Saturday, October 19, 2013

மதுரை,காந்திய மக்கள் இயக்க மாநாட்டில் வைகோ உரை -1

தண்டனைக்கு உள்ளானவர்களைப் பாதுகாக்க முயன்ற, ஊழல் காங் கிரஸ் அரசை மக்கள் தண்டிப்பார்கள்!

மதுரை - காந்திய மக்கள் இயக்க மாநாட்டில் #வைகோ

காந்திய மக்கள் இயக்கத்தின் நான்காம் ஆண்டுத் தொடக்க விழாவையொட்டி, 02.10.2013 அன்று மதுரையில் அரசியல் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு #மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர் கள் ஆற்றிய உரை வருமாறு:

மதுரை மாநகரில், பிரம்மாண்டமான கூட்டங்கள்பலவற்றை நான் பார்த்து இருக்கின்றேன். ஆனால், இப்படி உணர்ச்சிமயமான ஒரு கூட்டத்தை மிக அபூர் வமாகத்தான் மதுரை சந்தித்து இருக்கின்றது.
பாண்டியன் நெடுஞ்செழியன் அவையிலே கண்ணகிப் பெருந்தேவி வழக்கு ரைத்த காதை இன்று மீண்டும் மதுரை மாநகரத்தில் அரங்கேறி இருக்கின்ற காட் சியை நான் பார்க்கின்றேன். ஒரு புது வெள்ளம் பாய்ந்து இருக்கின்றது.புதி யதோர் சிந்தனை மலர்ந்து இருக்கின்றது. அசைக்க முடியாத ஆணித்தரமான கேள்விக்கணைகள் தொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஆதிக்க பீடத்தின் அடித்த ளத்தையே தகர்க்கின்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டு இருக்கின்றன. அத னால்தான் வானமும் மழைத்துளிகளை வழங்கி வாழ்த்துகிறது, தமிழருவி மணியன் அவர்களை.



இந்த ஓபுலா படித்துறைக் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை, நெடுங்காலத் துக் கு இந்தக் கூடல் மாநகரத்தின் வீதிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும். இந் தக் குரல் கோடிக்கணக்கான தமிழர்களின் இதயச் சுவர்களில் எதிரொலித்துக் கொண்டே இருக்கும். இனி நீண்ட காலத்துக்கு அரசியல் ஆய்வுரைகள் எழுதப் படுகின்ற போது, ஒரு மகத்தான திருப்பத்துக்கு மதுரை மூதூரில், தன்னலம் அற்ற தமிழ்த் தொண்டர் தமிழருவி மணியன் வீர கர்ஜனை புரிந்தார் என்ற ஒரு சரித்திரம், இன்றைக்கு இங்கே தீட்டப்பட்டு இருக்கின்றது.

ஒரு இல்லத்தில் மணவிழா மேளச்சத்தம் கேட்கும்; இன்னொரு இல்லத்தில்,
சாப்பறையின் ஒலி செவிகளில் விழும்.மகிழ்ச்சியும், துயரமும் கலந்ததுதான்
வாழ்க்கை என்று வகுத்தான் புறநானூற்றுப் புலவன். அதற்கு இங்கே சரியான எடுத்துக்காட்டு தந்தார்.அக்டோபர் 2,மகிழ்ச்சியும், துன்பமும் கலந்த நாள். ஆம்; இந்த நாளில் போர்பந்தரில் அண்ணல் காந்தியார் பிறந்தார்;கர்மவீரர் காமராசர்
சென்னையில் மறைந்தார்.

தமிழருவி மணியனுக்கு நான் நன்றி கூறுகிறேன்.அவர் என்னைப் பற்றிக்கூறி ய வார்த்தைகளுக்குத் தகுதி உள்ளவனாக என்னை நான் கருதிக்கொண்டு, நன்றி கூறவில்லை.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, முடங்கி விட்டது இவர்கள் அரசியல்,முடமாகிப்போனது இவர்களது பொது வாழ்வு,சூன்யப் பெரு வெளியில் சிக்கிக்காணாமல் போய்க்கொண்டு இருக்கின்றார்கள் என்று சொல் லப்பட்ட காலத்தில், நாதி அற்றவர்கள் இவர்கள் என்று பலரும் பரிகசித்த வேளையில், எங்கள் மீது பரிவும் அன்பும் கொண்டு,எதையும் எதிர்பார்க்காமல், எங்களுக் காகக் குரல் கொடுக்கின்றீர்களே, இந்த எளியவன் அரசியல் அரங்கத் தில் வெற்றிகரமாக உலவ வேண்டும் என்று விரும்புகின்றீர்களே, அதற்காக, இரத்தத் துளிகளாலும்,வியர்வைத் துளிகளாலும் பாடுபட்ட இலட்சோபலட்சம் கழகக் கண்மணிகள் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.

அவருக்கும், காந்திய மக்கள் இயக்கத் தோழர்களுக்கும், எங்கள் நெஞ்சமெல் லாம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். என் உதிர அணுக் களில் ஊடாடிக் கிடக்கின்ற நன்றியை எடுத்துச் சொல்ல என் வார்த்தை களுக் குச் சக்தி இல்லை.

மலரட்டும் மாற்று அரசியல் என்று நினைக்கின்றவர் களிடம் நெஞ்சிலே பரவ சமூட்டுகின்ற, நாடி நரம்புகளில் மின்சாரத்தைப் பாய்ச்சுகின்ற இளம் தோழர் களிடம், அரசியல் கட்சிகளைச்சாராதவர்களிடம்,இணையதளங்களில் தங்கள் உணர்வுகளைப் பரிமாறிக் கொள்ளுகின்ற வாலிபர்களிடம்,இளநங்கையரிடம், இந்த நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய வல்லமை பெற்று இருக் கின்ற மாணவக் கண்மணிகளிடம், என்னுடைய ஆருயிர்ச் சகோதரர், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் அவர்களுடைய உரை ஒரு
பெருந்தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

நல் அரசியலும், நமது பங்கும் என்ற நல் அரசியலும், நமது பங்கும் தலைப்பில் உரையாற்ற என்னை இங்கே அழைத்து இருக்கின்றார்கள்.

அரசியல் என்ற சொல், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சங்க இலக்கியத் தில் உலவுகிறது என்ற செய்தி வியப்பூட்டுகிறது. அதே காலகட்டத்தில் கிரேக் கத்தில் Man is a apolitical animal என்றான் அரிஸ்டாட்டில்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சங்க இலக்கியத்தில், பதிற்றுப்பத்தில் ஒன் பதாம் பத்தில், 89 ஆவது பாடல், பெருங்குன்றூர்க் கிழார் எழுதியது.அரசியல் பிழையாது என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்காக,

நாளின் நாளின் நாடு தொழுது ஏற்றும்
அரசியல் பிழையாது;
நாளின் நாளில் உலகு தொழுது ஏற்றும்
உயர்நிலை உலகின் உயர்ந்தோர் பரவிட
அரசியல் பிழையாது

இந்த உலகில் உயர்ந்த மக்கள் உலவுவதற்கு, பிழையாத அரசியல் வேண்டும் என்கிறார்.

இது மதுரை மூதூர். தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியனின் தேர்ச்சக்கரங்கள் புரண்டு ஓடிய பூமி. நெடுந்தேர் கொடிஞ்சி பொலி ய நின்றோன்; வாழ்க அவன் கண்ணி என்று புலவர்கள் பாடிய பாடல்கள் ஒலித் த இடம். இந்தக் களத்தில் வெற்றி பெறாவிட்டால், மாங்குடி மருதன் போன்ற புலவர்கள் என் மண்ணை விட்டு நீங்கட்டும் எனச் சூளுரைத்த வரலாறு.

அப்படிப்பட்ட இந்த மதுரையில், ஒரு மாலைப் பொழுதில் தொடங்கி விடிவதற் கு உள்ளாக இந்த மதுரையைச் சுற்றி வந்து, மாங்குடி மருதன் தீட்டிய மதுரைக் காஞ்சி என்ற இலக்கியத்தில், காஞ்சி என்றாலே நிலையாமை; அந்த இலக்கி யத்தில், 

அரசியல் பிழையாது அறநெறி காட்டிய பெரியோர் சென்ற அடி பிறழாது

என்று பாடுகிறார். ஒரு மன்னன் எப்படி இருக்க வேண்டும்? - மறக்க முடியாத
புலவன் பிசிராந்தையார் பாண்டிய மன்னன் அறிவுடை நம்பிக்கு அறிவுரை யாகச் சொல்கிறார்.

தலையாலங்கானப் போர்க்களத்தில் வெற்றி பெற்று விட்டான்;ஏழு நாட்டு மன் னர்களை வென்று விட்டான். அந்த மன்னனுக்கு அறிவுரை சொல்லுகிறான்.

அரசனே, வருமானம் தேவை நாட்டுக்கு.வரி விதிக்க வேண்டியது இருக்கும்.
அவர்கள் திரை செலுத்த வேண்டியது இருக்கும். அதற்காக மக்களைத் துன்பு றுத்தி விடாதே என்று அதற்கு ஒரு எடுத்துக்காட்டுச் சொல்லுகிறான்.

யானையின் பசி போக்கு வதற்குக் கவளம் கவளமாக அரிசிச் சோற்றைக் கொ டுக்கலாம். எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் கொடுக்கலாம்.அதனால் யானையின் பசி நீங்கும்; எவருக்கும் துன்பம் நேராது. ஆனால், அதே வேழம், நஞ்சை நிலங்களிலே, நெல் வயல்களிலே, கரும்புத் தோட்டங்களிலே புகுந்து விடுமானால்,பயிர்களை மிதித்து அழித்து விடுமானால், யானையின் பசியும்
அடங்காது; அனைத்துமே அழிந்து போகும். அதைப்போலத்தான் ஒரு அரசன் மக்களிடம் வரி வசூலிப்பதில் இருக்க வேண்டும். அரசன் தவறு செய்தால், அவனது மந்திரச் சுற்றம் அவனைக் கண்டிக்க வேண்டும். அவனது அமைச்சர் கள் சரியான வழி காட்ட வேண்டும். மக்களுக்குத் துன்பம் தருகின்ற வகையில் நடந்து கொள்வாயானால், உன் அரசும் கெடும்; நீயும் பாழாகிப் போவாய் என் றார்.

அப்படிப்பட்ட அரசியல் கருத்துகள் சொல்லப்பட்ட இந்த மதுரையில், அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆகும் என்று சிலப்பதிகாரப் பாயிரம் கூறுகின்ற அந்த மதுரை மாநகரில், இன்று இந்த மாபெரும் கூட்டம் வெகு சிறப்பாக நடை பெற்றுக் கொண்டு இருக்கின்றது.

கடந்த ஆண்டு, டிசம்பர் 25 ஆம் நாள், கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில், இதே
மதுரையில், மேலமாசி வீதி, தெற்கு மாசி வீதிச் சந்திப்பில் நான் உரை ஆற்றி னேன்.உவரியில் இருந்து தொடங்கி, நானும் என் தோழர்களும் நெருப்பு வெயி லிலும்,கொட்டும் மழையிலும் நடந்து வந்து, மது எதிர்ப்புப் பிரச்சாரம் செய்து வந்து, நிறைவாக, இந்த மதுரையில் மக்கள் கடலில் உரை ஆற்றினேன்.

அதற்குப் பிறகு இந்த ஓபுலா படித்துறைக் கூட்டத்தில்தான் உங்கள் முன்னால் நிற்கிறேன். அன்று உவரியில் தொடங்கிய நடைப்பயணத் தொடக்க விழா விலும் கலந்து கொண்டு வாழ்த்து உரைத்தார் தமிழருவி மணியன். மதுவின்
கோரப்பிடியில் இருந்து தமிழகத்தை மீட்பதற்கான அறயுத்தத்தை நாங்கள்
அங்குதான் தொடங்கினோம்.அனைத்துத் தரப்பு மக்களும், அனைத்து சமய மக்களும் வாழ்த்தினார்கள்.

அரிசனங்கள் ஆலயப் பிரவேசம்

இந்த மதுரை மாநகரம், மறக்க முடியாத எத்தனையோ நிகழ்வுகளைச் சந்தித்து
இருக்கின்றது.

1939 ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் நாள்,வைத்தியநாத அய்யர் தலைமையில் அரி சன மக்கள் மீனாட்சி அம்மன் ஆலயத்துக்கு உள்ளே சென்று வழிபாடு நடத்தி னார்கள். அதற்கான அறிவிப்பு வெளியான பிறகு, அங்கே கலவரம் வரும்;ரெள டிகள் தாக்குவார்கள் என்ற நிலையில், பசும்பொன் தேவர் திருமகனாரை நீங் கள் சந்தியுங்கள் என்று அரசியலில் மாறுபட்ட கருத்துக் கொண்டு இருந்த ராஜாஜி எடுத்துக்கூற,வைத்தியநாத அய்யர் தேவர் பெரு மகனைச் சந்தித்தார். நிலைமையைச் சொன்னார்.

ஒரு துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டார் தேவர். சனாதனிகளின் தூண்டுதலின்
பேரில், இங்கே இரத்தக்களறி நிகழும் என்று சில ரெளடிகள் அறிவித்து இருப்ப தாக அறிகிறேன். அவர்களுக்கு நான் எச்சரிக்கை செய்கிறேன்; வைத்தியநாத அய்யர் அரிசன மக்களை அழைத்துக் கொண்டு வருகின்ற வேளையில்,அடியே னும் உடன் வருவேன். அசம்பாவிதம் ஏதும் நேருமானால், அதை சந்திக்க வேண்டிய விதத்தில் நான் சந்திப்பேன் என்று துண்டுப் பிரசுரம் அச்சிட்டு வெளி யிட்டார்.

வாழ்நாளெல்லாம் நேர்மையாக வாழ்ந்து, தமிழக அரசின் உள்துறை அமைச்ச ராகப் பொறுப்பு வகித்து, எல்லோராலும் மதிக்கப்படுகின்றாரே, அந்தக் கக்க னார் அவர்கள், சின்னையா, முத்து, பூவலிங்கம், சண்முக நாடார், வைத்திய
நாத அய்யர் ஆகியோர் மீனாட்சி அம்மன் ஆலயத்துக்கு உள்ளே சென்றார்கள்.
அதனால்,வைத்திய நாத அய்யரின் தந்தை மறைந்தபோது, ஈமச்சடங்கு செய்ய அக்கிரகாரத்தில் இருந்து எவரும் வரவில்லை. இது வரலாறு.

இது மட்டும் அல்ல, இந்திய அரசியலுக்கே மதுரை எத்தனையோ திருப்பங் க ளைத் தந்து இருக்கின்றது.மகாத்மா காந்தி அஸ்ஸாம் பயணத்தின் போது, அங் கே மக்களிடம் நிலவிய வறுமையைக் கண்டு, தன்னுடைய கோட்டையும், தொப்பியையும் கழற்றி விடலாமா? என்று யோசிக்கிறார். ஆனால் முடிவு எடுக்கவில்லை. வால்டேர் ரயில் நிலையத்தில் மெளலானா அபுல் கலாம்
ஆசாத்தை காவல்துறை கைது செய்கிறது. அங்கேயும், அதுகுறித்து யோசிக் கிறார். ஆனால் செயலாற்ற வில்லை.

1921 செப்டெம்பர் 21 ஆம் தேதி மாலையில் மதுரைக்கு வந்தார் மகாத்மா காந்தி. அவருடன் ராஜாஜி, அபுல் கலாம் ஆசாத், டி.எஸ்.எஸ். ராஜன், சுபானி ஆகி யோர் இருக்கின்றார்கள்.அப்பொழுது சொல்லுகிறார்: எல்லோரும் கதர் ஆடை அணியுங்கள். சுதேசித் துணியை ஆதரியுங்கள்; விதேசித் துணியைத் தீயிட்டுக் கொளுத்துங்கள் என்று சொன்னார் அல்லவா? அப்போது அவரைச் சந்தித்த மக்கள் சொன்னார்கள்,நாங்கள் வறுமையில் இருக்கின்றோம்,கதரும் கிடைக் கவில்லை, வாங்கு வதற்கு எங்களிடம் காசு இல்லை என்றனர்.

அன்று இரவுதான் அவர் அதுபற்றிச் சிந்திக்கின்றார். உழைக்கின்ற மக்கள், விவ சாயிகள் அரை நிர்வாணக் கோலத்தில் அலைகிறார்கள்.தன்னுடைய தோழர் களிடம் சொல்லுகிறார்;இனி நான் அரையாடைதான் அணிவேன் என்று.வேண் டாம்; நீங்கள் கேலிக்குரிய மனிதராகி விடுவீர்கள் என்கிறார்கள். ஆனால், அபுல் கலாம் ஆசாத் மட்டும்தான், இது சரியான முடிவு, செயல்படுத்துங்கள் என்கிறார்.

செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி காலையில், மதுரை செளராட்டிர மக்கள் இடை யே காந்தியார் பேச வேண்டும்.அந்தக் கூட்டத்தில்தான் முதன்முதலாக அவர் அரையாடை மனிதராகக் காட்சி அளித்தார். வேட்டியை மடித்து, அரையாடை யாக அவர் கட்டுவதற்கு உதவியவர், விருதுநகர் பழனிக்குமார் பிள்ளை. காந்தி தன் தோற்றத்தை எளியவராக ஆக்கிக் கொண்ட இடம் இந்த மதுரை மூதூர். இது வரலாறு.

ஒருமுழம் துண்டு என்ற தலைப்பில் ஒருமுழம் துண்டு காந்தியார் இதுகுறித்து நவஜீவனில், நவஜீவனி எழுதியது, இதே அக்டோபர் 2 ஆம் நாளில்தான்.

காந்தியோடு கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், தேசத்தின் பிதாவே, மகாத்மா காந்தி அவர்களே, யுத்த களத்தில் எங்களை ஆசீர்வதியுங்கள் என்று நேதாஜி கேட்டார். அத்தகைய வரலாற்றுக்கு உரிய இடம்தான் இந்த மதுரை மூதூர்.

இன்றைய 2013 அக்டோபர் 2ஆம் நாளில்,இந்திய அரசியலின் எதிர்காலம் குறித் த ஒரு பூபாளம் இங்கே இசைக்கப்பட்டு இருக்கின்றது. எதேச்சதிகாரத்தின் கடி வாளங்களை அறுத்து எறிவதற்கு, இந்தியத் துணைக்கண்டத்து மக்கள் ஆயத்த மாகி விட்டார்கள் என்ற முடிவு, இன்று மாலையில் எதிரொலித்து இருக்கின் றது.

இந்திய நாட்டின் அரசியலில் மாறுதல் வேண்டும் என்பதற்கான விளக்கங் க ளை எல்லாம் தமிழருவி மணியன் அவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக எடுத்து
வைத்தார்கள். ஊகங்களின் அடிப்படையில் விமர்சனங்களை வைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.அதற்கெல்லாம் அவர் தக்க விளக்கங்களைச் சொல்லி விட்டார்.எனவே நான் நேரடியாகவே பிரச்சினைக்கு வர விரும்பு கிறேன்.மத்தியில் இருக்கின்ற காங்கிரஸ் அரசு,ஜனநாயகத்தைக் குழிதோண் டிப் புதைக்கின்ற அரசு, ஊழல் சாம்ராஜ்யமாகி விட்ட அரசு, தமிழகத்தை வஞ் சிக்கின்ற அரசு, அது அகற்றப்பட வேண்டும் என்பதற்கான துந்துபி முழக்கம் தான் தமிழருவி மணியனுடைய பேச்சு.

அவசரக் கோலத்தில் அவசரச் சட்டம்

சோனியா காந்தி இயக்குகின்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ஒரு
முடிவை எடுத்து இருக்கின்றது. ஜூலை 13 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்புச்
சொன்னதற்குப் பிறகு, ஆகஸ்ட் 10 ஆம் நாள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்,
அந்தத் தீர்ப்புக்கு எதிராக நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்ற வேண் டும்; தண்டிக்கப்படுகின்றவர்கள் பதவியில் நீடிக்க வழி செய்ய வேண்டும்
என்று காங்கிரஸ் கட்சியில் முடிவு எடுத்துத்தான் அனைத்துக் கட்சிக்கூட்டத் தில் முன்வைத்தார்கள்.சோனியா காந்தி அதில் இடம் பெற்று இருந்தார்.

அப்படியானால், காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி அப் போது நாட்டில் இல்லையா? அல்லது, நினைவு இல்லாமல் இருந்தாரா?

அதன்பிறகு, நாடாளுமன்றம் கூடுகிறது.மாநிலங்கள் அவையில், அந்தச் சட்ட
முன்வடிவை, காங்கிரஸ் கட்சியின் முழு ஒப்புதலோடுதானே முன் வைத்தார் கள்? இது ராகுல் காந்திக்குத் தெரியாதா? காங்கிரஸ் கட்சியின் துணைத்தலை வர் இதை அறிய மாட்டாரா? கேபினட் முடிவு அவருக்குத் தெரியாதா? இது நிலைக் குழுவுக்கு அனுப்பப்படுகிறபோது எதிர்த்தார்களா?

இந்தக் கட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், சரி, நாடாளுமன்றத்தில் மசோதா வை நிறைவேற்ற முடிய வில்லை; இவ்வளவு காலமும் அவர்களை நம்பி, பல கட்டங்களில் உதவி செய்த லாலு பிரசாத் உள்ளிட்டவர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று அவர் கருதி இருக்கலாம்; காங்கிரஸ் கட்சி லாப நட்டக் கணக்குப் போட்டு இருக்கலாம். எனவே, குடியரசுத் தலைவருக்கு அவசரச்
சட்டத்தை அனுப்பி வைத்து விட்டு,அமெரிக்காவுக்குப் புறப்பட்டுப் போய்விட் டார் டாக்டர் மன்மோகன்சிங்.

குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி,மூன்று அமைச்சர்களை அழைத்து விளக் கம் கேட்கிறார். இதற்கு இடையில், நாடு முழுவதும் எதிர்ப்பு; ஊடகங்களில்,
தொலைக்காட்சிகளில் கருத்துக் கணிப்புகளில், இந்த அவசரச் சட்டத்துக்குப் பலமான எதிர்ப்பு ஏற்படுகிறது. காங்கிரசுக்கு எதிராக மக்களின் கோபாவேச அலை வீசுகிறது.எனவே, பேராபத்து வந்து விடும் என்று,பிரணாப் முகர்ஜி ஒரு வேளை கருதி இருக்கலாம். அவரை சிலர் பாராட்டு கிறார்கள். அது அவர்கள் விருப்பம்.

பல ஆண்டுகளாக, நான் அவரைப் பற்றிச் சரியாக அறிந்து வைத்து இருக்கின் றவன்.அவர் ஏதோ ஒரு துறவியைப்போல,உத்தமரைப் போலப் பேசுகிறார்கள்.
அப்படிக் கருத்துச் சொல்ல ஒவ்வொரு வருக்கும் உரிமை உண்டு; எனக்கும்
உரிமை உண்டு. முன்பு சரியான வேளையில், அவர் காங்கிரஸ் கட்சியின் முது கில் குத்திவிட்டு, பங்களா காங்கிரஸ் கட்சிக்குப் போனவர் என்பது பலருக்குத்
தெரியாது. ஈழத்தமிழர் படுகொலைக்குக் காரணமான விதத்தில் ஆயுதங்களை
அள்ளிக்கொடுக்க அவர் இராணுவ அமைச்சராக இருந்தவர்.

இந்திரா காந்தி அம்மையார் படுகொலை செய்யப்பட்ட போது, அடுத்து நான் தான் பிரதமர் பதவியைக் கையாள முடியும்; எனக்குத்தான் அந்தத் தகுதி இருக் கிறது என்று நரசிம்மராவிடம் சொன்னவர். ஆனால், நிலைமை வேறுவித மானது; ராஜீவ் காந்தி பிரதமர் ஆனார். அதன் பிறகு, அமைச்சரவையின் தாழ் வாரத்தின்பக்கம் கூட எட்டிப் பார்க்க முடியாமல் இருந்தவர்தான் இந்த பிர ணாப் முகர்ஜி. எனவே, தனக்கு எப்போதோ வர வேண்டிய பதவி, அப்போது
கிடைக்காமற் போயிற்றே என்ற எண்ணம் ஒருவேளை அவரது மனதின் ஒரு
மூலையில் இருக்கலாம்.

தொடரும்.....

No comments:

Post a Comment