Tuesday, October 1, 2013

பசுமை அமர்வில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை சுற்றுச்சூழல் விவகா ரங்களுக்கான "பசுமை அமர்வு' என்ற சிறப்பு அமர்வு விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (30.09.13) உத்தரவிட்டது.

இது தொடர்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, நீதிபதி ஏ.கே. பட்நாயக், ஜெகதீஷ் சிங் கேஹர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் "ஸ்டெர்லைட் ஆலை வழக்கை "பசுமை அமர்வு' இனி விசாரிக்கும். நான்கு வாரங்களுக்குப் பிறகு இந்த வழக்கு விசாரிக்கப்படும்' என்று கூறினர்.

தூக்குக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரி யம் கடந்த மார்ச் 29-ஆம் தேதி நடவடிக்கை மேற்கொண்டது. அதை எதிர்த்து தில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஆலை நிர்வாகம் வழக்குத் தொடர்ந்தது. அதை விசாரித்த தீர்ப்பாயம் ஆலை செயல்பட கடந்த மே 31-ஆம் தேதி இடைக்கால அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

அந்த உத்தரவை எதிர்த்து  மதிமுக பொதுச்செயலர் வைகோவும் தமிழகஅரசும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜூன் முதல் வாரத்தில் முறையிட்டனர்.

இதற்கிடையே, ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து செயல்படலாம் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி இறுதித் தீர்ப்பை அளித்தது. அதில், ஸ்டெர்லைட் ஆலை செயல்பட சில வழிகாட்டுதலை வழங்கி, அதன் அமலாக்கத்தைக் கண்காணிக்க நிபுணர் குழுவுக்கு தீர்ப்பாயம் சில உத்தரவு களைப் பிறப்பித்திருந்தது.

இந் நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் அதிகார வரம்பு தொடர்பாக கேள்வி எழுப்பி மீண்டும் ஒரு மனுவை தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக் கல் செய்தது. இது தொடர்பான வழக்கை திங்கள்கிழமை விசாரித்த உச்ச நீதி மன்றம், இனி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான விவகாரத்தை "பசுமை அமர் வு' விசாரிக்கும் என்று கூறியுள்ளது.

சுற்றுச்சூழல் விவகாரங்களை விசாரிக்க நீதிபதி ஸ்வதந்திர குமார் தலைமை யிலான தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை உச்ச நீதிமன்றம் 2010-ஆம் ஆண்டு நிய மித்தது. அத் தீர்ப்பாயத்தின் வரம்புக்குள் வராத விவகாரங்களை விசாரிக்க "பசுமை அமர்வு' என்ற பெயர் கொண்ட சிறப்பு அமர்வை உச்ச நீதிமன்ற தலை மை நீதிபதி பி. சதாசிவம் அண்மையில் உருவாக்கினார். முன்னதாக, இதற்கு வன விவகாரங்களை விசாரிக்கும் அமர்வு எனப் பெயரிடப்பட்டிருந்தது. நீதிபதி ஏ.கே.பட்நாயக் இடம்பெற்ற அமர்வு வழக்குகளை விசாரித்து வந்தது.இந்நிலை யில், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சதாசிவம் பொறுப்பேற்றதும் அப் பெயரை "பசுமை அமர்வு' என அண்மையில் மாற்றினார் என்பது குறிப்பி டத்தக்கது.

No comments:

Post a Comment