ராமநதி மேல்மட்ட கால்வாய் குறித்த #மதிமுக வின் கேள்விக்கு பதில் தந்த தமிழக அரசு
கீழப்பாவூர் ஒன்றியத்தின் தெற்கு பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக் கையான ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
இதனை தொடர்ந்து கடந்த 2005ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் இத்திட்டத்தை நிறைவேற்றுவதாக சட்டமன்றத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா அறி வித்தார். பின் திட்ட மதிப்பீடு தயார் செய்து வந்த நிலையில் 2006ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க., ஆட்சிக்கு வந்தது.
தி.மு.க., ஆட்சியிலும் இத்திட்டம் காலம் தள்ளதப்பட்டு வந்த நிலையில் மீண் டும் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்துள்ளதால் , இத்திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இன்றுவரை இத்திட்டத்திற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை மேற்கொள் ளப்படாததால் விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர். இத்திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து கீழப்பாவூர் ஒன்றிய ம.தி.மு.க., செயலாளர் ராம உதயசூரியன் தமிழக முதல்வர் தனிப்பிரிவிற்கு அனுப்பியுள்ள ராமநதி மேல் மட்ட கால்வாய் குறித்த மனுவிற்கு தமிழக அரசு அளித்துள்ள பதில் வருமாறு : -
இத்திட்டத்திற்காக கடந்த 37 ஆண்டுகளாக ராமநதியின் உபரிநீரின் அளவை கணக்கீடு செய்ததில் புதிய திட்டங்களை செயல்படுத்துவற்கு அவசியமான 75 சதவீதம் சார்பு உபரி நீர் தற்பொழுது நிலவும் மழை தாழ்ச்சியின் காரணமாக கிடைக்கப்பெறவில்லை எனதெரிய வருகிறது.

கீழப்பாவூர் ஒன்றியத்தின் தெற்கு பகுதி விவசாயிகளின் 50 ஆண்டு கால கன வுத்திட்டமான ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டம் நிறைவேற்றிட இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று அரசுக்கு பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
No comments:
Post a Comment