெருப்புக்கு இரையாக்கப்பட்டதற்குப்பின்னர், அந்த ஈமச் சாம்பலை, குமரியிலும், திருச்செந்தூரிலும் கடலில் கரைப்பதற்கு எடுத்துக் கொண்டு சென்றது மட்டும் அல்ல, என்றைக்கும் ஈழத்தமிழர்களின் உரிமைக் காகவே போராடுகிற, என்னுடைய மரியாதைக்குரிய அருமைச் சகோதரர் வெள்ளையன் அவர்கள், இந்த நிகழ்வில் பங்கு ஏற்று இருக்கின்றார்கள். அவர் வணிகப் பெருமக்களின் வாழ்வுக்காக மட்டும் அல்ல, தமிழ் இனத்துக்காகக் குரல் கொடுக்கின்றார், நீதிக்காகக் குரல் கொடுக்கின்றார்.

தூக்கு மரத்தின் நிழலில் நிறுத்தப்பட்டு இருக்கின்றானே குற்றம் அற்ற அந்த வீரப்பிள்ளை பேரறிவாளன்,அவனைப் பெற்றெடுத்த தாயார் அற்புதம் அம் மாள் அவர்கள், தாங்கவே முடியாத துன்ப முட்களை 22 ஆண்டுகளுக்கும் மேலாக மனதில் தாங்கிக் கொண்டு இருக்கின்றார். அந்த வேதனையோடு இங்கே வந்து இருக்கின்றார்.

ஈழத்தமிழர்களுக்காகப் போராடுவதற்கு இந்தத் தலைநகரில் இடம் வேண்டும் என்றால், மூவர் தூக்கைத் தடுத்து நிறுத்துவதற்குப் போராடிய களமாக இருக் கட்டும், காவல்துறையின் மிரட்டல்களைப் பற்றிக் கவலைப்படாமல், எதைப் பற்றியும் அச்சப்படாமல், தன் சொந்த இடத்தைத் தருகின்ற தருகண்மைக் குணத்துக்குச் சொந்தக்காரர் மதிப்பிற்குரிய செளந்தர்ராஜன் அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்து இருக்கின்றார்கள்.


என் கடமை


‘எங்களை வார்ப்பிக்கின்றார் வைகோ’ என்று, மாணவக் கண்மணி செம்பியன் இங்கே சொன்னார். என் மனதுக்கு மிகவும் இதமாக இருக்கின்றது. ‘தம்பி, இப் பொழுதும்கூட ஒப்புக்காக நான் பேசவில்லை. இன்று இந்த உலைக்களத்தில் எத்தனை வாட்கள் தயாராகும்? என்ற எதிர்பார்ப்போடும், நம்பிக்கை யோடும் தான் நான் இங்கே பேச வந்து இருக்கின்றேன். (கைதட்டல்).

காரணம், ஓராண் டுக்கு முன்னால் இருந்த நிலையை விட, இப்போது நமக்குப் பின்னடைவுதான் ஏற்பட்டு இருக்கின்றது. முன்னோக்கி நகர்கிறோம் என்ற
நம்பிக்கை ஏற்பட்ட வேளையில்,சர்வதேச சதியின் காரணமாக,இந்திய- இலங் கை அரசுகளின் கூட்டுச் சதியின் காரணமாக, ஐ.நா. மன்றம் செய்த வஞ்சகத் தின் காரணமாக ஒரு பெரும் பின்னடைவுதான் ஏற்பட்டு இருக்கின்றது. இவற் றையெல்லாம் எதிர்கொண்டு மோத வேண்டிய பொறுப்பு, உணர்வுள்ள தமிழர் களுக்கு இருக்கின்றது. அது நம்மால் முடியும்; இந்தச் சதி வலையை அறுத்து எறிய முடியும் என்ற நம்பிக்கையோடுதான் நான் இங்கே வந்து இருக்கின் றேன்.

நான் கூட்டங்களில் பேசுவது வேறு எதையும் எதிர்பார்த்து அல்ல; ஒவ்வொரு கல்லூரியின் வாயிலிலும் வந்து நின்றுகொண்டு, ஈழத்தில் இனக்கொலை;
இதயத்தில் இரத்தம் என்ற குறுந்தகடுகளை மாணவச் செல்வங்கள் இடையே வழங்கியபோது, இலட்சக் கணக்கான பிரதிகளைத் தமிழகம் முழுவதும் வழங் கியபோது, Genocide of Eelam Tamils; Hearts Bleed என்று ஆங்கிலத்திலும் அந்தக் குறுந் தகடைத் தயாரித்து, இந்தியாவின் இதர மாநிலங்களிலும் வழங்கியபோது, வேறு எந்தவிதமான அரசியல் எதிர்பார்ப்பும் எனக்கு இல்லை. ஏதாவது ஒரு
நாற்காலியில் உட்கார்ந்து விட மாட்டோமா? என்ற ஏக்கம் துளியும் எனக்கு இல்லை.

நான் பிறந்த பொன்னாடு இந்தத் தமிழ்நாடு. உலகத்தின் மூத்த குடிமக்கள் வாழ் கின்ற பழம்பெரும் நாடு. இங்கே பிறக்கின்ற பேற்றினை நான் பெற்றேன். உல கத்தின் மூத்த குடி, இந்தத் தமிழ்க்குடி. அது கதறுகிறது.உலகிலே நீதி இருக்கி றதா? என்ற கேள்வியை முன்வைக்கிறோம். இலட்சக்கணக்கான தமிழர்கள்
படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றார்கள். கொலைகார ராஜபக்சே கூட்டத் தைக் கூண்டில் நிறுத்தி, நீதியை நாம் நிலைநாட்ட வேண்டும். இனப்படுகொ லையின் கூட்டுக் குற்றவாளிகளையும் தண்டிக்க வேண்டும்.தமிழ் ஈழம் மலர வேண்டும்; அது மலரும். இதற்கு, உங்களைப் போன்ற இளம் தோழர்களை ஆயத்தப் படுத்த வேண்டும். அதற்காகத்தான் நான் ஊர் ஊராகச்சென்று கடமை ஆற்றிக் கொண்டு இருக்கின்றேன்.

எண்ணிக்கையைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். இலட்சம் பேர் வரவில்லை யே; பத்தாயிரம் பேர் கூட இல்லையே? என்று கவலைப்படாதீர்கள். வெறும் 28
பேர்களோடுதான், வன்னிக்காட்டுக்கு உள்ளே போனார் தலைவர் பிரபாகரன். இலட்சம் பேர் கொண்ட இந்தியப் படையை எதிர்த்து நின்று சரித்திரம் படைத் தார். (பலத்த கைதட்டல்).


சாட்டையடிகளும், சரித்திரச் சான்றுகளும்


இந்த நூல், நேற்று மாலையில்தான் எனக்குக் கிடைத்தது. நேற்று இரவு முழுவ தும் நான் படித்தேன்.புகழேந்தி தங்கராசைத் தவிர வேறு யாரும் இப்படி எழுத
முடியாது.அவரது எழுத்தை வெளியிட்ட தமிழக அரசியல் ஏட்டுக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன்.அச்சிட்டுப்புத்தகமாக ஆக்கி இருக்கின்ற பேட்ரிஷியா பதிப் பகத்தைப் பாராட்டுகிறேன்.

சில இடங்களில், வகையாக சாட்டையைச் சொடுக்குகிறார். பல்பொடி டப்பா வுக்குள்ளே தர்பூசணி பழத்தைத் திணிப்பதைப்போல, மார்க்சிஸ்ட் கட்சி இந்த
வேலையைச் செய்து இருக்கிறது என்று, ஒரு இடத்தில் கூறுகிறார்.ஒரு இனத் தின் வரலாறைத் தொகுத்து இருக்கிறார்.ஈழத்தின் துயரத்தைத்தொகுத்து இருக் கிறார். எடுத்த எடுப்பிலேயே, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை யை உடைத்து எறிய வேண்டும் என்கிறார்.

இந்த நூலை வெளியிடும் தகுதி அடியேனுக்கு இருப்பதாக நான் கருதுகிறேன். அந்த இயக்கத்தின் மீது தடை இருக்கின்ற காலத்தில், ‘விடுதலைப்புலிகளை
ஆதரிப்பேன்; எத்தனை ஆண்டுகள் சிறை செல்ல நேர்ந்தாலும், அல்லது என் அரசியல் வாழ்வே அழிந்தாலும் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை; தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை ஆதரிப்பேன்’ என்று, பகிரங்கமாக திருமங்க லம் தெருமுனையில் பேசினேன்; அதையே நீதிமன்றத்திலும் நீதிபதியின் முன்பு கூறி,பதிவு செய்தேன். எங்கள் மீது போடப்பட்ட அந்தப் பொடா வழக்கு இன்னமும் முடிவுக்கு வரவில்லை.ஆகவே, இந்த நூலை வெளியிடும் தகுதி எனக்கு இருப்பதாகக் கருதி, இந்த வாய்ப்பைக் கொடுத்து இருக்கின்றீர்கள்.

தடையை உடைக்க வேண்டும் என்பதற்காக, தீர்ப்பு ஆயத்துக்கு முன்னால் தொடர்ந்து போராடி இருக்கிறேன். உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய் தேன்.

நான் வழக்கறிஞனாகப் படித்தேன்.அண்ணன் இரத்தினவேல் பாண்டியன் அவர் களிடம் சிறிது காலம் பயிற்சியும் பெற்றேன்.என் மனதுக்கு நிறைவான வாதங் களை எழுப்பியது இரண்டு நேரங்களில். ஒன்று, விடுதலைப் புலிகள் இயக்கத் தின் மீதான தடையை நீக்க வேண்டும் என்பதற்காக, ஒன்றரை மணி நேரம் நான் எடுத்து வைத்த வாதங்கள்; அதைப்போல, ஸ்டெர்லைட் நச்சு ஆலையை அகற்ற வேண்டும் என்பதற்காக,உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளுக்கு முன்னால்,ஒன்றரை மணி நேரம் ஆங்கிலத்தில் எடுத்து வைத்த வாதங்கள்.


எதற்காகத் தடை?


விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டிப்பதற்காக,அரசுத் தரப் பில் என்ன காரணங்களைச் சொல்லுகிறார்கள்? 

‘விடுதலைப்புலிகள், தமிழகத் தையும் சேர்த்துத் தமிழ் ஈழம் அமைக்க வேண் டும் என்கிறார்கள்; எனவே, இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒற்றுமை
ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தை விளைவிப்பதால், விடுதலைப் புலிகள் இயக் கத்தைத் தடை செய்ய வேண்டும்’

இதுதான் மத்திய அரசின் குற்றச்சாட்டு.

இது அப்பட்டமான பொய். நான் நீதிபதியிடம் சொன்னேன்: தமிழகத்தின் ஒரு அங்குல மண்ணைக் கூட தமிழ் ஈழத்தில் சேர்க்க வேண்டும் என்று, தந்தை
செல்வா அவர்களின் பிரகடனத்திலும் இல்லை; விடுதலைப் புலிகளின் தலை வர் பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகளிலும் கிடையாது. அப்போது அவர் உரை ஆற்றுகையில், அவருக்குப் பின்னால், தமிழ் ஈழத்தின் வரைபடம் இருக்கும். அவருடைய உரைகள் அனைத்தையும் ஆங்கிலத்தில் தொகுத்து, அந்த வரைபடத்தோடு சேர்த்து, நான் நீதிமன்றத்தில் ஆவணமாகத் தாக்கல் செய்து இருக்கிறேன். அந்த வரைபடத்தில், இலங்கையின் வடக்கு, கிழக்கு
மாகாணங்கள் காட்டப்பட்டு இருக்கின்றதே தவிர , தமிழ்நாடு எங்கே இருக்கி றது? என்று கேட்டேன்.அவரது மாவீரர் நாள் உரைகளில், ஒரு வரியேனும்
சுட்டிக்காட்ட முடியுமா?

ஆகவே, அடிப்படையிலேயே இந்தத் தடை உத்தரவு தவறானது. எனவே, Unlawful Activities Prevention Act சட்டத்தின் பிரிவுகள் இந்தத் தடைக்குப் பொருந்தாது; நொறுங்கிப் போகும்.

அவர்களுடைய குற்றச்சாட்டுகள் ஒன்றும் உண்மை அல்ல. முதலில் நான் எடுத்து வைத்த வாதங்களின் விளைவாக, இந்த முறை தடையை நீடிக்கும் போது, அவர்கள் அதில் திருத்தம் செய்தார்கள்.

‘உலகில் இருக்கின்ற எல்லாத் தமிழர்களையும் சேர்த்து ஒரு நாடு அமைக்க வேண்டும் என்று அவர்கள் கேட்கிறார்கள்’ என்று ஒரு அப்பட்டமான பொய் யை இப்போது மத்திய அரசு, புதிதாக அந்த ஆவணத்தில் சேர்த்து இருக்கிறது.

முதலில் என்னுடைய மனுவைத் தள்ளுபடி செய்து தடையை நீடித்தாலும், இந்த அடிப்படையிலும் தவறு இருக்கிறது என்று, நான் மீண்டும் ஒரு ரிட் மனு தாக்கல் செய்து இருக்கிறேன்.

தொடரும் ....

No comments:

Post a Comment