Wednesday, October 16, 2013

வைகோவின் கரங்களை வலுப்படுத்துவோம்!

அண்ணாவின் பாதையிலே பயணிக்கும் #வைகோ வின் கரங்களை வலுப் படுத்துவோம்!

- விருதுநகர் மாநாட்டில் நாசரேத் துரை

பேரறிஞர் அண்ணாவின் 105ஆவது பிறந்தநாளையொட்டி,செப்டம்பர் 15 அன்று விருதுநகரில் நடைபெற்ற கழக மாநாட்டில்,துணைப் பொதுச்செயலாளர்
நாசரேத் துரை ஆற்றிய உரை...

கர்ம வீரர் காமராஜர் பிறந்த இந்த இனிய நகரத்தில் பேரறிஞர் அண்ணா அவர் களின் 105 ஆவது பிறந்தநாள் தினத்தை மாபெரும் மாநாடாக நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிக் கொண்டிருக்கின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்குழு நடைபெறுகின்ற, காலகட்டங்களில் அனைத்து உறுப்பினர்களும் பொதுச்  செயலாளர் அவர் களை நமது கட்சிக்கு ஒரு டி.வி. சேனல் வேண்டும் என்று அடிக்கடி கூறி வந்த அந்த நிலையைப்போக்கி,கழகத்துக்கு இமயமாக ஒரு இமயம் டி.வி.யை அளித் ததோடு மட்டுமல்ல, தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா அவர்களுடைய கொள்கையில் மிகவும் திடமாக இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற அருமைச் சகோதரர் இமயம் ஜெபராஜ் அவர்களே, நிறைவுப் பேருரை ஆற்ற இருக்கின்ற கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள் தலைவர் தியாக வேங்கை அண்ணாவின் அடிச்சுவடு வைகோ அவர்களே, கழகத்தின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி அவர்களே, பொருளாளர் அருமைச்சகோதரர் டாக்டர் மாசி லாமணி அவர்களே, துணைப் பொதுச் செயலாளர்கள் அருமைச் சகோதரர்கள்
மல்லை சத்யா மற்றும் துரை.பாலகிருஷ்ணன் அவர்களே,மேடையில் வீற்றி ருக்கின்ற முன்னணித் தலைவர் களே, மாவட்டச் செயலாளர்களே,பெரியோர் களே, தாய்மார்களே, நண்பர்களே, அனைவருக்கும் என்னுடைய நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


தமிழ்நாட்டில் எத்தனையோ நகரங்களில் கழகத்தினர் மாநாடு நடத்த போட்டி
போடும் சூழ்நிலை இருக்கின்ற கால கட்டத்தில்,விருதுநகரைத்தேர்ந்து எடுத்து மாபெரும் மாநாட்டை நம்முடைய பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நடத்துகிறார் என்றால் எந்த நேரத்தில், எந்தச் சூழ்நிலையில், எந்த இடத்தில் எந்தப் பணியைச் செய்ய  வேண்டுமென்று நம்முடைய பொதுச் செயலாளர் அவர்களுக்குத் தெரியும்.அவர்கள் அடிக்கடி சொல்வார்கள், தோசைக்கல் காய்ந்திருக்கின்ற நேரத்தில் அதில் மாவை ஊற்றினால்தான் நல்ல தோசை கிடைக்கும் என்று, அதேபோல் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகின்ற நேரத் தில் காலம் இடம் அறிந்து இந்த வெற்றிகரமான மாநாட்டை விருதுநகரில்
நடத்திக் கொண்டிருக்கிறார்.

இன்றைய நாள் நமக்கெல்லாம் ஒரு பொன்னான நாள்.அறிஞர் அண்ணா அவர் களின் பிறந்தநாள். நமது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் கள் அனைவரும் அண்ணா பிறந்தநாள் விழாவை சிறப்புடன் கொண்டாடி வரு கின்றோம். துவண்டு கிடந்த மக்களை தூங்கிக் கொண்டிருந்த மக்களைத் தட்டி எழுப்பிட, அண்ணா தமிழ்நாட்டில் பிறந்தார் என்றால் அது மிகையாது என்றே கருதுகின்றேன்.உலகத்தில் எத்தனையோ மனிதர்கள் பிறக்கின்றார்கள், இருக் கிறார்கள்,இறக்கிறார்கள். அனைவரும் அறிஞராவ தில்லை, அறிவுத்திறனால் அரிய பெரிய காரியங்களைச் செய்பவனே அறிஞனா வான். அந்த வழியில் வந்தவர்தான் அறிஞர் அண்ணா அவர்கள். நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்த மாபெரும் காங்கிரஸ் பேரியக்கத்தின் ஆட்சியை பதினெட்டு ஆண்டுகளில் இறக்கி சாதனை புரிந்தவர் அண்ணா.அண்ணாவை வர்ணிக்க வேண்டுமென் றால் அண்ணா குள்ள உருவம்,குறும்புப் பார்வை, விரிந்த நெற்றி, பரந்த மார்பு, கறைபடிந்த பற்கள், கவலையில்லா நகைப்பு, நறுக்கு மீசை, வழிக்காத முகம், சீவாத தலை,இவர்தான் அண்ணா.

திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு மறுமலர்ச்சி தேவை என்று 1993 ஆம் ஆண் டில் வைகோ அவர்கள் எண்ணி னார்கள். அதேபோல்தான் திராவிடக்கழகத் துக்கு முன்னேற்றம் வேண்டு மென்று 1949 இல் அண்ணா அவர்கள் எண்ணி னார்கள். அண்ணா இட்ட அஸ்திவாரத்தில் தமிழ்நாட்டில் 47 ஆண்டுகள் திரா விட இயக்கக் கட்டடம் சேதமின்றி நிமிர்ந்து நின்று கொண்டு இருக்கின்றது. அண்ணா பொருளாதாரத்தில் எம்.ஏ. படித்து அண்ணாமலை பல்கலைக் கழகத் தில் டாக்டர் பட்டம் பெற்றார். அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழகத்தின் பட்டமும் பெற்றார். அண்ணா அலுவலக எழுத்தாளராக, ஆசிரியராகப் பணி புரிந்தவர். அண்ணா அனைத்திலும் சிறந்தவராகத் திகழ்ந்தார். பத்திரிகைத் துறையில் ஒரு புதுமையைப் புகுத்தி,நவயுகம், குடியரசு, விடுதலை, ஜஸ் டிஸ்,திராவிட நாடு, மாலைமணி, ஹோம் லேண்ட், காஞ்சி, ஹோம்ரூல் ஆகிய அரசியல் புரட்சிப் பத்திரிகைகளுக்கு  இலட்சிய ஆசிரியராக இருந்து சேவை செய்தவர். நல்லதம்பி, வேலைக்காரி, ஓர் இரவு, சொர்க்கவாசல், ரங் கோன் ராதா,தாய் மகளுக்கு கட்டிய தாலி, எதையும் தாங்கும் இதயம், நல்ல வன் வாழ்வான்,காதல் ஜோதி, வண்டிக்காரன் மகன் ஆகிய சீர்திருத்த சினிமாக் களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார். சிந்தனைக்கு விருந்தாக அண்ணா எழு திய நூல்கள் நூற்றுக்கணக்கானவை ஆகும்.

அண்ணாவின் உச்சகட்ட சேவை சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்ததும், கலப்புத் திருமணத்தை சட்டவடிவமாக்கியதும் ஆகும்.தான் யார் என்று தெரியாது தூங்கிக்கொண்டிருந்த தமிழனை தட்டி எழுப்பி நடக்க வைத்த மாமனிதன் அண்ணனின் பிறந்தநாளை இளைய தம்பி வைகோ அவர் கள் கர்மவீரர் காமராஜர் உலவிய மண்ணில் தமிழ்நாடு தாகத்தால் இன்னுயி ரை மாய்த்த சங்கரலிங்கனார் பந்தலில் விழா எடுத்துள்ளார். அண்ணாவின் தம்பி வைகோவின் கரத்தை வலுப்படுத்து வோம்.

நாசரேத் துரை இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment