மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாசற்ற அமைப்பை இரு பது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி,மக்கள் சமுத்திரமாய் அது உருவெடுத்து, மாநாடுகள், இடைத்தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்கள் என பல களங்கள் கண்டு, காயங்களையும் பெற்று, இன உணர்வு என்னும் தீ பந்தத்தைத் தாங்கிய அரசியல் தொடர் ஓட்டத்தில்,பல போராட்டக்களங்களில் முந்தி நிற்பதும், முத லில் இருப்பதும் நமது இயக்கம் என்ற பெருமையைப்பெற்றுத் தந்த பெருமகன் தலைவர் #வைகோ. அரசியல் கட்சித் தலைவராக உருவெடுத்த இவரால் ஆன் மிகத்தைப் பற்றி எப்படி பேச முடிகிறது? நித்தமும் சோர்வின்றிப் பயணிக்கும் இவரால் எப்படி இலக்கியத் தளங்களில் அச்சுப் பிசகாது உரையாற்ற முடிகின் றது? புள்ளி விபரங்களை அடுக்கடுக்காக வைத்து விவாதிக்கும் ஆற்றல், வி னைத் திட்பம், அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, இலட்சியத் தில் உறுதி என்ற மூன்றையும் கடைபிடிக்கும் அறவாழ்வு என தலைவர் வைகோ வின் அரசியல் பயணம் தியாகம் தோய்ந்த வரலாற்றுச் சுவடுகளாகும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தபோது அக்கட்சியின் தலைவரை புகழ் வானில் தூக்கிச் சுமந்ததும்,அதன்பின்னர், மறுமலர்ச்சி திமுக என்னும் தனித்த இயக்கம் கண்டு,தோழமை பாராட்டி வந்த அரசியல் இயக்கத் தலைவர் களின் இருப்பை அங்கீகரித்து அவர்களுக்கு ஆபத்து உதவியாக விளங்கிய தலைவர் வைகோவின் அளவு கடந்த இருப்பை, அமானுஸ்யமான ஆற்றலை அங்கீகரிக்கவோ, ஆதரிக்கவோ எவரும் தலைப்படாத பட்சத்தில்,இவர் வளர்ந் தால் நமக்கு ஆபத்து, இவருடைய தலைமை வந்தால் அது நிரந்தரமாகிவிடும் என்று அஞ்சி நடுங்கிய ஆண்ட கட்சியும் -ஆளும் கட்சியும், அரசியலில் வைகோ வை விடுவதில்லை என்பதில் மட்டும் கூட்டணியாக இன்றளவும்
செயல்படுவது அனைவருக்கும் கண்கூடாகத் தெரியும். ஆளும் கட்சி நன்று செய்யினும் தூற்றுவது ஒன்றே எதிர்க்கட்சிகளின் கடமை என புழுத்துப்போன தமிழக அரசியலில், நல்லது செய்தால் பாராட்டுவது,அல்லது செய்தால் சுட்டிக் காட்டுவது என்ற உயர்ந்த பண்பை நிலை நாட்டும் தலைவர் வைகோ மட்டும் தான்.
தலைவர் வைகோவின் வளர்ச்சியை அடையாளப் படுத்த, அவர் ஆற்றி வரும்
போராட்ட வாழ்வை புகழ்ந்துரைக்க எவரும் துணியவில்லை. மதிமுகவில் 50
பேர் விலகினால் ஊடகங்கள்,பத்திரிகைகள் அதை ஊதிப் பெரிதாக்குவதும், தஞ்சை உள்பட பல்வேறு மாவட்டங்களில் அண்மையில் ஆயிரமாயிரமாய் இளம் மாணவர்கள் இயக்கத்தில் சேர்ந்ததை மனசாட்சி மரத்துப் போனவர்கள் ஒரு பத்தி செய்தி வெளியிடாததுமான காலத்தில்,தலைவர் வைகோவின் ஆற் றலை, கரை படியாத ஐம்பதாண்டு கால அரசியல் வாழ்வை, நித்தமும் ஆற்றி வரும் அறவேள்வியை மேடைக்கு மேடை நின்று பேசுவது மட்டுமல்ல, தன் னுடைய பொது வாழ்வில் காந்திக்குப் பின்பு, கர்மவீரர் காமராசருக்குப் பின்பு, நான் தேடித் தேடி செதுக்கிய சிற்பம் வைகோ, அரசியலை பல ஆண்டுகளாக ஆய்ந்து, ஆராய்ச்சி செய்ததற்குப் பின்பு எனக்குக் கிடைத்த அரிய தலைவர் வைகோ. என்னுடைய மாற்று அரசியல் என்னும் தீபத்தை அணையாது காக் கும் ஒழுக்க சீலர்.எந்தச் சூழ்நிலையிலும் ஒரு குறிப்பிட்ட சாதியையோ அல் லது மதத்தையோ ஆதரிக்காதவர். நான் பிறந்த தமிழச்சாதியின் உயர்வுக்காக மட்டுமே போராடி வரும் வைகோ தான் சிறந்த மாற்று எனப் போற்றி வரும் தமிழருவி மணியன் என்னும் தகைசால் தலைவரை கற்பகத் தருவாக, காலம் நமக்கு வழங்கிய அட்சயப் பாத்திரமாகவே நாம் கருதுகின்றோம்.
சிறந்த இலக்கியவாதி, நிகரற்ற பேச்சாளர், பொருள் பொதிந்த முன்னணி எழுத் தாளர், ஞானம் நிறைந்த சிந்தனையாளர், ஒரே நேரத்தில் காந்தியையும் -காம ராசரையும் நெஞ்சில் பூசனை செய்யும் நாட்டுப் பற்றாளர் என பன்முகம் கொண்ட நேர்மையாளர். எவரிடத்தும் எதற்காகவும் கையேந்தாத சுயமரியா தைக்காரர், இவர் ஒன்றை பேசினால் அர்த்தம் இருக்கும், இவர் ஒருவரை ஆத ரித்து எழுதினால் இந்த சமூகத்தின் மேன்மைக்காகவே என்று கோடிக் கணக் கான இளைஞர் -மாணவர்கள் நம்புகின்ற தமிழருவி மணியன் என்னும் தகை சால் தலைவர் போற்றுதலுக்குரியவரே. தலைவர் வைகோவை முன்னிலைப் படுத்தி பேசுவதால் எத்தனையோ எதிர்ப்புகள் அவருக்கு வருகிறது.அவர் முன் வைக்கும் மாற்று அரசியல் சூட்சமம் மலர்ந்துவிடக் கூடாது என்பதில் ஆத்தி ரம் அடைந்தோர் விடும் மிரட்டல்கள், நேற்றுவரை அவருடைய திறமை நமக் குத் தேவை எனக் கருதிய பொதுவுடைமைவாதிகள் கூட, இன்றைய அவரு டைய அரசியல் வியூகத்தைக் கண்டு எரிச்சல் படுவது என எல்லாத் திசைக ளில் இருந்தும் கோபக்கணைகள் வந்தபோதிலும், எதற்கும் அஞ்சாது எட்டயபு ரத்து பாரதியைப் படித்த தீரராய் அச்சமில்லை..அச்சமில்லை என ஓங்கி ஒலித் து தமது புனித வாழ்வைத் தொடர்கின்றார் தமிழருவி மணியன்.
அக்டோபர் 2-ஆம் தேதி மாடக்கூடல் மதுரை மாநகரில் காந்திய மக்கள் இயக் கத்தின் நான்காம் ஆண்டு தொடக்க விழா. அந்த விழாவில் பங்கேற்க வந்த தலைவர் வைகோ, கெளரி அண்ணன் வீட்டில் இருக்கிறார். மரியாதை நிமித்த மாக அவரைச் சந்திப்பதற்காக அய்யா தமிழருவி மணியன் விருப்பப்பட,நமது மாநகர் மாவட்டச்செயலாளர் அண்ணன் புதூர் பூமிநாதன் அவரை தமது காருக் கு அழைத்து வருகிறார்.காரில் நமது கொடி கட்டப்பட்டிருப்பதை உணர்ந்து, அதை கழற்றுமாறு ஓட்டுநரைப் பணிக்கிறார் பூமிநாதன்.அதைக் கவனித்து விட்ட அய்யா தமிழருவி மணியன், ஏன் அக்கொடியை கழற்ற வேண்டும்? எந் தக் கொடி ஆட்சிக்கு வரவேண்டும் என்று நான் நித்தமும் தவம் இருக்கிறே னோ, அந்தக் கொடி போட்ட காரில் பயணிப்பது எனக்கு பெருமைதான், ஒன் றும் சிறுமை இல்லை என்று அவர் பெருந்தன்மை காட்டியதைச் சொல்லி, சொல்லி அண்ணன் பூமிநாதன் பெருமைப் பட்டார். அவர் தலைவரைச் சந்தித் துப் பேசிவிட்டு கிளம்பும்போது அண்ணன் பூமிநாதனுடன், நாமும் அந்த வாக னத்தில் ஏறிக் கொண்டோம். அய்யா, இருபது ஆண்டு கால மறுமலர்ச்சி திமுக
பயணத்தில் எம் தலைவர் எத்தனையோ விழுப்புண்களை பெற்றுள்ளார். இந் தத் தமிழ் சமூகத்தின் மேன்மைக்காக ஓய்வு, உறக்கம் இன்றி கடுமையாக போ ராடுகிறார். எத்தனையோ தலைவர்கள் அவரின் உழைப்பை உறிஞ்சி இருக் கின்றார்கள், அரசியலில் யதார்த்தம் இருக்கலாம், எதிலும் யதார்த்தம் என்பதே
வாழ்க்கையாகிப் போன தலைவர் வைகோவின் பயணத்தில் நட்பறம் பேணும் நல்ல நண்பனாய், சிறந்த பண்பாளர் நீங்கள் வாய்த்ததை காலம் தந்த பரிசாகக் கருதுகின்றோம்.
அவருடைய புகழை, அளப்பரிய சாதனைகளை நாங்கள் விவரிப்பதைக் கூட விரும்பாத அரசியல் புனிதர் வைகோ. ஆனால், அவரைப்பற்றி நீங்கள் சொல் ல, சொல்ல நாங்கள் ஆனந்தத்தில் திளைக்கின்றோம். மயிலை, மயில் என்று
கூறுதல் மகிழ்வு, குயிலைக் குயில் என்று சொல்லுதல் இனிது, அரசியலில்
நேர்மையாளராய் விளங்கும் தலைவர் வைகோவை உள்ளபடியே தாங்கள் அடையாளப்படுத்தும் நாகரிக அரசியலை மேடைக்கு மேடை கடைபிடிக்கும் தங்களுக்கு என்ன நன்றி செய்யப்போகிறோம் என்றபோது,வைகோவைமுதல் வராக்குங்கள் அது ஒன்றே போதும், இந்த சமூகம் நன்றாக இருக்கும் என்றார். மேலும், உங்கள் தலைவர் வைகோவுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனா லும், எனக்கு உண்டு. அவர் தனது இயல்பான பயணத்தை எவ்வித எதிர்பார்ப் பும் இல்லாது தொடர்கின்றார். நானும் அப்படித்தான், எங்கள் இருவரையும்
ஒன்று சேர்த்தது இறைவன் என்பேன் நான், அவர் இயற்கை என்பார். அல்லது
தழைப்பட்டிருக்கும்போது நல்லது நடக்க நாங்கள் ஒன்று சேர்வது நன்மைக் குத் தானே என்றார். நிச்சயம் மாற்று அரசியல் இந்த மண்ணில் மலரும். நாம்
நினைப்பது கைகூடும் என்று அவர் கூறிய வார்த்தைகள் அருள்வாக்காக பக்தர் களுக்குத் தெரியும். நமக்கு அனுபவ வார்த்தைகளாகவே தென் பட்டது.
காந்திய மக்கள் இயக்கத்தின் பொதுக் கூட்ட மேடையில் அவர் பேசும்போது
நான் காமராஜ் ஒருவருக்கு மட்டுமே தெருப் பாடகன். அதற்குப் பிறகு ஒரு
காமராஜரைப் போல, அண்ணாவைப் போல நிகழ்காலத்தில் நான் பார்க்கும்
தலைவர் வைகோ. நாடாளுமன்றத்தில் இந்த ஒற்றை மனிதர் இருந்திருந்தால்
நமது இனத்திற்கு இந்தக் கொடுமை வந்திருக்காது. ஆகவே, வைகோ எந்தத்
தொகுதியில் போட்டியிட்டாலும் நமது முழு பலத்தைப்பயன்படுத்தி நாம் வெற் றி பெறச்செய்வோம். சட்டமன்றத் தேர்தல் என்று வரும்போது அவரை தமிழ கத்தின் முதல்வராக அமர்த்து வோம்.அதுவரை காந்திய மக்கள் இயக்கத்திற்கு வேறு பணிகள் கிடையாது. எங்கள் இயக்கம் தேர்தலில் போட்டியிட்டு அதிகா ரத்திற்கு வர வேண்டும் என்று கட்டமைக்கப்பட்ட தல்ல. இது நல்லவர்களை அடையாளப் படுத்தி, அரசியலைத் தூய்மைப் படுத்தும் புனிதப் பணி என்றார்.
கூட்டத்தில் காந்திய மக்கள் இயக்கத் தொண்டர்கள் குடம் ஏந்தி நிதி பெற்றனர். எவரிடத்தும் தனித்த முறையில் பணம் பெறுவதில்லை.மக்களிடத்தில் நேரி டையாகச் சென்று காசு பெறுவதே நோக்கம் என்பது காந்திய மக்கள் இயக்கத் தினரின் வழக்கம். அதுவும் தலைவர் வைகோ பேசி முடித்த பின்பு குடங்களை ஏந்திச் செல்லுங்கள்,இப்போது வேண்டாம் என்றார் தமிழருவி மணியன்.தலை வர் வைகோ உரையாற்றி முடிக்கும்போது மழை பொழிந்தது. நமக்கு மனம் நிறைந்தது, மழைப் பொழிவால் மதுரை நகர் மக்கள் மகிழ்ந்தனர். ஆனால், காந் திய மக்கள் இயக்கத்தினரின் குடம் மட்டும் நிறைய வில்லை. அதைப்பற்றி பெரிதும் அவர்கள் கவலைப்படவில்லை.
நல்லோரைக் காண்பதும் நன்றே,நல்லோர் சொல் கேட்பதும் நன்றே... நல் லோர் நட்பு கிடைப்பதும் மிக நன்றே என்பதாய் அய்யா தமிழருவி மணியன்
அவர்களின் நட்பு நமக்கு உரிய நேரத்தில் வாய்த்திருக்கிறது. ஏதோ, நம் தலை வரை அவர் புகழ்ந்து பேசுகின்றார் என்பதற்காக பதிலுக்கு நாம் பெருமை கொள் ளவில்லை. தங்கம் தெருவில் கிடக்க தகரம் நாட்டாண்மை செய்வது
கேலிக் குரியது. வாய்மை சிறைபட பொய்மை புகழ் பெறுவது ஆபத்தானது.
ஆகவே தான், நல்லெண்ணம் கொண்டவரை அடையாளப்படுத்த வேண்டும் என்பதற்காக நம் தலைவர் வைகோவை அய்யா தமிழருவி மணியன் தோளில் தூக்கி சுமப்பேன் என்கிறார்.நல்லதை தூக்கி சுமக்கும் நல்லவரை நாம் தூக்கி சுமப்பதுதான் அறம்.தமிழருவி மணியன் ஏற்றிருப்பது தனிமைப் பயணமே தவிர, அவர் தனி ஆள் அல்ல. உலகத் தமிழர்களின் வேட்கையை நிறைவேற் றத் துடிக்கும் வேழம். அவர் பின்னால் இருப்பது காந்தியத் தொண்டர்கள் மட்டு மல்ல, அவரைக் கவசமெனக் காப்பதற்கு இலட்சணக்கான மறுமலர்ச்சி திமுக
தோழர்களும் அரணாக நிற்போம். நம் தலைவர் வைகோ பெற நினைப்பது தமிழ் ஈழம். தகைமையாளர் தமிழருவி மணியன் வேட்கை வைகோவை தமி ழக முதல்வர் ஆக்குவது. இவ்விருவர் நினைப்பதும் இனநலம்தானே தவிர,
சுயநலம் சிறிதும் இல்லை... இல்லவே இல்லை...!
கட்டுரையாளர் :- மணவை தம்ழ்மாணிக்கம் -மதிமுக மாணவர் அணித் துணைச் செயலாளர்
No comments:
Post a Comment