Saturday, October 5, 2013

காமன்வெல்த் மாநாடு எதிர்ப்பு -மதிமுக , திவிக ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்குகிறது

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாடு நடத்த கூடாது என்பதை வலியுறுத்தி , மன்னார்குடி ஒன்றிய மதிமுக மற்றும் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம் தொடங் கப் பட்டது 

தமிழர்களை இனபடுகொலை செய்த இலங்கையில் நடை பெறும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது, இலங்கையை காமன்வெல்த் நாடுகளின் பட்டிய லில் இருந்து நீக்க வேண்டும்,தமிழீழம் அமைவதற்கு பொது வாக்கெடுப்பு நடத்த ஆதரவு கொடுக்க வேண்டும், போர் குற்றவாளி இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுதர முயற்சி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கை களை வலியுறுத்தி மன்னார்குடி ஒன்றிய மதிமுக, திராவிடர் விடுதலைக் கழ கம்,தமிழன் சேவை மையம் ஆகிய அமைப்புகளின் சார்பில் , மதிமுக மன்னார் குடி ஒன்றிய செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார், திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் காளிதாசு, தமிழன் சேவை மைய நிறுவனர் வாட் டார் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் தமிழர்களிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம் மன்னார்குடியில் தொடங்கியது.

மன்னார்குடி வட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் வி.அய்யப் பன் முதல் கையெழுத்தினை இட்டு தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் திராவி டர் விடுதலைக்கழக மன்னை நகர செயலாளர் மணிகண்டன், லாரி உரிமை யாளர்கள் சங்க துணை தலைவர் காசங்குளம் பாலு, பொருளாளர் சேரன்குளம் செந்தில்குமார், கௌரவ தலைவர் ராஜ், எஸ்ஆர்எஸ் நாகேந்திரன், தமிழ்நாடு லாரி சர்வீஸ் பாலு, சலீம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஒரு லட்சம் தமிழர்களிடம் கையொப்பம் பெற்று இந்திய பிரதமர், இந்திய உள் துறை அமைச்சர், ஐநா சபை, ஜெனிவா நகரத்தில் உள்ள உலக மனித உரிமை கமிஷன், நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் ருத்திரகுமரன் ஆகியோருக்கு அனுப்பிட திராவிடர் விடுதலைக் கழகம், மதிமுக நிர்வாகிகள் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment