அனைத்துத் தரப்பு மக்களும் அண்ணன் தம்பிகளாக, ஒற்றுமையுடன் வாழும் கயத்தாறுக்கு ஏன் இத்தனைக் கட்டுப்பாடுகள்?
வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள் விழாவில் #வைகோ கேள்வி
பாஞ்சைப் பெருவேந்தன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 214 வது நினைவேந் தல் நிகழ்ச்சி அவர் தூக்கிலிடப்பட்ட கயத்தாறில் 16.10.2013 அன்று நடைபெற் றது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டு #மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய வீர உரை வருமாறு:
ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு
அஞ்ச வேண்டாமடா பாஞ்சையரே
என்று இந்த நாட்டின் அடிமை விலங்குகளை உடைப்பதற்காக பிரிட்டிஷ் கும் பினிப் படைகளின் துப்பாக்கிகளுக்கும் பீரங்கிகளுக்கும் அஞ்சாது வீரச்சமர் புரிந்த கட்டபொம்மனை இன்றைக்கே தூக்கில் இட்டு விட வேண்டும் என்று நடுப்பகல் ஒரு மணி அளவில் மேஜர் பானர்மேன் கட்டளை பிறப்பித்துவிட்டு, அவனும் வெள்ளை அதிகாரிகளும் சென்றதற்குப் பின்னர், அடிமைகளாகி விட் ட சில பாளையக்காரர்களும், பிரிட்டிஷ் கும்பினிப் பட்டாளத்து வீரர்களும் சூழ்ந்திருக்க, ஆதவன் மேற்கே சாய்ந்து கொண்டு இருந்தவேளையில்,
எந்த இடத்தில் தற்காலிகமாக அமைக்கப் பட்ட ஐந்து படிக்கட்டுகள் கொண்ட ஏணி மீது ஏறி நின்று, அங்கே இருந்த ஒரு கட்டைப் புளியமரத்தில் கட்டித்
தொங்க விடப்பட்டு இருந்த கயிற்றுக்கு உள்ளே தன் தலையை நுழைத்துக்
கழுத்தில் மாட்டிக்கொண்டு,அடிவயிற்றில் இருந்து பீறிட்டு வந்த குரலில் ‘ஓ முருகக் கடவுளே’ என்று கர்ஜனை புரிந்தவாறு, அந்த ஏணியைத் தன் காலால் எட்டி உதைத்து எந்த இடத்தில் ஆவியைத்தந்தாரோ, அங்கே திரண்டு இருந்த தாய்மார்கள் மாரடித்துக் கொண்டு கதறி அழ, கூடியி ருந்த மக்கள் கூவி அழ, இரண்டு மணி நேரம் அந்த மரத்திலேயே வீரபாண்டிய கட்ட பொம்மனின் உயிர் அற்ற சடலம் தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்தது.
மாவீரன் ஊமைத்துரையையும்,கட்டபொம்மனின் முழுநேரப் பணியாளரையும் கொண்டு வந்து,ஈமக்கிரியை செய்வதற்காக, ஒரு காய்ந்துபோன மரக்கிளை யில் நெருப்பு மூட்டி, இடிந்துபோன ஒரு கோவிலுக்குப் பக்கத்தில், கட்டபொம் மனுக்குக்கொள்ளி வைத்து விட்டு,ஊமைத்துரையைக் கொண்டு போனார் கள்.
இன்றைக்கு 214 ஆவது ஆண்டில் நான் அதே இடத்தில் நிற்கிறேன். அன்றைக் குக் கட்டபொம்மன் என்ற பெயரை உச்சரிக்கக்கூடாது என்றது கும்பினி அர சாங்கம். ஆவணங்களில் பாஞ்சாலங்குறிச்சி என்ற பெயரையே அழித்தார்கள். வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற பெயரை நாட்டுப்புறப் பாடல்களில் சொல் லக்கூடாது என்று பட்டாளத்தார் வந்து மிரட்டினார்கள்.ஆனாலும் அந்தப்பெயர் ஒலித்துக் கொண்டே இருந்தது.
இது, வீரத்தின் விளைநிலம்
இந்தப் பகுதியில் சாவல் சண்டைக்குப் போகிற மக்கள் அதிகம். முட்டையில்
குஞ்சு பொரித்து அது அடுசாவலாக வர வேண்டும் என்றால், பாஞ்சாலங் குறிச்சி மண்ணைக் கொண்டு வந்து அந்தக் கோழி அடை காக்கின்ற இடத்தில்
வைத்தார்கள்.(கைதட்டல்).வீர வாலிபர்கள் பயிற்சி எடுக்கின்ற சிலம்பக்கூடங் களில், பாஞ்சாலங்குறிச்சி மண்ணைக் கொண்டு வந்து தூவினார்கள். பிறந்த குழந்தைக்குச் சேனை வைப்பதற்கும், அம்மண்ணைத் தாய்மார்கள் பயன் படுத் தினார்கள்
அப்படிப்பட்ட தியாகமும்,வீரமும் நிறைந்த வரலாறு படைத்த கயத்தாரில், சக்தி கிருஷ்ணசாமி வசனம் எழுத,வரலாற்று உண்மைகளின் அடிப்படையில் அந்தக் கதையை சிலம்புச்செல்வர் ம.பொ.சி. வடித்துக் கொடுக்க, உலகம் இப்ப டிப்பட்ட நடிகனைக் கண்டதில்லை என்ற புகழுக்குரிய நடிகர்திலகம் சிவாஜி
கணேசன் அவர்கள் கட்டபொம்மனாக நடிக்க, பி.ஆர்.பந்துலுவின் பத்மினி பிக் சர்சார் ஜெய்ப்பூர் அரண்மனையில் படம்பிடித்து வெளியிட்ட அந்தத் திரைப் படம், ஆசிய-ஆப்பிரிக்கப் படவிழாவில் விருதுகள் பெற, அந்த சிவாஜி அவர் களே வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு இங்கே சிலையையும் அமைத்துத் தந்து இருக்கின்ற இடத்தில் உங்கள் முன்னால் நான் நிற்கிறேன்.
அன்று அந்த மக்கள் அழுத கண்ணீர் வெள்ளத்தை நினைவூட்டுகின்ற வகை யில், ஆண்டுதோறும் வானம் வழக்கமாகக் கொட்டித் தீர்க்கின்ற வேளையில் தான் இங்கே கூட்டம் நடைபெற்று இருக்கின்றது. இந்த ஆண்டு வானம் சற்றுக் கருணை காட்டி இருக்கிறது.
நான் அவசர அவசரமாக பகலில் 12.30 மணிக்கு மதுரையில் இருந்து விமானத் தில் புறப்பட்டு தலைநகர் சென்னை சென்று,உடனே அங்கிருந்து திரும்பி வந் து,மதுரை விமான நிலையத்தில் மாலை 6.30 மணிக்குத் தரையிறங்கி, அங்கி ருந்து வாயு வேகத்தில் கயத்தார் மண்ணுக்கு வந்து சேர்ந்து இருக்கிறேன்.
பானர்மேன் உத்தரவுக்குப் பிறகு கட்ட பொம்மனைக் கொண்டு செல்கையில்
பட்டாளம் எப்படிச் சூழ்ந்து இருந்தது என்பதை நினைவூட்டுகின்றவகையில்
அதிகமான போலீஸ் பட்டாளம் இன்றைக்கு இங்கே குவிக்கப்பட்டு இருக்கின் றது.
எதற்காக இத்தனைக் கட்டுப்பாடுகள்?
நான் சட்டத்தை மதிப்பவன். நாட்டில் சமூக ஒற்றுமை காப்பாற்றப்பட வேண் டும் என்பதில், எல்லோரையும் விட அதிகமாகத் துடிப்பவன். சாதிகள், மதங் கள், பேதமின்றி அனைவரும் சகோதர பாசத்தோடு வாழ வேண்டும் என்பதற் காக என்னை ஒப்படைத்துக் கொண்டவன். பொது அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக, எங்கள் இயக்கம் இருபது ஆண்டுகளாக ஒரு துளியளவு வன்மு றையிலும் ஈடுபடாமல்,அமைதியைக் காத்து வருகிறது. காக்கிச் சட்டை போட் ட அதிகாரிகளை நான் மதிப்பவன். ஆனால், அக்கிரமமான வேலையில் ஈடு பட்டால், அந்தக் காக்கிச் சட்டைகளைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படா த வன்.
இன்றைக்கு இங்கே ஏராளமான கட்டுப் பாடுகள். இது எச்சரிக்கை அல்ல, அள வுக்கு அதிகமான எச்சரிக்கை.அதிகாரிகளைக் கேட்கிறேன். இது யார் உத்தரவு? கட்டுப்பாடு விதித்தீர்கள்.சொந்த வாகனங்களைத் தவிர வேறு வண்டிகளில் பயணித்து வரக்கூடாது என்று ஒரு புதிய நிபந்தனையைக் கொண்டு வந்து இருக்கின்றீர்கள். என்ன கலவர பூமியா கயத்தார்? இதற்கு முன்பு இங்கே ஏதே னும் மோதல் நடந்து இருக்கின்றதா? இதற்கு முன்பு கலவரம் நடந்து இருந் தால் அந்தப் பகுதிகளில் கட்டுப்பாடுகளை விதிக்கிறோம் என்று சொல்லி அதை நீங்கள் நியாயப்படுத்த முனையலாம். ஆனால் இங்கே கயத்தாரில் அனைவரும் ஒற்றுமையாக,சாதி மத வேறுபாடுகள் இன்றி எல்லோரும் அண் ணன் தம்பிகளாக வாழுகின்ற இடத்தில், நாட்டின் விடுதலைக்காகப் போராடி உயிர் துறந்த ஒரு மாமன்னனுடைய நினைவு நாள் நிகழ்ச்சியில், எதற்காக இத்தனைக் கட்டுப்பாடுகள்?
பொது அமைதியைக் காப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு நான் எப்போது மே உடன்படுகின்றவன்.ஆண்டுதோறும் இங்கே பல்லாயிரக் கணக்கான வர் கள் வந்து குவிகிறார்கள்.இன்று அவர்களைத் தடுத்து இருக்கின்றீர்கள். இது யாரைத் திருப்திப் படுத்த? நான் காவல்துறை மாவட்டக் கண்காணிப்பாளரைக் குற்றம் சாட்ட வில்லை. இந்தத் தென் மாவட்டக் காவல்துறையை ஆட்டிப்ப டைப்பது யார்? எதற்காக இந்த உத்தரவு? சுடர்களை அனுமதிக்கவில்லை. சரி.
வாகனங்களில் சேர்ந்து போகக் கூடாது என்கிறீர்கள். இதே அணுகுமுறையை
முதல் அமைச்சர் வரும்போதும் பின்பற்று வீர்களா? அவர் வருகின்றபோது,
அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி, உன் பெயர் என்ன? என்று அவ ரது ஓட்டுநரைக் கேட்பீர்களா? நான் கடந்த சில காலமாக, மிகப் பொறுமை
காத்து வருகிறேன். ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று, கயத்தாருக்கு போகக் கூடாது; போனால், உங்கள் மீது வழக்கு வரும் என்று மிரட்டி இருக்கின்றீர்கள். அதேபோல வண்டி உரிமையாளர்களிடம், ஓட்டுநர் களிடமும் கயத்தாருக்குப் போகக்கூடாது என்ற மிரட்டி இருக்கின்றீர்கள்.இதன் விளைவாக, ஏழை மக்கள் வரமுடிய வில்லை. நீங்கள் எல்லாம் வெள்ளைக்காரனிடம் பிச்சை வாங்கிய வர்களா?அல்லது இன்றைக்கு அவர்களது கைக் கூலிகளா?
நான் இப்படியெல்லாம் பேச வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டு வரவில் லை. நீங்கள் உரசிப் பார்த் தால் வைகோ இப்படித்தான் வெடிப்பான்.யாருடைய உத்தரவு இது? உங்கள் எஜமானியின் உத்தரவா? எதற்குச் சேவகம் செய்கிறீர் கள்? நான் எல்லோரையும் ஒட்டுமொத்தமாகக்குற்றம் சாட்டவில்லை. காக் கிச் சட்டைகளுக்கு குள்ளும் நல்ல மனங்கள் இருக்கின்றன. எதற்காக மக்க ளை மிரட்டுகிறீர்கள்? அவர்களது வரிப்பணத்தில்தான் நீங்கள் சம்பளம் வாங் குகிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.உங்களுடைய நட வடிக்கைகள் அக்கிரமம்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் வழித் தோன்றல்களும், இந்தப் பாஞ்சாலங்
குறிச்சி மண்ணில் போராடி இரத்தம் சிந்தியவர்களின் வழித்தோன்றல்களும்,
இன்றைக்கும் பசியோடும், ஏழ்மை யோடும்தான் இருக்கின்றார்கள்.அவர்கள் மாளிகைவாசிகள் அல்ல,செல்வந்தர்கள் அல்ல. விவசாயிகள், அன்றாடங் காய்ச்சிகள். அவர்கள் பலராகச் சேர்ந்து, சிரமப்பட்டு ஒரு வண்டியை ஏற்பாடு செய்து கொண்டு இங்கே வருவார்கள்.
பல்லாயிரக்கணக்கில் திரளுவோம்
நான் தூத்துக்குடி சுற்றுப்பயணத்தின் போது, வைப்பாரிலும், சிங்கிலிபட்டி கற் குமியிலும், எல்லோரும் கயத்தாருக்கு வாருங்கள்; அங்கே விரிவாகப் பேசு கிறேன் என்று அழைப்பு விடுத்து வந்தேன். அதனால்தான், கயத்தாரிலே கூட் டத்தைத் திரட்ட விடக்கூடாது என்று ஊருக்கு ஊர் சென்று மிரட்டி இருக்கின் றீர்கள். ஏற்கனவே மிரட்டியது போதாது என்று, இன்றைக்குச் சிங்கிலிபட்டி யில் புறப்பட இருந்த வாகனங்களைத் தடுத்து நிறுத்தி இருக்கின்றீர்கள். முட் டாள் வெள்ளைக் காரன்தான், பாஞ்சாலங்குறிச்சி பெயரைச் சொல்லக்கூடாது என்று அழித்தான். நீங்களும் அவர்களைப் போல ஆகிவிட்டீர்களா?எழுதி வைத் துக் கொள்ளுங்கள். நீங்கள் எத்தனை தடைகள் விதித்தாலும், அடுத்த ஆண்டு இதே இடத்தில் இதே நாளில் பல்லாயிரக்கணக்கானவர்கள் திரளுவார்கள். (பலத்த ஆரவாரம்).
ம.பொ.சி. வெளிக்கொணர்ந்த வரலாறு
தோழர்களே, நான் நான்காம் வகுப்பில் படித்துக் கொண்டு இருந்தபோது, எங் கள் ஊராட்சி நூலகத்தில்,ம.பொ.சி.எழுதிய‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ என்ற புத்தகத்தைப் படித்தேன்.ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் அருமையான தலைப் பு இட்டு இருந்தார்.அதில் ஒரு அத்தியாயம் இன்னமும் எனது கண்களுக்குள் அப்படியே நிற்கிறது. ஓடுது வெள்ளைப்படை என்பது அந்தத் தலைப்பு. 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சென்னையில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு விழா எடுத்தபோது ஆற்றிய உரைதான், ஒரு நூலாக வந்தது. அதே ஆண்டு இதே தேதி, அக்டோபர் 16 இல், சிலம்புச்செல்வர், இந்தக் கயத்தாருக்கு வந்தார்.
கட்டபொம்மனைத் தூக்கில் இட்ட இடத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, வீரஞ்செறிந்த உரை ஆற்றினார்.அந்த உரை,‘கயத்தாரில் கட்டபொம்மன்’என்ற கட்டபொம்மன்’ தலைப்பில் ஒரு புத்தகமாக, 1950 பிப்ரவரி 10 ஆம் தேதி வெளி யிடப்பட்டது.
இன்றைக்கு இங்கே, கட்டபொம்மன் பெயரால் அமைந்து இருக்கின்ற பள்ளி யில் பயிலுகின்ற பிள்ளைகளுக்குப் பரிசுகள் வழங்கினோமே, அதேபோல அன் றைக்கு அந்த நிகழ்ச்சியில், சாத்தூர் மத்தியப் பள்ளி மாணவர்கள் வந்து, வில் லுப்பாட்டு இசைத்தார்கள். கயத்தாறு கட்டபொம்மன் பள்ளியில் திரேஸ் என் கிற ஒரு ஆசிரியர் இருந்தார்.கட்டபொம்மன் எப்படி இருப்பார் என்பதைக் கற் பனை செய்து ஒரு ஓவியத்தை வரைந்தார். தலையில் மணிமுடி, முகத்தில் முறுக்கு மீசையோடு ஒரு தோற்றம். அந்தப் படத்தைத்தான், ம.பொ.சி. தன்
புத்தகத்தில் வெளியிட்டார். அந்த உருவத்தின் அடிப்படையில்தான், வீரபாண் டிய கட்டபொம்மன் படத்தில் சிவாஜிக்கு ஒப்பனை செய்தார்கள்.
கட்டபொம்மன் குடும்பம்
1760 ஆம் ஆண்டு ஜனவரி3 ஆம் நாள் திக்விஜய கட்டபொம்முவுக்கும், ஆறுமு கத்தம்மாள் என்ற சண்முகக்கனிக்கும் மூத்த மகனாகப் பிறந்தார் வீரபாண்டிய கட்டபொம்மன். அடுத்தது தளவாய் குமாரசாமி என்கிற ஊமைத்துரை. அதற்க டுத்த தம்பி செவத்தையா என்கிற துரைசிங்கம். இரண்டு சகோதரிகள். ஒருவர் ஈஸ்வரவடிவு,மற்றொருவர் துரைக்கண்ணு. ஆக ஐந்து பிள்ளைகள்.
தன்னுடைய 30 ஆவது வயதில், 1790 ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சிப் பாளை யத்தின் பட்டத்துக்கு வந்தார் வீரபாண்டிய கட்டபொம்மன்.9ஆண்டுகள்,8 மாதம் 16 நாள்கள் அவர் அரசனாகப்பதவியில் இருந்தார்.
அப்போது,மறவர் பாளையங் கள்,நாயக்கர் பாளையங்கள் என மொத்தம் 72 பா ளையங்கள். 1792 ஆம் ஆண்டு,ஆற்காட்டு நவாப்,வாங்கிய கடனைக் கட்ட முடி யாமல், கிஸ்தி வசூலிக்கின்ற உரிமையை, வெள்ளைக்காரனுக்குக் கொடுத் தான். 1793 ஆம் ஆண்டு,பாளையக்காரர்களிடம் கிஸ்தி வசூலிப்பதற்கு வெள் ளைக் காரன் முயற்சித்தான்.
நெற்கட்டுஞ்செவல் மன்னர் பூலித்தேவர், வெள்ளையனை எதிர்த்து முதலில் வாள் உயர்த்தினார். வாசுதேவ நல்லூர் சண்டையில் கம்மந்தான் கான் சாகிப் பைத் தோற்கடித்தார். அந்த மன்னர் பூலித்தேவருக்கு முதன்முதலாக, நானும்
என் தம்பி இரவிச்சந்திரனும் சேர்ந்து,எங்கள் சொந்த செலவில் கழுகுமலைக்கு அருகில் சாயமலை சிதம்பராபுரம் என்ற ஊரில்,1990ஆம் ஆண்டில் சிலை எழுப் பினோம்.
1797 இல் ஆலன் துரை, கட்ட பொம்மனிடம் வம்புக்கு வந்தான். அடிவாங்கித் தோற்று ஓடினான்.
கட்டபொம்மனின் அணுகுமுறை
அவருடைய வாழ்க்கைச் சரிதத்தில் நாம் மிக முக்கியமாக அறிந்து கொள்ள
வேண்டியது, தம்பி மணிவேந்தன் குறிப்பிட்டதைப் போல அனைத்து சமூக மக் களையும் அரவணைத்தார்.அவரது படைவரிசையில் அனைத்துத் தரப்பினரும் இருந்தார்கள்.இவர்களுடைய வரலாறுகள் எல்லாம் நாட்டுப்புறப் பாடல்களா க உலவுகின்றன. அவற்றைத் தொகுத்து, 1972 ஆம் ஆண்டு நா. வானமாமலை எழுதிய புத்தகத்தை,மதுரைப் பல்கலைக்கழகம் வெளியிட்டு இருக்கின்றது.
அதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது கவர்னகிரி சுந்தரலிங்கத்தின் வரலாறு.
சேனையிலே சேர்த்தீரானால்
திக்குவிஜயம் புரிந்திடுவேன்
கவனகிரிப் பள்ளிப் புண்ணியத்தால்
கீர்த்தி பெற்றேன் ராஜாவே
என்று சுந்தரலிங்கம் பாடுவதாக ஒரு கும்மிப்பாட்டு இருக்கின்றது.
அதற்குக் கட்டபொம்மன் சொல்லுகிறான்:
சக்கம்மா வாக்குப் பலித்ததடா
சந்ததி போல் வந்த சுந்தரலிங்கம்
பாஞ்சாலி சொல்லும் பலித்ததடா
பாலனாய் வந்த சுந்தரலிங்கம்
கட்டக் கருப்பணன் சுந்தரலிங்கம்-உனக்கு
மட்டிலா பேரும் தந்தேனடா
ஆயிரங் கம்பளம் நூறு பரிவாரத்திற்கு
நீ ஓர் வீரனடா
என்கிறான் கட்டபொம்மன்.அருந்ததியப் பிள்ளைகளும்,தேவேந்திரகுல வேளா ளர் சமூகத்துப் பிள்ளைகளும்,கட்ட பொம்மனின் படையில் இருந்தார்கள். கா லாடிக் கருப்பன் அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்தவன்.காலாடி வீரன், தே வேந் திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவன். அவர்களைக் கட்ட பொம்மன் எப் படி நடத்தினான் என்பதை நான் இன்றைக்கு எண்ணிப் பார்க்கிறேன். அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் எழுதாத காலம்.உரிமைக்குரல் எழுப்பாத காலம்.
அறிவாசான் தந்தை பெரியார் சாதி வேற்றுமைகளைச் சாடாத அந்த நாளில்,
இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, ‘எட்டி நில், தள்ளி நில்; தொட்டால் குற்றம்,
விரல்பட்டால் குற்றம்’ என்று சொன்ன காலம். அப்போது அவர்களை கட்ட பொம்மன் எப்படி நடத்தினான் என்பதைப் பார்க்கிறேன். நான் இங்கே சாதிப் பெயர்களைக் குறிப்பிட மாட்டேன்.
கட்டபொம்மன் சொன்னான்:
‘இந்தப் பெயரைச் சொன்னால் பங்கம் வரும் என்று கருதி உன் சாதிப் பெயரை
நான் சொல்ல வில்லையடா; உன்னை என் பிள்ளையைப் போல வளர்த்தே னடா’ என்கிறான் அருந்ததியப் பிள்ளையைப் பார்த்து.
அடுத்து, தேவேந்திர குல வேளாளர் சமூகத்துப் பிள்ளையைப் பார்த்து, ‘பார்ப் பாரப் பிள்ளையைப் போலக் கருதி,என் பிள்ளையைப் போல உன்னை வளர்த் தேனடா’ என்கிறான். இன்னும் சொல்லுகிறான், ‘என் சொப்பனத்தில் கூடச் சொன்னதில்லையடா’ என்கிறான்.
அந்த அணுகுமுறைதான் இன்றைக்கு வேண்டும். சாதியின் பெயரால் அரிவா ளைத் தீட்டுகிறார்கள். ஒருவரை யொருவர் தாக்கி மாய்த்துக் கொள்ளுகிறார் கள். இந்த நிலை தொடருமானால்,வளரும் பிள்ளைகளுக்கு ஆபத்து, பச்சைக் குழந்தைகளுக்கு ஆபத்து.ஆனால், 214 ஆண்டுகளுக்கு முன்னர் யுத்தகளத்துக் குப் போகிறவன், அனைவரையும் தன் சொந்தச் சகோதரர்களாக அரவணைத் துக் கொண்டான்.
தளபதி வெள்ளையத்தேவன்
வெள்யைத்தேவன், ஆரைக்குளத்தில் மறவர் குலத்தில் பிறந்தவன். 12 வயதில்
காட்டுக்கு வேட்டைக்குப் போகிறான் கட்டபொம்மன்.அங்கே, சேற்றுக்குள்ளே
ஒரு பிள்ளை சிக்கி நிற்கிறான்.தொட்டிலில் கிடந்த பிள்ளை அங்கே வந்து விட் டதுபோலும். அக்கம்பக்கத்தில் ஒருவரையும் காணவில்லை. காட்டு நாய்கள் பக்கத்தில் வந்து குரைத்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால், அந்தப் பிள்ளை அதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு இருக்கிறான்.இதைப்பார்த்து, கட்டபொம் மனுக்கு ஆச்சரியம். சேற்றில் இருந்து அந்தப் பிள்ளையை எடுத்துக் கொண்டு,
அரண்மனைக்குப் போகிறான். அங்கே தாய், தகப்பன் தேடுகிறார்கள். கட்ட பொம்மன் எடுத்துக்கொண்டு போனதை அறிகிறார்கள். அங்கே போய்க் கேட் கிறார்கள். எனக்குப் பிள்ளை இல்லை. இவனை இந்த அரண்மனையில் வைத் து வளர்த்துக் கொள்கிறேன் என்கிறான். அவன்தான் பாதர் வெள்ளை.
அவனைப் பற்றிய பாடல்:
மட்டுக்கடங்காத வெள்ளையனும்
மாட்டினான் கும்பினிப் பட்டாளத்தை
அவர்கள் ஓடிய திசையெல்லாம்
பதைக்கப் பதைக்கத் தாக்கினானே
இவர்கள் எல்லோரும் சேர்ந்துதான் போராடினார்கள்.
ஜாக்சனின் அழைப்பு
ஜாக்சன் துரை அழைப்புக் கொடுக்கிறான். எட்டப்ப மன்னர் யோசனை சொல் லுகிறார். கட்டபொம்மன் பொல்லாதன். அவனிடம் கவுலாகத்தான் போக வேண்டும். மூணு நாள் ஆனாலும் சோறு தண்ணி இல்லாம சண்டை போடு வான் கட்டபொம்மன்; அவன் கிட்ட தப்பாப் போனா, கொன்னே போடுவான்’ என்கிறார்.
அதனால, கவுலாத்தான் நாம ஏமாத்திக்
கைப்பிடியா மடக்க வேணும்
என்று எட்டப்பர் சொல்லிக் கொடுத்தன் விளைவாக, ஜாக்சன் துரை, சந்திக்க
வேண்டும் என்றுதான் ஓலை அனுப்புகிறான். பாஞ்சாலங்குறிச்சியில் இருந்து படையோடு புறப்படுவதற்கு வீரபாண்டிய கட்டபொம்மன் ஆயத்த மாகிறான். என்ன அருமையான காட்சி தெரியுமா?
நல்ல தலைவாழை இலை விரித்து,எல்லோருக்கும் அறுசுவை உணவு. சம்பா அரிசிச் சோறு, கதுவாலிக் குழம்பு,சாதிக்கோழிக் கறி, உடும்புக் கறி உள்ளிட்ட 18 வகைக் கறிகள், தேனில் கலந்த பட்சணங்கள். எல்லோரும் அமர்ந்து இதைச் சாப்பிட்டுவிட்டுத்தான் வேலும், வாளும்,கம்புகளையும் தூக்கிக் கொண்டு புறப் படுகிறார்கள். ஜாக்சன் துரை திருநெல்வேலியில் இருந்து குற்றாலத்துக்குப் போய்விட்டான்;அங்கிருந்து சொக்கம்பட்டிக்குப் போய் விட்டான்.அடுத்து,திரு வில்லிபுத்தூர்,அலங்காநல்லூர், பாவாலி வழியாக இராமநாதபுரம் அரண்ம னைக்குப் போய் விட்டான். நான் அந்த இடத்தைப் பார்த்து இருக்கிறேன்.
இராமநாதபுரத்தில் நடந்தது என்ன?
அங்கே முதல் மாடியில் வெட்ட வெளியாக ஒரு இடம் இருக்கிறது. அங்கே தான், கட்டபொம்மனும், ஜாக்சன் துரையும் சந்தித்தார்கள். கீழே முதல் தளத் தில், கிளார்க் துரை தலைமையில், துப்பாக்கிகளோடு சிப்பாய்களை நிறுத்தி
வைத்து இருக்கிறான். மேலே வருகிறான் கட்டபொம்மன். இருவரும் பேசு
கிறார்கள். வாக்குவாதம் முற்றுகிறது.கட்டபொம்மன் தலைவணங்கவில்லை.
தன்னந்தனியாகத்தான் இருக்கிறான்.அவனைச் சுற்றிப் பிரிட்டிஷ் பட்டாளம்
இருக்கிறது. கட்டபொம்மனோடு வந்த ஊமைத்துரை, வெள்ளையத் தேவன்,
தானாபதி சிவசுப்பிரமணியப் பிள்ளை,கந்தன் பகடை, பொட்டிப் பகடை, முத் தன் பகடை, மருந்து கட்டுவதற்கு சிவசங்கு நாடார், உடன் வந்த முகமது தம்பி இவர்கள் எல்லோரும் வெளியே ஒரு இடத்தில் நிற்கிறார்கள்.
ஜாக்சன் துரை திமிராகப் பேசியபோது,அதற்குப் பதிலடி கொடுத்துவிட்டு, அங் கிருந்து ஓடி வருகிறான். அங்கே மூலையில் ஒரு பெரிய பொந்து இருக்கிறது. அதன் வழியாகக் கீழே குதிக்கிறான். ஒரு ஏணி வைக்க வேண்டிய உயரம். அங் கிருந்து கீழே குதிக்கிறான். அவனைப் பிடிப்பதற்காக, துணைத்தளபதி கிளார்க், வீரர்களோடு ஓடி வருகிறான்.
இந்த நிகழ்வுகளையெல்லாம் ஒரு வெள்ளைக்கார ரெவரெண்ட் பாதர் எழுதிப் பதிவு செய்து இருக்கிறார். அந்த ஆவணங்களின் அடிப்படையில்தான் நான் இங்கே பேசுகிறேன். ஏனென்றால்,பல பேர் பலவிதமாக எழுதி இருக்கிறார்கள். வெள்ளைக்காரன் எழுதிய குறிப்பில் சொல்லுகிறான்:தன்னுடைய குத்துக் கத் தியை எடுத்து,இடது கையால் கிளார்க் துரையின் மார்பில் சொருகினான்; வலது கையில் வாள் வீசிக்கொண்டே, அந்த வீரர்கள் அனைவரையும் சமாளித் துக் கொண்டு வெளியே ஓடி வருகிறான். (கைதட்டல்).அங்கே பெரிய சண்டை நடக்கிறது.அடுத்து, தெருவுக்குள் ஓடி விட்டான்.ஆனால், தானாதிபதி சிவசுப் பிரமணியப்பிள்ளை சிக்கிக் கொண்டார். மற்றவர்கள் எல்லோருமே தப்பித்து வந்து விட்டார்கள்.
இது நடந்தது 1798 செப்டெம்பர் மாதம் 10 ஆம் தேதி. அக்டோபர் மாதம் முதல்
பிரச்சினைகள் வளருகின்றன. கட்ட பொம்மனைப் பிடித்து அழிப்பதற்காகப்
படைகள் ஆயத்தமாகின்றன. 1799 திருச்சியில் இருந்து வந்த படைகளோடு,
பாளையங் கோட்டைப் படைகளும் சேர்ந்து, தாக்குதல் நடத்துவதற்குத் தயா ராகி விட்ட நிலையில், மேஜர் ஜான் பானர்மேன் படையெடுத்து வருகிறான்.
அந்த நாள்களில்,திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் ஆறுகால பூசைகள் நடக் கின்றபோது, அந்த மணி ஓசை பாஞ்சாலங்குறிச்சியிலும் ஒலிக்கும்.வீர சக்கம் மா தேவியை வணங்கியதைப் போலவே, முருகக் கடவுளையும் வணங்கி னான் கட்டபொம்மன்.அப்போது எல்லோரும் திருச்செந்தூர் திருவிழாவுக்குப் போயிருக்கிறார்கள்.1799 செப்டெம்பர் 4 ஆம் தேதி படைகள் சுற்றி வளைக்கின் றன. 12 பவுண்டு எடையுள்ள குண்டுகளை வீசக்கூடிய 24 பீரங்கிகள், கோட்டை யைச் சுற்றிலும் நிற்கின்றன. 5 ஆம் தேதி, முதல் நாள் சண்டை தொடங்கு கிறது.
வெள்ளையம்மாள் வேதனை
அதற்காகப் புறப்படுகையில்தான்,வெள்ளையத்தேவனைப் போக வேண்டாம் என்று வெள்ளையம்மாள் மன்றாடுகிறாள்.
போகாதே போகாதே என் கணவா
சொப்பனம் ஒன்று நானும் கண்டேன்
இஞ்சிக் கிணறு இடியக் கண்டேன்
எலுமிச்சம் தோட்டம் அழியக் கண்டேன்
மந்தைக் கிணறும் இடியக் கண்டேன்
மாமரச் சோலையும் அழியக் கண்டேன்
மேகம் இல்லாமல் இடிக்கக் கண்டேன்
வீரனே, உன் தலை போகக் கண்டேன்
கூகை குழறும் சத்தம் கேட்டேன்
கோபத்தில் ஆந்தை அலறல் கேட்டேன்
பாஞ்சைக் கோட்டையைப் பீரங்கி தாக்கக் கண்டேன்
அந்தக் கோட்டையை விட்டொரு பெண் போகக் கண்டேன்
நீர் அங்கே போகாதீர் மாண்டிடுவீர்
என்றெல்லாம் கூறித் தடுத்து நிறுத்தப் பார்க்கிறாள். அதையெல்லாம் மீறி அவன் சண்டைக்குப் போகிறான். தெற்குக்கோட்டை வாசலுக்கு அவன் காவல்
தளபதி. வடக்குக் கோட்டை வாசலுக்குக் காவல் தளபதி ஊமைத்துரை. இரண் டு புறங்களிலும் பீரங்கித் தாக்குதல்.தெற்குக்கோட்டை வாசல் தகர்ந்தவுடன்,
மேஜர் காலின்ஸ் துரை உள்ளே வருகிறான்.அவனை ஈட்டியால் குத்திக்கொல் லுகிறான் வெள்ளையத் தேவன்.அப்போது, கண்டாங்கித் துரை என்பவன்வெள் ளையத் தேவனைச் சுடுகிறான்.பாதர் வெள்ளை மடிந்தான்.
இங்கே இரண்டு விதமாகச் சொல்லு கிறார்கள். அப்போது வெள்ளையத்தேவ னே, கண்டாங்கித் துரையை வெட்டிச் சாய்த்ததாகவும், புலிக்குட்டி நாயக்கர் ஈட்டியால் குத்திக் கொன்றார் என்றும் இருவிதமாகச் சொல்லு கிறார்கள். இது முதல் நாள் சண்டை.
கோட்டையை விட்டு வெளியேறினார்
வடக்குக்கோட்டைப் பக்கம் இராபர்ட் டக்ளஸ் தலைமை தாங்கி வருகிறான்.
அவனை, ஊமைத்துரை கொல்லுகிறான்.முதல் நாள் சண்டையில், பிரிட்டிஷ்
படை தோற்றது. பீரங்கிகளும், துப்பாக்கி களும், வேலுக்கும், வாளுக்கும் ஈடு
கொடுக்க முடியவில்லை.
இரண்டாம் நாள் போர் தொடருகிறது.எதிரிகளின் ஆயுதக் கிடங்கை அழிப்ப தற்கு,சுந்தரலிங்கம் தன் உயிரைக் கொடுக்கிறான். யுத்தம் சமநிலையில் இருக் கிறது. ஆனால்,கோட்டைச் சுவரின் பல பகுதிகள் தகர்ந்து விட்டன.
செப்டெம்பர் 7 ஆம் தேதி, மூன்றாம் நாள் சண்டை. கோட்டையைத் தகர்த்து
உள்ளே புகுந்து விடுவார்கள் என்ற நிலை. தன் மக்களைக் காப்பாற்ற வேண் டும். திருச்சிக்குப் போய்,மேலதிகாரிகளைச் சந்தித்து நிலைமையைச் சொல்லு வோம், நியாயம் கேட்போம் என்ற யோசனையின்பேரில், கட்டபொம்மன், ஊ மைத்துரை, தானாதிபதி சிவசுப்பிரமணியப் பிள்ளை ஆகியோர், இரவு பத்தரை மணிக்கு மேல்,கோட்டையை விட்டு வெளியேறித் தப்பிச் செல்லுகிறார்கள்.
8 ஆம் தேதி காலையில், கட்டபொம்மன் கோட்டைக்கு உள்ளே இல்லை என் பது தெரிய வருகிறது. 9 ஆம் தேதி,பானர்மேன் கோட்டையை முழுமையாகக் கைப்பற்றுகிறான்.
காளாப்பூர் காட்டில் கைது
திருச்சிக்குப் போகின்ற வழியில்,புதுக்கோட்டை மன்னரைச் சந்திக்கப் போ கி றார் கட்டபொம்மன். காளாப்பூர் காட்டில் இருக்கிறார்கள். அவர்கள் பின்னாலே யே வந்த எட்டயபுரத்துப் பாளையக்காரப் படை,வெள்ளையர் படை, புதுக் கோட்டை மன்னர் படையினர் சேர்ந்து, கட்டபொம்மன்,ஊமைத்துரை, முத்தை யா நாயக்கர்,குமாரசாமி நாயக்கர், வீரண மணியகாரன் ஆகிய ஆறு பேர்களை யும் பிடித்துக்கைது செய்தார்கள். 1799 அக்டோபர் 1 ஆம் தேதி அவர்களைக் கைது செய்து,எல்லோரும் பார்த்து அச்சப்பட வேண்டும் என்பதற்காக, கைக் கும் காலுக்கும் விலங்கு பூட்டி, அந்த மன்னனை, பாஞ்சாலங்குறிச்சி வேந்த னை, சாலை வழியாகவே நடத்தி,அக்டோபர் 5 ஆம் தேதி, இங்கே கயத்தாருக் குக் கொண்டு வந்து,அடைத்து வைத்தார்கள். பாஞ்சாலங் குறிச்சிப் பாளையக் காரனுக்கு என்ன கதி என்பதை எல்லோரும் தெரிந்துகொள்ளட்டும்; இனி எவ னும் நம்மை எதிர்க்கத் துணியக்கூடாது என்பதற்காக இப்படிச் செய்தார்கள்.
தொடரும் ....
No comments:
Post a Comment