Sunday, October 13, 2013

களப்பணி ஆற்றுவோம்; காங்கிரசை அகற்றுவோம்!-பகுதி 2

வித்தியாசமானவர்கள்

முதலில் மூன்று பேர் ஒன்றாக நில்லுங்கள். நாங்கள் அதற்கு மேடை போடுகி றோம். திருப்பூரில் என் நண்பர்கள் தெருத் தெருவாக துண்டு ஏந்தி வசூலித்து பிரம்மாண்டமாக ஒரு கூட்டத்தை நடத்தினோம். நான் சொன்ன அடுத்த கண மே வைகோ மிகுந்த விருப்பத்தோடு மேடைக்கு வந்தார். எந்தத் தயக்கமும் இல்லை.அண்ணே,இடதுசாரிகளோடு நானும் சேர்ந்து ஒரு மாற்று அரசியலை
உருவாக்குவது என்றால், இதைவிட மகிழ்ச்சி வேறு என்ன இருக்கிறது?வரு கிறேன் என்றார். உங்களிடம் நான் வந்து பேசினேன்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் டுகள் வித்தியாச மானவர்கள்.அவர்கள் மண்ணில் வலம் வருவதைவிட,விண் ணிலேயே சஞ்சரித்துக் கொண்டிருக்கக் கூடியவர்களாக இருக்கிறார்களே என்பதில்தான் எனக்கு வருத்தம்.

இன்றும் அவர்கள் சொல்கிறார்கள்,ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளே தான் ஈழத் தமிழனுக்கு அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்று.அது சாகும் வரை நடக் காது. எது சாத்தியம் இல்லையோ அதை அவர்கள் சொல்வார்கள். வைகோ தனி ஈழம் வேண்டும் என்று சொல்கிறார். தமிழ் ஈழத்தைத் தவிர வேறு எதுவும்
எங்களுக்குத் தேவையில்லை என்று எங்களை மேடையில் வைத்துக் கொண் டே சொல்வார். எங்களுக்கு அதில் சங்கடம் இருக்கிறது என்றார்கள். நான் சொன்னேன், தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்து நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்கிற ஆசையே இல்லையா? என்று. நீங்கள் என்ன உத்திரப்பிரதேசத்திலும், மத்தியப் பிரதேசத்திலும் தான் மக்களைச் சந்திக்கப் போகிறீர் களா? தயவு செய் து அதை மூட்டைகட்டிவிட்டு வாருங்கள்.ஒரு அணி அமைக்கிறபொழுது நூறு
விழுக்காடு ஒத்த கருத்துள்ளவர்கள் சேரவே முடியாது. தமிழ் ஈழத்தை அவர்
மீட்கட்டும். அங்கே இலங்கைக்கு உள்ளேயே அரசியல் தீர்வு வரவேண்டும்
என்று நீங்கள் சொல்லுங்கள். வைகோ தன் கருத்தை அவர் மேடையில் சொல் லுவார். உங்கள் கருத்தை நீங்கள் உங்கள் மேடையில் சொல்லுங்கள். நான்
போடுகிற மேடையில் இந்தப் பிரச்சினை வேண்டாம். தமிழ்நாட்டுப் பிரச்சினை யை மையமாக வைத்து நாம் ஒன்றுகூடுவோம் என்றேன்.

வைகோ அவர்கள் வந்தார். கடைசி நாள் வரை ஜி.இராமகிருஷ்ணனை நான்
வேண்டி வேண்டி அந்த மேடைக்கு வர வழைத்தேன். நல்லகண்ணு அய்யா
தயக்கத்தோடு, என்மீது இருக்கின்ற அன்பினால் வந்தார். மேடைக்கு வருவ தற்கு முன்பு திருப்பூரில் இருக்கின்ற இரண்டு அலுவலகங் களுக்கும் நான் சென்று பேசினேன். ஐயா ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு தமிழர் களிடைய இருக் கிறது. தயவு செய்து ஒரு மாற்று அணியை நாங்களும் வைகோவும் சேர்ந்து அமைக்கப்போகிறோம் என்று நீங்கள் வாய் மலர்ந்தால் நல்லது என்றேன். மேடை போடப்பட்டது.ஜி.இராமகிருஷ்ணன் பேசுகிறார். ஒரு வார்த்தை, ஒரு வரி மாற்று அரசியல் குறித்து அவர் சொல்வாரா? என்று செவிகளைத் தீட்டிய படி நான் உட்கார்ந்திருக்கிறேன். கடைசிவரை சொல்லவேயில்லை.

என் தந்தையை விட மேலாக நான் நேசிக்கிற ஐயா நல்லகண்ணு அவர்கள்
இது குறித்து ஏதாவது சொல்வாரா? 85 வயதை எட்டிப்பிடித்திருக்கிற தூய்மை
மிகுந்த அரசியல் துறவி. அவர் இதை ஆசிர்வதித்து எதையாவது சொல்வாரா?
என எதிர்பார்த்தேன் அவரும் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை.

பிறகு வைகோ மேடையில் இருந்த படியே என்னிடம் சொன்னார், அண்ணே,
இரண்டு பேரும் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. நானாக வலியுறுத்தி
இந்த அணி அமைய வேண்டும் என்று சொல்ல வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா என்று கேட்டார்.அப்படியெல்லாம் நான் உங்களை வற்புறுத் தமாட்டேன். இரண்டு பேரும் இதற்கு தயாராக இல்லை என்கிற பொழுது தலை வனும், தலைவியும் மனம் ஒன்றுபட்டு இணைந்தால்தானே அதற்குப் பெயர் இல்லறம். நடுவிலே ஒருவன் நின்று கொண்டு இரண்டு பேர் கையையும் பிடித்து இழுத்து ஒப்பந்தமா போட முடியும்? போட்டாலும் அந்த ஒப்பந்தம் ஒரு நாள் நிலைக்குமா? அடுத்தநாளே விவாகரத்துதானே? எனவே நான் வற்புறுத்த வில்லை.வைகோ அவர் கருத்துகளை பேசினார்.



தமிழ் இனம் அழித்த காங்கிரஸ்

ஓராண்டு காலமாக நான் சொன்னேன்,நாடாளுமன்றத்தேர்தல் நடுவில் வரும். தயவு செய்து தி.மு.க.-அ.தி.மு.க.இரண்டோடும் நீங்கள் போய் நிற்காதீர்கள். ஒரு அணியை அமையுங்கள். சிவப்புச் சிந்தனைகளுக்கு இதயத்தைப் பறிகொ டுத்துவிட்ட தியாகம் நிறைந்த தோழர்களைப் பார்த்து நான் கேட்கிறேன். நீங் களே ஒரு வேள்வி நடத்துவதற்குத் தயாராக இல்லை என்றால், நான் தி.மு.க. வில் இருப்ப வரையும், அ.தி.மு.க.வில் இருப்ப வரையுமா தியாகம் செய்வ தற்கு அழைக்க முடியும்? மாற்று அரசியலுக்காக இவன் ஏன் பாரதிய ஜனதா விடம் போனான்? என்னுடைய நோக்கம் ஒன்று தான். என் இனம் ஈழத்தில் அழிவதற்குக் காரணமாக இருந்த காங்கிரசை தமிழ் மண்ணில் கருவறுக்க வேண்டும்.

வாழ்க செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திருநாடு! பாரதி எனக் குக் கற்றுக்கொடுத்த வேதம் அதுதான். முதலில் என் தமிழ். என் தாயின் கரு வில் இருக்கிறபொழுது, நான் முதன் முதலில் காது கொடுத்துக் கேட்டது என் தமிழ். என் தமிழ் வாழ வேண்டும். தமிழால் ஒன்றுபட்டிருக்கிற என் இனம் வாழ வேண்டும். அந்த இனம் இருக்கக்கூடிய இந்திய தேசம் வாழ வேண்டும். இது தான் என் நோக்கம்.

என் இனம் அங்கே அழிக்கப்பட்டது. நான் கேட்கிறேன், வகுப்புவாதம் என்ற ஒன்றை வைத்துக்கொண்டு நீங்கள் பேசுகிறீர்களே, காமராஜருடைய இரத்தம் என் உடம்பில் ஓடுகிறது.தெளிவாகச் சொல்கிறேன். 1971 இல் பெருந் தலைவர் காமராஜர் அவர்கள் இன்றைக்கு இருக்கிற பாரதிய ஜனதா கட்சிதான் அன் றைக்கு ஜனசங்கமாக இருந்தது. அந்த ஜனசங்கம், சுதந்திரா கட்சி அன்றைக்கு இருக்கக்கூடிய இந்தக் கட்சிகளை வைத்துக்கொண்டு ஸ்தாபன காங்கிரஸ் தலைவராக இருந்த பெருந்தலைவர் காமராஜ் கிராண்ட் அலையன்ஸ் என்ற ஒன்றை வைத்தார்.ஜனநாயகத்தைக் காப்போம்.இந்தியாவைக் காப்போம் என் றார்.

காமராஜர் மதவாதியா?

இந்திராகாந்தியிடமிருந்து இந்தியாவைக் காக்க வேண்டும் என்று கருதிய காம ராஜர், அந்த ஜனசங்கத்தோடுகூட போய் நின்றார். அதற்காக பெருந் தலைவர் காமராஜர் மதவாதியா? வகுப்புவாதியா? இசுலாமியர்களுக்கு எதிரியா? சிறு பான்மை சமூகத்துக்கு எதிரான காரியங்களில் ஈடுபட்டவராகாமராஜ். நோக் கம் அன்றைக்கு ஒன்றுதான். இந்திராவை பதவியில் இருந்து இறக்க வேண் டும்.

1977 இல் ஜனதா உருவானது. அதன் தொடக்க கால உறுப்பினராக இருந்த நான் பேசுகிறேன். 1977 இல் உருவான ஜனதா கட்சி, அதில் இந்த பாரதிய ஜனதா கட்சி ஜனசங்கமாக இருந்தது.சோசலிஸ்டுகள் அத்தனைபேரும் அதில் இருந் தார்கள். நண்பர்களே,சோசலிஸ்டுகள் மதவாதிகளா? மதுலிமயி மதவாதியா? ஜார்ஜ் பெர்ணான்டஸ் மதவாதியா? இசுலாமிய சிந்தனைகளுக்கு எதிராக உள் ளவன் தான் ஒரு சோசலிஸ்டா? ஆனால், அன்றைக்கு ஒன்றாக நின்றது ஏன்?
1975 இல் நெருக்கடியைக் கொண்டு வந்து ஜனநாயகத்தின் குரல் வளையை
நெரித்த இந்திராகாந்தியிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும் என்ப தற்காக அன்றைக்குச் சேர முடியாதவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தார்கள்.

நண்பர்களே, வி.பி.சிங் ஆட்சிக்கு வந்தார். வி.பி.சிங்கை ஆட்சியில் உட்கார
வைக்கக்கூடிய சூழலை எப்படி உருவாக்கினார்கள்? ஒரு பக்கம் இடது சாரி களும், இன்னொரு பக்கம் பாரதிய ஜனதா கட்சியும் முட்டுக்கொடுத்த தனால் தானே வி.பி.சிங் ஆட்சி நடந்தது.இந்த இடதுசாரிகள் பாரதிய ஜனதா கட்சி யோடு ஒருபக்கம் இருந்து ஒரு அரசை அமைத்தார்கள் என்பதற்காக அவர் களை மதவாதிகள் என்று பேச முடியுமா? யோசியுங்கள்.

என் அன்பிற்கினிய இசுலாமியத்தோழர்களிடம் கேட்பதற்கு ஒரு கேள்விஇருக் கிறது. பாரதிய ஜனதா கட்சி இது ஒரு அணியில் இருக்கட்டும் என்பதற்காக
என்னை நீங்கள் வகுப்புவாதி என்று நினைத்தால், இந்தத் தமிழ்நாட்டில் அடை யாளமற்றுக் கிடந்த பாரதிய ஜனதா கட்சியை முதன் முதலில் தமிழகத்தின் கிராமங்கள் வரையில் சென்று சேர்த்த பெருமை ஜெயலலிதாவுக்குத்தான் உண்டு.1998 இல் ஜெயலலிதா இந்த பாரதிய ஜனதா கட்சியோடுதான் கூட்டணி வைத்தார்.ஜெயலலிதாவை இசுலாமிய தோழர்கள் வகுப்புவாதி என்று கண்டித் தீர்கள். என் வாழ்நாள் வரை யில் நான் எந்த நிலையிலும் இந்த பாரதிய ஜனதா
கட்சியோடு கூட்டு வைக்க மாட்டேன் என்று பிறகு உங்களிடம் ஒப்பந்தம் எழு திக் கொடுத்தாரா? சென்ற சட்டமன்றத் தேர்தலில் இந்த இசுலாமியர்கள் கணி சமான இளைஞர்கள் இருக்கக்கூடிய அந்த அமைப்பு எதனால் போய் ஜெயலலி தா வோடு கூட்டணி வைத்தது? ஏன் நீங்கள் கூட்டணி வைத்தீர்கள். ஒருமுறை எங்களுக்கு எதிரான மதவாதத்தை வளர்க்கக்கூடிய பாரதிய ஜனதாவுடன் நின் ற உன்னோடு ஒருநாளும் நிற்க மாட்டோம், எந்தப் பயனும் எங்களுக்கு வேண் டாம் என்று சொன்னீர்களா? அங்கே நின்றீர்கள்.இரண்டு சட்டமன்ற உறுப்பினர் களைப் பெற்றீர்கள்.சட்டமன்றத்திற்குள்ளே போனீர்கள்.

சமூக நலனில் இயங்குபவர்

சரி, அதற்குப் பிறகு கனிமொழிக்கு நீங்கள் இரண்டுபேரும் ஆதரவு கொடுத்தீர் களே, 1998 இல் தான் செய்தது தவறு என்று சொல்லிவிட்டு ஜெயலலிதா பார திய ஜனதா கட்சியை விட்டு வெளியே வந்து கை கழுவியபோது, 1999 இல், அடுத்து கருணாநிதி போய் கைகோர்த்து நின்றாரே? பண்டாரங்கள் என்றும், பரதேசிகள் என்றும், ஆக்டோபஸ் கைகளைக் கொண்ட வகுப்பு வாதிகள் என் றும், 1998 இல் ஜெயலலிதா பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்தபோது கடும் விமர் சனங்களை பாரதியஜனதாகட்சிக்கு எதிராக வைத்தவர் கலைஞர்.ஒரு ஆண்டு கூட முடியவில்லை. ஆட்சி கவிழ்ந்தது.நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. 1999
இல் கருணாநிதி போய் அங்கே கூட்டணி வைத்தார். வகுப்பு வாதத்தை வளர்த் தெடுத்தவர்களோடு போய் உட்கார்ந்தாரே! ஐந்து ஆண்டுகள் வாஜ்பாய் நடத் திய ஆட்சியில் அமர்ந்து இந்தக் கொள்ளை அன்றும் நடந்ததே. அது உங்கள் கண்ணுக்குத் தெரிகிறதா? அவருடைய திருமகள் கனிமொழி எப்படியும் ராஜ்ய சபா உறுப்பினராக வேண்டும் என்று கலைஞர் துடித்தார். 2ஜி அலைக்கற்றை ஊழல் கடுமையாகஅவரை பாதித்திருக்கிறது இப்பொழுது. சி.பி.ஐ. நீதிமன்றத் தில் ஒரு குற்றவாளியாக அவர் நிற்கிறபோது சாதாரண கலைஞர் கருணாநிதி யின் பின்னால் இருப்பதைவிட, ஒரு மாநிலங்களவை உறுப்பினராக இருப்பது
என்றால், பாதுகாப்பாக இருக்கும் என்று தானே முயன்றார். ஜெயலலிதா வோடு சேர்ந்து நின்று இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்ற நீங்கள் ஊழல் மலிந்த வகுப்புவாதத்தை வளர்த்தெடுத்ததாக நீங்கள் சொல்லு கிற பாரதிய ஜனதா கட்சியோடு 1999 முதல் 2004 வரை கூட்டணி வைத்து ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்துகொண்ட கருணாநிதியின் திருமகளுக்கு ஏன்
ஓட்டுப்போட்டீர்கள்? நீங்கள் செய்தால் எதுவும் சரி. நாங்கள் செய்தால் எல் லாம் தவறா? ஒன்று புரிந்துகொள்ளுங்கள் தெளிவாக நான் சொல்கிறேன்.எந்த
நலனிலும் நாட்டம் இல்லாத - சமூக நலனில் இயங்குகிற நான் சொல்கிறேன்.
நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.ஒருநாளும் இசுலாமிய சமுதாயத்தை நாங் கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்.

12 கோடிக்கும் மேற்பட்ட இசுலாமிய மக்கள் இந்திய மண்ணிலே வாழ் கிறார் கள். உலகத்திலேயே அதிகமாக இசுலாமியர் கள் வாழ்கிற பெருமை இந்தியா வுக்கும், இந்தியாவிற்கு அடுத்து இந்தோனேசியா வுக்கும் தான். இசுலாமிய நாடுகள் என்று சொல்லிக்கொள்கிற நாடுகளிலே கூட இவ்வளவு மக்கள் தொகை கிடையாது. 12 கோடி இசுலாமியரை ஒதுக்கித் தள்ளிவிட்டு ஒரு இந் திய தேசத்தை கனவு காண முடியுமா என்ன? முடியவே முடியாது. ஆனால், அதே நேரத்தில் என் இசுலாமிய தோழர்களுக்கு நான் சொல்லிக் கொள்கிறேன். மதவாதம் என்ற ஒரே ஒரு முகமூடியை வைத்துக்கொண்டு உங்களைத் தொ டர்ந்து ஏமாற்றிக் கொண்டு இருப்பது காங்கிரஸ்.மதச்சார்பற்ற தன்மை என் கிற ஒரு வார்த்தை அரசியல் வார்த்தையாக இன்றைக்கு காங்கிரஸ்காரனால் பயன் படுத்தப்படுகிறதே தவிர, உங்களுக்காக உண்மையில் அவன் இல்லை.
இன்றைக்கு உங்கள் வாக்கு வங்கியை மையமாக வைத்து அரசியலை நடத்தத்
துடிக்கிறான் அவன்.

மோடியை பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் என்று அறிவித்த அடுத்த கண மே, காங்கிரஸ் கூடாரம் கலகலத்து விட்டதே. இந்த ஆட்சியை இழந்து விடு வோம் என்ற பதற்றம்; நான் கேட்கிறேன் உங்களை. ஐநூறுக்கும் மேற்பட்ட என்னுடைய தமிழ்ச் சமூகத்தின் மீனவர்கள் அன்றாடம் சுட்டுக்கொல்லப்பட்ட பொழுது அதற்கு எதிர்த்துக் கேட்பதற்கு திராணி இருந்ததா இந்த காங்கிரஸ் அரசுக்கு?

மதம், சாதி இல்லை...

எனக்கு சாதி கிடையாது. நான் எல்லா சாதிகளையும் நேசிக்கிறேன். எல்லா
மதங்களையும் நேசிக்கிறேன். ஒரு இசுலாமிய தோழன் திருமறையை வாசித் ததைவிட கூடுதலாக வாசித்து இருப்பவன் தமிழருவி மணியன். உலகம் முழு வதும் முகமது நபிகளின் பெருமைகளைப் பேசக்கூடியவன் நான்.இதே தமிழன் தொலைக்காட்சியில் ஒவ்வொரு தலைவரும் முகமது நபிகள் பெருமானாரின் பெருமைகளைப் பற்றி பேசி அதை வெளிப்படுத்தினார்கள். ஒரு மணி நேரம் நான் பேசினேன். இசுலாமிய தோழர்கள் கடல் கடந்து இருக்கக் கூடியவர்கள் எல்லாம் தொலைபேசியில் தொடர்புகொண்டு சொன்னார்கள்,அய்யா ஒரு இசு லாமியனேகூட இப்படி பேசியிருக்க முடியாது அய்யா, பெருமானாரின் பெரு மைகளைப் பற்றி என்று சொன்னார்கள். நான் பேசுவேன்.நான் கீதையைப் படிப் பதோடு முடிப்பவன் இல்லை. நான் கீதையை எப்படிப் படிக்கிறேனோ அதை விடக் கூடுதலாக திருமறையைப் படிப்பவன்.அதைப் போன்று பைபிளையும் நான் வாசிப்பேன்.

எனக்கு மதம் இல்லை. எனக்கு சாதி இல்லை. வெறும் வார்த்தைகளை வைத் துக்கொண்டு வாழ்க்கை நடத்துகிற ஈனப்பிறவி நான் இல்லை. என்னுடைய மகன் வேற்று சாதியைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவளை நான் காதலிக்கிறேன் என்றான். காதல் செய்வீர் உலகத் தீரே என்று சொன்னவன் பாரதியடா, அந்த பாரதியிடம் நெஞ்சைப் பறிகொடுத் தவன் நான். நன்றாக வாழ்ந்தால் சரி. அவர்கள் ஓடிவிட வில்லை நான் நின்று செய்து கொடுத்தேன்.

என் மனைவி எதிரே அமர்ந்திருக்கிறார். என்னுடைய மகள் எம்.ஏ. ஆங்கில
இலக்கியம் படிக்கிறபொழுது,உடன் படித்த ஒரு கிறித்துவ இளைஞனை அவள் காதலித்தாள். அப்பா நான் இந்தக் கிறித்துவ இளைஞனைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்றாள்.ரொம்பச் சரி. மதங்களை மீறி மனிதம் தழைக்க வேண்டும் என்று மேடை தோறும் முழங்கிக் கொண்டிருக்கிறேன்.உனக்கு நான் நன்றி பாராட்டுகிறேன் என்று என் மகளிடம் சொன்னேன். சாதி கடந்து இருவரும் அற்புதமான இல்லற வாழ்க்கையை ஒரு பக்கம் என் மகனும் மரும களும் நடத்துகிறார்கள். மதம் கடந்து அற்புதமாக வாழ்க்கையை ஒரு பக்கம் என் மகளும் மருமகனும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதை நான் பார்த்து மகிழ்ந்துகொண்டிருக்கிறேன்.

எனக்கு சாதி இல்லை. எனக்கு மதவெறி இல்லை. மனிதம் மனிதம் அதுதான்
முக்கியம். இன்றைக்கு இங்கு ஒரு பாரதிய ஜனதா கட்சியும், ம.தி.மு.க.வும்,
தே.மு.தி.க.வும் ஒரு கூட்டணி அமைப்பதாக இருந்தால் அதற்கு என்ன அடிப் படையில் இந்தக் கூட்டணி அமையவேண்டும் என்று நான் இப்பொழுது ஜூனி யர் விகடனிலே எழுதியிருக்கிறேன்.

எந்த நிலையிலும் ஜம்மு காஷ்மீருக்கு என்று வழங்கப்பட்டிருக்கிற விசேச
சலுகை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370 ஆவது பிரிவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கை வைக்கக் கூடாது. காமன் சிவில் கோடு என்று
சொல்லி, அவர்களுடைய உணர்வுகளை துன்புறுத்துகிற வேலையில் ஈடுபடக்
கூடாது.உச்ச நீதிமன்றத்தீர்ப்புக்கு தலைவணங்க வேண்டும், ஒவ்வொரு இந்து வும், ஒவ்வொரு இசுலாமியனும். பாபர் மசூதியைப் பொறுத்தவரையில் உச்ச நீதிமன்றம் கொடுக்கும் தீர்ப்புதான் முடிவு. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவ தற்கு முன்பு இப்பொழுது விசுவ ஹிந்து பரிசத் அங்கே நடத்திய சர்வபரி யாத் திரை என்ற ஒன்றை நீங்கள் நடத்தக்கூடாது.

காங்கிரசின் தவறுகளை வெளிப்படுத்துங்கள்

பாரதிய ஜனதா கட்சி, ம.தி.மு.க.,தே.மு.தி.க. இவை மூன்றும் ஒரு அணியாக அமைய வேண்டும் என்று ஒருபக்கம் முயன்று கொண்டிருக்கிற பொழுதே, என்னுடைய காந்திய மக்கள் இயக்கத்தின் மாத இதழ் ரெளத்திரத்தில் தலை யங்கம் எழுதினேன். பாரதிய ஜனதா கட்சி நண்பர்களுக்கு நான் சொல்கிறேன். நீங்கள் உண்மையிலேயே மாற்று அரசியலை நம்புவதாக இருந்தால், காங்கி ரஸ் ஆட்சியில் செய்த தவறுகளை முதலில் வெளிப் படுத்துங்கள். ஊழலை வெளிப் படுத்துங்கள். நிர்வாகத் திறமையற்ற நிலையை வெளிப்படுத்துங்கள்.

அவற்றை முன் வைத்து மக்களிடம் செல்லுங்கள். ஒரு நாளும் மதத்தை முன் வைத்து மக்களிடம் செல்லாதீர்கள்.சென்றால், நீங்கள் இந்த மண்ணில் வாழ
முடியாது. 80 விழுக்காடு இந்துக்கள் போல உலகம் முழுவதிலும் தேடினாலும்
நீங்கள் மக்களைப் பார்க்கவே முடியாது.அவர்கள் இரத்தம் முழுவதும் ஓடுவது
மதச்சார்பற்ற தன்மைதான். காங்கிரஸ் காரன் மதச்சார்பின்மையைக் காப்பாற் ற வில்லை. எந்த அரசியல் தலைவரும் இந்த நாட்டில் இருக்கக்கூடிய பெரும்
பான்மை இந்துக்களிடம் மதச்சார் பின்மையைக் கொண்டுபோய் சேர்க்க வில் லை. ஒவ்வொரு இந்துவாகப் பிறந்த வனும் அவன் அடிப்படையிலேயே மதச் சார்பற்றவன். அவன் மீனாட்சியை மட்டும் வணங்க மாட்டான். வேளாங்கண் ணிக்கும் போவான். நாகூருக்கும் போவான். ஆனால், நீங்கள் வர மாட்டீர்கள். உங்களைக் குறை சொல்வதற்காக இதை நான் சொல்ல வில்லை. காரணம் உங்களுக்கு உருவ வழிபாடு கிடையாது. அதனால் உருவ வழிபாடு நடத்தக் கூடிய இடங்களுக்கு நீங்கள் வருவது நியாயமும் இல்லை.

ஆனால், எங்களுக்கு அந்தப் பிரச்சினையே இல்லை. என்னை நீங்கள் கூப்பி டுங்கள், பள்ளிவாசலுக்கு வந்து நான் தொழுவதற்குத் தயாராக இருக்கிறேன். தேவாலயத்திற்குக் கூப்பிடுங்கள், இயேசு பிதாவே நான் ஏதாவது இந்தப்பிறவி யில் பாவம் செய்திருந்தால் என்னை மன்னித் தருளும் என்று மண்டியிட்டுப்
பிரார்த்தனை செய்யத் தயாராக இருக்கிறேன்.காலையில் மீனாட்சி கோயிலுக் குப் போனேன்.

மதத்தை வைத்து அரசியலா?

எல்லா இடத்திலும் ஒரு பரம்பொருளைப் பார்க்கிற பக்குவத்தை நான் பெற்று
இருக்கிறேன். எனவே, இது அல்ல அரசியல். மதத்தை வைத்து அரசியல் செய் யாதீர்கள். ஒருசிலர் மட்டுமே இந்தக் காரியத்தில் ஈடுபடுகிறீர்கள். சிறுபான் மை மக்களின் உணர்வு காயப்படக்கூடாது என்பது எவ்வளவு உண்மையோ அதே போன்றுதான் பெரும்பான்மை மக்களின் உணர்வுகள் காயப்படுவதற்கும் நீங்கள் இடம் தரலாகாது. இதை வைகோ சொல்லத் தயங்கலாம்.வேறு யாரும்
சொல்லத் தயங்கலாம். எனக்கு அதுகுறித்து கவலை இல்லை.இந்தியாவில் இருக்கிற ஒவ்வொருவனும் இந்தியன். என் வீட்டில் நான் இந்து. நீ முஸ்லிம், அவன் கிறித்துவன், அவன் பார்சி, அவன் சீக்கியன். வீதிக்கு வந்து விட்டால், நீ இந்தியன். நான் இந்தியன்.அனைவரும் இந்தியர்கள் தான்.இந்தியனாக இருப்ப திலே என்ன தடை.இந்தியனாக இருப்பதற்கு தடையை பாரதிய ஜனதா கட்சி கொண்டு வருமானால், அந்த பாரதிய ஜனதா கட்சியை இல்லாமல் ஆக்குவது எனது முதல் கடமையாகும்.

ஆனால்,உங்களை நான் கேட்கிறேன்.6 ஆண்டு காலம் வாஜ்பாய் ஆட்சி நடத்தி னார். ஒருமுறை வாஜ்பாய் ஆட்சியில் ம.தி.மு.க.வும் இருந்தது.அதே வாஜ் பாய் ஆட்சியில் ஒருமுறை தி.மு.க.வும் இருந்தது. கலைஞர் சொல்லுவார், நான் ஏன் அங்கே இருந்தேன் தெரியுமா? நாளைக்கே சொல்கிறேன் உங்களுக் கு. மோடிக்கு இங்கே பெரிய ஆதரவு அலை வீசுகிறது என்பது உண்மை என்று கலைஞர் கருணாநிதி தெரிந்துகொண்டால், அடுத்த கணமே பாரதிய ஜனதா
கட்சியின் கதவை அவர் தட்டுவார்.அவருக்கு எந்தக் கொள்கையும் கிடையாது. பெரியார் உருவாக்கிய,அண்ணா வளர்த்தெடுத்த அத்தனை கொள்கைகளை யும் கைகழுவி விடுவது ஒன்றுதான் அவர் வைத்திருக்கிற ஒரே கொள்கை. அவருக்கு இருக்கிற ஒரே கொள்கை அதுதான். அவர் வாழ வேண்டும். அவர் குடும்பம் வாழ வேண்டும். அதற்குப் பிறகு போனால் போகட்டும் கொஞ்சம் இந்த சமுதாயமும் வாழ்ந்து தொலையட்டும். அவருக்கு முன்னுரிமை இருக் கிறது. முதல் முன்னுரிமை என்ன? அவர்தான்.

இன்றைக்குக்கூட ரெளத்திரத்தில் ஒருகேள்விக்கு பதில் கொடுத்திருக்கிறேன்,
உலகத்திலேயே உங்களுக்குப் பிடித்த தலைவர் யார்? என்று கருணாநிதியைக்
கேட்டிருக்கிறார்கள். கேட்டார்களோ இல்லை,அவரே கேட்டுக் கொண்டாரோ? அவரே கேள்வி அவரே பதில்தானே! அதற்கு அவர் எழுதுகிறார்,பிடல் காஸ்ட் ரோ. என்னிடம் ஐயா, கருணாநிதி இப்படிச் சொல்லி இருக்கிறாரே, பிடல் காஸ்ட்ரோவின் எந்த குணமாவது இவரிடம் இருக்கிறதா? என்று என்னிடம் ஒருவர் கேட்டார். நான் அதற்கு பதில் எழுதியிருக்கிறேன். பிடல் காஸ்ட்ரோ போராளி. ஆதிக்க எதிர்ப்பாளன் அவன். பாடிஸ்டாவினுடைய முதலாளித்துவ அமெரிக்க அடிவருடி ஆட்சியை ஒழித்து ஒரு புரட்சிகரமான சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்பதற்காகப் போராடிய போராளி அவர்.கலைஞர் கரு ணாநிதி வாயில் மட்டுமே வீரத்தைப் பேசிக்கொண்டிருக்கிற வாய் வீரர். அவ ரது பக்கத்திலே இருந்த கண்ணதாசன் மிக அழகாகச் சொல்வார். கலைஞர் கருணாநிதியும்,கருணாநிதி பரிவாரமும் எப்படி என்பதைப் பற்றி அவன் சொல் வான், கலைஞர் கருணாநிதி மேடை போட்டால் சொல்வார், படை இங்கே, தடை எங்கே? படை தயாராக இருக்கிறதாம். உடனே இந்திய அரசு தடை இங் கே, படை எங்கே? அவ்வளவுதான். ஒரு படையும் காணவில்லை. உடம்பில் வேண்டுமானால் படை இருக்குமே தவிர, ஒரு படையும் இருக்காது. வெறும் வார்த்தை வாய் வீரர். எந்த வகையிலும் பிடல் காஸ்ட்ரோவை கலைஞர்
கருணாநிதியுடன் ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது என்று நினைக்கிறபொழுது,
ஒன்றில் அவரை ஒப்பிட முடியும் என்றேன்.

என்ன தெரியுமா? ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகாலம் சலிப்பில்லாமல் அந்த அதிகார நாற்காலியில் அமர்ந்து இருந்தவர் பிடல் காஸ்ட்ரோ. காஸ்ட்ரோவுக் குப் பதவியில் இருப்பது பிடிக்கும். கருணாநிதிக்கும் பதவியில் நீண்ட காலம் இருப்பது பிடிக்கும்.ஆனால், அதிலேகூட ஒரு வேற்றுமை இருக்கிறது. என்ன தெரியுமா? பிடல் காஸ்ட்ரோ வயது முதிர்ந்த நிலையில் இனி நம்மால் முடி யாது என்று தன்னுடைய தம்பியை அதிபராக கியூபாவின் நாற்காலியில் உட் கார வைத்துவிட்டு விலகிக்கொண்டார்.ஆனால், கருணாநிதி சக்கர வண்டி யில் சக்தியற்றுப் பயணம் செய்தாலும் ஸ்டாலினை முதலமைச்சராக்கவோ,
தலைவராக்கவோ தயாராக இல்லை.இதுபோன்ற மனிதர்களைத்தான் நாம்
பார்க்கிறோம்.

தமிழனுக்குத் துரோகம்

நான் இப்பொழுது உங்களுக்குச் சொல்கிறேன். எனக்கு ஒரு அணி வேண்டும். நீங்கள் சொல்லுங்கள்.நீங்கள் நியாயம் சொல்லுங்கள்.அவ்வளவுதான். இங்கே கூடியிருக்கிற இவ்வளவு பெரிய கூட்டத்தைப் பார்த்து நான் கேட்கிறேன் நீங் கள் நியாயம் சொல்லுங்கள். எனக்கு காவிரிப் பிரச்சினையில் தீர்ப்பாயம் வழங் கிய தீர்ப்பை ஐந்தாண்டு காலம் மத்திய அரசு கெஜட்டில் போடாமல், அரசித ழில் வெளியிடாமலே தமிழ்நாட்டில் இருக்கிற விவசாயிகளுக்குத் துரோகம்
இழைத்ததா? இல்லையா? ஒரு தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பு உடனே அரசிதழில் வெளியிட வேண்டுமா? இல்லையா?ஏன் வெளியிடவில்லை? கர்நாடகத்திற்கு ஆதரவாக தமிழனுக்குத் துரோகமாக இந்த மன்மோகன்சிங் அரசு நடந்ததா இல்லையா? கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.

இரண்டு மலையாள மீனவர்கள் கொல்லப்பட்டபொழுது, இத்தாலி அரசை நிர் பந்தப்படுத்திப் பணியச் செய்ததே? ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் செத்தார்களே, சுட்டுக் கொல்லப்பட்டார்களே! இதுவரை என்ன செய்திருக்கி றீர்கள்? ராஜபக்சேவுக்கு எதிராக மன்மோகன் சிங் வாயிலிருந்து ஒரு கண்ட னம் வந்ததுண்டா? ஐநூறுக்கும் மேற்பட்ட என் தமிழ் மீனவர்கள் செத்தார்கள். ஆனால், நீங்கள் இலங்கையை நட்பு நாடு என்று சொல்லிக்கொண்டிருக் கிறீர்கள். ஒரே நாளில் முள்ளிவாய்க்காலில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட என் குலமக்கள் கொன்றொழிக்கப் பட்டார்களே ராஜபக்சே அரசினால்,அதற்குப் பின்னாலே இருந்து எல்லா கரும காரியங்களையும் செய்தது இந்த மன்மோ கன்சிங்கினுடைய அரசுதானே!

தொடரும்...

No comments:

Post a Comment