Thursday, October 10, 2013

மறுமலர்ச்சி பயணம் தூத்துக்குடி மாவட்டம் -2–வது கட்டம்

காங்கிரஸ் கட்சிக்கு நேரடியாகவோ,மறைமுகமாகவோ ஆதரவளிக்கும் எந்த கட்சிக்கு மதிமுக ஆதரவு கிடையாது என #மதிமுக பொதுச்செயலர் #வைகோ கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு ஒன்றியத்தில் ம.தி.மு.க மாவட் டச் செயலர் ஜோயல் தலைமையில், மக்களைச் சந்திக்கும் மறுமலர்ச்சிப் பயணத்தை அன்னை தெரசா நகரில் நேற்று (09.10.13) புதன்கிழமை தொடங்கிய வைகோ அங்கு பேசியதாவது: 
மக்களுக்காகவும், மக்கள் பிரச்னைகளுக்காகவும் முல்லைத் தீவு, இலங்கை பிரச்னை, நதிநீர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காக மதிமுக போராடி வருகிறது.

mdmk_vaiko_kovilpattiநான் எம்.பி.யாக இருந்த போது, 68 ஆயிரம் பேருக்கு மஞ்சள்க்காமாலை தடுப் பூசி, 25 ஆயிரம் உடல் ஊனமுற்றோருக்கு உபகரணங்கள் அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை வழங்கினோம். மதுவை ஒழிக்க வலியுறுத்தி சுமார் 1,200 கி.மீ. நடைப்பயணத்தை மேற்கொண்டேன். தமிழர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு கேடு விளைவித்த காங்கிரஸ் அரசை தேர்தலில் மக்கள் தூக்கி எறிய வேண்டும்.

காங்கிரஸ் கட்சிக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவளிக்கும் எந்த கட்சிக்கு மதிமுக ஆதரவு கிடையாது. வருகின்ற தேர்தலில் வாக்களிக்கும் போது சிந்தித்து வாக்களியுங்கள் என்றார் அவர். தொடர்ந்து, மந்தித்தோப்பு, ஊத்துப்பட்டி, இடைசெவல், வில்லிசேரி, சத்திரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மறுமலர்ச்சிப் பயணத்தை மேற்கொண்டார்.

இதில், கோவில்பட்டி நகர மதிமுக செயலர் ஆர்.எஸ்.ரமேஷ், மாவட்ட இளை ஞரணிச் செயலர் விநாயகா ஜி.ரமேஷ், ஒன்றியச் செயலர்கள் பவுன்மாரியப் பன், சிவக்குமார், மதிமுக கட்சியைச் சேர்ந்த பால்ராஜ், முத்துசெல்வம், நகர் மன்ற உறுப்பினர்கள் தெய்வேந்திரன், சரவணன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment