Saturday, October 19, 2013

தமிழர்களின் வாழ்வுரிமைக்காகப் பாடுபடும் ஒரே இயக்கம்

தமிழர்களின் வாழ்வுரிமைக்காகப் பாடுபடும் ஒரே இயக்கம் மறுமலர்ச்சி தி.மு. க. மட்டுமே!

- விருதுநகர் மாநாட்டில் துரை.பாலகிருஷ்ணன்

பேரறிஞர் அண்ணாவின் 105 ஆவது பிறந்தநாளையொட்டி,செப்டம்பர் 15அன்று விருதுநகரில் நடைபெற்ற கழக மாநாட்டில்,துணைப் பொதுச் செயலாளர்
துரை.பாலகிருஷ்ணன் துரை.பாலகிருஷ்ணன் ஆற்றிய உரை...

எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டு இருக்கிற பேரறிஞர் அண்ணாவின் 105
ஆவது பிறந்தநாள் மாநாட்டின் தலைவர்,கழகத்தின் உயர்மட்டக்குழு உறுப்பி னரும், இமயம் தொலைக்காட்சி நிறுவனருமான மதிப்புக்குரிய ஜெபராஜ்
அவர்களே, தமிழகத்தில் உங்களால் மட்டும்தான் இப்படி மாநாட்டைக் கூட்ட
முடியும் என்று எடுத்துக் காட்டுகின்ற வகையிலே சிறப்பான மாநாட்டை ஏற் பாடு செய்து இறுதியாக பேருரை ஆற்ற இருக்கின்ற வணக்கத்திற்குரிய அண் ணன் அவர்களே, வரவேற்புரை ஆற்றிய மாவட்டச் செயலாளர் ஆர்.எம்.எஸ். அவர்களே, மரியாதைக்கு உரிய கழகத்தின் கொடியினை ஏற்றி வைத்து உரை நிகழ்த்தி அமர்ந்து இருக்கின்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அவர் களே,அண்ணாவின் சுடர் ஏற்றி உரை நிகழ்த்தி அமர்ந்து இருக்கின்ற முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அன்புச் சகோதரர் சதன் திருமலைக்குமார் அவர் களே,மாநாட்டைத் திறந்து வைத்து, உரை நிகழ்த்தி அமர்ந்திருக்கின்ற ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் புலவர் செவந்தியப்பன் அவர்களே, பேரன் பிற்கும் மரியாதைக்கு உரிய அவைத்தலைவர் அவர்களே, மரியாதைக்கு உரிய அண் ணன் பொருளாளர் அவர்களே,துணைப் பொதுச் செயலாளர்கள் நாசரேத் துரை அவர்களே, மல்லை சத்யா அவர்களே, உரை ஆற்றி அமர்ந்து இருக்கின்ற கழ கத்தின் முன்னோடிகளே,நிர்வாகிகளே, சான்றோர்களே, வணக்கம்.

இருபது ஆண்டுகாலம் இந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்கிற நிலையில் கொள்கைக்காகவும்,கழகத்தின் தலைவராக இருக்கக்கூடிய அண்ணன் மதிப்புமிக்க பொதுச் செயலாளருக்காக வும் இந்த இயக்கத்தில் தமிழகத்தை வழிநடத்தி செல்லக்கூடிய ஆற்றல் மிக்க தலைவர் இவர்தான் என்று தமிழகமே உணர்கின்ற வகையிலே இந்த மாநாட் டில் கலந்து கொண்டிருக்கிற அத்தனைபேருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுச்செயலாளர் அவர்கள் இன்றைக்கு ஏதாவது அறிவிப்பு வெளியிடக் கூடும் என்று சிலபேர் வந்திருக்கிறார்கள். கரூர் மாநாடு முடிந்த பிறகு அனை வரும் சாஞ்சிக்கு செல்ல ஏற்பாடு செய்து இருந்தார்கள். என்னால் அனைவரு டனும் பேருந்தில் வர இயல வில்லை. நான் புகைவண்டியில் சென்றேன்.

ஒரு மாநிலத்தைவிட்டு அடுத்த மாநிலத்திற்கு சென்று, மறியல் போராட்டம் நடத்தி, தமிழகத்தில் இருந்து ஒரு தலைவர் வந்திருக்கிறார்.அனைத்து வடக் கே இருக்கும் மாநிலத்தவரும் உணருகின்ற வகையிலே நடைபெற்ற போராட் டம் சாஞ்சி போராட்டம். ஆளுகின்ற கட்சியும், ஆண்ட கட்சியும் மக்கள் நலன் கருதி,விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்று எண்ணி யாராவது ஆர்ப்பாட் டம்,போராட்டம் நடத்தி இருக்கிறார்களா? இல்லை. அவர்கள் நடத்தினால் அது
வேறு விதமாகிவிடும். இங்கு நடைபெறும் மாநாடு மாதிரி யாராவது மாநாட் டை நடத்திட முடியுமா? நடத்துவார்கள் எத்தனையோ கோடி செலவுபண்ணு வார்கள். எல்லாம் மக்கள் பணத்தை வைத்துதான் செலவிடுகிறார்கள்.

நாம் மக்களுக்காக உழைக்கிறோம்.விவசாயிகளின் பிரச்சினைகளைஇத்தனை வருடத்தில் யாராவது ஏறெடுத்துப் பார்த்திருக்கிறார்களா? தஞ்சையிலே ஐந்து முறை,பூம்புகாரில் இருந்து கல்லணை வரை ஆறு நாட்கள் அனைத்து துன்பங் களையும் கடந்து வந்திருக்கிறோம். உரம் கிடைக்க வில்லை,மின்சாரம் தட்டுப் பாடு என்ற போது தஞ்சையிலே உண்ணாவிரதம்,ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கி றோம்.



அத்தனை நிகழ்வுகளும் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக பாடுபட்டுக் கொண்டு
இருக்கிற ஒரே இயக்கம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்
தான். இந்த மாநாட்டில் இலட்சக் கணக்கானவர்கள் திரண்டிருக்கிறார்கள் என் றால் அவர்கள் தங்களுடைய பணத்தை செலவழித்து இங்கே வந்திருக்கிறார் கள்.

இந்த மாநாடு தமிழ்நாட்டில் ஒரு மாபெரும் ஒரு எழுச்சியை ஏற்படுத்தி இருக் கிறது. வரும் தேர்தலில் தலைவர் அவர்களின் வியூகத்தைப் பின்பற்றி கழகத் தை வெற்றி பெறச் செய்வதில் நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும் என் றும் அண்ணன் கரத்தை வலுப் படுத்துவோம். அவரது வழியைப் பின்பற்று வோம் என்றும் கூறி  விடைபெறுகிறேன்.

துரை.பாலகிருஷ்ணன் இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment