Friday, October 25, 2013

செம்மொழி தமிழாய்வு மையத்துக்கு மூடுவிழாவா? வைகோ அறிக்கை

செம்மொழி தமிழாய்வு மையத்துக்கு மூடுவிழாவா?

#வைகோ அறிக்கை

இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் செம் மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், உலக அளவில் செம்மொழித் தமிழுக் கென்று நிறுவப்பெற்ற உயர் ஆய்வு நிறுவனம். இது ஒரு தன்னாட்சி நிறுவனம் ஆகும். 

தமிழ்மொழி மேம்பாட்டு வாரியம், தமிழ்மொழி ஆய்வு, செம்மொழித் தமிழ் உயர் ஆய்வு மையம் என உட்பிரிவுகளை உருவாக்கி, பன்னிரெண்டு புலங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் என்று 2005 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, இப்புதிய திட்டத்திற்குச் செயல்வடிவம் கொடுக்க,2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் குறைந்த அளவிலான ஆய்வு அறிஞர் கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், அலுவலகப் பணியாளர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது.

கி.பி.6 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்திலான தமிழ் இலக்கியம், இலக்க ணம், இசை, கல்வெட்டுகள், நாணயங்கள் குறித்த ஆய்வுகளில் பெருங்கவனம் செலுத்துவதென அறிஞர் குழுவால் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில்,பணி கள் தொடங்குவதற்கு முன்பாக 2007 ஆம் ஆண்டு, சம்மந்தப்பட்ட மொழி பேசும் மக்களால் தேர்வு செய்யப்படும் மாநில முதலமைச்சர் தலைவராக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்ற தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று, தமிழக முத லமைச்சர் தலைவராக இருந்து செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. 6 மாதங்களுக்கு ஒருமுறை கூட்டம் கூட்டப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட வேண்டும். 

இப்போது அவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பது கேள்விக்குறி யாக உள்ளது.

செம்மொழியாக அறிவிக்கப்பட்ட சமÞகிருதத்துக்கு ஆண்டுக்கு 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதுவரை 15 சமஸ்கிருத பல்கலைக் கழ கங்களும், 58 கல்லூரிகளும் தொடங்கப்பட்டு, உலகளவில் 100க்கும் மேற்பட்ட ஆய்வுக்கூடங்கள் இயங்கி வருகிறது. ஆனால், சமÞகிருதம் தற்போது வழக்கு மொழியாகக்கூட இல்லை.

உலக அளவில் அதிக மக்களால் பேசப்படும் 20 மொழிகளுள் தமிழும் ஒன்று. 65 நாடுகளில் 10 கோடிக்கும் மேற்பட்டோர் பேசும் உயர்தனிச் செம்மொழியான தமிழ்மொழி, உரிய அங்கீகாரம் வழங்கப்படாமல் முடங்கிக் கிடக்கிறது.

திருக்குறள் உள்ளிட்ட நூல்களை பிற மொழிகளில் மொழிமாற்றம் செய்வது, பிற மொழிகளில் உள்ள கருத்துக் களஞ்சியங்களை தமிழில் பதிவிறக்கம் செய் வது, கருத்தரங்கு, பயிலரங்கு, குறுங்கால ஆய்வுத்திட்டம், முனைவர் பட்ட ஆய்வு, முனைவர் பட்ட மேலாய்வு போன்ற செயல் திட்டங்கள் முடக்கப்பட்டு உள்ளன.

நிறுவனத்தை நடத்தும் ஆட்சிமன்றம் திருத்தி அமைக்கப்படாததால், கல்விக் குழு மற்றும் நிதிக்குழுக்கள் அமைக்கப்படாமல் செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. ஒதுக்கப்படும் நிதியினை முறையாகப் பயன்படுத்தாமல், நிலு வையில் வைத்து திருப்பி அனுப்புகிற சூழல் ஏற்பட்டு உள்ளது. 

தமிழை செம்மொழி என்று அறிவித்து ஆண்டுகள் ஒன்பது உருண்டோடியும், தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட, ஆய்வுப் புலமையுடைய தமிழ் அறிஞர் ஒருவரை நிரந்தர இயக்குநராக இதுவரை நியமிக்கவில்லை. ஆண்டு தோறும் தமிழ் அறிஞர்களுக்கு வழங்க வேண்டிய விருதுகளை, முறையாக, தொடர்ச்சியாக வழங்கவில்லை.

தமிழின் மீது பற்றுகொண்டு, விரைவுரையாளர் பணியினை உதறிவிட்டு வந்த தமிழறிஞர்களை, தினக்கூலிபோல் பாவித்து மனதை புண்படுத்துவது நியாயம் அல்ல.

செம்மொழித் தமிழாய்வு மையத்தில் பணியாற்றும் 61 ஊழியர்களுள், 19 பேருக் கு மட்டும் மாதாந்திர தொகுப்பூதியத்தை வழங்கிவிட்டு, மற்ற ஊழியர்களை தினக்கூலிகள் போன்று பல ஆண்டுகளாக நடத்துவது முறையல்ல.

அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு, பணிக்குப் பிந்தை ய ஓய்வூதியப் பாதுகாப்பு உள்ளிட்ட ஏனைய மத்திய அரசு நிறுவனங்களில் வழங்கப்படும் சலுகைகளை வழங்கிடவேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து, அறவழிப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். போராடுபவர்கள் நிர்வாகத்தினரால் அச்சுறுத்தப்படுவதும் பழிவாங்கப்படுவதும் தொடர்ந்து கொண்டு வருகிறது. 

இதனை எதிர்த்து செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனப் பணியாளர்கள் சங் கத் தலைவர் முனைவர் ஆ.ஆரோக்கியதாசு அவர்கள் தலைமையில், 32 பேர், கடந்த 5 நாட்களாக உள்ளிருப்புத் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

செம்மொழி தமிழாய்வு மையம் இயங்க, காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பாக்கத்
தில் சுமார் 17 ஏக்கர் நிலம் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நாள் வரை அதில் சுற்றுச்சுவர் மட்டும் எழுப்பப்பட்டு, ஏனைய கட்டுமானப் பணிகள் தொடங்கப்படாமல் சுணக்கத்தில் உள்ளது. சென்னை தரமணியில் உள்ள மாநி ல போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான கட்டிடத்தில் இரண்டு மாடி களை வாடகைக்கு, எடுத்து மாதம் 9 லட்சம் வீதம், ஆண்டுக்கு 1 கோடியே 8 லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து வருவது வீண் விரையம் ஆகும்.

40,000 நூல்கள், அரிய ஓலைச்சுவடிகள், குறுந்தகடுகள் கொண்ட செம்மொழி நூலகம் அரசியல் காரணங்களுக்காக இடம் மாற்றம் செய்யப்பட்ட போது, மூட்டை மூட்டையாகக் கட்டி எடுத்து வரப்பட்டு தரமணியில் செம்மொழி நூலகமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையில், எரிகின்ற வீட்டில் பிடுங்கியவரை லாபம் என்பதைப் போன்று பல அரிய நூல்களும், ஓலைச் சுவடிகளும் காணாமல் போய் உள்ளது.

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு பார்த்தால், மிகுந்த எதிர்ப்பார்ப்போடு தொடங்கப்பட்ட செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு விரைவில் மூடுவிழாவை நடத்தும் கேடு விளையக்கூடும்.

செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் முறையாக இயங்க தமிழக அரசு நடவடிக் கை மேற்கொள்ள வேண்டும்.

‘தாயகம்’                                                                               வைகோ
சென்னை - 8                                                              பொதுச்செயலாளர்
25.10.2013                                                                      மறுமலர்ச்சி தி.மு.க.

No comments:

Post a Comment