Sunday, October 6, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 23

நாள்:-12.01.2008

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை துப்பாக்கிச்சூடு!

#வைகோ கடும் கண்டனம்

சிங்கள இனவெறி அரசை எச்சரிக்குமாறு இந்தியப் பிரதமருக்கு வேண்டு கோள்!

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

இன்று (12.01.08) காலை, இராமேஸ்வரம் அருகே இந்திய மீனவர்கள் மீது
இலங்கைக் கடற்படை நடத்திய மிருகத்தனமான துப்பாக்கிச்சூடு குறித்துத்
தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த நமது மீனவர்கள், TN 10 MSP 951என்ற படகில், தனுஷ்கோடி அருகில் நமது இந்தியக் கடல் எல்லைக்கு உள்ளே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். நண்பகல் 1 மணி அளவில் அங்கே வந்த இலங்கைக் கடற்படையினர், கண்மூடித்தனமாக நமது மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர்.

இதில், திரு சேகர் (வயது, 38-த/பெ சேசையா பாண்டியன், இராமேஸ் வரம்) என்பவர் மீது குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான
நிலையில் அவர் தற்போது மதுரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்டு இருக்கிறார்.

இது தொடர்பாக, நான் தங்களுக்கு 2007 டிசம்பர் 9 ஆம் நாள் எழுதிய கடிதத்தை நினைவுகூர விரும்புகிறேன். அந்தக் கடிதத்தில்,இந்தியக் கடற்படையின் தமிழ் நாட்டுப் பொறுப்பாளரான கம்மோடர் வேன் ஹேல்ட்ரன் என்பவர், இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைச் சுடவில்லை என்று சொன்ன பச்சைப் பொய்யைக் கண்டித்து இருந்தேன்.

இந்திய இராணுவ அதிகாரிகளின் இத்தகைய அறிக்கைகள்தாம், இலங்கைக்
கடற்படையினருக்குத் துணிச்சலைக் கொடுத்து, இந்தியக் கடல் எல்லைக்கு
உள்ளே நுழைந்து தமிழக மீனவர்களைச் சுடுவதற்கு ஊக்கம் அளிக்கிறது.

நயவஞ்சக நோக்கத்துடன், வேண்டும் என்றே இலங்கை அரசுக்கு ஆயுதங்கள்
கொடுப்பது முதல் அனைத்து உதவிகளையும் செய்து, தமிழ் இனத்தை முற்றி லுமாக அழித்து ஒழிக்கும் சிங்கள இனவாத அரசின் நடவடிக்கைகளுக்கு ஐக் கிய முன்னணி அரசு துணைபோகிறது என்று நான் குற்றம் சாட்டுகிறேன்.

இந்திய அரசின் இத்தகைய கண்டிக்கத்தக்க செயல்பாடுகளால், தமிழக மீனவர் கள் இலங்கை இராணுவத்தால் தொடர்ந்து தாக்கப்பட்டும், கொல்லப்பட்டும் வருகிறார்கள்.

இந்தியக் குடிமக்களாகிய தமிழக மீனவர்களைப் பாதுகாக்கும் கடமையில் ஐக் கிய முற்போக்குக் கூட்டணி அரசு தவறி விட்டது என்பதை நான் மிகுந்த வருத் தத்துடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை நடத்தி வருகின்ற தாக்குதலை
உடனடியாகத் தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுப்பதுடன், இலங்கை அரசை எச்சரிக்க வேண்டும் என்றும் மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் அன்புள்ள,

வைகோ

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

No comments:

Post a Comment