Saturday, October 12, 2013

களப்பணி ஆற்றுவோம்; காங்கிரசை அகற்றுவோம்!-பகுதி 1

களப்பணி ஆற்றுவோம்; காங்கிரசை அகற்றுவோம்! தமிழ்ச் சமுதாயத் தின் நலன் காப்போம்! 

மதுரை மாநாட்டில் தமிழருவி மணியன் பேச்சு காந்திய மக்கள் இயக்கத்தின்
நான்காம் ஆண்டுத் தொடக்க விழாவையொட்டி, 02.10.2013 அன்று மதுரையில் அரசியல் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவிமணியன் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

வணக்கத்திற்குரிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுச்செயலாளரும், 2016 இல் நடக்க இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில்
மக்களின் பேராதரவோடு பெரு வெற்றியைப் பெற்று, கோட்டையில் முதல்வ ராக வீற்றிருக்கக்கூடிய வாய்ப்பு உள்ள, நெறிசார்ந்த தூய்மையான அகத்திலும் புறத்திலும் எந்தக் களங்கமும் இல்லாத, எந்த மனிதனாலும் எதைக் கொடுத் தும் விலைக்கு வாங்க முடியாத, யாருக்கும் தரகுவேலை பார்க்க வேண்டிய அவசியமே இல்லாத, வைகோ அவர்கள் உள்ளிட்ட இந்த அவையை வணங்கி மகிழ்கிறேன்.

உரிமைக்குரல் முழங்கும்


நண்பர்களே, காந்திய மக்கள் இயக்கத்தின் நான்காம் ஆண்டுத் தொடக்கவிழா வில் வேறு யாரையும் அழைக்கவில்லை.தமிழ்நாட்டில் தலைவர்களுக்கா பஞ் சம்? தலை உள்ளவர்கள் எல்லாம் இங்கே தலைவர்கள்தான். ஆனால், அத்த னை பேரிலும் ஒவ்வொருவரையும் நாங்கள் விலக்கி வைத்துவிட்டு, தமிழகத் தில் இன்றைக்கு நெறிசார்ந்த அரசியலை, போர்க்குணத்தோடு மக்கள் நல னுக் காக நடத்திக்கொண்டிருக்கின்ற வைகோ வரட்டும். அவர் ஒருவர் வந்தால் போதும், ஒட்டு மொத்தத் தமிழர் சாதியினுடைய உரிமைக்குரலும் இங்கே முழங்கும் என்ற அடிப்படையில், அவரை மட்டும் நாங்கள் அழைத்திருக் கிறோம்.

காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில்,நான் ஒரு பகிரங்கமான வாக்கு மூலத் திற்குத்தான் இந்த மேடையைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். ஊசி விழுந்தாலும் ஓசை எழுவது போன்ற ஒரு மெளனமான நிலையில் நீங்கள் இதை உள்வாங்க வேண்டும் என்று யாசிக்கிறேன். நண்பர்களே,காந்திய மக் கள் இயக்கம் என்பது அரசியல் இல்லை. காந்திய மக்கள் இயக்கம் என்பது தேர் தலில் நின்று வெற்றி பெற்று பதவி நாற்காலியை அலங்கரிக்க வேண்டும் என் பதற்காக உருவாக்கப்பட்டதும் இல்லை.

ஆனால், இது காந்திய மக்கள் இயக்கம்.அரசியல் களத்திலே இருந்து காந்தியடி கள் தனித்து விலகி நின்றவர் இல்லை. வெறும் சமூக சீர்திருத்தங்களை மட்டு மே முன்னெடுத்துச் சென்ற மனிதன் இல்லை காந்தி.

காந்தி என்கின்ற நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒரு பக்கம் வெள் ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, இந்த தேசத்திற்கு சுதந்திரக் காற்று வந்து வீசு கிறாற்போல், வாசல் கதவுகளைத் திறந்து வைப்பதற்காக நடத்திய வேள்வி.
நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். காந்தியடிகளுடைய நெடிய அரசியல்
பயணத்தில், அவர் நடத்திய மாபெரும் போராட்டங்கள் மூன்று. 1920, 21 இல்,
அவர் நடத்திய ஒத்துழையாமை இயக்கம். அதற்குப் பின்னர் அவர் நடத்திய பிரம்மாண்டமான போராட்டம் என்பது பத்தாண்டு கால இடைவெளிக்குப் பிறகுதான்.

1930, 31 இல், சட்ட மறுப்பு இயக்கம்.அதற்குப் பிறகு பத்தாண்டு காலம் கடந்து 1941 இல், தனிநபர் சத்தியா கிரகத்தை நடத்தினார், 1942 இல், வெள்ளையனே வெளியேறு என்கிற ஆகஸ்டு புரட்சியை உருவாக்கினார்.1947 இல் நாடு விடு தலை பெற்றது.பத்து ஆண்டு களுக்கு ஒருமுறைதான் அவர் வெள்ளையனுக் கு எதிராகப் போராடி இருக்கிறார். அது அரசியல் போராட்டம்.

இடைப்பட்ட பத்தாண்டுகளில் இளைப் பாறினாரா? இடைப்பட்ட பத்து ஆண்டு
களில் ஓய்வு பெற்றாரா? இடைப்பட்ட பத்து ஆண்டுகளில் எந்த செயலிலும்
ஈடுபடாமல் தனித்துத் துறவியைப் போல் இருந்தாரா? இல்லை. ஒவ்வொரு
பத்தாண்டுகால இடைவெளியிலும் இந்தச் சமுதாயத்தைச் சீர்திருத்துகின்ற
பணியிலே அவர் முனைந்தார். கிராமப் பொருளாதாரத்தை முன்னேற்றுவ தற்கு வழி என்ன? தீண்டாமையை அறவே இந்த மண்ணிலே இருந்து அகற்று
வதற்கு வழி என்ன? இந்துவும், முஸ்லிமும், பிற சமயங்களைச் சார்ந்தவர்
களும் இணக்கமாக இதயம் இணைந்தும் பிணைந்தும் வாழ்வதற்கான வழி என்ன? இவற்றிற்காகவே ஒவ்வொரு பத்தாண்டு கால இடைவெளியிலும், சமூகத் தளங்களில் இயங்கினார்.


காந்திய மக்கள் இயக்கப் பணி


எனவே காந்தியம் என்பது இரண்டு பக்கங்களைக் கொண்டது.ஒரு பக்கம் அரசி யல் பணி, இன்னொரு பக்கம் சமுதாயப் பணி.தமிழ்நாட்டில் எத்தனையோ காந் திய அமைப்புகள் இருக்கின்றன. எத்தனையோ சர்வோதய சங்கங்கள் இருக் கின்றன. ஆனால்,இந்த காந்திய அமைப்புகளும்,சர்வோதய சங்கங்களும் மதுக் கடைகளை மூடுவது நல்லது என்று சொல்லும். மதுக்கடை களை வீதிதோறும் திறந்து வைத்து இருக்கிற அரசுக்கு எதிராக ஒரு குரலைக் கூட அது எழுப்பாது. அரசின் தவறுகளைச் சொல்லக்கூடிய அளவுக்கு இன்றைக்கு காந்தியவாதிகள் தமிழ் நாட்டிலே இல்லை. இது நடந்தால் நல்லது. இதைச் செய்தால் நல்லது.
இதை காந்தியடிகள் சொன்னார்.காந்தியடிகளைப் பொறுத்தவரையில், ஒரு பக்கம் சமூகப்பணியையும் இன்னொரு பக்கம் அரசியல் களத்தில் பேராண்மை யோடு அவர் ஆற்றிய பணியையும் நான் உங்களிடம் சொன்னேன். இன்றைக் குத் தமிழ் நாட்டில் அந்த வேலையை ஒழுங்காகச் செய்துகொண்டிருக்கின்ற ஒரு இயக்கம் உண்டு என்றால், அது காந்திய மக்கள் இயக்கம் என்பதைத்தெளி வாக என்னால் சொல்ல முடியும்.

ஒரு பக்கம் மதுவுக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். இன்னொரு பக்கம்
தீண்டாமை எதிர்ப்புக்கு எதிராகப் போராடுகிறோம். ஒரு பக்கம் தலித்துகள்
சமுதாயத்தில் மேல்நிலைக்கு வர வேண்டும் என்று போராடுகிறோம்.

ஒரு பக்கம் இந்துவும்-முஸ்லிமும்-கிறித்து வரும், பிற சமயங்களைச் சார்ந்த வர்களும் இணக்கமாகவும்,சமஉரிமையும், சம வாய்ப்பும் பெற்று வாழ வேண் டும் என்பதற்காகப் போராடுவோம்.

அதே நேரத்தில், எந்த மனிதர் அல்லது பெண்மணி அதிகார நாற்காலியில் அமர்ந்தாலும் அவர்கள் செய்யக்கூடிய தவறுகளை தருகண் ஆண்மையோடு
சுட்டிக்காட்டுவோம். யாருக்கும் அஞ்சக்கூடியவர்கள் காந்திய மக்கள் இயக்கத் தில் இல்லை. யாருக்கும் விலை போகக்கூடிய அளவுக்கு மலினமான மனிதர் களும் இங்கே இல்லை.யாருக்கும் புரோக்கர் வேலை செய்ய வேண்டிய தரம் தாழ்ந்தவர்களும் இங்கே இல்லை. நான் உங்களிடம் இதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.


தவறாக அறியப்பட்ட காந்தி


ஒரு மாற்று அரசியல் இந்த மண்ணில் மலர வேண்டும் என்ற ஆசை எனக்கு
இருக்கிறது. மகாத்மா காந்தி அவர்களை இந்த மண் அவர் வாழ்ந்த காலத்திலே யே சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.மகாத்மாகாந்தி 1948 ஆம் ஆண்டு ஜன வரி மாதம் 30 ஆம் நாள் கோட்சே என்கிற ஒரு மாபாதகனால் கொலை செய் யப்பட்டார் என்பதை அடுத்தவர் சொல்லி அறியக்கூடிய நிலையில் வரலாற்று ஞானம் இல்லாதவன் இல்லை நான். கோட்சே தான் கொன்றான்.நண்பர்களே, ஒன்று புரிந்து கொள்ளுங்கள். தான் வாழ்ந்த காலத்திலேயே தவறாக அறிப் பட்ட ஒரு ஆத்மா உண்டு என்றால், அது காந்தியடிகள்தான். காந்தியடிகளை
கோட்சே கொன்றான். விசாரணை நடக்கிறது. கோட்சேயின் வாக்கு மூலத் தைப் படித்துப்பாருங்கள்.

கோட்சே சொல்கிறான், “மகாத்மா காந்தியை மகாத்மா என்று நான் ஒப்புக் கொள்கிறேன். தன்னலமற்ற ஒரு துறவி காந்தி என்பதை நான் தலைவணக்கத்
தோடு ஒப்புக்கொள்கிறேன். சுயநலமே இல்லாத ஒரு அரசியல் தலைவன் இந்த மனிதன் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனாலும் இந்த மனிதரை நான் கொன்றேன். கொன்றதற்காக நான் இன்றுவரை வருத்தப்படவில்லை.
தூக்கில் தொங்குவதற்கும் நான் தயாராக இருக்கிறேன். மன்னிப்புக் கேட்க தயாராக இல்லை. ஒரு இந்துவாக இருக்கிற நான், ஒரு இந்துவாகப் பிறந்த காந்தி எங்களுக்கு ஆதரவாக இல்லாமல், இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக
இருக்கிறார் என்றான்.

இஸ்லாமியர்கள் காந்தியை எப்படிப் பார்த்தார்கள் என்ற இன்னொரு பக்கத்தை யும் நாம் பார்க்க வேண்டும்.முகமது அலி ஜின்னா காந்திக்குத் தரவேண்டிய மரியாதையைத் தந்தாரா? கடைசிவரை காந்தியை ஒரு வெறி பிடித்த இந்துவா கவே அவர் சித்தரித்தார்.ஆக இஸ்லாமியர்கள் பார்வையில் மகாத்மா காந்தி இந்துவாகவே தெரிந்தார்.இந்துகளின் வெறிபிடித்த பார்வையில் மகாத்மா காந்தி இஸ்லாமியர்களின் ஆதரவாளராகவே தெரிந்தார்.இதைவிட கொடுமை வேறு ஏதாவது உண்டா?

தலித்துகளுக்காகப் பாடுபட்டு,தீண்டாமையை ஒழிப்பதற்கு வேள்வி நடத்திய, தன்னுடைய பத்திரிகை யங் இந்தியாவை அரிஜன் என்று பெயர் மாற்றி நடத்தி யது சனாதனத்துக்கு எதிரானது. நண்பர்களே சனாதனக் கூட்டத்தினருக்கு எதி ராக வெளியே இருந்து போராடிய பெரியார் ஒரு பக்கம், சனாதனத்தின் இடை யில் இருந்து கொண்டு, உயர்சாதிக்காரர்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டே, தீண்டாமையை அவர்கள் மனதில் இருந்து அகற்றுவதற்கு உழைத் தார் காந்தி. அவரை உயர் சாதி இந்துகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. பூனா
ஒப்பந்தத்தைத் தவறாகச் சொல்லி,தலித்துகளும் ஏற்றுக்கொள்ளவில்லை.
எனவே, காந்தி எல்லா வகையிலும் தவறாக அறியப்பட்ட மனிதர். ஆனாலும்
காந்தி இந்த மண் இருக்கிற வரை இருப்பார். காந்தியே இப்படி தவறாக அறியப் பட்டார் என்றால், சாதாரண தமிழருவி மணியன் தவறாக அறியப் படுவதில் எந்தவிதமான ஆச்சரியத்துக்கும் இடமே இல்லை.


மனிதம் சார்ந்து இயங்குபவர்


இந்த நாள் ஒரு புனித நாள்.முதலில் அதைச்சிந்தியுங்கள்.ஏன் மாற்று அரசியல் மலர வேண்டும்? யாருக்கும் பல்லக்குத் தூக்கி வாழ வேண்டும் என்கிற அவசி யம் எங்களுக்கு சாகும் வரை இருக்காது. இந்தத் தோள்களில் நான் வைகோ வைத் தூக்கி உட்கார வைத்து பல்லக்குத் தூக்கி சுமக்க வேண்டும் என்கிற கட் டளை கிடையாதே. ஆனால், வைகோ வைகோ என்று சொல்கிறேனே! எனக்கு என்ன ஆதாயம்? எத்தனையோ தலைவர்கள் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். எங்களையெல்லாம் விட்டுவிட்டு எதற்காக வைகோவைப் பற்றிப் பேசுகிறீர் கள்? என்று ஒரு தலைவர் என்னிடம் நேரிடையாகவே கேட்டார். வைகோவை
விட வாக்கு வங்கி எனக்கு அதிகமாக இருக்கிறதே! நான் மாற்றத்தை உரு வாக்கிக் காட்டமாட்டேனா? ஏன் என்னை நீங்கள் ஆதரிக்கக் கூடாது? என்றார்.

நான் சொன்னேன், வைகோ ஒரு நாளும்,ஒரு மேடையிலும் பேச்சிலும், எழுத் திலும் சாதி சார்ந்து எதையும் சொன்னது கிடையாது. மதம் சார்ந்து எதையும் சொன்னது கிடையாது. மனிதம் சார்ந்து இயங்குகிற தலைவராக, தமிழ் இனம் சார்ந்து போராடுகிற போராளியாக தன்னைக் காட்டுகிற ஒரு காரணத்தினால் ஆராதிக்கிறேன்.இன்றைய அரசியல் உலகத்தில் திறமையானவர்கள் நிறை யப் பேர் இருக்கிறார்கள். கருணாநிதியைவிட திறமையாளன் ஒருவன் இல் லை.கருணாநிதியிடம் திறமை இருக்கிறது. அதில் இரண்டு கருத்துக்கு இடமே
இல்லை. நேர்மை இருக்கிறதா?என்பதுதான் கேள்வி. தூய்மை இருக்கிறதா? என்பதுதான் கேள்வி.நேர்மையும், தூய்மையும் உடைய ஒரு தலைவன் எங் கே? ஊழல் கறை படியாத ஒரு மனிதன் எங்கே? தேடுகிறேன் நான். என் தேட லில் கிடைத்த மனிதன் வைகோ.

வந்த பொழுது இங்கேயும் பார்த்தேன்.தமிழருவி தாலாட்டும் தமிழினக் காவல ரே வருக! வருக! என்று போடுவதற்கு பதிலாக, தமிழருவி தாழாட்டும் தமிழி னக் காவலரே வருக! வருக! என்று போட்டிருக்கிறார்களே என்று பார்த்தால், அர்த்த அடர்த்தியோடு செய்திருக்கிறார்கள்.வைகோ அந்த கோட்டை நாற்கா லியில் போய் அமர்வதற்கு இடையில் தடுப்பாக இருக்கிற அந்தக் கதவின் தாழை ஆட்டி ஆட்டித் திறப்பதற்காகவே இந்தத் தமிழருவி இருக்கிறான் என் பதைத்தான் அதில் சூசகமாகச் சொல்கிறார்கள்.

நண்பர்களே, இந்த வைகோவிடம் எனக்கு ஆகவேண்டியது ஒன்றுமே கிடை யாது. எந்த மனிதரிடமும் ஆகப்போவது ஒன்றும் கிடையாது. ஓராண்டுக் காலம் கருணாநிதிக்கு எதிராகத் தொடர்ந்து யுத்தத்தை நான் நடத்தினேனே, என் எழுத்திலும்,பேச்சிலும். அதன் மூலம் பயன்பெற்றது யார்? ஜெயலலிதா. அண்ணா தி.மு.க.மந்திரியில் இருந்து கடைநிலை ஊழியன் வரை அந்தக் கட்சி யில் இருக்கிற அனைவரும் இன்றைக்குப் பயன் பெற்றிருக்கிறார்கள். அவர் கள் பெற்று இருக்கக்கூடிய பயனுக்கு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து இருக்கக் கூடியவர்களில் தமிழருவி மணியனும் ஒரு காரணம் என்பதற்காக போயஸ் தோட்டத்தின் கதவுகளைப் போய் தட்டிப் பல் இளிக்கக்கூடிய பிறவி நான் இல்லை.எந்த அமைச்சருடைய அலுவலகத்திற்கு முன்னாலும் இன்று போய் விண்ணப் பம் கொடுக்கக்கூடிய நிலையில் நான் இல்லை.

என் நாற்பதாண்டுக் காலத்திற்கு மேற்பட்ட பொதுவாழ்வில், ஒரே ஒரு காரி யத்திற்குக்கூட ஒருவரிடமும் சென்று நிற்காத கம்பீரம் எனக்கு இருக்கிறது. எனவே, வைகோவை என் நலத்திற்காக, காந்திய மக்கள் இயக்கத்தின் நலனுக் காக நான் பார்க்க வில்லை.எனக்கு நேர்மையும் தூய்மையும் உள்ள ஒரு தலை மை வேண்டும்.

பொற்கால ஆட்சி தந்தவர்

நான் மாநிலக் கல்லூரியில் படித்தபோது,காமராஜர் காலடியில் அரசியலைத்
தொடங்கினேன். இன்று காமராஜர் நினைவு நாள். காந்தி பிறந்த நாள்.எத்தனை ஊடகங்களில் காமராஜரையும் காந்தியையும் காட்டுகிறார்கள். நண்பர்களே காந்தியத்தைப் பேசி,காந்தியத்தின்படியே வாழ்ந்து, காந்தி பிறந்த நாளிலேயே கண்மூடிய அத்வைதி காமராஜ். 15 ஆண்டுக்காலம் சட்டமன்ற உறுப்பினர். 12 ஆண்டுக் காலம் நாடாளுமன்ற உறுப்பினர். 9 ஆண்டுகாலம் தமிழகத்தில் ஒரு
பொற்கால ஆட்சியைத்தந்த முதலமைச்சர்.14 ஆண்டுக் காலம் சுதந்திரம் பெறு வதற்கு முன்பு தொடங்கி பின்பு வரையில் தமிழ்நாடு காங்கிரசின் தனிப்பெரும் தலைவர். ஐந்தாண்டுக் காலம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் இரண்டு முறை தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு,இரண்டு பிரதமர்களை உருவாக் கிய ஒரே தமிழன்.

இவ்வளவு பெருமைக்குரியவர். பத்து வேட்டி, பத்து சட்டை, 63 ரூபாய் சொத்து
என்று வைத்துவிட்டுப் போனாரே?அவரிடம் அரசியல் கற்ற நான் அது போன்ற ஒரு மனிதனைத் தேட வேண்டாமா? அந்தப் பொறுப்பு எனக்கு இல்லையா? பெருந்தலைவர் காமராஜரைப் போல் ஒரு மனிதனைத் தேடுகிறேன். வைகோ அவர்கள் பெரியாரைப் பார்த்துவிட்டு அரசியலுக்கு வந்தார். அண்ணாவின் தொண்டராக அவர் அரசியலுக்கு வந்தார். அண்ணா முதலமைச்சராக இருந்த பொழுது வாரிசு அரசியலை வளர்த்தாரா? அண்ணா முதலமைச்சராக இருந்த பொழுது அதிகார நாற்காலியைப் பயன் படுத்தி ஒரு செப்புக் காசை யாவது ஊழல் செய்து சம்பாதித்தார் என்று எவராலும் சொல்ல முடியுமா? அந்த எளி மை, அந்த நேர்மை, அந்தத் தூய்மை இன்றைக்கு தமிழ்நாட்டு அரசியலில் எங் கே? என் விழிகள் எல்லா திசைகளிலும் தேடிப் பார்க்கிறபொழுது, ஒரு தனி மனிதன் கிடைத்தான். அதனால் அவனைத் தூக்குகிறேன்.

மாற்று அரசியல் என்பது என்ன? எனது அன்புக்கு இனிய சிறுபான்மை இயக்கத் தைச் சார்ந்தவர்கள் மற்றும் பெரும்பான்மை மக்கள் அத்துணை பேரும் கொஞ் சம் காதுகொடுத்துக் கேளுங்கள். பாபர் மசூதி இடிக்கப்பட்ட பொழுது இந்தத் தமிழ்நாடு முழுவதும் இடதுசாரிகள், தமுஎச என்று வைத்து இருக்கக்கூடிய, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய எல்லா கூட்டங்களிலும் மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளாரும், நானும்தான் பேசினோம். ஒரு இடம் விடாமல் தமிழகம் முழுவதும் பேசினோம். பாபர் மசூதி இடித்ததை தமிழ ருவி மணியன் ஆதரிக்கிறானா? பாபர் மசூதி இடித்ததை வைகோ ஆதரிக்கி றாரா? யார் ஆதரிக்கிறார்கள்? பாரதிய ஜனதா கட்சியும், ம.தி.மு.க.வும், தே.மு. தி.க.வும் ஒரு கூட்டணி அமைக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். இன்னும் வைகோவிடம் இருந்து அதற்கு முழு சம்மதம் வரவில்லை. விஜய காந்திடம் இருந்து முழுமையாக சம்மதம் வர வில்லை. பாரதிய ஜனதா கட்சி
என்னிடம் வந்து இன்னும் முழுமையாக நிற்கவில்லை. ஜெயலலிதாவினுடை யை போயஸ் தோட்டத்துக் கதவு கொஞ்சமாவது திறக்காதா? என்று தான் பாரதிய ஜனதா கட்சி இன்னமும் தவம் இருக்கிறது. அந்தக் கதவு முற்றிலும் மூடப்பட்டுவிட்டது என்ற செய்தி கிடைத்த பிறகுதான் வேறு பக்கமே முகம் திருப்புவார்கள். அரசியல் அறியாதவனா நான்?


மாற்று அணி அமைய வேண்டும்!


எனக்கு என்ன பாரதிய ஜனதா கட்சியின் மீது காதல். இடதுசாரிகளின் தலை மையின் கீழ் இதுமாதிரி ஒரு மாற்று அரசியல் மலர வேண்டும் என்று நான்
நினைக்கிறேன். இன்று காந்திய மக்கள் இயக்கத்தினுடைய நான்காவது ஆண் டு விழாவைக் கொண்டாடுகிறோம். காந்திய மக்கள் இயக்கத்தின் மூன்றா வது ஆண்டுத் தொடக்க விழாவில் மாற்று அரசியலுக்கான அடித்தளத்தை
இப்பொழுதே அமைக்க வேண்டும் என்று சொல்லி, இடதுசாரிகளுடைய தலை மையில் அந்த மாற்றம் நிகழ வேண்டும் என்று சொல்லி, நான் ஜி.இராமகிருஷ் ணனிடம் போய் மண்டியிடவில்லையா? தா.பாண்டியனிடம் போய்ப் பேசவில் லையா? தோழர் நல்லகண்ணுவிடம் போய் திரும்பத் திரும்ப நான்  வற்புறுத்த வில்லையா? வைகோவிடம் போய் நான் கேட்கவில்லையா? திருப்பூரில் பிரம் மாண்டாக கூடிய மக்கள் கடலில் இப்படி ஒரு அணி அமையுமா? இடதுசாரி களும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் முதலில் ஒரு அணி அமைக்கட்டும்.

நான் அங்கே தெளிவாகச் சொன்னேன்.தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில்,
இடதுசாரிகளாக இருக்கிற நீங்கள் ஆட்சி நாற்காலிக்கே வரவில்லை. எனவே
உங்கள் கரங்கள் களங்கப்படவில்லை.வைகோ ஆட்சி நாற்காலிக்கு வர வில் லை. எனவே அவருடைய கரமும் களங்கப்படவில்லை. களங்கம் நிறைந்த
ஊழல் மலிந்த இந்த இரண்டு திராவிடக் கட்சிகளைத் தூக்கி எறிய வேண்டும்
என்றால், ஊழலற்ற ஒரு மாற்று அணி அமைய வேண்டும். அதற்கு இதுவரை
ஊழல் செய்யாத நீங்கள் முதலில் ஒரு அணியில் நில்லுங்கள் என்றேன். ஒரு
மேடையில் இந்த மூன்றுபேரைக் கொண்டுவந்து நிறுத்துவதற்கு நான் எவ்வ ளவு முயன்றேன் தெரியுமா? எனக்கு என்ன ஆதாயம்? ஒவ்வொரு வருடைய அலுவலகத்திற்கும் சென்று மண்டியிடவேண்டிய அவசியம் எனக்கு என்ன? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமை அலுவலகத்திலே போய் உட்கார்ந்து கொண்டு ஜி.ராமகிருஷ்ணனிடம் நான் பேசவில்லை?சி.பி.ஐ. தலைமை அலுவ லகத்திலே போய் உட்கார்ந்துகொண்டு நல்லகண்ணு அய்யாவிடமும், தா.பா. விடமும் நான் பேசவில்லை? தாயகத்திலே போய் அமர்ந்து வைகோ அவர்க ளிடம் போய் நான் மன்றாடவில்லை?

தொடரும் ....

No comments:

Post a Comment