Tuesday, October 15, 2013

சிலப்பதிகார விழாவில் வைகோ உரை -பகுதி 1

“சிலம்பு சிலம்பு” என்று முழங்கிய சிலம்புச்செல்வரின் முழக்கம், தமிழர் களின் இதயங்களில் ஒலிக்க வேண்டும்!

ம.பொ.சி. நினைவு விழா மற்றும் முதலாம் ஆண்டு சிலப்பதிகார விழா வில் #வைகோ

சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களின் 18-ஆம் ஆண்டு நினைவு விழா மற் றும் முதலாம் ஆண்டு சிலப்பதிகார விழா 05.10.2013 சனிக்கிழமை அன்று சென் னையில் ம.பொ.சி.அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் பங் கேற்று, கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரை:

நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும்
தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நல்நாட்டு
மாட மதுரையும் பீடுஆர் உறந்தையும்,
கலிகெழு வஞ்சியும், ஒலிபுனல் புகாரும்
அரசுவீற் றிருந்த உரைசால் சிறப்பின்


தமிழகத்தில் எழுத்தால், பேச்சால், தொண்டால்,தியாகத்தால், போராட்டங்க ளால், அழியாப் புகழ் பெற்றுஇருக்கின்ற சிலம்புச் செல்வர் ம.பொ.சி.அவர்களு டைய 18 ஆவது நினைவு நாள் நிகழ்ச்சிக்கு, முதலாம் ஆண்டு சிலப்பதிகார விழாவுக்கு தலைமை தாங்குகிற உலகத் தமிழர் பேரமைப்பினுடைய தலைவர் ஆருயிர் அண்ணன் பழ.நெடுமாறன் அவர்களே, பாரதிய ஜனதா கட்சியினு டை ய தமிழ் மாநிலத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அன்புச் சகோதரர் பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களே, தொழிலதிபர்-கலைமாமணி-இந்தப் புவி யின் பல நாடுகளில் வான்புகழ் வள்ளுவப் பெருந்தகையினுடைய திருஉருவச்
சிலையை நிறுவுகின்ற அரும்பணியைச் செய்து வரும் மதிப்புக்குரிய வி.ஜி. சந்தோஷம் அவர்களே, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடிய சகோதரி முனை வர் வாசுகி கண்ணப்பன் அவர்களே, தொகுத்துத் தந்த செந்தில்குமார் அவர் களே, நீதியரசர் வள்ளிநாயகம் அவர்களே, இந்த நிகழ்ச்சியிலே பங்கேற்றிருக் கின்ற கவிஞர் தாமரைச் செல்வன் அவர்களே, இந்த அரிய வாய்ப்பை எனக்கு வழங்கி இருக்கின்ற அன்புக்குரிய சகோதரி-சிலம்புச் செல்வரது பெயரால் இருக்கின்ற அறக்கட்டளையை நடத்துகின்ற மாதவி பாஸ்கரன் அவர்களே, அன்புடைய சகோதரிகளே, தமிழன்பர்களே, பத்திரிக்கையாளர்களே, ஊடகவி யலாளர்களே வணக்கம்.


1906 ஆம் ஆண்டு,ஜூன் 26 ஆம் நாள்,இந்தத் தலைநகரின் ஒரு பகுதியில்,நினை விலே வாழுகின்ற பொன்னுசாமி கிராமணியார்-சிவகாமி அம்மாள் தம்பதியி னருக்கு ஒன்பதாவது பிள்ளையாகப் பிறந்து, காவியம் படைத்து இருக்கின்ற பெருமகன், சிலம்புச் செல்வர் அவர்கள், 1995 ஆம் ஆண்டு, அக்டோபர் 3 ஆம் நாள், இந்த மண்ணை விட்டு மறைந்தார். அவரது நினைவு நாளை, அக்டோபர் 3 ஆம் நாளிலேயே நடத்தத் திட்டமிட்டபோதும், தவிர்க்க இயலாத காரணங் களால்,இன்று அக்டோபர் ஐந்தாம் நாளில் நடைபெற்றுக் கொண்டு இருக்கின் றது.

என்னுடைய வாழ்க்கையில் சில நிகழ்வுகள் அழுத்தமான உணர்வுகளை ஏற் படுத்தி விடும். அந்த வகையில்,முதலாம் ஆண்டு சிலப்பதிகார விழாவில், அந்த ஊடகத்தைத் தொடங்கி வைப்பதற்கும், உரை ஆற்றுவதற்கான பொன் னான வாய்ப்பைத் தந்தமைக்காக, அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு நன்றியைத்
தெரிவித்துக் கொள்கின்றேன்.

49 ஆண்டுகளுக்கு முன்னர் இதேபோல அக்டோபர்த் திங்களில், இரு சப்ப கிரா மணி தெருவில் வாழ்ந்த சிலம்புச் செல்வரை, ஒருநாள் காலை 9.00 மணி அள வில் அவரது இல்லத்துக்குச் சென்று நான் சந்தித்தேன். அப்போது, நான் மாநி லக் கல்லூரியின் மாணவன்; அக்கல்லூரியின் விக்டோரியா விடுதியின் தமிழ் மன்றத்தின் தலைவர்.அவர்களிடம் என்னை நான் அறிமுகப்படுத்திக்கொண்டு, ‘ஐயா, எங்கள் மன்றத்தில் தமிழுக்கு விழா எடுக்கின்றோம்;சிலம்பு விழா நடத்த
விழைகின்றோம்; தாங்கள் பங்கு ஏற்க வேண்டும் என வேண்டினேன். தலை யை அசைத்தார். அடுத்த விண்ணப்பத்தைத் தொடுத்தேன்.‘ஒரு பட்டிமன்றத் தை,  சிலப்பதிகாரப் பட்டிமன்றமாக அமைத்து, நீங்கள் அதற்கு நடுவராகப் பொறுப்பு ஏற்க வேண்டும்’ என்று கேட்டேன். சிரித்தார்.

‘தம்பி, பட்டிமன்றத்தில் பேசுகின்ற பழக்கம் எனக்கு இல்லை’ என்று சொன் னார்.

‘அதனால்தான் கேட்கிறேன், எங்கள் தமிழ்மன்றத்தில் பட்டிமன்றத்துக்கு நடுவ ராகத் தலைமை ஏற்றுப் பேசுங்கள்’ என்று கேட்டேன். ஏதோ ஒரு விதத்தில் என் வேண்டுகோள் அவர் மனதில் நெகிழ்வை ஏற்படுத்தி இருக்க வேண்டும். என்னை மறுக்க முடியாத உணர்வு அவருக்கு ஏற்பட்டு இருக்க வேண்டும்.

ஒரு நிமிடம் பார்த்தார். ‘சரி’ என்றார்.

‘ஐயா அவர்களே ஒரு தலைப்புத் தரவேண்டும்’ என்றேன். ஒரு நொடியும் யோசிக்கவில்லை. 

உடனே சொன்னார். “கோவலன் குறை உடையவனா? நிறை உடையவனா?” இது தான் தம்பி பட்டிமன்றத்தின் தலைப்பு’ என்று சொன்னார்.

சிலப்பதிகாரத்தில் அவருக்கு இருந்த ஆழ்ந்த புலமை, வாழ்ந்த அறிஞர்களுள் வேறு எவருக்கும் கிடையாது என்பது எனது திட்டவட்டமான கருத்து.

குறித்த நாளில் தமிழ் மன்றத்திற்கு வந்தார்.அம்மன்றத்தின் தலைவர் என்ற முறை யிலே, இந்த எளியவனுக்கு இருக்கக்கூடிய ஒரு எளிய நுனிப்புல் மேய்ந்த தமிழ் அறிவிலே, சிலப்பதிகாரத்தையும், திருக்குறளையும் முன்னி றுத்தி வரவேற்புரை ஆற்றினேன். இருதரப்பிலும் தமிழ் அறிஞர்கள் வாதாடி னார்கள். ஏறத்தாழ ஒரு மணி நேரம், அவர் தீர்ப்பு உரையாக நடுவர் உரை ஆற்றினார்.

‘புகார்க் காண்டத்திலே கோவலன் குறை உடையவன்;மதுரைக் காண்டத்திலே குறை நீங்கி, நிறை உடையவனாகத் திகழ்கிறான், இதுதான் தீர்ப்பு’ என்று அறி வித்தார்.

49 ஆண்டுகள் ஓடி மறைந்து விட்டன. இன்று இந்த விழாவில் அவருடைய பெருமைகளைப் பேசுகிறேன்.

ஐயா சிலம்புச் செல்வருடைய ‘எனது போராட்டம்’ என்ற ‘எனது போராட்டம்’
வரலாற்று நூலில் ஒரேயொரு இடத்தில் குறிப்பிடுகிறார்.

வாழ்நாள் எல்லாம் சிலம்பின் சிறப்பை எடுத்து உரைத்து, தான் தொடங்கிய தமிழரசுக் கழகத்தின் முதல் நாள் மாநாட்டை சிலப்பதிகார விழா மாநாடாக நடத்திய அப்பெருமகனார், தில்லையிலே இளங்கோ மன்றத்தில் முதன் முத லாக சிலப்பதிகாரத்தினுடைய சிறப்பைப் பற்றி உரையாற்றிய பெருமகனார், நாகர்கோவில் தமிழ்ச் சங்கத்திலே சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை அவர் களால் “சிலம்புச் செல்வர்”என்ற விருது பெற்ற பெருமகனார், விழா நடைபெற் றது காவிரிப் பூம்பட்டினத்திலே, ‘எனக்கு விருப்பம் இல்லாத முறையில் என்னை ஒரு பட்டிமன்றப் பேச்சாளராக ஆக்கி, பட்டிமன்றத்தில் பேச வைத் தார்கள்’ என்று எனது போராட்டத்தில் எழுதி இருக்கிறார்.

அதைப் படிக்கின்றபோது நான் நினைத்தேன், ஒரு மாணவனான நான் போய் அழைத்தபோது, விரும்பி ஒரு தலைப்பைக் கொடுத்து, எங்கள் மத்தியிலே வந்து அந்தத் தலைப்புக்கு நடுவராக இருந்து பேசுகிறபொழுது மகிழ்ச்சியோடு செய்தவர்,இந்தப் பட்டிமன்றத்திலே ஒரு பேச்சாளனாக ஆக்கிய வருத்தத்தைச் சொல்கிறார்.

இளமைப்பருவம்

எளிய குடும்பத்தில், வறிய குடும்பத்தில் அவர் பிறந்ததைக் குறிப்பிட்டார்கள். மூன்றாவது வகுப்புக்கு மேல் பள்ளிக்கூடத்துக்குப் போகாமல், கட்டடங்க ளுக்கு செங்கல் சுமக்கின்ற சிற்றாளாகத் தொடங்கி, பாவு போடுகிற நெசவுத் தொழிலாளியாக வாழ்ந்து, அச்சுக் கோர்க்கின்ற தொழிலாளியாகத் திகழ்ந்து, வாழ்நாள் எல்லாம் ஒரு தியாகப்பெருவாழ்வு நடத்திய அந்தத் தமிழ்ச் செம்மல், ‘கிராமணி குல’ ஏடு நடத்துகிறார். 

1923 ஆம் ஆண்டு,காங்கிரசினுடைய உட்பிரிவாகிய சுயராஜ்யக் கட்சியின் தேர் தல் பிரச்சாரத்தில் முதன் முதலாக ஈடுபடுகிறார். அதன் பிறகு 1927 ஆம் வரு டம் காங்கிரஸ் கட்சியில் ஆண்டுச் சந்தா செலுத்தி உறுப்பினர் ஆகிறார். 1928 ஆம் ஆண்டு, சைமன் கமிசன் எதிர்ப்புப் போராட்டக் களத்திற்கு வருகிறார்.1930 இல், உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில், இதே திருவல்லிக்கேணி கடற்கரை யிலே ஆந்திர கேசரி பிரகாசம் உள்ளிட்டோர் கலந்துகொண்ட போராட்டத்தில் பங்கு ஏற்கிறார்.

அவர் தொடக்க காலத்தில் வடசென்னையில் வாழ்ந்த போது, கள்ளுக்கடை களை எதிர்க்கின்ற போராட்டத் தீரராகத் திகழ்ந்தபோது, அதனால் அவர் நிந்திக் கப்பட்ட வேளையில், முதன் முதலாக அவர் ஆற்றுகிற உரை, கள்ளுக்கடை மறியலை எதிர்க்க வேண்டும் என்று சமூக மக்கள் சேர்ந்து ஒரு கூட்டம் நடத் தகிறார்கள், அந்தக் கூட்டத்திலே பேசப் போகிறார்.

‘கள்ளுக்கடை மறியல் கூடாது; கள் வேண்டும்.’ இது அவர்களுடைய கோரிக் கை.

இவர் பேசச் செல்கிறார். ஒரு தீர்மானம் போட்டு, கள்ளுக்கடை மறியலைத் தடை செய்ய வேண்டும் என்பதற்காக நடத்தப்படுகின்ற கூட்டத்தில் இவர் போய் உரையாற்றுகிறபொழுது, ‘கள் விற்பனை செய்கின்ற கிராமணிகள், அங்கே இருக்கின்ற தொழிலாளக் கிராமணிகளுக்கு எப்படி நீங்கள் அவர்களுக் குத் துன்பங்களை விளைவிக்கின்றீர்கள்? முதலில் அவர்களுடைய துயரங் களைத் தீர்ப்பதற்கு வாருங்கள்’ என்று பிரச்சினையை இப்படிக் கொண்டு போனதன் காரணமாக, அன்றைக்குத் தீர்மானம் நிறைவேற்ற முடியாமல் போயிற்று என்று, எனது போராட்டத்திலே குறிப்பிடுகின்றார் ம.பொ.சி.

தமிழன், தமிழ் முரசு, தமிழன், தமிழ் முரசு, செங்கோல் செங்கோல் ஆகிய இதழ் களுக்கு அவர் ஆசிரியராக இருக்கின்றபொது, தமிழ்முரசு ஏட்டுக்கு இராஜாஜி யிடம் வாழ்த்துச் செய்தி கேட்கிறார். 

‘நீங்களே தமிழ் முரசு, வேறு ஒரு முரசு வேண்டுமா?’என்று இரண்டே வரி யிலே இராஜாஜி வாழ்த்து எழுதி அனுப்பினார்.

தான் வறுமையோடு போராடியதை, தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட அவ லங்களை, பட்டினி கிடக்க நேரிட்டதை, பசியோடு போராடியதை தன் குடும்பம்
துன்பத்தில் சிக்கியதை அத்தனையும் தன்னுடைய சுயசரிதையில் பதிவு செய் கிறார் ம.பொ.சி. ‘எனது போராட்டம்’ என்ற நூலிலே தெரிவிக்கின்றார்.

வெள்ளைக்காரன் ஆட்சியில் ஆறு முறை சிறை சென்றார். சுதந்திர இந்தியா வில் மூன்று முறை சிறை சென்றார். எல்லை காக்கும் போரிலே சிறை சென் றார்.அவர் முதல் கட்டத்திலே ஆறு மாத காலம் கடுங்காவல் தண்டனை.சென் னை மத்திய சிறைக்குச் செல்கிறார்.காங்கிரஸ் கட்சியினுடைய காரிய தர்சி யாக இருந்து,சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக உயர் கிறார்.

செய்; அல்லது செத்து மடி என்று, மும்பை நகரிலே 1942 ஆம் ஆண்டு ஆகஸ்டு 8ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது.9 ஆம் தேதி காலையில் மகாத்மா காந்தி கைது செய்யப்படுகிறார். புரட்சி வெடிக்கிறது. 

அந்த வேளையில், சென்னை மாகாணத்தில் ஆங்காங்கு ரகசியச் செய்தி களைக் கொண்டுபோய் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தருகின்ற வேலையை பெருந்தலைவர் காமராஜர், ம.பொ.சி. அவர்களுக்கு தருகிறார்.

1942 ஆகஸ்டு 13ஆம் தேதி ம.பொ.சி. கைது செய்யப்படுகிறார். வேலூர் சிறைக் குக் கொண்டு போகிறார்கள்.பிரகாசம், காமராஜர் உள்ளிட்ட பெரிய தலைவர் கள் அனைவருமே அங்கே இருக்கின்றார்கள். அவர்களுள் 30 பேர் தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டு, 30 ஆம் தேதி வேறு இடத்திற்குக் கொண்டுபோகிறார்கள்.
சென்னைக்குக் கொண்டுவந்து, கிராண்ட் ட்ரங்க் ரயிலிலே ஏற்றுகிறார்கள். நாகபுரியில் இருந்து 98 மைல்களுக்கு அப்பால் இருக்கின்ற, மராட்டிய மாநிலத் தின் அமராவதி சிறையில் கொண்டு போய் அடைக்கின்றார்கள்.

அங்கே, வி.வி.கிரி, ஆந்திர கேசரி பிரகாசம், வைத்திய நாத அய்யர், தியாகப் பெருந்தலைவர் காமராஜர் ஆகியோர் இருக்கின்றார்கள். உடல் நலக் கேடு
ஏற்பட்டது. குடல் புண் வருகிறது. நோய்வாய்ப் படுகிறார். உயிருக்கு ஆபத் தான நிலைமை ஏற்படுகிறது. முதல் திருமணமாக திலோத்தமையைத் திரு மணம் செய்து கொள்கிறார். ஐந்தே நாட்கள்தான். ஐந்தாம் நாளில் மிகத் துயர மான நிகழ்ச்சி, முதல் மனைவி திலோத்தமை மறைந்து விட்டார். ஒன்பது
ஆண்டுகளுக்குப் பிறகு மாமன் மகள் ராஜேஸ்வரியைத் திருமணம் செய்கி றார். அப்பொழுதும் வறுமை.பசியோடு போராட வேண்டிய நிலைமை.

பெரும் செல்வந்தர் குடும்பத்தில், வசதியான குடும்பத்தில் வைர வைடூரியம் தங்கங்கள் குவிந்து இருக்கக்கூடிய அளவுக்குச் செல்வம் நிறைந்து இருக்கக் கூடிய ஐஸ்வரியக் குடும்பத்திலே பிறந்தவர் தான் அவருடைய துணைவியார் ராஜேஸ்வரி அவர்கள்.

ஆனால், அவருக்குரிய சொத்துகள் கைக்கு வராத சூழ லிலே அவர் சட்டத் துறையை நாடுகிறார். உடன் பிறந்த தமையன், தமக்கை, மாமனார் செய்த வஞ் சகத்தின் காரணமாக, வீடு தவிர எதுவுமே அவர்களுக்குக் கிடைக்கவில்லை. மனம் உடைந்து போனார். உடல் நலம் பாதிக்கப்பட்டதால் செவிப்புலன் இழந் தார். மிகவும் நோய்வாய்ப்பட்டு இருக்கக்கூடிய இந்தச் சூழலில் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

இதற்கு மத்தியிலே அவர்களுக்குத் தலைக் குழந்தை பெண் குழந்தை பிறக் கிறது. அழகான குழந்தை. ‘சந்திர காந்தா’ என்று பெயர் சூட்டுகிறார்கள். பத்து மாதத்திலே அந்தக் குழந்தை இறந்து போயிற்று. இந்தத் துயரத்தை என் மனை வி தாங்கிக்கொள்ள முடியாமல், அவள் மேலும் நோய்வாய்ப்பட்டாள் என் கிறார். மகன் திருநாவுக்கரசு. கண்ணகி, மாதவி என இரண்டு புதல்வியர்.

இப்படிப்பட்ட வேதனைகளுக்கு மத்தியில் அவரும் நோயுடன் சிறையில்இருக் கிறார். தக்க சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று பிரகாசம், காமராஜர்
உள்ளிட்ட அனைவருமே துடிக்கிறார்கள். உயிருக்குக் கூட ஆபத்து ஏற்படும் என்று எல்லோரும் கவலைப் படுகிறார்கள். அதே வேளையில் மனைவிக்கு
உடல்நலம் இல்லை; ராஜேஸ்வரி படுத்த படுக்கையாக இருக்கிறார் என்று செய்தி வருகிறது.   மனைவிக்கு  மரணம்    நேர்ந்துவிடும் என்ற    நிலையிலே, 
ம.பொ.சிக்கு பரோல் கொடுப்பதற்கான கடிதத்தைத் தீட்டுவதற்கு, வி.வி.கிரி தான் உடன் இருந்து ஏற்பாடு செய்து கொடுக்கிறார்.

மரணப்படுக்கையில் கிடக்கின்ற மனைவியைப் பார்ப்பதற்காக 15 நாள் பரோல் விடுதலை கிடைக்கிறது.அங்கே இருந்து வருவதற்குக்கூட போதிய பண வசதி
இல்லாமல் துன்பப்படுகிறார். வரணாவுக்கு வந்து,அங்கிருந்து கிராண்ட் ட்ரங்க் இரயிலில் ஏறி சென்னைக்கு வந்தவரை, உடன் பிறந்த தம்பி ம.பொ.பரசுராமன் தான் அழைத்துப்போகிறார். வீட்டுக்கு வருகிறார்.

அம்மானைப் பாடல்கள் மூலமாக தமிழுக்கு உணர்வு ஊட்டிய அவரது அரு மைத் தாயார் சிவகாமி அருகிலே அழைத்துக்கொண்டு போகிறார்கள். வீட்டில்
உட்காருவதற்கு நாற்காலி இல்லை. பழம் பாயிலே உட்காருகிறார். அங்கே ஒரு பெண் எலும்பும் தோலுமாகப் படுத்துக் கிடக்கிறார்.

இவர் தாயிடம் கேட்கிறார், தன் மனைவி ராஜி எங்கே? என்று.

அதைக்கேட்டு பதறிப்போன தாய், ‘இதுதானப்பா ராஜி; அவள்தான் இங்கு படுத்து இருக்கிறாள்’ என்று கூறுகிறார்.

தன் மனைவியை அவருக்கு அடையாளம் தெரிய வில்லை. அந்தச் சகோதரிக் குக் கணவனை அடையாளம் தெரியவில்லை. காரணம், அவரும் எலும்பும் தோலுமாக மிகவும் மோசமாக வந்து இருக்கிறார்.

எப்படிப்பட்ட தியாக வாழ்க்கை இது!

பரோல் மேலும் பத்து நாள்கள் நீட்டிக்கப்படுகிறது. அவரை, தமிழ்நாட்டிலே வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்று, பிரகாசமும், காமராஜரும் அரசாங் கத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்கள். வேலூர் மத்திய சிறைக்குக் கொண்டு போகிறார்கள். அங்கிருந்து, தஞ்சை இளங்குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்
படுகிறார். அங்கும் மிகுந்த நோய்வாய்பட்ட நிலையில், ஏழு எட்டு கம்பளி களைக் கொண்டு வந்து போர்த்தி, உடன் மற்ற தலைவர்கள் எல்லாம் இருக்கி றார்கள்.அநேகமாக உயிர் முடிந்துவிடும் என்கிற அளவுக்குத்துன்பப்படுகிறார்.

1942 ஆகஸ்டு 13 ஆம் தேதி கைது செய்யப்பட்ட ம.பொ.சி. பதினெட்டு மாதம் கழித்து உயிருக்கு ஆபத்தான நிலையிலே இருக்கின்றபோது, இங்கே இருக்கக் கூடிய காங்கிரஸ் நண்பர்களுக்கு ஒரு தகவல் சொல்லுங்கள் என்று, சிறை யில் இருப்பவர்கள் எல்லாம், சிறைக் கண்காணிப்பாளரிடம் கேட்கிறார்கள். அவர், ஆமோதித்துவிட்டு தகவல் சொல்லாததால், தஞ்சையில் யாருமே அவரைப் பார்க்க வரவில்லை.

நலிந்த நிலையில் இருக்கிறார் மபொசி. நடக்க முடியாது.ஸ்ட்ரெசரிலே வைத் துத் தூக்கிக்கொண்டு போகிறார்கள். அப்போது, ‘ஏதோ பிணத்தைத் தூக்கிக்
கொண்டு போகிறார்கள்’என்று அருகில் இருந்தவர்கள் கூறியது அவர் காதிலே விழுகிறது. ஒரு காங்கிரஸ் நண்பர் அதைத் தெரிந்துகொண்டுவந்து உதவு கிறார்.அன்பின்னர் சென்னை வந்தபிறகு, ராஜாஜி அவர்கள் ஏற்பாட்டில் மருத் துவமனையில் அவருக்கு சிகிச்சை தரப்பட்டதாகக் குறிப்பிடுகின்றார். வாழ்க் கையில் இவ்வளவு துயரங்களையும் அனுபவித்துப் போராடினார் சிலம்புச் செல்வர்.

தமிழ் உணர்வுக்காக தமிழ் இலக்கியங்களைப் படித்து தமிழுக்குத் தொண்டு செய்து வந்த சிலம்புச் செல்வர், 1946 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி,காங்கிரசுக் கட்சியில் இருந்துகொண்டே தமிழரசுக் கழகத்தைத் தொடங் குகிறார். ‘சுதந்திர சோசலிச சுயநிர்ணய தமிழ் குடியரசு பிரகடனம்’ செய்கிறார். 1954 இல் காங்கிரசை விட்டு வெளியேறுகிறார்.

நான் முதன் முதலாக புறநானூறைப்படித்தேன்;தமிழனுடைய தன்மான உணர் வை என் எண்ணத்திலே ஊட்டியது.பின்னர் சிலப்பதிகாரத்தைப்படித்தேன்; அது தமிழர்களின் பெருமையை என் உள்ளத்துக்கு வழங்கியது என்கிறார்.

தொடக்கத்தில் அவர் மனம் கவர்ந்த பாடல் வரிகளைச் சொன்னேன்.

நெடியோன் குன்றமும், தொடியோள் பெளவமும், தமிழ்வரம்பு அறுத்த தண்பு னல் நல்நாட்டு 

என்ற இந்த வரிகள்,அவர் உள்ளத்துக்குள் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக, வேங்கடம் முதல் குமரி வரை  ஒரு      அங்குல   மண்ணைக் கூட நாம் இழந்து விடக்கூடாது என்று,  வடக்கு எல்லைப் போரை முன்னின்று நடத்திய தன் விளைவாகவே, திருமுருகன் குடிகொண்டு இருக்கின்ற திருத்தணி கிடைத் தது; நமக்கு உரிமையுள்ள திருப்பதி பறிபோயிற்று. அவர் இல்லையேல், திருத் தணியும் இல்லை.

அடுத்து, தெற்கு எல்லையிலும், கன்னியாகுமரியிலும் போய்ப் போராடினார். அங்கே மார்ஷல் நேசமணி தலைமை தாங்கிப் போராடுகிற களத்தில், மண் ணை மீட்கப் போராடியவர், இந்த இனத்துக்கு உணர்வு ஊட்டிய பெருமகன் ம.பொ.சி., 1946 ஜூன் மாதம் “இலங்கைத் தீவில் தமிழர்கள் சிங்களவர்களிடம
சீரழிகிறார்களே, இது தமிழ் இனத்துக்கு விடப்பட்ட அறைகூவல் ஆகும்’ என்று, அவர் பத்திரிகையில் எழுதுகிறார்.

தொடரும்...

No comments:

Post a Comment